என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "farmer died"
- விவசாயி மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார்.
- போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தேவதானப்பட்டி:
தேவதானப்பட்டி அருகே குள்ளப்புரத்தை சேர்ந்தவர் மச்சேந்திரன் (வயது54).
சம்பவத்தன்று தனது தோட்டத்தில் வாழை இலை அறுக்க சென்றார். அப்போது மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து அவரது மனைவி நாகேஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் ஜெயமங்கலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- பைக் விவசாயி மீது மோதியதில் செல்வம் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார்.
- போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
வருசநாடு:
ஆண்டிபட்டி அருகே உள்ள கணேசபுரத்தைச் சேர்ந்தவர் செல்வம் (வயது 45). விவசாயி. இவர் தனது மனைவியுடன் சொக்கத்தேவன் பட்டிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார்.
அப்போது மீனாட்சிபுர த்தைச் சேர்ந்த செந்தூர் பாண்டி என்பவர் ஓட்டி வந்த பைக் இவர் மீது மோதியதில் செல்வம் தூக்கி வீசப்பட்டார். இதில் சம்பவ இடத்திலேயே தனது மனைவி கண் முன் பரிதாப மாக உயிரிழந்தார். இது குறித்து அவரது மாமனார் ஈஸ்வரன் கொடுத்த புகாரின் பேரில் கண்ட மனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வனவிலங்குகள் அடிக்கடி உணவு மற்றும் தண்ணீர் தேடி குடியிருப்பு, விவசாய நிலங்களில் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன.
- யானை தாக்கியதில் விவசாயி மற்றும் கன்றுகுட்டி பலியானது
ஒட்டன்சத்திரம்:
பழனி அருகே மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள வனப்பகுதியில் யானை, காட்டெருமை, காட்டுபன்றி, முயல், கடமான் உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இவை அடிக்கடி உணவு மற்றும் தண்ணீர் தேடி குடியிருப்பு, விவசாய நிலங்களில் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன.
பழனி அருகே சிந்தல வாடம்பட்டி, ராமபட்டி ணம்புதூரை சேர்ந்தவர் தண்டபாணி(52). இவர் தென்னந்தோப்பில் குடும்பத்துடன் தங்கியிருந்து வேலைபார்த்து வருகிறார். இந்தோட்டத்தில் திடீரென காட்டுயானை புகுந்து தண்டபாணியை தாக்கியதில் படுகாயமடைந்தார்.
அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு பழனி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் தண்டபாணி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரி வித்தனர். இதுகுறித்து சத்திரபட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தா.புதுக்கோட்டையை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது ேதாட்டத்தில் கன்றுகுட்டி கட்டப்பட்டி ருந்தது. வனப்பகுதியில் இருந்து வழி மாறி வந்த காட்டுயானை தோட்டத்தி ற்குள் புகுந்தது.
அங்கிருந்த கன்று குட்டியை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே அது பலியானது. தகவல் அறிந்து வந்த கால்நடை டாக்டர் கன்றுகுட்டியின் உடலை பிரேத பரிசோதனை செய்தார். பின்னர் தோட்டத்திலேயே உடல் புதைக்கப்பட்டது. காட்டு யானை நடமாட்டத்தால் பொதுமக்கள் அச்சமடை ந்துள்ளனர்.
எனவே வனத்துறையினர் துரிதமாக செயல்பட்டு யானை நட மாட்டத்தை கண்காணித்து வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- தாண்டிக்குடி அருகே சென்றபோது திடீரென நிலைதடுமாறி டிரைவரின் கட்டுப்பாட்டை மீறி ஜீப் ஓடி 150 பள்ளத்தில் கவிழ்ந்தது.
- இந்த விபத்தில் ஒருவர் பலியானார். 8 பேர் படுகாயமைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பெரும்பாறை:
கொடைக்கானல் கீழ்மலை தாண்டிக்குடி அருகே அசன்கொடை கிராமத்தை சேர்ந்த குப்புச்சாமி மகன் அபிராமன்(28). இவர் அப்பகுதியில் அவகோடா, பேசன்புரூட் உள்ளிட்ட பழங்கள் மற்றும் காய்கறிகள் பயிரிட்டு வந்தார். மேலும் அதேபகுதியை சேர்ந்த விவசாயிகளுடன் ஜீப்பில் பெருமாள்மலை சந்தைக்கு சென்றார். ஜீப்பை ஈஸ்வரன் என்பவர் ஓட்டிச்சென்றார்.
பின்னர் அவர்கள் ஊர் திரும்பி கொண்டிருந்தனர். நள்ளிரவு சமயம் தாண்டிக்குடி அருகே சென்றபோது திடீரென நிலைதடுமாறி டிரைவரின் கட்டுப்பாட்டை மீறி ஜீப் ஓடியது.
150 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் அபிராமன் சம்பவ இடத்திலேயே பலியானார். டிரைவர் ஈஸ்வரன் மற்றும் விவசாயிகள் நாகராஜன்(32), சரத்குமார்(27), பன்னீர்செல்வம்(26), செந்தில்குமார்(35), சேகர்(35), ரவிச்சந்திரன்(45) உள்பட 8 பேர் படுகாயமடைந்தனர் அவர்கள் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அபிராமன் உடல் வத்தலக்குண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து தாண்டிக்குடி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தாடிக்கொம்பு:
திண்டுக்கல் அருகே தாடிக்கொம்புவைச் சேர்ந்தவர் ராமசாமி (வயது 70). இவருக்கு சொந்தமான தோட்டம் முனியபிள்ளை பட்டியில் உள்ளது. தினமும் தோட்டத்துக்கு சென்று வருவது வழக்கம். இன்று காலை தனது தோட்டத்துக்கு சென்று விட்டு பைக் மூலம் ஊர் திரும்பிக் கொண்டு இருந்தார். முனியபிள்ளைபட்டி பிரிவு அருகே வரும் போது தனியார் மில் வேன் தொழிலாளர்களை ஏற்றிக் கொண்டு வந்தது.
