என் மலர்
முகப்பு » family parties
நீங்கள் தேடியது "family parties"
- ஒடிசாவின் கேந்திரபாராவில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார்.
- அப்போது பேசிய அவர், அடுத்த 6 மாதங்களில் குடும்ப கட்சிகள் சிதைந்து போகும் என்றார்.
புவனேஸ்வர்:
ஒடிசா மாநிலம் கேந்திரபாரா பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:
ஜூன் 4-ம் தேதிக்குப் பிறகு அடுத்த 6 மாதங்களில் ஒரு புதிய உத்வேகத்துடன் நாடு வளர்ச்சி அடையும்.
அதே சமயம், அந்த 6 மாதங்களில் அரசியலில் மிகப்பெரிய சூறாவளியும் வரப்போகிறது.
குடும்ப கட்சிகளின் உறுப்பினர்களிடையே பெரும் அதிருப்தி நிலவி வருகிறது.
அவர்களது தொடர் தோல்வி குறித்து சொந்த கட்சியினரே கேள்வி எழுப்ப தொடங்கிவிட்டனர்.
எனவே அடுத்த 6 மாதங்களில் குடும்ப கட்சிகள் சிதைந்து போவதை இந்த நாடு காணும் என தெரிவித்துள்ளார்.
×
X