search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "faculty"

    • கோடை விடுமுறை காலம் என்றாலும் தலைமை ஆசிரியர் மற்றும் ஓரிரு ஆசிரியர்கள் சுழற்சி முறையில் பணிக்கு வர வேண்டும்
    • பிளஸ்-1 மாணவர் சேர்க்கை தான் மாநகராட்சி பள்ளிகளில் முக்கிய பங்கு வகிக்கிறது.

    சென்னை:

    பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு நேற்று வெளியானது. இதைத் தொடர்ந்து பிளஸ்1 மாணவர் சேர்க்கை தமிழகம் முழுவதும் 13-ந் தேதி (திங்கட்கிழமை) முதல் தொடங்குகிறது.

    பிளஸ்-1 வகுப்பில் சேரும் மாணவ-மாணவிகள் எந்த குரூப்பை தேர்வு செய்ய வேண்டும் என்பது அவர்கள் விரும்பும் பாடத்தின் மீதான ஆர்வத்தை பொறுத்து உள்ளது.

    என்ஜினீயரிங் அல்லது மருத்துவப் படிப்புகளை விரும்புவோர் முதல் குரூப், மருத்துவம் சார்ந்த படிப்புகளை விரும்புவோர் அறிவியல் குரூப், வங்கி, சி.ஏ., ஆடிட்டர், கம்பெணி மேலாளர் படிப்புகளை விரும்புவோர் 3-வது குரூப்பில் சேர ஆர்வமாக உள்ளனர்.

    அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை உடனே தொடங்க வேண்டும் என்று கல்வித்துறை உத்தரவிட்டுள்ளதை தொடர்ந்து சென்னை உள்பட அனைத்து நகரங்களிலும் மாணவர் சேர்க்கை தொடங்குகிறது.

    தற்போது கோடை விடுமுறை காலம் என்றாலும் தலைமை ஆசிரியர் மற்றும் ஓரிரு ஆசிரியர்கள் சுழற்சி முறையில் பணிக்கு வர வேண்டும் என்றும் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப படிவத்தை வழங்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    அதன் அடிப்படையில் சென்னை மாவட்டத்தில் உள்ள அரசு மேல் நிலைப்பள்ளிகள், மாநகராட்சி பள்ளிகளில் பிளஸ்-1 சேர்க்கை நடைபெற உள்ளது.

    இது குறித்து கல்வி அதிகாரி ஒருவர் கூறுகையில், சென்னையில் 35 மாநகராட்சி மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளில் திங்கட்கிழமை முதல் மாணவர்களை சேர்ப்பதற்காக விண்ணப்ப படிவம் வினியோகிக்கப்படும். அதனை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும்.

    மார்க் அடிப்படையில் மாணவர்களுக்கு குரூப் ஒதுக்கப்படும். வெளியில் படித்த மாணவர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்படும். யாருக்கும் இடம் இல்லை என்று சொல்லாத அளவிற்கு வாய்ப்பு கொடுக்கப்படும்.

    பிளஸ்-1 மாணவர் சேர்க்கை தான் மாநகராட்சி பள்ளிகளில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஒரு சில மாநகராட்சி பள்ளிகளில் சேருவதற்கு கடுமையான போட்டியும் உள்ளது என்றார்.

    • அரசு உள்ளிட்ட அனைத்து கல்லூரிகளிலும் டாப் மதிப்பெண் பெற்றவர்களுக்கு பி.காம் பாடப்பிரிவு கிடைத்தது.
    • இன்று முதலாம் ஆண்டு மாணவ-மாணவர்களுக்கு திட்ட மிட்டபடி வகுப்புகள் தொடங்கப்பட்டன.

    சென்னை:

    தமிழ்நாடு முழுவதும் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு இன்று வகுப்புகள் தொடங்கின. தமிழ கத்தில் 164 அரசு கலை அறிவியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகிறது. இதுதவிர அரசு உதவிபெறும் கல்லூரிகள், தனியார் சுயநிதி கல்லூரிகளும் ஆயிரத்திற்கும் மேல் உள்ளன.

