என் மலர்
நீங்கள் தேடியது "export"
- உள்நாட்டில், மக்கள் மற்றும் பொருட்களை ஏற்றிச்செல்வதில் கப்பல் சேவை சிறப்பிடம் பெறுகிறது.
- கப்பல்கள் மூலம் வாணிபத்தை பெருக்கி நாட்டின் பொருளாதாரம் மேம்பட பாடுபட நாம் உறுதியேற்போம்.
ஒவ்வொரு ஆண்டும், தேசிய கடல்சார் தினம் ஏப்ரல் 5 ந் தேதி கொண்டாடப்படுகிறது. சர்வதேச வர்த்தகம் மற்றும் பொருளாதாரத்தில் பெரும் பங்கு வகிப்பது நாட்டின் கடல்சார் வாணிப துறை. நாட்டின் எல்லைகளுக்கு அப்பால் பெரிய அளவிலான பொருட்களை எடுத்து செல்வதற்கு கப்பல்கள் பயன்படுத்தப்படுகின்றன.
உள்நாட்டில், மக்கள் மற்றும் பொருட்களை ஏற்றிச்செல்வதில் கப்பல் சேவை சிறப்பிடம் பெறுகிறது.
உலக வர்த்தகம் மற்றும் பொருளாதார பரிமாற்றத்தில் தேசிய கடல்சார் துறையின் முக்கியத்துவம் குறித்து பொது மக்களுக்குப் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ஒவ்வொரு ஆண்டும் தேசிய கடல்சார் தினம் ஏப்ரல் - 5 கொண்டாடப்படுகிறது.

'சிந்தியா ஸ்டீம் நேவிகேஷன்' கம்பெனி லிமிடெட்டின் முதல் கப்பலான எஸ்.எஸ்.லாயல்டியின் முயற்சி இந்தியாவின் வழிசெலுத்தலில் வரலாற்று தருணங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.
இது வெளிநாடுகளுக்கு தனது பயணத்தைத் தொடங்கியது. குறிப்பாக கடல் வழிகள் முன்பு பிரிட்டிஷ் அரசாங்கத்தால் கட்டுப்படுத்தப்பட்டதால் இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
1964- ம் ஆண்டு ஏப்ரல் 5- ந் தேதி முதல் தேசிய கடல்சார் தினம் கொண்டாடப்படுகிறது. நாட்டின் பொருளாதார வளர்ச்சி மற்றும் மேம்பாட்டை மேம்படுத்துவதில் இந்தியாவின் கடல்சார் துறையின் முயற்சிகள் மற்றும் பங்களிப்புகளை அங்கீகரித்து விழிப்புணர்வு பரப்பும் நோக்கத்துடன் இந்த தினம் கொண்டாடப்படுகிறது.

சுற்றுச்சூழல் மாசு, திருட்டு மற்றும் மாறும் வர்த்தக இயக்கவியல் ஆகியவை இத்துறை எதிர்கொள்ளும் சில சவால்களாகும். இந்தத் தொழிலின் போராட்டங்கள் குறித்து நமது கவனத்தை ஈர்ப்பதும், தீர்வுகளை திறம்பட கண்டறிய நாம் ஒன்றுபட உதவுவதும் இந்த தினத்தின் நோக்கம்.
கடல்சார் துறையை மேம்படுத்துவதற்காக அதில் ஈடுபட்டுள்ள வணிக நிறுவனங்கள் மற்றும் மூத்த அதிகாரிகளுக்கு சிறப்பு விருதுகள் இன்று வழங்கப்படுகிறது. இளைய தலைமுறையினர் அதிகளவில் கடல்சார் தொழிலில் ஈடுபட வேண்டும்.
கப்பல்கள் மூலம் உள்நாட்டு, வெளிநாட்டு ஏற்றுமதி - இறக்குமதி வாணிபத்தை பெருக்கி நாட்டின் பொருளாதாரம் மேம்பட பாடுபட நாம் அனைவரும் இந்த தினத்தில் உறுதியேற்போம்.
- கடந்த 2023ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஏற்றுமதி ரூ.11 ஆயிரத்து 628 கோடியாக இருந்தது.
- திருப்பூர் ஆடை உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
திருப்பூர்:
பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம் உலக நாடுகளை சார்ந்து உள்ளது. ரஷியா-உக்ரைன் போர் சூழல் காரணமாக ஐரோப்பிய நாடுகளுக்கான இந்திய ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம் குறைந்தது. பணவீக்கம் காரணமாக அமெரிக்க ஏற்றுமதியும் பின்னடைவை சந்தித்தது. புதிய வர்த்தக வாய்ப்புகளும் எதிர்பார்த்த அளவுக்கு கை கொடுக்கவில்லை.
