என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Extra cost"

    • முத்துசாமி மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • அவர் வைத்திருந்த 7 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் ராக்கம்மாபுதூர் அருகே அரசு மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்பதாக அறச்சலூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    தகவலின் பேரில் போலீசார் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்கு அரசு மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்து கொண்டிருந்த அறச்சலூர் இலவந்தம் பகுதியை சேர்ந்த முத்துசாமி என்பவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பின்னர் அவர் வைத்திருந்த 7 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். 

    • ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு சுற்றுவட்டார விவசாயிகள் 5 ஆயிரத்து 45 தேங்காய்களை ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர்.
    • ஒரு கிலோ தேங்காய் பருப்பு அதிகபட்ச விலையாக ரூ.84.50-க்கும், குறைந்தபட்ச விலையாக என ரூ.60.10-க்கும் டெண்டர் முறையில் ஏலம் விடப்பட்டது.

    காங்கயம்:

    திருப்பூர் மாவட்டம் முத்தூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரந்தோறும் சனிக்கிழமை தேங்காய், தேங்காய் பருப்பு, எள் ஆகிய வேளாண் விளை பொருட்களின் ஏலம் நடைபெற்று வருகிறது. நேற்று காலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு சுற்றுவட்டார விவசாயிகள் 5 ஆயிரத்து 45 தேங்காய்களை ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர். டெண்டர் முறையில் நடந்த ஏலத்தில் ஒரு கிலோ தேங்காய் அதிகபட்ச விலையாக ரூ.26.20-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.18.35-க்கும் ஏலம் விடப்பட்டது.

    மேலும் 63 தேங்காய் பருப்பு மூட்டைகள் ஏலம் விடப்பட்டதில் ஒரு கிலோ தேங்காய் பருப்பு அதிகபட்ச விலையாக ரூ.84.50-க்கும், குறைந்தபட்ச விலையாக என ரூ.60.10-க்கும் டெண்டர் முறையில் ஏலம் விடப்பட்டது. ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கடந்த வாரத்தை விட இந்த வாரம் 2 ஆயிரத்து 52 தேங்காய்களும், 21 தேங்காய் பருப்பு மூட்டைகளும் கூடுதலாக ஏலம் விடப்பட்டது. இதில் தேங்காய் ஒரு கிலோவிற்கு ரூ.1.40-ம், தேங்காய் பருப்பு ஒரு கிலோவிற்கு ரூ.6.85-ம் கூடுதலாக விவசாயிகளுக்கு கிடைத்தது.ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய், தேங்காய் பருப்பு 4 டன் அளவில் மொத்தம் ரூ.1 லட்சத்து 92 ஆயிரத்து 65-க்கு வேளாண் விளை பொருட்கள் ஏலம் விடப்பட்டது.இந்த ஏலங்களில் திருப்பூர், ஈரோடு, கரூர், திண்டுக்கல் மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் கலந்து கொண்டனர். இத்தகவலை முத்தூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூட மேற்பார்வையாளர் கே.தங்கவேல் தெரிவித்து உள்ளார்.

    • கூடுதல் விலைக்கு உரங்கள் விற்கப்படுவதாக விவசாயிகள் குமுறுகின்றனர்.
    • அரசின் உத்தரவுகள், அறிவுறுத்தல்களை மீறி தனியார் உரக்கடைகள் செயல்பட்டு வருகிறது.

    திருச்சுழி

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் ஓடைகள், கண் மாய்கள், குளம், குட்டை களில் நீர் மட்டம் அதிகரித்து வருகிறது. இதனால் விவசா யிகள் மகிழ்ச்சி அடைந்துள் ளனர்.

    திருச்சுழி, நரிக்குடி ஒன்றியங்களுக்கு உட்பட்ட அனைத்து கிராமங்களிலும் விவசாயம் முக்கிய தொழிலாக உள்ளது. தற்போது சுமார் 450-க்கும் மேற்பட்ட கிராமங்களில் நெல் பயிரிட்டுள்ள விவசா யிகள் உரமிடுவது, களை எடுப்பது போன்ற பணி களில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். மேலும் பலர் நாற்று நடும் பணிகளையும் தொடங்கி உள்ளனர்.

    இந்த நிலையில் விவசாயி களுக்கு தேவையான உரங்கள் அனைத்தும் தட்டுபாடின்றி கிடைக்கும் வகையில் கூட்டுறவு மற்றும் தனியார் உரக்கடைகள் மூலமாக உரங்களை விற்பனை செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

    இந்த நிலையில் நரிக்குடி, திருச்சுழி ஒன்றியங்களில் பெரும்பாலான கூட்டுறவு வங்கிகளில் அடங்கல் கொடுத்து உரங்களை வாங்க உள்ளதாகவும், அப்படி கொடுத்தும் உரங்கள் கிடைப்பது சிரமமாக உள்ளதாகவும் இதனால் உரம் வாங்க தனியார்கடைகளை நாடி செல்லும் நிலை ஏற்பட் டுள்ளதாகவும் விவசாயி கள் கூறுகின்றனர்.

