என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "father complaint"
ஆண்டிப்பட்டி:
ஆண்டிப்பட்டி அருகே ஜக்கம்பட்டி முத்துமாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ரவி மகள் ஜெயப்பிரியா (வயது 17). இவர் தேனியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். சம்பவத்தன்று வீட்டில் இருந்து ஜெயப்பிரியா தண்ணீர் பிடிப்பதற்காக வெளியே சென்றார்.
நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த அவரது தந்தை நண்பர் மற்றும் உறவினர் வீடுகளில் தேடிப்பார்த்தார். ஆனால் ஜெயப்பிரியா அங்கு செல்ல வில்லை. இரவு வரை மகள் வீடு திரும்பாததால் கவலையடைந்த அவரது தந்தை ஆண்டிப்பட்டி போலீசில் புகார் அளித்தார்.
இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான ஜெயப்பிரியாவை தேடி வருகின்றனர்.
பாகூர்:
பாகூரை அடுத்த பெரியகாட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் முருகவேல் (வயது 28). கட்டிட தொழிலாளி. இவருக்கும், பாகூரை அடுத்த குடியிருப்புபாளையம் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த ராமமூர்த்தியின் மகள் செரினா (25) என்பவருக்கும் கடந்த 1½ மாதத்துக்கு முன்பு திருமணம் நடந்தது.
திருமணம் முடிந்ததும் முருகவேல் தனது மாமனார் வீட்டில் தங்கி இருந்து வந்தார்.
இந்த நிலையில் செரினாவுக்கு தனது கணவரை பிடிக்கவில்லை என்று தெரிகிறது. கடந்த 23-ந்தேதி செரினா பாகூரில் உள்ள மார்க்கெட்டுக்கு சென்று வருவதாக கூறி சென்றார்.
அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் கவலை அடைந்த தந்தை ராமமூர்த்தி பல இடங்களில் தனது மகளை தேடினார். எங்கும் அவரை காணவில்லை. இதனை தொடர்ந்து ராமமூர்த்தி பாகூர் போலீசில் புகார் செய்தார்.
அதன் பேரில் உதவி சப்-இன்ஸ்பெக்டர் அருள்மணி வழக்குபதிவு செய்து மாயமான புதுப்பெண் செரினாவை தேடி வருகிறார்.
திருமணமான 1½ மாதத்தில் புதுப்பெண் மாயமான சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தஞ்சாவூர்:
விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஒரத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் மூர்த்தி. இவர் தற்போது தனது குடும்பத்தினருடன் தஞ்சை விளார் பகுதியில் குடியிருந்து வருகிறார் . இவரது மகள் ராஜராஜேஸ்வரி (வயது 25 ). இவர் சொந்த ஊரான விழுப்புரம் மாவட்டம் ஓரத்தூருக்கு சென்று வருவதாக கூறிவிட்டு வீட்டிலிருந்து வெளியே சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. அதிர்ச்சி அடைந்த பெற்றோர் பல இடங்களில் ராஜராஜேஸ்வரியை தேடினர். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை.
இது குறித்து தஞ்சை தாலுகா போலீசில் மூர்த்தி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து மாயமான ராஜராஜேஸ்வரியை தேடி வருகின்றனர்.
ஒரத்தநாடு:
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே பாப்பாநாடு, சோழகன் கரையை சேர்ந்த ராமசாமி மகள் வினிதா (வயது 27).
இவர் சென்னையில் செயல்படும் சைதை துரைசாமி அகாடமி ஐ.ஏ.எஸ். பயிற்சி மையத்தின் ஐ.ஏ.எஸ். தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்தார். இந்த நிலையில் அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்தார். அவரை திருமணம் செய்து கொள்ளும்படி பெற்றோர் வற்புறுத்தி வந்தனர்.
இதைத் தொடர்ந்து கடந்த 3 நாட்களுக்கு முன்பு வீட்டிலிருந்த வினிதா மாயமாகி விட்டார். அவரை பல இடங்களில் தேடியும் எங்கு சென்றார்? என்பது தெரியவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த ராமசாமி ஒரத்தநாடு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவருடன் படித்த கடலூர் வாலிபர் கடத்தி சென்றுவிட்டரா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாணவி மாயமான சம்பவம் ஒரத்தநாடு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சேதராப்பட்டு:
புதுவையை அடுத்த கோட்டக்குப்பம் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் கோவிந்த சாமி. இவரது மகள் மகேஸ்வரி (வயது 25). இவர் புதுவை மூலகுளத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார்.
சம்பவத்தன்று பள்ளிக்கு சென்ற மகேஸ்வரி அதன் பிறகு வீடு திரும்பவில்லை. உறவினர்கள் மற்றும் தோழிகள் வீடுகள் உள்ளிட்ட பல இடங்களில் தேடியும் எங்கும் மகேஸ்வரி இல்லை. இதையடுத்து கோவிந்தசாமி தனது மகள் மாயமானது குறித்து கோட்டக்குப்பம் போலீசில் புகார் செய்தார்.
போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர் அருட்செல்வம் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில் மகேஸ்வரிக்கும், பூத்துறையை சேர்ந்த ஒரு வாலிபருக்கும் பழக்கம் இருந்து வந்தது தெரியவந்தது.
இதனால் அந்த வாலிபருடன் மகேஸ்வரி மாயமாகி இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வரு கிறார்கள்.
அரக்கோணம்:
அரக்கோணம் அருகே நாகவேடு காலனியை சேர்ந்தவர் தியாகராஜன் என்ற கோபி (வயது 38), காஞ்சீபுரத்தில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி வளர்மதி (31). இவர்களுக்கு திருமணமாகி 7 ஆண்டுகள் ஆகிறது. 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
நேற்று காலை தியாகராஜன் வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டார். காலை 10.30 மணியளவில் வீட்டின் கழிப்பறையில் இருந்து அலறல் சத்தம் கேட்டது. அக்கம், பக்கத்தில் உள்ளவர்கள் சென்று பார்த்தபோது வளர்மதி தீயில் எரிந்த நிலையில் தீக்காயத்துடன் இறந்து கிடந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த அரக்கோணம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் அமுதா, சப்-இன்ஸ்பெக்டர்கள் விநாயகம், மணிவாசன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் வளர்மதியின் தந்தை பொன்னுரங்கம் எனது மகள் சாவில் சந்தேகம் உள்ளது, அவரது சாவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசில் புகார் மனு கொடுத்தார். துணை போலீஸ் சூப்பிரண்டு எஸ்.கே.துரைப்பாண்டியன் புகார் மனு மீது தீவிர விசாரணை நடத்த போலீசாருக்கு உத்தரவிட்டார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்