என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "farmer dies"
- போராட்ட களத்தில் இருந்த விவசாயிக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது.
- இதனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் உயிரிழந்தார்.
புதுடெல்லி:
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாப், அரியானா உள்பட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லி நோக்கி பேரணியாக புறப்பட்டுள்ளனர்.
விவசாயிகளை டெல்லிக்குள் நுழையாமல் இருப்பதை உறுதிசெய்ய தடுப்புகள் வைத்து போலீசார் மறித்துள்ளனர். போராட்டம் தொடங்கிய முதல் நாளிலேயே அரியானாவின் அம்பாலா மாவட்டம் சம்பு எல்லையில் போலீசார் மற்றும் பாதுகாப்புப் படையினரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். தடுப்புகளை மீற முயன்றவர்கள் மீது கண்ணீர் புகைகுண்டுகள் வீசப்பட்டன. இதனால் முன்னேற முடியாமல் கடந்த 3 நாளாக சம்பு எல்லையிலேயே விவசாயிகள் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில், போராட்டக் களத்தில் இருந்த கியான் சிங் (63) என்ற முதியவருக்கு இன்று காலை திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனால் அவர் பஞ்சாப்பின் ராஜ்புராவில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அதன்பின், மேல் சிகிச்சைக்காக பாட்டியாலாவில் உள்ள ராஜீந்திரா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு கியான் சிங்கை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
போராட்டத்தில் பங்கேற்ற விவசாயி மாரடைப்பால் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- வேன் ஒன்று ராமசாமி ஓட்டி சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளில் மீது மோதியது.
- அறச்சலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அறச்சலூர்:
அறச்சலூர் அருகே உள்ள பச்சாகுட்டையை சேர்ந்தவர் ராமசாமி (55). விவசாயி.
இவர் தனது ஊரான பச்சாக்குட்டையில் இருந்து பள்ளியூத்து செல்லும் ரோட்டில் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது எதிரே குளிர்பானங்கள் ஏற்றிக்கொண்டு மண்கரட்டை நோக்கி சென்றுகொண்டிருந்த வேன் ஒன்று ராமசாமி ஓட்டி சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளில் மீது மோதியது.
இந்த சம்பவத்தில் ராமசாமிக்கு பலத்த அடிபட்டது. அக்கம் பக்கம் இருந்தவர்கள் ராமசாமியை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி ராமசாமி இறந்தார். இச்சம்பவம் குறித்து அறச்சலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மது அருந்திய கோதண்ட மூர்த்திக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் முடுக்கன் துறை சந்தை பகுதியில் சேர்ந்தவர் கோதண்ட மூர்த்தி (வயது 48). இவரது மனைவி வனிதா (40). இவ ர்கள் இருவரும் விவசாய வேலை செய்து வருகின்றனர்.
இவர்க ளுக்கு 2 மகன்கள் உள்ள னர். கோதண்ட மூர்த்திக்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது. இவர் நீண்ட நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்து வமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் சம்பவ த்தன்று மது அருந்திய கோதண்ட மூர்த்திக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து உறவினர்கள் அவரை சக்தியில் உள்ள ஒரு தனி யார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக சத்திய அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கோத ண்டமூர்த்தி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவி த்தனர்.
பின்னர் இது குறித்து அவரது மனைவி வனிதா பவானிசாகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கடையில் வேலை செய்து கொண்டிருந்த போது விபரீதம்
- போலீசார் விசாரணை
போளூர்:
போளூரை அடுத்த சனிக்கவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் நாராயணசாமி (வயது 70). விவசாயி. இவருக்கு போளூர் சி.சி. ரோட்டில் 2 கடைகள் உள்ளன. இவர் அவ்வப்போது எலக்ட் ரிக்கல் வேலையும் செய்வார். நேற்று காலையில் போளூர் வந்த அவர் தனக்கு சொந்தமான கடையில் எலக்ட்ரிக்கல் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென்று மின்சாரம் தாக்கியதில் அவர் தூக்கி வீசப்பட்டார்.
அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு போளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி செய்யப்பட்டு மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம் பாறை ஆஸ்பத்திரியில் அவர் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் நேற்று காலை இறந்து விட்டார். இது குறித்து அவருடைய மகன் கார்த்திகேயன் புகார் அளித்தார். அதன்பேரில் போளூர் போலீசார் விசாரணை
வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கூட்டை கலைக்க முயன்றபோது பரிதாபம்
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
செய்யாறு:
செய்யாறு அடுத்த மோரணம் ஏ காலனியை சேர்ந்தவர் பாலு (வயது 70).விவசாயி. இவரது மனைவி முருகம்மாள் (64). இவர்களுக்கு வாணி என்ற மகளும், சரவணன், நாராயணன் என்ற மகன்களும் உள்ளனர்.
இவர்களது வீட்டு மாடியில் குளவி கூடு கட்டி இருந்தது. அதனை அழிப்பதற்காக கடந்த 15-ந் தேதி பாலு உள்பட குடும்பத்தினர் வீட்டு மாடிக்கு சென்று குளவி கூட்டை கலைக்க முயன்றனர். அப்போது குளவி அனைவரையும் கொட்டி உள்ளது. இதில் பாலு படுகாயம் அடைந்தார். மற்றவர்களுக்கு காயம் ஏற்பட்டது. படுகாயம் அடைந்த பாலுவை மீட்டு குடும்பத்தினர் செய்யாறு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
மேல் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது வரும் வழியில் உத்திரமேரூர் அரசு மருத்துவமனையில் பாலுவை சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை அவர் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து பாலுவின் மகன் சரவணன் மோரணம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாலுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது சம்பந்தமாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அடையாளம் தெரியாத நபர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் கணவன், மனைவி மீது மோதியது.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி:
உளுந்தூர்பேட்டை அருகேயுள்ள திருநாவலூர் செஞ்சிக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் வேலாயுதம் (வயது 41). விவசாயி. நேற்று இரவு மழை பெய்த போது இவரும், இவரது மனைவி ஜெயாவும் குடை பிடித்தவாறு நடந்து சென்றனர். அப்போது கெடிலம் கூட்ரோடு அருகே சென்ற போது, பின்னால் வந்த அடையாளம் தெரியாத நபர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் கணவன், மனைவி மீது மோதியது. இதில் வேலாயுதம் பலத்த காயங்களுடன் கீழே விழுந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு, உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவந்த அவர் இன்று அதிகாலை பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து திருநாவலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உடல்நிலை பாதிக்கப்பட்டதால் விரக்தி
- சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்
செய்யாறு:
செய்யாறு அடுத்த பண்ணையெச்சூர் சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 35). விவசாயி. இவரது மனைவி செல்வி. இவர்களுக்கு 2 மகன், ஒரு மகள் உள்ளனர்.
பிரகாஷிற்கு கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு அவதி அடைந்து வந்தார். இதனால் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றார். உடல்நிலை சரியாகாததால் மன உளைச்சலுக்கு ஆளானார்.
கடந்த 17-ந் தேதி பிரகாசுக்கு மீண்டும் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் விவசாயத்திற்கு தெளிக்கும் பூச்சி மருந்தை எடுத்து குடித்து மயங்கி கிடந்தார். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு செய்யாறு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக பிரகாஷ் இறந்தார்.
- தகவல் அறிந்து மரக்காணம் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) வின்சென்ட்ராஜ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
- அங்கிருந்த பாலுவின் உறவினர்கள், மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்து அவர் இறந்துவிட்டார் என்றனர்.
விழுப்புரம்:
மரக்காணம் அடுத்த நடுக்குப்பத்தை சேர்ந்தவர் பாலு (வயது 52). விவசாயி. இவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் நேற்று மாலை மயங்கி விழுந்தார். இதனை பார்த்த பக்கத்து நிலத்துக்காரர் பாலுவின் உறவினர்களுக்கு தகவல் கொடுத்தார். பாலுவை ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்ல 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது. அங்கு வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் பாலு ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்கள். இத்தகவல் அறிந்து மரக்காணம் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) வின்செ ன்ட்ராஜ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கிருந்த பாலுவின் உறவினர்கள், மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்து அவர் இறந்துவிட்டார். எனவே, அது தொடர்பான வழக்கு பதிவு செய்ய வலியுறுத்தினர்.