இந்திய தொழில் முனைவோரின் விடாமுயற்சி காரணமாக நாட்டின் ஒட்டுமொத்த ஆயத்த ஆடை ஏற்றுமதி கடந்த பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் அதிகரித்துள்ளது. கடந்த 2023ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஏற்றுமதி ரூ.11 ஆயிரத்து 628 கோடியாக இருந்தது. 2024 பிப்ரவரி மாதம் ரூ.12 ஆயிரத்து 248 கோடியாக உயர்ந்துள்ளது.
இதுபோல் கடந்த 2023ம் ஆண்டு மார்ச் மாதம் ரூ.11 ஆயிரத்து 917 கோடிக்கு பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம் நடந்துள்ளது. 2024 மார்ச் மாதம் ரூ.12 ஆயிரத்து 224 கோடியாக வர்த்தகம் உயர்ந்துள்ளது. இதனால் திருப்பூர் ஆடை உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இனிவரும் நாட்களில் ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம் வளர்ச்சிப்பாதைக்கு திரும்பும் என்றும் திருப்பூர் ஆடை உற்பத்தியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இந்திய பின்னலாடை ஏற்றுமதியில் திருப்பூரின் பங்களிப்பு முக்கியமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
- இந்த ரைஃபிள்காளானது 1500 மீட்டருக்கும் அப்பால் உள்ள இலக்கை துல்லியமாக தாக்கும் வல்லமை கொண்டது ஆகும்.
- சுமார் ரூ.413 கோடி மதிப்புடைய துப்பாக்கி குண்டுகளும் இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகவுள்ளன.
இந்தியாவில் இருந்து முதல் முதலாக ஸ்னைப்பர் ரைஃபிள்கள் ஏற்றுமதி செய்ய பெங்களூரைச் சேர்ந்த ஆயுத உற்பத்தி நிறுவனமான SSS DEFENCE நிறுவனம் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது. அதன்படி மிகப்பெரிய அளவில் .338 லாபுவா மேக்னம் கேலிபர் ரக துப்பாக்கிகள் இந்தியாவில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதியாக உள்ளன.
இந்த ரைஃபிள்காளானது 1500 மீட்டருக்கும் அப்பால் உள்ள இலக்கை துல்லியமாக தாக்கும் வல்லமை கொண்டது ஆகும். இதுமட்டுமின்றி சுமார் ரூ.413 கோடி மதிப்புடைய துப்பாக்கி குண்டுகளும் இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகவுள்ளன. ஆயுத ஏற்றுமதி தற்போது தொடங்கியுள்ள நிலையில் மேலும் பல நாடுகளுடனும் பேசுவார்த்தை நடந்து வருகிறது.

முன்னதாக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நாடுகளின் பிரதிநிதிகள் பெங்களூருக்கு வந்து ஆயுதங்களை பரிசோதித்து அதன் திறனில் திருப்தி அடைத்துள்ளனர். சிறிய ரக ஆயுதங்கள் முதல் மிசைல்கள் வரை இந்திய இதுவரை இறக்குமதி மட்டுமே செய்து வந்த நிலையில் தற்போது ஏற்றுமதியும் தொடங்கியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சக வட்டாரங்கள் பெருமிதம் தெரிவித்துள்ளன.
மேலும் .338 லாபுவா மேக்னம் கேலிபர் ரக துப்பாக்கிகளை சுமார் 30 நாடுகளுக்கும் மேல் அதிக அளவில் உபயோகித்து வருவதால், இந்தியாவில் ஆயுத வியாபாரம் மேலும் விரிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தற்போது ரஷியா சென்றுள்ள மோடி அதிபர் புதினுடன் இந்தியா- ரஷியாவின் ஒருங்கிணைந்த ஆயுத உற்பத்தி தொடர்பான பேசுவார்த்தையில் ஈடுபட்டு உடன்பாட்டை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. உக்ரைன் போருக்கு மத்தியில் நடந்த இந்த பேசுவார்த்தை சர்ச்சைகளையும் கிளப்பியுள்ளது. இதற்கிடையில் அஹிம்சயை உலகுக்கு சொல்லித் தந்த ஒரு தேசம், உயிர்களைக் கொள்ளும் ஆயுதங்களை ஏற்றுமதி செய்யத் தொடங்கியுள்ளது முரணான ஒன்றாக பார்க்கப்டுகிறது.

