search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "fall and die"

    • கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டிருந்தது
    • பின் சக்கரம் அவர் தலை மீது ஏறி நசுங்கியது

    வேலூர்:

    காட்பாடி அடுத்த சின்ன அரும்பாக்கம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன்.இவருடைய மகன் கார்த்திகேயன் (வயது 16), காட்பாடி காந்திநகரில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.

    நேற்று மாலை பள்ளி முடிந்ததும் அரசு டவுன் பஸ்சில் பயணம் செய்தார். கூட்டம் அதிகமாக இருந்தால் பஸ்சின் முன்பக்க படிக்கட்டில் தொங்கியபடி பயணித்தார். காட்பாடி-குடியாத்தம் சாலையில் பஸ் செல்லும் போது எதிர்பாராத விதமாக படியில் இருந்து கார்த்திகேயன் தவறி கீழே விழுந்தார்.

    கண் இமைக்கும் நேரத்தில் பஸ்சின் பின் சக்கரம் அவர் தலை மீது ஏறி நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த மற்ற பயணிகள் அதிர்ச்சியடைந்து திகைத்து நின்றனர்.

    தகவல் அறிந்த காட்பாடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் மாணவன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து காட்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மாணவர்கள் பஸ்களில் படிக்கட்டில் பயணம் செய்கிறார்களா? என போலீசார், ஆசிரியர்கள் அடங்கிய கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டிருந்தது.

    அந்த கண்காணிப்பு குழுவினர் பஸ் நிறுத்தங்களில் நின்று கண்காணிப்பார்கள். சமீப காலமாக பஸ் நிறுத்தங்களில் கண்காணிப்பு குழு நிற்பதில்லை.

    அவர்களை மீண்டும் தீவிரமாக கண்காணிக்க கலெக்டர் உத்தரவிட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • தலையில் பலத்த காயம் ஏற்பட்டது
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    வேலூர்:

    விரிஞ்சிபுரம் போஸ்ட் ஆபீஸ் தெருவை சேர்ந்தவர் காசிநாதன் (வயது 56). அங்குள்ள ஓட்டலில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

    அவரது தங்கை குடும்பத்துடன் வசித்து வந்தார். நேற்று இரவு வீட்டின் மாடிப்படி ஏறிய போது காசிநாதன் தவறி கீழே விழுந்தார். அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

    உடனே அவரை மீட்டு அடுக்கம் பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த காசிநாதன் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து விரிஞ்சிபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சிகிச்சை பலனின்றி பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    திருவண்ணாமலை மாவட்டம் படவேடு அருகே உள்ள அணைக்கட்டி கிராமத்தை சேர்ந்தவர் அசோக்குமார் (வயது 47). கட்டிடம் மேஸ்திரி.

    நேற்று சென்னை சென்ற அவர் இரவு ஊருக்கு வருவதற்காக வேலூர் வந்த அரசு பஸ்சில் பயணம் செய்தார். நள்ளிரவு 1.30 மணிக்கு பஸ் வேலூர் கிரீன் சர்க்கிளை கடந்தது.

    அப்போது அசோக் குமார் பஸ்சில் இருந்து சீக்கிரம் இறங்க வேண்டும் என்பதற்காக அவரது பையை எடுத்துக்கொண்டு அவசர அவசரமாக படிக்கட்டு அருகே வந்தார்.

    தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி உள்ள சர்வீஸ் சாலையில் இருந்து புதிய பஸ் நிலையம் செல்லும் வளைவில் பஸ் திரும்பியது.

    அப்போது எதிர்பாராத விதமாக அசோக்குமார் படிக்கட்டில் இருந்து தவறி கீழே விழுந்தார். அவரது தலையில் பலத்த அடிபட்டது. இதில் சம்பவ இடத்திலேயே அசோக்குமார் பரிதாபமாக இறந்தார்.

    இதனை கண்ட பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். வேலூர் வடக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அசோக்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வெண்ணந்தூர் சாலையில் உள்ள சேகோ பேக்டரி பகுதியில் இரவு 8 மணியளவில மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
    • தவறி விழுந்ததில் தலையில் பலத்த காயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார்.

    நாமக்கல்:

    சேலம் மாவட்டம் மல்லூர் அருகே உள்ள அய்யம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி (வயது 45). இவர் கடந்த 26-ந் தேதி மல்லூரில் இருந்து வெண்ணந்தூர் சாலையில் உள்ள சேகோ பேக்டரி பகுதியில் இரவு 8 மணியளவில மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது நிலை தடுமாறிய அவர் சாலையோரம் தவறி விழுந்தார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார். இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு உறவினர்கள் ஆஸபத்திரிரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி கந்தசாமி நேற்றிரவு பரிதாபமாக இறந்தார். இது குறித்து வெண்ணந்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×