என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "fallen"
- நாரைக்கிணறு பிரிவு ரோட்டில் உள்ள சிறிய பாலத்தின் மீது உட்கார்ந்து கொண்டு இருந்துள்ளார். அவர் அப்போது குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.
- இந்த நிலையில் திடீரென அவர் நிலை தடுமாறி பாலத்தில் இருந்து 15 அடி ஆழம் உள்ள பள்ளத்தில் விழுந்தார்.
ராசிபுரம்:
ராசிபுரம் அருகே உள்ள புதுச்சத்திரம் ஒன்றியம் ராஜா கவுண்டனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வரதராஜன் (வயது 70). கூலித் தொழிலாளி.
இவர் தற்போது நாமகிரிப்பேட்டை அருகே உள்ள காமராஜ் நகர் நாரைக்கிணறு பிரிவு ரோடு பகுதியைச் சேர்ந்த அவரது தம்பி முருகேசன் (60) என்பவரது வீட்டில் கடந்த மூன்று மாதங்களாக தங்கி இருந்து வந்துள்ளார்.
இவர் நேற்று மாலையில் நாரைக்கிணறு பிரிவு ரோட்டில் உள்ள சிறிய பாலத்தின் மீது உட்கார்ந்து கொண்டு இருந்துள்ளார். அவர் அப்போது குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் திடீரென அவர் நிலை தடுமாறி பாலத்தில் இருந்து 15 அடி ஆழம் உள்ள பள்ளத்தில் விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த வரதராஜன் சம்பவ இடத்திலேயே பலியானார். இறந்த வரதராஜனுக்கு சின்னப்பாப்பு என்ற மனைவியும், மணிகண்டன் மற்றும் சங்கர் ஆகிய 2 மகன்களும் உள்ளனர்.
இது பற்றி ஆயில்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து வரதராஜனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு ஆஸ்பத்தி–ரிக்கு அனுப்பி வைத்தனர்.
கண்ணமங்கலம்:
சந்தவாசல் அருகே உள்ள ஆத்துவாம்பாடி கிராமத்தை சேர்ந்த கட்டிட மேஸ்திரி காசி மல்லி (வயது 50) என்பவர் கடந்த 11-ந் தேதி உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு, குடிபோதையில் மொபட்டை தள்ளிக்கொண்டு வந்தார்.
அப்போது வழியில் கிணற்றில் தவறி விழுந்து விட்டார். அக்கம் பக்கத்தினர் காசிமல்லியை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் வேலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை இறந்து விட்டார்.
இது தொடர்பாக சந்தவாசல் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.