    தனியார் உரக்கடைகள் யூரியா உரங்களை அதிக ளவில் இருப்பு வைத்துக் கொண்டு உரங்களுக்கு தட்டுப்பாடு நிலவுவது போன்ற ேதாற்றத்தை ஏற்படுத்தி அதிக விலைக்கு உரங்களை விற்கின்றனர். 45 கிலோ எடை கொண்ட யூரியா உர மூடைகள் ரூ.330 முதல் ரூ.350 வரை யிலும் சுமார் 50 கிலோ எடையுள்ள டி.ஏ.பி, பொட்டாஷ் மற்றும் காம்ப்ளக்ஸ் உரங் கள் ரூ.800 முதல் அதிக பட்சமாக ரூ.1600 வரை யிலும் விற்கப்படுவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

    மேலும் இணை உரங்க ளையும் அதிக விலைக்கு கட்டாயப்படுத்தி விற்பனை செய்வதாகவும், இதனால் யூரியா உரம் வாங்கும் போது 5 மடங்கு அதிக விலை கொண்ட டி.ஏ.பி போன்ற இணை உரங்களையும் வாங்க வேண்டி உள்ளதாகவும் விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர்.

    தனியார் உரக்கடைகளில் வாங்கும் உரங்களுக்கு ரசீதுகள் முறையாக வழங்கப்படுவதில்லை என வும், கைரேகை மற்றும் ஆதார் பதிவுகளை அதிக விலைக்கு உரங்கள் விற்பனை செய்யப்படு வதாகவும் சமூக ஆர்வ லர்கள் குற்றம்சாட்டு கின்றனர்.

    அரசின் உத்தரவுகள், அறிவுறுத்தல்களை மீறி தனியார் உரக்கடைகள் செயல்பட்டு வருவதாகவும், பறக்கும் படையினர் மேற்கொள்ளும் ஆய்வு பெயரளவிலேயே உள்ள தாகவும் அவர்கள் தெரி விக்கின்றனர்.

    இந்த நிலையில் தீவிர மாக ஆய்வுகள் மேற்கொண்டு விதிகளை மீறி செயல்படும் கடைகள் மீது கடுமையான நடவ டிக்கை எடுத்து விவசாயி களுக்கு தடையின்றியும், சரியான விலையிலும் உரங்கள் கிடைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பொங்கல் பண்டிகையை யொட்டி சிறப்பு பஸ்கள்.
    • முன்பதிவு டிக்கெட் முழுவதும் விற்றுத்தீர்ந்து விட்டன.

    சென்னை:

    பொங்கல் பண்டிகையை யொட்டி சென்னையில் வசிக்கும் பெரும்பாலான மக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். பொதுமக்களின் வசதிக்காக சிறப்பு ரெயில்கள் மற்றும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

    வழக்கமான ரெயில்கள் மற்றும் சிறப்பு ரெயில்களில் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே டிக்கெட் முழுவதும் விற்றுத்தீர்ந்து விட்டன. இந்த நிலையில் பொதுமக்கள் பலர் ஆம்னி பஸ்களை நாடுவது வழக்கம்.

    பொங்கல் பண்டிகையை யொட்டி பயணிகள் நெரி சலை கருத்தில் கொண்டு ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூலிக்கப்படு வதை தடுக்கவும், விதிமீ றல்களில் ஈடுபடும் ஆம்னி பஸ்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், 30 சிறப்பு குழுக்களை போக்குவரத்து ஆணையரகம் அமைத்து உள்ளது.இதுகுறித்து தமிழக போக்குவரத்து துறை ஆணையரக அதிகாரிகள் கூறியதாவது:-

    தொடர் விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில், ஆம்னி பஸ்கள் அதிகமாக இயக்கப்படும். பொங்கல் பண்டிகை நெருங்க உள்ள தால் ஆம்னி பஸ்கள் அதிக அளவில் இயக்கப்பட உள்ளது. மேலும் ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும். வரி நிலுவை, அதிக சுமை, பர்மிட் இல்லாமல் இயக்குவது போன்ற விதிமீறல்களும் காணப்படும்.

    இதுகுறித்து சோதனை நடத்தி நடவடிக்கை எடுக்க தமிழகம் முழுவதும் 30-க்கும் மேற்பட்ட சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. ஒவ்வொரு குழுவி லும் 3 பேர் இருப்பார்கள். அடுத்த வாரம் முதல் இந்த சிறப்பு குழுக்கள் செயல்படும்.

    இந்த குழுவினர் நெடுஞ் சாலை மற்றும் முக்கிய பஸ் நிலையங்களில் திடீர் சோதனை நடத்துவார்கள். ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலித்தாலோ, விதிமீறல்கள் காணப்பட் டாலோ அபராதம் விதிக்கப் படும். மேலும் பஸ்களின் அனுமதி தற்காலிகமாக ரத்து செய்யப்படும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    ×