search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "fake priest arrested"

    • இளம்பெண்ணின் உடலில் உள்ள தீய சக்திகளை விரட்ட பில்லி சூனிய பூஜை செய்ய வேண்டும்.
    • இளம்பெண்ணின் கண்களை கருப்பு துணியால் கட்டி விட்டு பூஜைகள் செய்வதுபோல் நடித்து அவரை சாமியார் பலாத்காரம் செய்தார்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் பகுதியை சேர்ந்தவர் இளம்பெண். இவருக்கும் வாலிபர் ஒருவருக்கும் கடந்த ஜூன் மாதம் திருமணம் நடந்தது.

    திருமணமான ஒரு மாதத்தில் இளம்பெண்ணிற்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதுகுறித்து இளம்பெண் தன்னுடைய தாயாரிடம் தெரிவித்தார்.

    இளம்பெண்ணை அவரது தாயார் பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தார். அப்போதும் இளம்பெண் உடல்நிலை சரியாகவில்லை.

    இதையடுத்து கணவர் வீட்டிற்கு வந்த இளம்பெண் தனது உடல்நிலை குறித்து கணவரிடமும் அவரது மாமியாரிடமும் தெரிவித்தார்.

    இளம்பெண்ணின் மாமியார் யுனானி மருந்து கடையில் வேலை செய்யும் தனக்கு தெரிந்த சாமியாரிடம் மருமகளை அழைத்துச் சென்றார். அங்கு இருந்த சாமியார் இளம்பெண்ணின் உடலில் 5 தீய சக்திகள் உள்ளது.

    இளம்பெண்ணின் உடலில் உள்ள தீய சக்திகளை விரட்ட பில்லி சூனிய பூஜை செய்ய வேண்டும். பந்தலகுடாவில் உள்ள தனது வீட்டிற்கு மருமகளை அழைத்து வர வேண்டும் என கூறினார்.

    இதையடுத்து நேற்று முன்தினம் இரவு தனது மனைவியை சாமியார் வீட்டிற்கு கணவர் அழைத்துச் சென்றார்.சாமியார் இளம்பெண்ணை வீட்டிற்குள் அழைத்துச் சென்றார். பின்னர் பூஜை செய்ய வேண்டி இருப்பதால் இளம்பெண்ணின் கணவரை வெளியே அனுப்பினார்.

    அப்போது இளம்பெண்ணின் கண்களை கருப்பு துணியால் கட்டி விட்டு பூஜைகள் செய்வதுபோல் நடித்து அவரை பலாத்காரம் செய்தார்.

    தனக்கு நடந்த கொடுமைகள் குறித்து இளம்பெண் தனது கணவரிடம் தெரிவித்தார். அவர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து போலி சாமியாரை கைது செய்தனர்.

    • திருப்பத்தூர் மாவட்ட போலி சாமியாரால் பெண் ஏமாற்றப்பட்டதால் கந்திலி காவல் நிலையத்தில் புகார் அளிக்குமாறு மத்தூர் போலீசார் நளினியிடம் தெரிவித்தனர்.
    • சம்பவம் குறித்து திருப்பத்தூர் மாவட்டம் காந்திலி காவல் நிலைய போலீசார் விசாரித்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

    மத்தூர்:

    திருப்பத்தூர் மாவட்டம், காக்கங்கரை அடுத்த, நரவந்தம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் நளினி (வயது45). இவர் நத்தம் ஊராட்சியில் தூய்மை பணியாளராக பணிபுரிந்து வருகிறார். கடந்த வருடம் நளினி வீடு வழியே சென்ற சாமியார் ஒருவர் நளினியிடம் வீட்டில் யாரோ செய்வினை செய்திருப்பதாகவும், அதன் காரணமாக தொடர்ந்து கஷ்டப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

    இதில் ஏமாந்து போன நளினி செய்வினை எடுக்க வேண்டும். ஆடு பலியிட வேண்டும் என பலவற்றை கூறி மூளை சலவை செய்துள்ளார்.

    இதனால் கடந்த 6 மாதங்களாக சிறுக, சிறுக சேர்த்து வைத்த ரூபாய் ஒரு லட்சத்திற்கும் மேல் பணம் மற்றும் நகைகளை அந்த போலி சாமியாரிடம் கொடுத்துள்ளார்.

