என் மலர்
நீங்கள் தேடியது "fast"
- போக்குவரத்து முழுமையாக முடங்கியது.
- இன்று பஞ்சாபில் முக்கிய நகரங்களில் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டு இருந்தன.
சண்டிகர்:
பயிர்களுக்கான குறைந்த பட்ச ஆதரவு விலைக்கு சட்டபூர்வ உத்தரவாதம் அளிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்ற வலியுறுத்தி, பஞ்சாப்-அரியானா எல்லையில் உள்ள கனவுரி பகுதியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இங்கு கடந்த நவம்பர் 26-ந்தேதி முதல் விவசாயி ஜகஜீத் சிங் தலேவால் கால வரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார். ஜகஜீத் சிங்கின் உண்ணாவிரதம் நேற்றுடன் 34-வது நாளாக நீடித்தது.
இந்த விவகாரத்தில் பஞ்சாப் அரசு மீதும், ஜக ஜீத்தை மருத்துவமனைக்கு கொண்டுசெல்ல விடாமல் தடுக்கும் பிற விவசாயிகள் மீதும் நேற்று முன்தினம் (சனிக்கிழமை) அதிருப்தி தெரிவித்த சுப்ரீம் கோர்ட்டு, டிசம்பர் 31-ந் தேதிக்குள் (நாளை) அவரை மருத்துவமனையில் அனுமதிக்க பஞ்சாப் அரசுக்கு கெடு விதித்தது.
இந்த விஷயத்தில் தேவைப்பட்டால் மத்திய அரசின் உதவியைக் கோரலாம் என்றும் பஞ்சாப் அரசுக்கு சுப்ரீம்கோர்ட்டு ஆலோசனை தெரிவித்தது.
இந்தச் சூழலில், ஜகஜீத் சிங்கை அரசின் பிரதிநிதிகள் சந்தித்துப் பேசியுள்ளனர். டிசம்பர் 31-ந்தேதிக்குள் ஜகஜீத் சிங்கை மருத்துவ மனையில் அனுமதிக்க பஞ்சாப் அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு கெடு விதித்துள்ள நிலையில், காந்திய வழியில் தங்களின் போராட்டம் தொடரும் என்று விவசாய அமைப்பின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் தலேவாலுக்கு ஆதரவாக பஞ்சாபில் இன்று (திங்கட்கிழமை) முழு அடைப்பு போராட்டம் நடத்த விவசாய அமைப்புகள் அழைப்பு விடுத்தன. அதன்படி இன்று பஞ்சாபில் முக்கிய நகரங்களில் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டு இருந்தன.
அத்தியாவசிய கடைகள் மட்டும் திறக்கப்பட்டு இருந்தன. இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கையில் சற்று பாதிப்பு ஏற்பட்டது. போலீசார் ரோந்து பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கிடையே முழு அடைப்பு போராட்டம் இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய நிலையில் பஞ்சாப் விவசாயிகள் மாநிலம் முழுவதும் ஆங்காங்கே சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த இடங்களில் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
அமிர்தசரசில் விவசாயிகள் திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டு கோஷம் எழுப்பினார்கள். பஞ்சாப்-அரியானா எல்லையிலும் ஏராளமான விவசாயிகள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் காரணமாக பஞ்சாபில் சில இடங்களில் போக்குவரத்து முழுமையாக முடங்கியது.
- புதுவை குடிசைமாற்று வாரிய அனைத்து ஊழியர்கள் நலச்சங்கம் சார்பில் முல்லை நகர் அலுவலகத்தின் முன்பு உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
- மாதந்தோறும் சம்பளம் வழங்க வேண்டும்.
புதுச்சேரி:
புதுவை குடிசைமாற்று வாரிய அனைத்து ஊழியர்கள் நலச்சங்கம் சார்பில் முல்லை நகர் அலுவலகத்தின் முன்பு உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
போராட்டத்துக்கு சங்க ஆலோசகர் பிரேமதாசன், தலைவர் பழனிநாதன் தலைமை வகித்தனர். துணைத்தலைவர்கள் கணேசன், பழனி, வீரமுத்து, செயலாளர் கோவிந்தராசு முன்னிலை வகித்தனர். இதில் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். மாதந்தோறும் சம்பளம் வழங்க வேண்டும். வாரியத்துக்கு நிதி ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தி
இந்த போராட்டம் நடந்தது.