- இந்த நிதியாண்டின் தொடக்கத்தில் மேலதிகமாக சுமார் 40 சதவீத வளர்ச்சியை மொபைல் போன் ஏற்றுமதி வணிகம் கண்டுள்ளது.
- ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான காலகட்டத்தில் ஐபோன்கள் ஏற்றுமதி முன்னிலையில் உள்ளது
மொபைல் போன் ஏற்றுமதி வணிகம் 6.5 பில்லியன் டாலராக உயர்துள்ளதாக தழுவல் வெளியாகியுள்ளது.இந்தியாவின் மொபைல் போன் ஏற்றுமதி வணிகம் 6.5 பில்லியன் டாலராக உயர்துள்ளதாக தழுவல் வெளியாகியுள்ளது. இந்த நிதியாண்டில் முதல் பாதியில் [ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான காலகட்டத்தில்] இந்த வளர்ச்சியானது ஏற்பட்டுள்ளது. கடந்த 2023 நிதியாண்டின் தொடக்கத்தில் எட்டிய வளர்ச்சியை விட இந்த நிதியாண்டின் தொடக்கத்தில் மேலதிகமாக சுமார் 40 சதவீத வளர்ச்சியை மொபைல் போன் ஏற்றுமதி வணிகம் கண்டுள்ளது.
இந்த வளர்ச்சியில் ஐபோன்களின் ஏற்றுமதியே முன்னிலையில் உள்ளது. ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான காலகட்டத்தில் ஐபோன்கள் ஏற்றுமதி முன்னிலையில் உள்ளது. அதவாது, 6.5 பில்லியன் டாலரில் ஐபோன் ஏற்றுமதியின் பங்கு 70 சதவீதம் ஆகும். அதிலும் குறிப்பாக ஐபோன் 15 ஆன்லனில் அதிகம் விற்பனையான மாடலாக உள்ளது. இதற்கு முந்திய மாடல்களில் இருந்து அதிக அப்கிரேடுகளுடன் இவை தயாரிக்கடுவதே இந்த வளர்ச்சிக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

- காளை மாட்டுக் கறிக்கு, எருமை மாட்டுக் கறி என உத்தரபிரதேச கால்நடைதுறை சான்று.
- ஆய்வுக்கு அனுப்பி, காளை மாட்டுக் கறி என சென்னை சுங்கத்துறை அதிகாரிகள் உறுதி செய்தனர்.
சென்னையில் துறைமுகத்தில், எருமை மாட்டுக் கறி என கூறி, 28 மெட்ரிக் டன் காளை மாட்டுக் கறியை ஷார்ஜாவுக்கு ஏற்றுமதி செய்ய முயன்ற சம்பவம் நடந்துள்ளது.
இதுகுறித்து தகவல் அறிந்ததை தொடர்ந்து மாட்டிறைச்சி ஏற்றுமதியை சென்னை சுங்கத்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி உள்ளனர்.
காளை மாட்டுக் கறிக்கு, எருமை மாட்டுக் கறி என உத்தரபிரதேச கால்நடைதுறை சான்று அளித்திருந்தது.
சந்தேகத்தின்பேரில், இறைச்சியை ஆய்வுக்கு அனுப்பி, காளை மாட்டுக் கறி என சென்னை சுங்கத்துறை அதிகாரிகள் உறுதி செய்தனர்.
இதைதொடர்ந்து, தவறான தகவலை கூறி, ஏற்றுமதி செய்ய முயற்சித்ததாக, டெல்லியை சேர்ந்த யூனிவர்சல் ஃபுட் எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனம் மீது சுங்கவரி சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தை அடுத்து, யூனிவர்சல் ஃபுட் எக்ஸ்போர்ட்ஸ் நிறுவன மேலாளர் முகமது காலித் ஆலம் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
யூனிவர்சல் ஃபுட் எக்ஸ்போர்ட்ஸ் நிறவனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில் விரைவில் விசாரணை நடைபெற உள்ளது.
- 2 மாதத்திற்கு முன்பு உற்பத்தி செய்யப்பட்ட உப்பை பாதுகாப்பாக தார்பாய், பனை மட்டைகளைக் கொண்டு பாதுகாத்து வந்தனர்.
- பாக்கெட் போட்டும் வெளியூர்களுக்கு லாரிகள் மூலம் அனுப்பும் பணியில் உப்பள தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த அகஸ்தியன்பள்ளி, கோடியக்காடு, கடினல்வயல் ஆகிய பகுதிகளில் 9,000 ஏக்கரில் உப்பு உற்பத்தி நடைபெற்று வருகிறது. 2 மாதத்திற்கு முன்பு உற்பத்தி செய்யப்பட்ட உப்பை பாதுகாப்பாக தார்பாய், பனை மட்டைகளைக் கொண்டு பாதுகாத்து வந்தனர்.