    பணத்தை பெற்றுக்கொண்ட போலி சாமியார் தொடர்ந்து தோஷம் கழிக்க வேண்டும் என பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார். ஆனாலும் நளினியின் வீட்டில் கஷ்டம் தீர்ந்தபாடில்லை. சாமியாரை தொடர்பு கொண்டு கேட்க போன் செய்த போதெல்லாம் அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்ததாக தெரிகிறது.

    இந்நிலையில் எதிர்பாராதவிதமாக நளினியை தொடர்பு கொண்ட போலி சாமியார் சிறப்பு பூஜை ஒன்று செய்ய வேண்டும். அதற்காக ஆடு மற்றும் பூஜை பொருட்கள் வாங்க வேண்டுமென்பதால், உடனடியாக ரூபாய் பத்தாயிரத்தை எடுத்துக்கொண்டு மத்தூர் பேருந்து நிலையம் வரவேண்டும் என கூறியுள்ளார்.

    இந்த தகவல் அறிந்த நளினியின் மகன் மற்றும் அவரின் நண்பர்கள் நேற்று மத்தூரில் பணத்துக்காக காத்திருந்த போலி சாமியாரை பிடித்து தர்ம அடி கொடுத்தனர். பின்னர் அவரை மத்தூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    பின்னர் போலி சாமியார் குறித்து மத்தூர் போலீசார் விசாரணை நடத்தியதில் இவர் தருமபுரி மாவட்டம் கம்பைநல்லூரை அடுத்த, செங்குட்டை பகுதியைச் சேர்ந்த செல்வம் (47) என்பது தெரிய வந்தது.

    இவர் இதே போல் பல பெண்களை சுற்றுவட்டாரங்களில் உள்ள கிராமத்தில் ஏமாற்றி பணம் பறித்து இருப்பதும் தெரியவந்தது. மேலும் இவர் ஒவ்வொரு கிராமத்திற்கும் தனது சொந்த காரில் சென்று கிராமத்தின் வெளியே காரை நிறுத்திவிட்டு கிராமத்தினுள் நடந்து சென்று குடும்ப பெண்களிடம் தோஷம் இருப்பதாக கூறி நம்பவைத்து ஏமாற்றுவதும் தெரிய வந்துள்ளது.

    திருப்பத்தூர் மாவட்ட போலி சாமியாரால் பெண் ஏமாற்றப்பட்டதால் கந்திலி காவல் நிலையத்தில் புகார் அளிக்குமாறு மத்தூர் போலீசார் நளினியிடம் தெரிவித்தனர். தற்போது இந்த சம்பவம் குறித்து திருப்பத்தூர் மாவட்டம் காந்திலி காவல் நிலைய போலீசார் விசாரித்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

    • புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் போலி சாமியார் சின்னதுரையை கைது செய்தனர்.
    • சின்னத்துரை இவ்வாறு வேறு எங்காவது பொதுமக்களை ஏமாற்றி பணம் பறித்துள்ளாரா? ஆபாச படங்களை அனுப்பி ஏதேனும் முறைகேடுகள் செய்தாரா? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

    அரூர்:

    வேலுார் மாவட்டம், குடியாத்தம் அருகேயுள்ள எருக்கம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சின்னதுரை (வயது 40).

    தருமபுரி மாவட்டம், அரூர் வள்ளுவபுரத்தை சேர்ந்த ஒருவரின் வீட்டிற்கு கடந்த 19-ம் தேதி தன்னை சாமியார் என அறிமுகப்படுத்திக் கொண்டு சின்னத்துரை சென்றுள்ளார்.

    அந்த வீட்டின் பின்புறம் செய்வினை உள்ளதாகவும், அதை நீக்க பூஜை செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார். ஆனால் வீட்டுக்காரருக்கு அந்த ஆசாமி மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

    இதையடுத்து, பூஜை பொருட்கள் வாங்க போகலாம் என்று சின்னதுரையை அழைத்துக் கொண்டு அரூர் வந்துள்ளார்.