- மதுரையில் இன்று பா.ஜ.க.வினர் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.
- தி.மு.க அரசை கண்டித்து தமிழகமெங்கும் இன்று நடந்தது.
மதுரை
பா.ஜ.க சார்பில் தி.மு.க அரசை கண்டித்து தமிழகமெங்கும் இன்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
மதுரை மாநகர் மாவட்டத்தில், மாவட்ட தலைவர் டாக்டர்.சரவணன் தலைமையில் நடந்த உண்ணாவிரத போராட்டத்தில் வக்கீல் பிரிவு மாநிலத்தலைவர் வணங்காமுடி, மாநில பொருளாதாரபிரிவு தலைவர் எம்.எஸ்.ஷா ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசினர்.
இந்த போராட்டத்தில் பா.ஜ.க. மாநில, மாவட்ட நிர்வாகிகள், மண்டல் தலைவர்கள், நிர்வாகிகள், அணி பிரிவு தலைவர்கள் நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே உள்ள தளவாய்புரத்தில் சேலை, கைலி, துண்டு உள்ளிட்ட ஜவுளி உற்பத்தி நடைபெறுகிறது.
இந்த தொழிலில் விசைத்தறி தொழிலாளர்கள், வைண்டிங் தொழிலாளர்கள், சாயப்பட்டறை தொழிலாளர்கள், நூல் மற்றும் பாவு சுற்றும் தொழிலாளர்கள் என 1200-க்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இவர்களுக்கு 3 வருடங்களுக்கு ஒரு முறை கூலி உயர்வு தொடர்பான ஒப்பந்தம் போடப்படும். கடந்த 2014-ம் ஆண்டு போடப்பட்ட ஒப்பந்தம் கடந்த ஆண்டு ஜூன் மாதம் முடிவடைந்த நிலையில் இதுவரை கூலி உயர்வு தொடர்பாக எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இது குறித்து தொழிலாளர் நலத்துறை அதிகாரிகளிடம் முறையிட்டும் இது வரை எந்த பதிலும் இல்லை.
இதனை கண்டித்தும், புதிய கூலி மற்றும் ஊக்க தொகை தொடர்பான ஒப்பந்தம் போட வலியுறுத்தியும் தொழிலாளர்கள் சார்பில் 2 முறை போராட்டம் நடத்தப்பட்டது. மேலும் 4-ம் கட்ட பேச்சுவார்த்தையும் நடத்தப்பட்டது. பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்படாத நிலையில் கடந்த 3 வாரங்களாக தொழிலாளர்கள் வேலைக்கு செல்வதை தவிர்த்து வந்தனர்.
இருப்பினும் உற்பத்தியாளர்கள் தரப்பிலும், அதிகாரிகள் தரப்பிலும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே 50 சதவீதம் கூலி உயர்வு, நாள் ஒன்றுக்கு ரூ. 15 ஊக்க தொகை, விடுமுறை ஊதியமாக நாள் ஒன்றுக்கு ரூ. 250 வழங்க கோரி இன்று முதல், தொடர் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர்.
தளவாய்புரம் பஸ் நிலையம் எதிரே அமைக்கப்பட்டுள்ள பந்தலில், நாள் ஒன்றுக்கு 20 தொழிலாளர்கள் என சுழற்சி முறையில், கோரிக்கைகள் நிறைவேறும் வரையில் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.
தகவல் அறிந்து வந்த தாசில்தார் ராமச்சந்திரன் மற்றும் காவல் துறையினர் தொழிற்சங்க பிரதிநிதிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
அதிகாரிகள் தரப்பில் இருந்து நாளை மாலை 5-ம் கட்ட பேச்சுவார்த்தைக்கு தொழிலாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. பேச்சு வார்த்தையில் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொழிற்சங்க பிரதிநிதிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாவிட்டால் மறியல், கஞ்சி தொட்டி திறப்பு உள்ளிட்ட அடுத்தகட்ட போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தொழிற்சங்க பிரதிநிதிகள் தெரிவித்தனர்.