என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Fake jewelry"

    • போலி நகைகளை அடகு வைத்து பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டதாக ஞானசேகரனின் தம்பி கைது செய்யப்பட்டுள்ளார்.
    • ஞானசேகரனின் தம்பி சுரேஷ் உள்பட 3 பேரை கைது செய்து முதலியார்பேட்டை காவல்நிலைய போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

    அண்ணா பல்கலை. மாணவி வழக்கில் சிக்கிய ஞானசேகரனின் தம்பி சுரேஷ் உட்பட 3 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    சென்னை நகைக்கடைகளில் போலி நகைகளை அடகு வைத்து பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டதாக ஞானசேகரனின் தம்பி கைது செய்யப்பட்டுள்ளார்.

    ஞானசேகரனின் தம்பி சுரேஷ் உள்பட 3 பேரை கைது செய்து முதலியார்பேட்டை காவல்நிலைய போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நிர்மலா (வயது 26). இவர் மும்பையில் போலி நகை கொடுத்து மோசடி செய்ததாக தெரிகிறது. இதையடுத்து அவரை மும்பை பாந்த்ரா போலீசார் தேடி வந்தனர்.
    • நிர்மலா சேலத்தில் பதுங்கி இருப்பதாக தகவல் அறிந்து சேலம் வந்த போலீசார் அன்னதானப்பட்டி போலீசார் உதவியுடன் நிர்மலாவை கைது செய்தனர்.

    சேலம்:

    சேலம் பாதுகாப்பட்டி சண்முகா நகர் அடுத்த ஜவகர் நகர் பகுதி சேர்ந்த வெங்கடேசன். இவரது மகள் நாகமணி என்கிற நிர்மலா (வயது 26). இவர் மும்பையில் போலி நகை கொடுத்து மோசடி செய்ததாக தெரிகிறது. இதையடுத்து அவரை மும்பை பாந்த்ரா போலீசார் தேடி வந்தனர்.

    நிர்மலா சேலத்தில் பதுங்கி இருப்பதாக தகவல் அறிந்து சேலம் வந்த போலீ சார் அன்னதானப்பட்டி போலீசார் உதவியுடன் நிர்மலாவை கைது செய்தனர். பின்பு அவரிடம் அன்னதானப்பட்டி போலீஸ் நிலையத்தில் வைத்து விசா ரணை நடத்தி னர். விசா ரணையில், நிர்மலா தனது கூட்டாளிக ளுடன் மும்பை பாந்த்ரா பகுதியில் பகுதியில் உள்ள நகை கடையில் பழைய நகையை மாற்றி புது நகை எடுப்பது போல் காண்பித்து கவரிங் நகையை கொடுத்து மோசடி யில் ஈடுபட்டது தெரிய வந்தது.

    நகைக்கடை உரிமையா ளர் கொடுத்த புகார் பேரில் வழக்கு பதிவு செய்து நிர்மலாவின் கூட்டாளி களை பிடித்து விசாரணை நடத்தினர். அவர்கள் கொடுத்த தகவலின்பேரில் சேலத்திற்கு வந்து நிர்ம லாவை கைது செய்துள்ள னர். இதை தொடர்ந்து நிர்மலாவை போலீசார் சேலம் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு எண் 4-ல் ஆஜர் படுத்தினர். இதை தொடர்ந்து கோர்ட்டு அனுமதியுடன் நிர்மலாவை மும்பைக்கு விசாரணைக்கு அழைத்து சென்றனர்.

    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • 2 பேரும் நகைக்கடையில் கொடுத்த செல்போன் எண்ணை கொண்டு போலீசார் ஆய்வு செய்தனர்.

    கடையநல்லூர்:

    தென்காசி மாவட்டம் கடையநல்லூரை சேர்ந்தவர் ரபீஸ் ராஜா (வயது33). இவர் அங்கு நகைக்கடை நடத்தி வருகிறார்.

    சம்பவத்தன்று இவரது நகைக்கடைக்கு பெண் ஒருவர், வாலிபரை அழைத்துக்கொண்டு வந்திருந்தார். அவர்கள் சுமார் 78 கிராம் பழைய நகைகளை கொடுத்துவிட்டு 4 கிராம் கொண்ட ஒரு ஜோடி கம்மல் வாங்கி உள்ளனர்.