கண் இமைக்கும் நேரத்தில் ராமசாமி மீது மில் வேன் பயங்கரமாக மோதியது. இதில் படுகாயமடைந்த ராமசாமி சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து தாடிக்கொம்பு சப்-இன்ஸ்பெக்டர் முருகன் வழக்குபதிவு செய்து மில் வேன் டிரைவர் சசிகுமாரிடம் விசாரித்து வருகிறார்.
தாடிக்கொம்பு பகுதியில் ஏராளமான தனியார் மில்கள் உள்ளன. இந்த மில்களுக்கு சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து தொழிலாளர்கள் வேன் மூலம் அழைத்து வரப்படுகின்றனர். இந்த மில் வேன்களை ஓட்டும் டிரைவர்கள் பெரும்பாலும் இளைஞர்களாகவே இருப்பதால் அதிக வேகமாக செல்கின்றனர். இதனால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது.
அவர்கள் மட்டுமின்றி மற்ற வாகன ஓட்டிகளும் தொடர்ந்து விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே இந்த மில் வேன்களை கண்காணித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
அறந்தாங்கி:
புதுக்கோட்டை மாவட்டம் மேற்பனைக்காடு வடக்கு கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 65). விவசாயியான இவர் 200 செம்மறி ஆடுகளை பராமரித்து வந்தார். கடந்த மாதம் 16-ந்தேதி வீசிய கஜா புயலின் போது 125-க்கும் மேற்பட்ட ஆடுகள் இறந்தன.
இதைத்தொடர்ந்து உடல் நலம் பாதிக்கப்பட்டும், தினந்தோறும் ஆடுகள் உயிரிழந்து வந்தன. தற்போது சுமார் 50 ஆடுகள் மட்டுமே எஞ்சியுள்ளன.
எஞ்சிய ஆடுகளுக்கும் ரத்த சோகை மற்றும் நோய் பாதிப்பு ஏற்பட்டதால் தினமும் கால்நடை மருத்துவர் மூலம் ஆடுகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. சிகிச்சைக்கும், சத்தான தீவனம் வாங்கி கொடுக்கவும், தினமும் அதிகமான தொகை செலவிடப்பட்டதால் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க சிரமப்பட்டு வந்தார்.
மேலும் இறந்த ஆடுகளுக்கான நிவாரண தொகையை அரசு உடனே வழங்க வேண்டுமென வருவாய்த் துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அலுவலர்களை ராஜேந்திரன் வலியுறுத்தி வந்தார். ஆனால் ஆடுகளுக்கான நிவாரணத்தை அரசு இதுவரை வழங்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஆடுகள் உயிரிழந்ததால் மிகவும் சோகத்துடன் இருந்து வந்த ராஜேந்திரன் நேற்று திடீரென மாரடைப்பால் மரண மடைந்தார். இது குறித்து அவரது உறவினர்கள் கூறும்போது, செம்மறி ஆடுகள் மீது அளவற்ற பாசம் கொண்டவர் ராஜேந்திரன்.
அவரது குரலுக்கும் சைகைக்கும் கட்டுப்பட்டு ஆடுகள் நடந்து கொள்ளும். புயலால் ஒரே நேரத்தில் 125 ஆடுகள் இறந்தன. அதன் பிறகு கடந்த ஒரு மாதத்தில் சுமார் 25 ஆடுகள் இறந்து விட்டன.
அரசு நிவாரணம் அளித்தாலாவது எஞ்சிய ஆடுகளை காப்பாற்றி விடலாம் என தினமும் புலம்பி வந்தார். 100-க்கும் மேற்பட்ட ஆடுகளை இழந்த சோகத்தோடும், தினமும் இறக்கும் ஆடுகளை அடக்கம் செய்து வந்த தாலும் மனமுடைந்திருந்த ராஜேந்திரன் மாரடைப்பால் உயிரிழந்து விட்டார் என்றனர்.
இது குறித்து கால்நடை மருத்துவர் சேக்தாவுத் கூறும்போது, இறந்த ஆடுகள் குறித்து கணக்கெடுக்கப்பட்டுள்ளது. மேலும் இறந்த ஆடுகளை பிரேத பரிசோதனை செய்து தேவையான சான்றுகளுடன் நிவாரண தொகைக்காக அரசுக்கு அனுப்பி வைத்துள்ளோம் என்றார். #gajacyclone
டெல்லியில் நேற்றும், நேற்று முன்தினமும் நடைபெற்ற விவசாயிகள் போராட்டம் மற்றும் பேரணியில் பங்கேற்பதற்காக நாடு முழுவதிலும் இருந்து பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லியில் குவிந்தனர்.
நேற்று பாராளுமன்றத்தை நோக்கி பேரணியாக செல்ல முயன்ற விவசாயிகளை போலீசார் தடுத்து நிறுத்தினர். பின்னர், ஜந்தர் மந்தர் பகுதியில் நடைபெற்ற கண்டன கூட்டத்தில் விவசாயிகளின் நியாயமான போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து ராகுல் காந்தி, சீதாராம் யெச்சூரி, அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட தலைவர்கள் உரையாற்றினார்கள்.
இந்நிலையில், இந்த கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் இருந்து இன்று தவறி கீழே விழுந்த ஒரு விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார். இறந்தவரின் பெயர் கிரண் சன்ட்டப்பா(52) என்றும் அவர் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள கோல்ஹாப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் என்றும் தெரியவந்துள்ளது. #Maharashtrafarmer #DelhiAmbedkarBhawan #Delhifarmerprotest
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்