search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தாண்டிக்குடி அருகே 150 அடி பள்ளத்தில் ஜீப் கவிழ்ந்து விவசாயி பலி 8 பேர் படுகாயம்
    X

    150 அடி பள்ளத்தில் கவிழ்ந்த ஜீப்.

    தாண்டிக்குடி அருகே 150 அடி பள்ளத்தில் ஜீப் கவிழ்ந்து விவசாயி பலி 8 பேர் படுகாயம்

    • தாண்டிக்குடி அருகே சென்றபோது திடீரென நிலைதடுமாறி டிரைவரின் கட்டுப்பாட்டை மீறி ஜீப் ஓடி 150 பள்ளத்தில் கவிழ்ந்தது.
    • இந்த விபத்தில் ஒருவர் பலியானார். 8 பேர் படுகாயமைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    பெரும்பாறை:

    கொடைக்கானல் கீழ்மலை தாண்டிக்குடி அருகே அசன்கொடை கிராமத்தை சேர்ந்த குப்புச்சாமி மகன் அபிராமன்(28). இவர் அப்பகுதியில் அவகோடா, பேசன்புரூட் உள்ளிட்ட பழங்கள் மற்றும் காய்கறிகள் பயிரிட்டு வந்தார். மேலும் அதேபகுதியை சேர்ந்த விவசாயிகளுடன் ஜீப்பில் பெருமாள்மலை சந்தைக்கு சென்றார். ஜீப்பை ஈஸ்வரன் என்பவர் ஓட்டிச்சென்றார்.

    பின்னர் அவர்கள் ஊர் திரும்பி கொண்டிருந்தனர். நள்ளிரவு சமயம் தாண்டிக்குடி அருகே சென்றபோது திடீரென நிலைதடுமாறி டிரைவரின் கட்டுப்பாட்டை மீறி ஜீப் ஓடியது.

    150 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் அபிராமன் சம்பவ இடத்திலேயே பலியானார். டிரைவர் ஈஸ்வரன் மற்றும் விவசாயிகள் நாகராஜன்(32), சரத்குமார்(27), பன்னீர்செல்வம்(26), செந்தில்குமார்(35), சேகர்(35), ரவிச்சந்திரன்(45) உள்பட 8 பேர் படுகாயமடைந்தனர் அவர்கள் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    அபிராமன் உடல் வத்தலக்குண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து தாண்டிக்குடி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×