    மீதமுள்ள நகைக்கு பதிலாக பணமாக ரூ.2.55 லட்சம் பணமாக பெற்றுள்ளனர். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சென்றுவிட்டனர். மறுநாள் ரபீஸ் ராஜா அந்த 78 கிராம் பழைய நகைகளை உருக்கி உள்ளார். அப்போது அவை போலியான நகைகள் என்பதை அறிந்து அவர் அதிர்ச்சி அடைந்தார்.

    இதையடுத்து 2 பேரும் சேர்ந்து ஏமாற்றியதை அறிந்த கடை உரிமையாளர், கடையநல்லூர் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    கடையில் இருந்த சி.சி.டி.வி. கேமராக்கள் மூலம் போலீசார் ஆய்வு செய்து விசாரணை நடத்திய நிலையில், 2 பேரும் நகைக்கடையில் கொடுத்த செல்போன் எண்ணை கொண்டு போலீசார் ஆய்வு செய்தனர்.

    அப்போது அவர்கள் 2 பேரும் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியில் இருப்பது தெரியவந்தது. அங்கு சென்று போலீசார் நடத்திய விசாரணையில், நகைக்கடையில் போலி நகைகளை கொடுத்துவிட்டு மோசடியில் ஈடுபட்டது ராஜபாளையம் சோமையா புரத்தை சேர்ந்த அன்னலெட்சுமி (வயது45), ஸ்ரீநாத் (29) என்பது தெரியவந்தது.

    இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அன்னலட்சுமியிடம் இருந்து கம்மல் மற்றும் ரூ.2.½ லட்சத்தை பறிமுதல் செய்தனர். பின்னர் 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • 6 பாக்கெட்டில் தங்க முலாம் பூசிய கவரிங் நகைகள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.
    • வங்கியில் நகைகளை அடமானம் வைத்த வாடிக்கையாளர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் கெங்கவல்லியில் ஒரு பொதுத்துறை வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் அந்த பகுதியை சேர்ந்த ஏராளமானோர் கணக்கு வைத்துள்ளனர்.

    இந்த வங்கியில் 3 மாதங்களுக்கு ஒரு முறை அடகு நகைகளை சோதனை செய்வது வழக்கம், அதன்படி கடந்த 24-ந் தேதி வழக்கம் போல அடமான நகைகளை மற்றொரு வங்கியின் நகை மதிப்பீட்டாளர்கள் சோதனை செய்தனர்.

    அப்போது 6 பாக்கெட்டில் தங்க முலாம் பூசிய கவரிங் நகைகள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. கெங்கவல்லியை அடுத்த கூடமலை, கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த 2 பேர் கணக்கில் போலி நகைகளை அடகு வைத்து ரூ. 41 லட்சம் பெற்றிருப்பது தெரிய வந்தது.

    இது குறித்து வங்கியின் மேலாளார் மித்ரா தேவி வங்கியில் பணிபுரியும் நகை மதிப்பீட்டாளர் பாலச்சந்தரிடம் விசாரித்தார். அதில் அவர் 84 பவுன் தங்க முலாம் பூசிய போலி நகையை 2 பேரின் பெயரில் வைத்து பணத்தை எடுத்தது தெரிய வந்தது. மேலும் அதில் பாதி பணத்தை திரும்ப செலுத்தி உள்ளார்.

    இதுகுறித்து வங்கி மேலாளர் கெங்கவல்லி போலீசில் பாலச்சந்தர் மீது புகார் கொடுத்தார். அதன் பேரில் விசாரணை நடத்திய போலீசார் பாலச்சந்தரை கைது செய்தனர்.

    மேலும் வங்கி மேலாளர் மித்ரா தேவி, உதவி மேலாளர் ஜெகன், வங்கி கேசியர் வேலுசாமி ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதனால் அந்த வங்கியில் நகைகளை அடமானம் வைத்த வாடிக்கையாளர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

    நகை மதிப்பீட்டாளர் பாலச்சந்தர் ஏற்கனவே நடுவலூர் வங்கி கிளையில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதால் கெங்கவல்லி கிளைக்கு மாற்றப்பட்டார். அங்கு 11 ஆண்டுகளாக பணிபுரிந்த நிலையில் இந்த மாதம் முதல் வாரத்தில் இந்த மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது.

