என் மலர்
நீங்கள் தேடியது "Farmers complaint"
- 15 நாட்களாக நெல்லை கொள்முதல் செய்யாததால் முளைத்து விட்டதாக விவசாயிகள் வேதனை.
- நெல் கொள்முதல் அதிகாரி முத்துவேல் என்பவர் மீது விவசாயிகள் புகார் அளித்தனர்.
மதுரை:
மதுரையில் நெல் கொள்முதல் செய்ய அதிகாரிகள் லஞ்சம் கேட்பதாக மாவட்ட ஆட்சியர் சங்கீதாவிடம் விவசாயிகள் புகார் அளித்தனர்.
15 நாட்களாக நெல்லை கொள்முதல் செய்யாததால் முளைத்து விட்டதாக வேதனையுடன் தெரிவித்த விவசாயிகள், கொள்முதல் செய்ய ஒரு மூட்டைக்கு 70 ரூபாய் லஞ்சம் வேண்டுமென அதிகாரிகள் கேட்பதாக கண்ணீருடன் தெரிவித்தனர்.
முளைத்த நெல்லுடன் மாவட்ட ஆட்சியரிடம், நெல் கொள்முதல் அதிகாரி முத்துவேல் என்பவர் மீது விவசாயிகள் புகார் அளித்தனர்.
- ஆர்.டி.ஓ. அலுலகத்தில் உட்கோட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.
- வாரச்சந்தையில் வாகனங்கள் நிறுத்துவதற்கு இடமில்லாததால் ராஜேந்திரா சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
உடுமலை :
திருப்பூர் மாவட்டம் உடுமலை ஆர்.டி.ஓ. அலுலகத்தில் உட்கோட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஆர்.டி.ஓ. ஜஸ்வந்த் கண்ணன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் உடுமலை மற்றும் மடத்துக்குளம் பகுதியை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டு பேசியதாவது:-
குடிமங்கலம் பகுதியில் கூட்டுக் குடிநீர் திட்டத்தில் வழங்கப்படுகின்ற தண்ணீரில் முறைகேடு நடைபெற்று வருகிறது. மக்கள் தொகைக்கு ஏற்றவாறு குடிநீரை அதிகப்படுத்தி வழங்க வேண்டும். ஒரு சில ஊராட்சிகள் முறைகேடாக தண்ணீரை எடுத்து வருகின்றன. உடுமலை வாரச்சந்தையில் வாகனங்கள் நிறுத்துவதற்கு இடமில்லாததால் ராஜேந்திரா சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. அத்துடன் சந்தை வளாகத்தில் நடைபெற்று வருகின்ற கட்டிடங்கள் கட்டுமான பணியை விரைந்து முடிக்க வேண்டும். கணக்கம்பாளையம் ஊராட்சி பகுதி வழியாக செல்கின்ற பி.ஏ.பி. கால்வாய் கரையில் குப்பைகள் கொட்டி வருவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
உடுமலை-பழனி சாலையில் உள்ள அண்ணா குடியிருப்பு பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகள் நிகழ்ந்து வருகிறது. வேகத்தடுப்புகள் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அணிக்கடவு கிராமத்தில் நிறுவப்பட்டுள்ள காற்றாலை மின் பாதை பராமரிப்புக்காக தென்னை மரத்தின் ஓலைகளை அடிக்கடி வெட்டுவதால் வளர்ச்சி பாதிக்கப்பட்டு உள்ளது. உடுமலை நில அளவை துறை செயல்படாத துறையாகவே உள்ளது. உடுமலை பகுதியில் நில மோசடி அதிக அளவில் உள்ளது. எனவே ஆங்காங்கே உள்ள அரசு புறம்போக்கு நிலங்கள் மீது தனி கவனம் செலுத்துவதுடன் நில மோசடியை தடுக்க வேண்டும். துங்காவி அருகே கிராவல் மண்ணை ஏற்றிக்கொண்டு செல்லும் லாரிகளால் சாலையோரத்தில் உள்ள மல்பெரி செடிகள் தூசி படிந்து வளர்ச்சி பாதித்தும், பட்டுப்புழுக்கள் செத்தும் விடுகிறது.