    தன் மீது சந்தேகம் வந்துவிட்டது என்பதை அறிந்த சின்னத்துரை போலீசில் பிடித்து கொடுத்து விடுவார் என்ற பயத்தில் இருசக்கர வாகனத்தில் இருந்து குதித்து தப்பி ஓடிவிட்டார்.

    தப்பி ஓடிய சின்ன துரையை செல்போனில் தொடர்பு கொண்ட அந்த வீட்டுக்காரர் பூஜை செய்யாமல் சென்று விட்டீர்களே என கேட்டபோது, அவரை தகாத வார்த்தையால் திட்டி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

    சிறிது நேரத்தில் அவரது மகளுடைய செல்போனுக்கு ஒரு பெண்ணின் நிர்வாண படத்தை சின்னதுரை அனுப்பியுள்ளார். இது குறித்து அரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் தரப்பட்டது.

    புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் போலி சாமியார் சின்னதுரையை கைது செய்தனர். சின்னத்துரை இவ்வாறு வேறு எங்காவது பொதுமக்களை ஏமாற்றி பணம் பறித்துள்ளாரா? ஆபாச படங்களை அனுப்பி ஏதேனும் முறைகேடுகள் செய்தாரா? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

    திண்டிவனம் அருகே இளம்பெண்ணை கற்பழித்த போலி சாமியாரை போலீசார் கைது செய்தனர்.
    திண்டிவனம்:

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள ஓங்கூரில் வசித்து வருபவர் மணி என்கிற செல்வமணி (வயது 40). இவரது சொந்த ஊர் காஞ்சீபுரம் மாவட்டம் சூணாம்பேடு ஆகும். திருமணமாகி, மனைவியை பிரிந்து வாழ்ந்து வரும் இவர், தான் ஒரு சாமியார் என்றும், மாந்திரீகம் செய்து, பில்லி-சூனியம் போன்றவைகளை நீக்கி தருவதாகவும் கூறி வந்துள்ளார்.

    இதற்காக நீண்ட தாடி, ஜடா முடியுடன் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பாதிரி, ராயநல்லூர், காட்ராம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் வலம் வந்தார். மேலும் மக்களை கவரும் வகையில் ஆன்மிகம் குறித்தும் பேசி வந்துள்ளார்.

    இதனால் அவரை நம்பிய பல பெண்கள் பில்லி-சூனியத்தை நீக்கி தருமாறு சாமியாரை நாடி சென்றனர். அந்த சமயத்தில் அவர்களை பற்றி முழுவதும் அறிந்து கொள்ளும் மணி, பில்லி-சூனியத்தை நீக்குவதாக கூறி அவர்களது வீடுகளுக்கு சென்று வந்தார்.

    இதில் பல பெண்களை கவர்ந்து, அவர்களை கணவரிடம் இருந்து பிரித்து சென்று தன்வசமாக்கி குடும்பம் நடத்தி வந்ததாகவும், சிறிது நாட்களுக்கு பிறகு அந்த பெண்களை ஏமாற்றி விட்டு, வேறு பெண்களை தேடி சென்றுவிடுவார் என்றும் கூறப்படுகிறது. தற்போது மதுரையை சேர்ந்த ஹேமா (40) என்ற பெண்ணுடன் சேர்ந்து வாழ்ந்து வருகிறார்.

    இந்த நிலையில் கடந்த ஓராண்டுக்கு முன்பு காஞ்சீபுரம் மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் மணியை செல்போன் மூலம் தொடர்பு கொண்டார். அப்போது தனது மகனின் வாழ்வில் பெரிய பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளது, அதை நீங்கள் வந்து சரிசெய்து தரவேண்டும் என்று தெரிவித்தார்.

    இதையடுத்து, சாமியார் மணி அவரது வீட்டுக்கு நேரடியாக சென்றார். அங்கு அவர்களது பிரச்சினைகள் மற்றும் குடும்பத்தில் உள்ளவர்களின் விவரங்களை கேட்டறிந்தார். அப்போது, அவருக்கு 18 வயதில் ஒரு மகள் இருப்பதை தெரிந்து கொண்டார்.