    மேலும் பாலச்சந்தர் ரூ.1 கோடி மதிப்பிலான வீடு கட்டியுள்ள நிலையில் மற்றொரு சொத்து வாங்குவதற்காக போலி நகையை அடகு வைத்து பணம் வாங்கியதும் தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தனியார் நகைக்கடன் வழங்கும் நிறுவனத்தில் போலி நகைகளை அடகு வைத்து வாடிக்கையாளர்கள் கடன் பெற்று இருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக 2 ஊழியர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
    காஞ்சிபுரம்:

    மும்பையை தலைமையிடமாகக் கொண்டு எஸ்.பி. எப்.சி. எனும் பெயரில் தனியார் நகைக்கடன் வழங்கும் நிறுவனம் காஞ்சிபுரம் காமராஜர் வீதியில் செயல்பட்டு வருகிறது.

    இந்த நிறுவனத்தில் ஆண்டுதோறும் கணக்கு வழக்குகளை தணிக்கை செய்வது வழக்கம். கடந்த சில தினங்களாக நகைக்கடன் வழங்கும் நிறுவனத்தில் தலைமை நிறுவனத்தில் இருந்து வந்த அதிகாரிகள் கணக்குகளை தணிக்கை செய்த போது திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

    தனியார் நகைக்கடன் வழங்கும் நிறுவனத்தில் போலி நகைகளை அடகு வைத்து வாடிக்கையாளர்கள் கடன் பெற்று இருப்பது தெரியவந்தது.

    இது குறித்து வங்கியில் பணிபுரியும் ஊழியர்களான காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன், மகேஷ் ஆகியோரிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

    அப்போது அவர்கள் இருவரும் வாடிக்கையாளர்களின் பெயரில் போலி நகைகளை அடகு வைத்து கடன் பெற்றதாக கணக்கு காட்டி பல லட்சம் பணத்தை எடுத்து மோசடி செய்து இருப்பது தெரியவந்தது.

    இச்சம்பவம் குறித்து தனியார் நகை கடன் நிறுவன தலைமை அதிகாரி விஷ்ணு காஞ்சி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் தனியார் நகை கடன் வழங்கும் நிறுவனத்தில் பணிபுரிந்த இரு ஊழியர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    ஓமலூர் அருகே ரூ. 4 கோடியே 67 லட்சம் மோசடி செய்தது குறித்து கைதான கூட்டுறவு சங்க செயலாளர் உள்பட 5 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
    காடையாம்பட்டி:

    ஓமலூர் அருகே குண்டுக்கல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் உள்ளது.

    இந்த சங்கத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு தகுதி இல்லாத விவசாயிகளுக்கு கடன் வழங்குவதாகவும், விவசாயிகள் கொடுத்த நகைகளை எடுத்து விட்டு போலி நகைகளை வைத்து கோடிக்கணக்கில் மோசடி செய்யப்பட்டுள்ளதாகவும் புகார் கூறப்பட்டது.

    இதையடுத்து அதிகாரிகள் குண்டுக்கல் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் தணிக்கை செய்தனர். அப்போது கூட்டுறவு சங்கத்தில் ரூ.4 கோடியே 67 லட்சம் மோசடி நடந்திருப்பது தெரிய வந்தது.

    இது குறித்த புகாரின் பேரில் கடன் சங்க செயலாளர் பழனிசாமி (56), உதவி செயலாளர் பெரியசாமி (54), காசாளர் ரகுமணி (52), நகை மதிப்பீட்டாளர் சேட்டு (53), உதவியாளர் பெரியதம்பி (50) ஆகியோர் மீது வழக்குபதிவு செய்து சேலம் வணிக குற்ற புலனாய்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர்.

    மேலும் தொடர் விசாரணைக்கு பிறகு 5 பேரும் சஸ்பெண்டு செய்யப்பட்டனர். ரூ. 4 கோடியே 67 லட்சம் மோசடி செய்ததாக 5 பேரும் நேற்று கைது செய்யப்பட்டனர். அவர்களை ஓமலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்திய போலீசார் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். #tamilnews
    ×