கடந்த ஒரு மாதமாக காலமாக வடகிழக்கு பருவமழை தொடங்கி மழை பெய்ததால் இந்த ஆண்டுக்கான உப்பு உற்பத்தி நிறுத்தப்பட்டு விட்டது. இந்த நிலையில் உப்பளங்களை மழை நீர் சூழ்ந்துள்ளதால் உப்பளங்கள் கடல் போல் காட்சியளிக்கிறது. கடந்த மாதம் 20-ந் தேதிக்கு முன்பு பெய்த மழையால் நிறுத்தப்பட்ட உப்பு ஏற்றுமதி கடந்த 22-ம் தேதி மீண்டும் தொடங்கி நடைபெற்றது.
2 நாள் இடைவெளியில் 23-ம் தேதி மழை துவங்கிய நிலையில் 5 நாட்களாக கனமழை பெய்தது. இதனால் உப்பு ஏற்றுமதி அடியோடு பாதிக்கப்பட்டது.
இந்த நிலையில் மழை பெய்து ஓய்ந்த நிலையில் 7 நாட்களுக்கு பிறகு தற்போது சேமித்து வைத்துள்ள உப்பை வெளிமாவட்டங்களுக்கும், வெளிமாநிலங்களுக்கு அனுப்பும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இன்று காலை முதல் வேதாரண்யம் பகுதியில் வெயில் அடித்து வருவதால் சேமித்து வைத்துள்ள உப்பை சாக்கு மூட்டைகளில் அடைத்தும், பாக்கெட் போட்டும் வெளியூர்களுக்கு லாரிகள் மூலம் அனுப்பும் பணியில் உப்பள தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். உப்பு ஏற்றுமதி ஒரு வார காலத்திற்குப் பிறகு துவங்குவதால் நூற்றுக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு மீண்டும் கிடைத்துள்ளது குறிப்பிடதக்கது.
- கடந்த நவம்பர் மாதம் மட்டும் ஆயத்த ஆடை ஏற்றுமதி ரூ.9 ஆயிரத்து 460 கோடியே 20 லட்சத்துக்கு நடைபெற்றுள்ளது.
- இங்கிலாந்து, ஜெர்மனி, நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளுக்கும் ஏற்றுமதி வர்த்தகம் அதிகரித்துள்ளது.
திருப்பூர்:
இந்தியாவின் ஒட்டுமொத்த ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம் கடந்த பிப்ரவரி மாதம் முதல் ஏறுமுகத்தில் உள்ளது. அதிகபட்சமாக ஜூலை மாதம் 13.8 சதவீதமும், ஆகஸ்டு மாதம் 13.4 சதவீதமும், செப்டம்பர் மாதம் 18.4 சதவீதமும், அக்டோபர் மாதம் 36.4 சதவீதமும் ஏற்றம் கண்டுள்ளது. இந்திய ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகத்தில் திருப்பூர் பின்னலாடைத்துறையின் பங்கு முக்கிய பங்காற்றி வருகிறது. திருப்பூரின் ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகமும் அதிகரித்து வருவது உற்பத்தியாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த நவம்பர் மாதம் மட்டும் ஆயத்த ஆடை ஏற்றுமதி ரூ.9 ஆயிரத்து 460 கோடியே 20 லட்சத்துக்கு நடைபெற்றுள்ளது. இது கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ரூ.8 ஆயிரத்து 506 கோடியே 20 லட்சத்துக்கு நடந்துள்ளது. அதன்படி கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தை ஒப்பிடும்போது 11.2 சதவீதம் ஆயத்த ஆடை ஏற்றுமதி அதிகரித்துள்ளது.
இதுபோல் நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை ஆயத்த ஆடை ஏற்றுமதி ரூ.82 ஆயிரத்து 509 கோடிக்கு நடந்துள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 12.9 சதவீதம் அதிகரித்துள்ளதால் பின்னலாடை தொழில்துறையினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இதுபோல் ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம் கடந்த ஏப்ரல் மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை 8 ஆயிரத்து 247 டாலர் மதிப்பில் வர்த்தகம் நடந்துள்ளது. கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் 7 ஆயிரத்து 817 டாலர் நடந்துள்ளது. அதன்படி 11.6 சதவீதம் ஏற்றுமதி அதிரித்துள்ளது. அமெரிக்காவுக்கு இந்தியாவில் இருந்து அதிக அளவில் ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதுபோல் இங்கிலாந்து, ஜெர்மனி, நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளுக்கும் ஏற்றுமதி வர்த்தகம் அதிகரித்துள்ளது.