    இதையடுத்து, உங்கள் ஊரில் ஒரு கோவில் கட்டினால் அனைத்து பிரச்சினைகளும் பறந்து போய்விடும் என்று தெரிவித்தார். ஆனால், ‘கோவில் கட்டும் போது உங்களது மகள் வீட்டில் இருந்தால் அவளுக்கு ஆகாது, எனவே எனது பாதுகாப்பில் அவள் இருக்க வேண்டும்’ என்று தெரிவித்தார்.

    இதை நம்பிய அவர்கள், தங்களது மகளை சாமியாரோடு அனுப்பி வைத்தனர். அதன்படி அந்த இளம்பெண்ணை சாமியார் ஓங்கூருக்கு அழைத்து வந்தார். பல மாதங்களாக தன்னுடன் இருந்த, அந்த இளம்பெண்ணுக்கு 19-வது வயது பிறந்தவுடன், அவரது பெற்றோரை சந்தித்து, உங்களது மகளை நான் திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறேன், ஆகையால் எனக்கு திருமணம் செய்து கொடுங்கள் என்று கேட்டார்.

    இதை கேட்டு இளம்பெண்ணின் பெற்றோர் அதிர்ச்சியடைந்து, எதிர்ப்பு தெரிவித்தனர். சாமியாரின் ஆசைக்கு இளம்பெண்ணும் சம்மதிக்கவில்லை. எனவே அவரிடம், உனது அண்ணனின் பிரச்சினை தீர வேண்டும் என்றால், நீ என்னுடன் சேர்ந்து வாழ்ந்தால் மட்டுமே முடியும் எனக்கூறி ஓங்கூரில் உள்ள தனது வீட்டில் வைத்து இளம்பெண்ணை கற்பழித்தார்.

    இது குறித்து தனது தந்தையிடம் இளம்பெண் தெரிவித்தார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அவரது தந்தை, திண்டிவனம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் விஜி வழக்குப்பதிவு செய்து, மணியை கைது செய்தார். மேலும் அவருக்கு உதவியாக இருந்த ஹேமாவையும் கைது செய்தார்.

    பின்னர் சாமியாரிடம் நடத்திய விசாரணையில் அவர் போலி சாமியார் என்பதும், ஹேமாவை அவரது கணவரிடம் இருந்து பிரித்து வந்து தன்வசப்படுத்திக்கொண்டதும் தெரியவந்தது. டிப் டாப் மனிதராக இருக்கும் மணி ஒட்டு தாடியுடன், சாமியார் உடை அணிந்து கையில் வேப்பிலையுடன் வலம் வந்துள்ளார்.

    சாமியார் என்ற போர்வையில் பல பெண்களின் வாழ்க்கையை அவர் சீரழித்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. எனவே தொடர்ந்து அவரிடம் தீவிர விசாரணை நடத்த இருப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
    மீஞ்சூர் அருகே அருள்வாக்கு கூறுவதாக ஏமாற்றி பெண்ணுக்கு செக்ஸ் தொல்லை கொடுத்த போலி சாமியார் கைது செய்யப்பட்டார்.

    பொன்னேரி:

    சென்னை போரூரை சேர்ந்தவர் ராஜசேகர். சாமியாரான இவர், மீஞ்சூரை அடுத்த தேவதானத்தில் உள்ள நிலத்தடி கருப்பசாமி கோவிலில் அமாவாசை, பவுர்ணமி தினத்தில் அருள் வாக்கு கூறி வந்தார்.

    இந்த நிலையில் கடந்த வாரம் தடபெரும்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த திருமணமான இளம்பெண் ஒருவர் அருள்வாக்கு கேட்பதற்கு கோவிலுக்கு சென்றார்.

    அப்போது இளம்பெண்ணிடம், சாமியார் ராஜசேகர் ஆசை வார்த்தை கூறி வீட்டிற்கு அழைத்துச் சென்றார். இதனை நம்பி இளம் பெண் சென்ற போது அவருக்கு ராஜசேகர் செக்ஸ் தொல்லை கொடுத்தார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த இளம்பெண் அங்கிருந்து தப்பி வந்தார். பின்னர் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து பொன்னேரி மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    போலீசார் வழக்குப்பதிவு செய்து போலி சாமியார் ராஜசேகரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    அவர் இதேபோல் வேறு பெண்கள் யாருக்காவது பாலியல் தொல்லை கொடுத்துள்ளாரா? என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

    ×