என் மலர்
நீங்கள் தேடியது "exports affected"
- 60 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தென்னை விவசாயம் நடைபெற்று வருகிறது.
- பச்சை மற்றும் சிவப்பு நிற இளநீர்களுக்கு பொதுமக்களிடம் மிகுந்த வரவேற்பு.
பொள்ளாச்சி:
கோவை மாவட்டத்தில் ஆனைமலை, பொள்ளாச்சி, கிணத்துக்கடவு ஆகிய 3 தாலுகாக்களில் சுமார் 60 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தென்னை விவசாயம் நடைபெற்று வருகிறது.
இந்த பகுதிகளில் அறுவடை செய்யப்படும் இளநீர் தினமும் மதுரை, சென்னை உள்ளிட்ட வெளி மாவட்டங்களுக்கும், உத்திரபிரதேசம், அசாம், அரியானா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய வெளிமாநிலங்களுக்கும் லாரிகள் மூலம் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகின்றன.
பொள்ளாச்சியில் இருந்து அனுப்பப்படும் பச்சை மற்றும் சிவப்பு நிற இளநீர்களுக்கு பொதுமக்களிடம் மிகுந்த வரவேற்பு உள்ளது.
இதன்காரணமாக கடந்தாண்டு டிசம்பர் மாதத்தில் 4 லட்சம் இளநீர் விற்பனைக்காக ஏற்றுமதி செய்யப்பட்டது. ஆனால் தற்போது சுமார் 3 லட்சம் இளநீர் மட்டுமே விற்பனைக்கு அனுப்பப்பட்டு உள்ளது.
இதுகுறித்து பொள்ளாச்சி இளநீர் விவசாயிகள் கூறியதாவது:-
தென்னை விவசாயத்தில் தற்போது நோய் தாக்குதல் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட இளநீர் காய்களின் மேற்பகுதி சற்று வித்தியாசமாக இருக்கும். ஆனால் அவற்றின் அளவோ, தரமோ குறைவதில்லை. இருந்தபோதிலும் இளநீர் காயின் தோற்றத்தை வைத்து வியாபாரிகள் விலை குறைவாக கொள்முதல் செய்கின்றனர்.
மேலும் வேர்வாடல், வெள்ளை ஈ தாக்குதல், சிலந்தி பூச்சி தாக்குதல் உள்பட பல்வேறு காரணங்களால் தென்னை சாகுபடி பாதிக்கப்பட்டு உள்ளது. இதன்காரணமாக வெளிச்சந்தையில் இளநீர் குறைந்த விலைக்கு விற்பனை ஆகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதற்கிடையே ஆனைமலை இளநீர் உற்பத்தியாளர்கள் சங்க தலைமை ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் கூறியதாவது:-
வட மாநிலங்களில் மிகவும் குளிர்ந்த காலநிலை நிலவுவதால் அங்கு தற்போது இளநீரின் தேவை குறைந்து உள்ளது. அதேநேரத்தில் தமிழகத்தில் இளநீருக்கு தேவை இருப்பதால் அவற்றின் விலையில் மாற்றம் இல்லை. இதன்காரணமாக நல்ல தரமான குட்டை, நெட்டை வீரிய ஒட்டுரக மரங்களின் இளநீர் விலை ரூ.22 ஆகவும், ஒரு டன் ரூ.8250 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
ஒட்டன்சத்திரம்:
ஒட்டன்சத்திரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் ஏராளமான ஏக்கர் பரப்பளவில் தக்காளி சாகுபடி செய்து வருகின்றனர். இந்த தக்காளிகள் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டுக்கு கொண்டு வரப்பட்டு நெல்லை, தூத்துக்குடி, பட்டுக்கோட்டை, புதுக்கோட்டை, கோவை மற்றும் கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. தற்போது கிராமப்பகுதிகளில் தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் வரத்து குறைந்துள்ளது. வடகாடு, பால்கடை, பெத்தேல்புரம், கண்ணனூர், பெரியூர் உள்ளிட்ட மலை கிராமங்களில் இருந்து மட்டும் தக்காளி வரத்து உள்ளது.
இதன் காரணமாக ஒட்டன் சத்திரம் மார்க்கெட்டுக்கு 700 பெட்டிகள் மட்டுமே வந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு 14 கிலோ எடை கொண்ட பெட்டி ரூ.70 முதல் ரூ.80 வரை விற்பனையானது. ஆனால் தற்போது ரூ.350 முதல் ரூ.400 வரை விற்பனை செய்யப்படுகிறது.
குறைந்த அளவே தக்காளிகள் வந்துள்ளதால் உள்ளூர் வியாபாரிகளே வாங்கி சென்று வருகின்றனர். இதனால் வெளியூர்களுக்கு ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது.
தமிழ்புத்தாண்டு வருகிற 14-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. மேலும் திருவிழாக்களும் உள்ளதால் தக்காளி தேவை அதிகரித்துள்ளது. ஆனால் வரத்து குறைந்துள்ளதால் விலை மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.