இதுகுறித்து ஏ.இ.பி.சி. தென்மண்டல பொறுப்பாளர் சக்திவேல் கூறும்போது, 'ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம் தொடர்ந்து வளர்ச்சிப்பாதையில் பயணித்து வருவது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா, இங்கிலாந்து, நெதர்லாந்து, ஸ்பெயின் மற்றும் வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் அமைந்துள்ள நாடுகளிலும் ஆயத்த ஆடை ஏற்றுமதி தொடர்ந்து அதிகரித்து வருவது நேர்மறையான எண்ணத்தை உற்பத்தியாளர்களிடம் விதைத்துள்ளது. நடப்பு நிதியாண்டில் திருப்பூர் ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம் ரூ.40 ஆயிரம் கோடி என்ற வர்த்தக இலக்கை நிச்சயம் எட்டும்' என்றார்.
- வர்த்தக ஓட்டத்தை பாதித்துள்ள சர்வதேச சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொருளாதார அமைச்சகம் விளக்கமளித்துள்ளது.
- கோதுமை இறக்குமதிக்கு ஐக்கிய அரபு அமீரகம் ரஷியாவிற்கு பதிலாக இந்தியாவை நம்பி இருக்கிறது.
துபாய்:
இந்தியாவில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்தில் இறக்குமதியாகும் கோதுமை மற்றும் கோதுமை மாவை மறு ஏற்றுமதி செய்ய தடை விதித்து ஐக்கிய அரபு அமீரகத்தின் பொருளாதார அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
ரஷியா-உக்ரைன் போர் தொடங்கியதை தொடர்ந்து, ஐக்கிய அமீரகத்துக்கு ரஷியாவில் இருந்து கோதுமை இறக்குமதி செய்வது தடைபட்டது. இந்த நிலையில், கோதுமை இறக்குமதிக்கு ஐக்கிய அரபு அமீரகம் ரஷியாவிற்கு பதிலாக இந்தியாவை நம்பி இருக்கிறது. இந்நிலையில் கடந்த மே 13-ஆம் தேதி கோதுமை ஏற்றுமதிக்கு இந்தியா தடை விதித்ததை தொடர்ந்து, ஐக்கிய அரபு அமீரகம் தூதரக வழிகளில் இந்திய அரசிடம் கோதுமையை ஏற்றுமதி செய்யுமாறு கோரிக்கையை முன்வைத்தன. இருப்பினும், அத்தகைய கோரிக்கைகளை மதிப்பீடு செய்ய மத்திய அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட குழு இன்னும் முடிவு செய்யவில்லை
இந்நிலையில் மே 13-ஆம் தேதிக்கு முன்னர், இந்தியாவில் இருந்து அமீரகத்திற்கு இறக்குமதி செய்யப்பட்ட இந்தியாவில் உற்பத்தியாகும் கோதுமையை, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய அந்நாடு தடை விதித்துள்ளது. அவ்வாறு ஏற்றுமதி செய்ய விரும்பும் அமீரக நாட்டு நிறுவனங்கள், அதற்கான அனுமதியைப் பெறுவதற்கு அமைச்சகத்திடம் கோரிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
வர்த்தக ஓட்டத்தை பாதித்துள்ள சர்வதேச சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொருளாதார அமைச்சகம் விளக்கமளித்துள்ளது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் பகுதியில்வடகிழக்குபருவ மழை காலம் துவங்கிய நிலையில் வேதாரண்யம் பகுதியில் உள்ள பல ஆயிரக்கக்கான ஏக்கர் பரப்பளவில் உள்ள உப்பளங்கள் மழைநீரால் சூழப்பட்டதால் உப்பு உற்பத்தி நிறுத்தம் செய்யப்பட்டது
இதனால் உப்பளத்தொழிலாளர்கள் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர்
தமிழகத்தில் உப்பு உற்பத்திக்கு தூத்துக்குடிக்கு அடுத்த இடத்தை பிடிப்பது நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியாகும். வேதாரண்யத்தில் இருந்து தெற்கே கோடியக்கரை செல்லும் வழியில் உள்ள அகஸ்தியம் பள்ளியில் சுமார் 10 ஆயிரம் ஏக்கரில் பாத்திகள் அமைத்து உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது.
இதில் சுமார் 3500 ஏக்கர் அளவில் சிறு மற்றும் குறு உற்பத்தியாளர்களால் சாப்பாட்டுக்கு தேவையான உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது.