இதையடுத்து போலீசார், வருவாயத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அங்கு வந்த வருவாய்த் துறையினர் முன்னிலையில் பாலுவின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக புதுவையில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே அவர் எவ்வாறு இறந்தார் என்று தெரிய வரும் என்பதால், சந்தேக மரண வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நல்லதங்காள் கோவில் அருகே உள்ள மின் மாற்றியில் பீஸ் போட ஏறியதாக கூறப்படுகிறது.
- சப் -இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி அருகே உள்ள வானவரெட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் அண்ணாமலை மகன் பார்த்திபன் (வயது 28) விவசாயி, சம்பவத்தன்று இவரது மின் மோட்டாருக்கு மின்சாரம் வரவில்லை. இதனால் அதே கிராமத்தில் நல்லதங்காள் கோவில் அருகே உள்ள மின் மாற்றியில் பீஸ் போட ஏறியதாக கூறப்படுகிறது. அப்போது மின் கம்பியில் தவறுதலாக கைபட்டது. இதில் மின்சாரம் தாக்கி பார்த்திபன் தூக்கி வீசப்பட்டார். படுகாயமடைந்த அவரை அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பார்த்தீபன் இறந்து போனார். இது குறித்து அவரது மனைவி பரமேஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- உடல்நலக் குறைவால் விபரீதம்
- போலீசார் விசாரணை
வந்தவாசி:
வந்தவாசி அருகே உள்ள இளங்காடு கிராமம் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 50) விவசாயி.
இவர் 2 ஆண்டுகளாக உடல்நலக் கோளாறால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக தனியார் மருத்து வமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் அவர் நெல் பயிருக்கு வைத்திருந்த பூச்சிக் கொல்லி மருந்தை (விஷம்) குடித்து மயங்கி கிடந்தார். உடனடியாக அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர்.
பின்னர் மேல்சி கிச்சைக்காக செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மருத் துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து பொன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- போலீசார் விசாரணை
- திருமணமான ஒரு ஆண்டில் பரிதாபம்
வந்தவாசி:
வந்தவாசியை அடுத்த ஸ்ரீரங்க ராஜபுரம் கிராமத்தைச் சேர்ந்த பச்சையப்பன் மகன் தசரதன் (வயது 35). விவசாயியான இவர் பொக்லைன் எந்திரமும் வைத்துள்ளார்.
அதில் பாலாஜி என்பவரை டிரைவராக பணியமர்த்தி உள்ளார். இவருக்கு ஒரு வருடத்துக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த நிலையில் டிரைவர் பாலாஜி வந்தவாசிக்கு மோட்டார்சைக்கிளில் தசரதனை ஏற்றிக்கொண்டு வந்து கொண்டிருந்தார்.
முதலூர் கிராமம் அருகில் வந்தபோது நான் பூச்சிக்கொல்லி மருந்து குடித்து விட்டேன். பிழைக்க மாட்டேன் இப்படியே என்னை வீட்டிற்கு அழைத்துச் சென்று வீடு என்று கூறியுள்ளார்.
தசரதன் உடல்நிலை மோசமானதால் அவரை வந்தவாசி அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்துச் சென்றார். டாக்டர்கள் முதலுதவி செய்து தீவிர சிகிச்சை அளித்தனர் சிகிச்சைபலனின்றி தசரதன் இறந்தார்.
உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அவருடைய தம்பி அமலேஷ் கீழ்க்கொடுங்காலூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- குடும்ப தகராறில் விபரீதம்
- போலீசார் விசாரணை
அரக்கோணம்:
அரக்கோணத்தை அடுத்த வேடல் பகுதியை சேர்ந்தவர் சிவலிங்கம் (வயது 39), விவசாயி. இவருக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்ததால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் கடந்த 31-ந்தேதி தகராறு ஏற்பட்டுள்ளது. அதனால் சிவலிங்கம் விஷத்தை குடித்து மயங்கி விழுந்துள்ளார். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து அரக்கோணம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்