    பிளஸ்-2 முடித்த மாணவ-மாணவிகள் உயர் கல்வியை தொடரும் வகையில் பி.ஏ., பி.காம்., பி.எஸ்.சி., பி.பி.ஏ., பி.சி.ஏ., உள்ளிட்ட இளங்கலை வகுப்புகளில் சேர ஆர்வம் காட்டினர். வழக்கம் போல இந்த ஆண்டும் பி.காம் பாடப்பிரிவுகளுக்கு கடுமையான போட்டி ஏற்பட்டது. அரசு உள்ளிட்ட அனைத்து கல்லூரிகளிலும் டாப் மதிப்பெண் பெற்றவர்களுக்கு பி.காம் பாடப்பிரிவு கிடைத்தது.

    2 வருடத்திற்கு பிறகு இந்த ஆண்டு தான் ஜூலையில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்பு தொடங்கி உள்ளது. பிளஸ்-2 தேர்வு முடிவு வந்தவுடன் மாணவர் சேர்க்கையை கல்லூரி கல்வி இயக்ககம் தொடங்கியது.

    இந்த ஆண்டு அரசு கல்லூரிகளில் சேர 2 லட்சத்து 35 ஆயிரம் விண்ணப்பங்கள் முறையாக பெறப்பட்டன. 1 லட்சத்து 7 ஆயிரம் இடங்களுக்கு 2 கட்டமாக கலந்தாய்வு நடத்தி முடிக்கப்பட்டு 84,899 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். இன்னும் 22 ஆயிரம் இடங்கள் காலியாக உள்ளன. இந்த இடங்களுக்கு நாளை (4-ந்தேதி) நேரடி கலந்தாய்வு நடத்தப்படுகிறது. பி.சி. இனத்தவர்களுக்கு நாளையும், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 5-ந்தேதியும், எஸ்.சி-க்கு 6-ந்தேதியும், 7-ந்தேதி தகுதி உள்ள அனைத்து மாணவர்களுக்கும் 'வராண்டா' கலந்தாய்வு கல்லூரிகளில் நடைபெறுகிறது.

    இதற்கிடையில் இன்று முதலாம் ஆண்டு மாணவ-மாணவர்களுக்கு திட்ட மிட்டபடி வகுப்புகள் தொடங்கப்பட்டன. அனைத்து கலை அறிவியல் கல்லூரிகளும் இன்று திறக்கப்பட்டதால் மாணவ-மாணவிகள் உற்சாகமாக வகுப்புகளுக்கு சென்றனர்.

    பள்ளி படிப்பை முடித்து விட்டு முதன்முதலாக கல்லூரி வளாகத்திற்குள் கால்பதிக்கின்ற அளவில் அவர்கள் தங்கள் உயர் கல்வி பயணத்தை இன்று தொடங்கினர்.

    புதிதாக வந்த மாணவ-மாணவிகளை கல்லூரியின் மூத்த மாணவர்கள், பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள் வரவேற்கும் வகையில் சிறப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். இனிப்பு மற்றும் மலர் கொடுத்து வரவேற்றதோடு அவர்களை வகுப்பறையில் அமர வைத்து உற்சாகப்படுத்தினார்கள்.

    மாணவர்கள் ஒவ்வொருவராக அறிமுகம் செய்யப்பட்டனர். ஆங்கில பேச்சுத் திறனை வளர்க்கும் வகையில் தொடக்க வகுப்புகளை நடத்த திட்டமிட்டுள்ளன. சில கல்லூரிகளில் உயர் கல்வி வழிகாட்டு கலந்தாய்வு நடத்தவும் முடிவு செய்து உள்ளன.

    அரசு கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மனஅழுத்தம் இல்லாமல் ஒழுக்கத்தை மேம்படுத்தும் வகையில் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. கல்லூரி காலத்தை முறையாக பயன்படுத்தி வேலை வாய்ப்பை பெறக்கூடிய சூழலை உருவாக்கும் வகையில் மாணவர்களுக்கு ஆலோசனை அறிவுரைகள் வழங்கப்பட்டன.

    குறிப்பாக அரசு கலை அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கு உயர் கல்வி தூண்டுதல் நிகழ்ச்சி, வேலைவாய்ப்பு பற்றி வழிகாட்டுதல் நிகழ்ச்சி ஆகியவற்றை நடத்த திட்டமிட்டு இருப்பதாக கல்லூரி முதல்வர்கள் தெரிவிக்கின்றனர்.