இங்கு உற்பத்தியாகும் அனைத்து வகை உப்பும் சாலை மார்க்கதில் லாரிகள் வழியாக தான் ஏற்றுமதியாகிறது.
இந்த தொழிலை நம்பி பாத்தி அமைத்தல், உப்பு வாறுதல், ஏற்றுமதி, மூட்டைகள் பிடித்தல் என பல வழிகளில் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை இழந்து உள்ளனர்
தற்போது பெய்த மழையால் அனைத்து உப்பள பகுதிகளும் மழைநீர் சூழ்ந்து பாதிக்கப்பட்டது.
இதேபோல உப்பள பகுதிக்குள் செல்லும் அனைத்து சாலைகளையும் சேதமடைந்து அனைத்து உப்பள சாலைகளும் போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது.
இந்நிலையில் நடப்பாண்டில் கடந்த சில மாதங்களாக பருவம் தவறி மழை பெய்ய துவங்கிய உப்பளங்கள் பாதிக்கப்பட்டது.
மேலும் தற்போது பருவமழை காலம் தொடங்கிய நிலையில் ஜனவரி வரை மழை பொழிவு இருக்கும் என்பதால் உப்பள பகுதிகளில் முழுமையாக உப்பு உற்பத்தி நிறுத்தப்பட்டுள்து.
- 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் மற்றும் அபரிமிதமான நூல் விலை உயர்வு.
- பின்னலாடை உற்பத்தி, கைத்தறி, விசைத்தறி தொழில்துறைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
திருப்பூர் :
தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்க (சைமா) தலைவர் ஈஸ்வரன், மத்திய ஜவுளி அமைச்சர் பியூஷ்கோயலுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் மற்றும் அபரிமிதமான நூல் விலை உயர்வால், உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி பின்னலாடை உற்பத்தி, கைத்தறி, விசைத்தறி தொழில்துறைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.வரும் அக்டோபர் மாதம் புதிய பருத்தி சீசன் துவங்குகிறது. நடப்பு ஆண்டு பருத்தி உற்பத்தி குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை பருத்தி உற்பத்தி அதிகரித்தாலும், உள்நாட்டு தேவைக்குதான் போதுமானதாக இருக்கும்.எனவே மத்திய அரசு உடனடியாக பஞ்சு ஏற்றுமதிக்கு தடை விதிக்கவேண்டும். மூலப்பொருளான பஞ்சை ஏற்றுமதி செய்வதைவிட, ஆடை தயாரித்து ஏற்றுமதி செய்யும்போது நாட்டுக்கு அதிக அளவு அன்னிய செலாவணி கிடைக்கும்.ஆடை உற்பத்தி தொழிலும், இந்த தொழில் சார்ந்த பல லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் பாதுகாக்கப்படும்.இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.
- ஏக்கருக்கு 50 ஆயிரம் ரூபாய் என இச்சாகுபடிக்கு அதிக செலவாகிறது
- தொடர் மழை காரணமாக சின்ன வெங்காய உற்பத்தி பாதித்தது.
குடிமங்கலம் :
உடுமலை, குடிமங்கலம் வட்டாரத்தில் கிணற்றுப்பாசனத்துக்கு ஆண்டுக்கு இரு சீசன்களில், சின்னவெங்காயம் சாகுபடி செய்யப்படுகிறது. ஏக்கருக்கு 50 ஆயிரம் ரூபாய் என இச்சாகுபடிக்கு அதிக செலவாகிறது.கடந்த 2020 மற்றும் கடந்தாண்டு துவக்கத்தில் தொடர் மழை காரணமாக சின்ன வெங்காய உற்பத்தி பாதித்தது.தேவைக்கேற்ப உற்பத்தி இல்லாமல் விலை கிலோ 100 ரூபாய் அளவுக்கு உயர்ந்தது. நுகர்வோர் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதையடுத்து பாதிப்பை தவிர்க்க தமிழக அரசு சார்பில், சின்னவெங்காயம் சாகுபடிக்கு ஊக்கமளிக்கப்பட்டது.
இதனால் சாகுபடி பரப்பு அதிகரித்த நிலையில் கடந்த சீசனில் அறுவடையின் போது விலை வீழ்ச்சி ஏற்பட்டு, பல ஆயிரம் டன் சின்னவெங்காயம் விளைநிலங்களில் இருப்பு வைக்கப்பட்டது.பல மாதங்கள் இருப்பு வைத்தும் விலையில் மாற்றம் இல்லாததால் கிடைத்த விலைக்கு விற்பனை செய்து விவசாயிகள் நஷ்டமடைந்தனர்.தற்போது உடுமலை பகுதியில் குறைந்த பரப்பளவில், சாகுபடி செய்யப்பட்ட சின்னவெங்காயம் அறுவடை பணி துவங்கியுள்ளது.