குடிமங்கலம் பகுதியில் மாட்டுச்சந்தை, ஆட்டுச் சந்தை அமைத்து தர வேண்டும்.தேங்காய் பருப்பு கொள்முதலை அதிகரிக்க வேண்டும். குடிமங்கலம் பகுதியில் காட்டுப் பன்றிகள் வாழை, மக்காச்சோளம், பட்டு பூச்சி செடி உள்ளிட்டவற்றை நாசம் செய்து வருகிறது. அவற்றை பிடித்து வனப்பகுதிக்குள் விடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். செஞ்சேரிமலை- பெதப்பம்பட்டி ரோட்டில் இரு புறங்களிலும் ஆக்கிரமிப்பு அதிகரித்து சாலை குறுகிப்போனது. ஆக்கிரமிப்பை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் பேசினர்.
இதில் வருவாய் கோட்டாட்சியர் நேர்முக உதவியாளர் ஜலஜா, தாசில்தார்கள் சுந்தரம் (உடுமலை), பானுமதி (மடத்துக்குளம்), கார்த்திகேயன் (குடிமைப்பொருள்) உள்ளிட்ட விவசாய சங்க பிரதிநிதிகள், துறை சார்ந்த அதிகாரிகள், விவசாயிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
- நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு தலைமையில் மாதாந்திர விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.
- விவசாயிகளின் அடிப்படை குறைகள் தொடர்பான கருத்துகள் கேட்கப்பட்டு அதற்கான தீர்வுகள் அரசு துறை அதிகாரி களால் வழங்கப்பட்டது.
நெல்லை:
நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு தலைமையில் மாதாந்திர விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.
இதில் விவசாயிகளின் அடிப்படை குறைகள் தொடர்பான கருத்துகள் கேட்கப்பட்டு அதற்கான தீர்வுகள் அரசு துறை அதிகாரி களால் வழங்கப்பட்டது.மேலும் விவசாயிகள் அளித்த கோரிக்கை மனு தொடர்பாக கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் விஷ்ணு பேசியதாவது:-
வரும் செப்டம்பர் 15-ந் தேதிக்குள் மாவட்டத்தில் கட்டி முடிக்கப்பட்டுள்ள வேளாண் துறை தொடர்பான அனைத்து கட்டிட ங்களும் திறக்கப்படும். விவ சாயிகளுக்கு தேவையான நவீன பயிற்சிகள் வழங்கு வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் . விவசாயி களுக்கு தேவையான இடு பொருட்கள் மற்றும் யூரியா தட்டுப்பாடு இன்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் .இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் விவசாயிகள் தங்கள் பகுதிகள் தொடர்பான கோரிக்கை களை முன்வைத்து பேசினர்.அப்போது பேசிய தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் பெரும்படையார் என்பவர், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் அமைந்துள்ள தடை செய்யப்பட்ட பகுதியான களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக பகுதிகளில் மர்ம நபர்களின் நடமாட்டம் இருப்பதாகவும் வனத்துறை அதிகாரிகளுடன் இணைந்து தவறான செயல்கள் அங்கு நடைபெற்று வருவதாகம் கூறினார்.
மேலும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கிடைக்கக்கூடிய வைரக்கல் மற்றும் சந்தன மரங்களை கடத்தும் முயற்சி நடந்து வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தின் தடை செய்யப்பட்ட பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வெப் காமிரா பதிவுகளை தேசியப் புலிகள் காப்பகத்திற்கு கொடுக்கும்போது அதில் பதிவு செய்யப்பட்ட பல காட்சிகளை வனத்துறை அதிகாரிகள் அழித்துவிட்டு கொடுப்பதால் அங்கு தவறான செயல்கள் நடை பெறுவது உறுதியாகிறது என குற்றம் சாட்டினார்.
மாவட்ட கலெக்டர் விஷ்ணு மர்மநபர்களின் நட மாட்டத்தை கண்காணித்து வனத்துறை அதிகாரிகள் செய்யும் தவறுகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்து மாவட்ட கலெக்டரிடம் புகார் மனு அளித்தார் மேலும் வனப்பகுதிக்குள் பதிவு செய்யக்கூடிய வெப் காமிரா காட்சிகளை வனப்பகுதியை ஒட்டி உள்ள கிராமங்களில் ஒளிபரப்பு செய்வதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.