    மாநில கல்லூரி, நந்தனம், வியாசர்பாடி அரசு கல்லூரி மாணவர்களுக்கு ஒழுக்க நெறிமுறைகள் குறித்த வகுப்புகளும் நடத்தப்படுகின்றன.

    சென்னையில் ராணி மேரி, ஸ்டெல்லாமேரி, பாரதி, எத்திராஜ், கிறிஸ்துவ கல்லூரி, வைஷ்ணவா கல்லூரி உள்ளிட்ட மகளிர் கல்லூரிகள் பரபரப்பாக காணப்பட்டன. காலை மற்றும் மாலை வகுப்புகளில் சேர்ந்த மாணவ-மாணவிகள் முதல்நாள் வகுப்பிற்கு பெற்றோருடன் வந்தனர்.

    சிலர் கல்லூரி வாகனத்திலும், இருசக்கர வாகனத்திலும் கல்லூரிகளுக்கு சென்றனர். முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்பு தொடங்கியதால் அரசு பஸ் மற்றும் மின்சார ரெயில்களில் கூட்டம் அதிகம் காணப்பட்டது.

    • 1.4.2003-க்கு பிறகு அரசு பணியில் சேர்ந்தோருக்கு தற்போது நடைமுறையில் உள்ள பங்களிப்பு ஓய்வு திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வு திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
    • அகவிலைப்படி உயர்வை 1.1.2023 முன் தேதியிட்டு தமிழ்நாடு அரசு ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    ராசிபுரம்:

    தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் நாமக்கல் மாவட்ட தலைவர் லோகநாதன் மற்றும் நிர்வாகிகள், தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பி உள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

    1.4.2003-க்கு பிறகு அரசு பணியில் சேர்ந்தோருக்கு தற்போது நடைமுறையில் உள்ள பங்களிப்பு ஓய்வு திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வு திட்டத்தை அமல்படுத்த வேண்டும். தற்போது முடக்கி வைக்கப்பட்டுள்ள சரண் விடுப்பு ஒப்படைப்பு, உயர் கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு ஆகியவற்றை உடனடியாக வழங்கிட அரசாணை வழங்கிட வேண்டும்.

    மாணவர்களின் கல்வி நலன் கருதி அனைத்து உயர்நிலைப் பள்ளிகளிலும் 8 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை உறுதி செய்திட வேண்டும். மருத்துவர்களுக்கு உள்ளதைப் போல ஆசிரியர்களுக்கும் பணி பாதுகாப்புச் சட்டத்தினை இந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் நிறைவேற்றிட வேண்டும்.

    2004-2006 தொகுப்பூதிய காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும். மத்திய அமைச்சரவை உயர்த்த முடிவெடுத்துள்ள 4 சதவீதம் அகவிலைப்படி உயர்வை 1.1.2023 முன் தேதியிட்டு தமிழ்நாடு அரசு ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    • மாதந்தோறும் நடைபெறும் பவுர்ணமி எற்பாட்டினை காங்கேய சித்தர் அறக்கட்டளையினர் செய்து வருகின்றனர்.
    • கும்பகோணத்தை சேர்ந்த சிவாச்சாரியார் ரமேஷ், தமிழ் முறைப்படி வேள்வி செய்தார்.

    நாகப்பட்டினம்:

    நாகூர் குயவர் மேட்டு தெருவில் உள்ள காங்கேயர் மடத்தில் உள்ள காங்கேய சித்தர் ஜீவ பீடத்தில் ஆடி மாத பவுர்ணமி பூஜை நடைபெற்றது. தமிழ் புலவர் காங்கேய சித்தருக்கு கும்பகோணத்தை சேர்ந்த சிவாச்சாரியார் ரமேஷ் தமிழ் முறைப்படி வேள்விசெய்தார்.

    தொடர்ந்து அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. உபயத்தை பெருங்கடம்பனூரை சேர்ந்த நித்தியானந்தம், ஜெயகுமார் குடும்பத்தினர் செய்தனர்.

    மாதந்தோறும் நடைபெறும் பவுர்ணமி எற்பாட்டினை காங்கேய சித்தர் அறக்கட்டளையினர் செய்து வருகின்றனர்.

    ×