வியாபாரிகள் தரத்தின் அடிப்படையில், விளைநிலங்களில், கிலோவுக்கு 15 முதல் 25 ரூபாய் வரை விலை கொடுத்து கொள்முதல் செய்து வருகின்றனர். இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:- சின்னவெங்காயம் அறுவடையின் போது, விலை வீழ்ச்சி ஏற்படுகிறது. கடந்த சீசனில் இருப்பு வைத்தவர்களும், நிலையான விலை கிடைக்காமல், நஷ்டமடைந்தனர். சாகுபடியை கைவிட்டால், அடுத்த சீசனில் தட்டுப்பாடு ஏற்பட்டு விலை அதிகரித்து, நுகர்வோர் பாதிப்பு உருவாகும். இப்பிரச்சினைக்கு தீர்வாக சின்னவெங்காயத்துக்கு நிலையான விலை கிடைக்க செய்ய வேண்டும்.சாகுபடி பரப்பு, உற்பத்தி அடிப்படையில், அறுவடை சீசனில், சின்னவெங்காயத்துக்கான ஏற்றுமதி வாய்ப்புகளை அரசு ஏற்படுத்தி தர வேண்டும்.இதனால் நிலையான விலை நிலவரம் நிலவி விவசாயிகள், நுகர்வோர் என இருதரப்பினருக்கும் பாதிப்பு ஏற்படாது என்றனர்.
- 10 லட்சம் கறிக்கோழிகள் உற்பத்தி செய்யப்படுகிறது.
- சோயா புண்ணாக்கு விலை தற்போது ரூ. 70 ஆக விலை உயர்ந்துள்ளது.
பல்லடம் :
பல்லடம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கறிக்கோழி பண்ணைகள் உள்ளன/ இதன் மூலம் தினசரி 10 லட்சம் கறிக்கோழிகள் உற்பத்தி செய்யப்பட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், கேரளா,ஆந்திரா,கர்நாடகா, உள்ளிட்ட பிற மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது, கறிக்கோழி நுகர்வை பொறுத்து இதன் கொள்முதல்விலையை பல்லடத்தில் உள்ள கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழுவினர் தினசரி நிர்ணயம் செய்து அறிவிக்கின்றனர்.இந்த நிலையில் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் தொடர்ந்து பெய்து வரும் கன மழையின் காரணமாக கறிக்கோழிகளை அனுப்ப முடியாத நிலை ஏற்பட்டு நுகர்வு குறைந்து கறிக்கோழிகள் தேக்கமடையும் நிலை ஏற்பட்டது.
மேலும் கறிக்கோழி நுகர்வு குறைவானதால் அதன் விலையும் கடும் வீழ்ச்சியடைந்துள்ளது. கடந்தமாதத்தில் கறிக்கோழி 1கிலோ கொள்முதல் விலை100 ரூபாயாக இருந்த நிலையில் சிலநாட்களுக்கு முன் 66 ரூபாயாக விலை வீழ்ச்சி ஏற்பட்டது.கறிக்கோழி உற்பத்திசெய்ய ஒரு கிலோவிற்கு ரூ.80 முதல், ரூ. 90 வரை செலவாகும் நிலையில், இந்த கடும் விலை வீழ்ச்சியால் பண்ணையாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
இதையடுத்து கறி கோழி பண்ணையாளர்கள் சுமார் 25 சதவீதம் வரை உற்பத்தியை குறைத்தனர். இதையடுத்து கறிக்கோழி கொள்முதல் விலை மெல்ல சீராகி வருகிறது. இதுகுறித்து கறிக்கோழி ஒருங்கிணைப்பு கமிட்டி செயலாளர் சுவாதி சின்னசாமி கூறியதாவது:-
பல்லடம் மற்றும் அதன் சுற்றுவட்டாரபகுதிகளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கறிக்கோழி பண்ணைகள் உள்ளன. இதன் மூலம்தினசரி 10 லட்சம் கறிக்கோழிகள் உற்பத்தி செய்யப்பட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், கேரளா,ஆந்திரா,கர்நாடகா, உள்ளிட்ட பிற மாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது மழை குறைவு,ஆட்கள் பற்றாக்குறை,போன்றவற்றால் விவசாயம் செய்யமுடியாத நிலையில் மாற்றுத்தொழிலாக கறிக்கோழி வளர்ப்பு தொழில் செய்துவருகிறோம். இதில் நாங்கள் மட்டும் பயன்பெறவில்லை.பண்ணை தொழிலாளர்கள்,வாகன ஓட்டுனர்கள்,சோளம்,ராகி,பயிரிடும் விவசாயிகள், கறிக்கோழி பண்ணை அமைக்கும் தொழிலாளர்கள்,என நேரிடையாகவும்,மறைமுகமாகவும்,பல லட்சம் பேர் இந்தத்தொழிலில் ஈடுபட்டு உள்ளோம்.
இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக அண்டை மாநிலங்களில் மழை ,மூலப்பொருட்களின் விலை உயர்வு, மற்றும் தீவன தட்டுப்பாடு உள்ளிட்ட காரணங்களால், கறிக்கோழி தொழில் நெருக்கடி நிலையை சந்தித்து வருகிறது. சென்ற ஜூலை மாதத்தில் கறிக்கோழி 1கிலோ கொள்முதல் விலை100 ரூபாயாக இருந்த நிலையில் சிலநாட்களுக்கு முன் 66 ரூபாயாக வீழ்ச்சி ஏற்பட்டது.கறிக்கோழி உற்பத்திசெய்ய ஒரு கிலோவிற்கு ரூ. 80 முதல் ரூ.90 வரை செலவாகும் நிலையில், விலை வீழ்ச்சியால் பண்ணையாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளோம். இதனால் கறிக்கோழி உற்பத்தியை சுமார் 25 சதவீதம் வரை குறித்தோம். இதையடுத்து விலை மெல்ல சீராகி வருகிறது. இன்றைய கொள்முதல் விலை 91 ரூபாயாக உள்ளது. இந்த நிலையில்,கோழித் தீவனத்திற்கு மூல பொருளான மக்காச்சோளம் விலை உயர்ந்து வருகிறது. சென்ற மாதத்தில் மூட்டை ரூ.2 ஆயிரத்திற்கு விற்பனையான நிலையில், தற்போது மூட்டை ரூ. 2700 ஆக விற்பனையாகிறது. தமிழகத்தில் மக்காச்சோள விளைச்சல் குறைவானதால், வெளிமாநிலங்களில் மக்காச்சோளத்தை கொள்முதல் செய்கிறோம். இதனால் விலையும் அதிகம்,போக்குவரத்து செலவும் கூடுதலாகிறது. எனவே தமிழகத்தை சேர்ந்த விவசாயிகள், மக்காச்சோள விவசாயத்திற்கு முக்கியத்துவம் வேண்டும்.இதே போல கடந்த 6 மாதத்திற்கு முன்பு ஒரு கிலோ ரூ.35 ஆக இருந்த சோயா புண்ணாக்கு விலை தற்போது ரூ. 70 ஆக விலை உயர்ந்துள்ளது. வேன்,லாரி வாடகை, ஆட்கள் கூலி உள்ளிட்டவையும்,10 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. கறிக்கோழி தீவனமான சோயா புண்ணாக்கு,மக்காச்சோளம், போன்றவை மகாராஷ்டிரா,மத்தியபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்படுகிறது.
தீவனங்கள் தொடர்ந்து விலை ஏறி வருவது கோழிப்பண்ணையாளர்களுக்கு கவலையளிக்கிறது மேலும் கோழி தீவனங்கள் அதிகளவு ஏற்றுமதி செய்யப்படுவதால் விலையும் அதிகரிக்கிறது. எனவே தீவன ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும். மேலும் கோழி தீவனங்களுக்கு தேவையான முக்கிய மூலப்பொருட்களான மக்காசோளம்,கம்பு மற்றும் சோயா ஆகியவற்றை வெளி மாநிலங்களை நம்பியே கொள்முதல் செய்யும் நிலை உள்ளது .எனவே அவைகளின் உற்பத்தியை தமிழகத்தில் அதிகரிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.மேலும் ரயில்கள் மூலம் கொண்டு வரும் கோழி தீவனப் பொருட்களுக்கு மத்திய அரசு ெரயில் கட்டணத்தில் சலுகை வழங்க வேண்டும். வெளிநாடுகளில் இருந்து சோயா இறக்குமதிக்கு வரி விலக்கு அளித்து சோயா இறக்குமதியை அதிகரிக்க அனுமதி அளிக்க வேண்டும். இதன் முலம் கறிக்கோழி வளர்ப்பில் செலவுகளைக் கட்டுப்படுத்தி நஷ்டத்தை தவிர்க்க முடியும். மேலும் பொதுமக்களுக்கு சத்தான கோழி இறைச்சியை குறைந்த விலையில் வழங்க முடியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.