search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Feet"

    • பாதம் மிகவும் வறண்டதாகவும், வெடித்தும் காணப்படலாம்.
    • நம் உடலின் மற்ற பாகங்களை போல் பாதங்களில் எண்ணெய் சுரப்பிகள் இல்லை.

    பொதுவாக கால் பாதங்கள் பற்றி நாம் பெரிதாக கவனத்தில் எடுத்துக்கொள்வது இல்லை. இதனால், பாத சருமம் மிகவும் வறண்டதாகவும், வெடித்தும் காணப்படலாம். இது பதங்களின் அழகை மட்டுமல்லாமல், அவற்றின் ஆரோக்கியத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தலாம்.

    உங்கள் பாதங்களில் வறண்ட சருமம் இருப்பது வருத்தமாகவும் சில சமயங்களில் அறுவருப்பாகவும் இருக்கும். நம் உடலின் மற்ற பாகங்களை போல் பாதங்களில் எண்ணெய் சுரப்பிகள் இல்லை. அதனால், விரைவில் வறண்டு, அரிப்பு ஏற்படுகிறது.

    இந்த பாதிப்பில் இருந்து விடுபடுவதற்கான முதல் படி, உங்கள் பாதங்களை சுத்தமாகவும், உலர்ந்ததாகவும் வைத்திருப்பதுதான். வறண்ட பாதங்களில் இருந்து விடுபட உதவும் பாதத்தை பராமரிக்கும் பேக்குகள்.

    தேன் மற்றும் தேங்காய் எண்ணெய் பேக்

    தேன் மற்றும் தேங்காய் எண்ணெய் பேக் உங்கள் கால்களின் வறண்ட, கடினமான சருமத்திற்கு ஆழமான நீரேற்றத்தை வழங்குகிறது. வெதுவெதுப்பான நீரில் உங்களது பாதத்தினை அரை மணிநேரம் ஊற வைக்க வேண்டும். பின்னர் பாதங்களை துடைத்து விட்டு ஒரு சிறிய கிண்ணத்தில், ஒரு ஸ்பூன் தேன் மற்றும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து கலக்கவும். இந்த கலவையை உங்கள் கால்களில் தடவி, வறண்ட சருமத்தில் நன்கு தேய்த்து, 5 நிமிடங்கள் மசாஜ் செய்யவும்.

    அந்த பேக் சற்று உலர்ந்ததும், இரண்டு கால்களிலும் தடிமனான காலுறைகளை அணிந்து, ஒரு இரவு முழுவதும் பேக்கை அப்படியே விட்டு விட வேண்டும். மறுநாள் காலையில், உங்கள் கால்களை வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். அதன்பிறகு ஒரு துணியால் துடைத்து காலில் தேங்காய் எண்ணெய் அல்லது கற்றாலை ஜெல்லை தடவலாம்.

    • பொதுவாகவே காலில் உள்ள தோல் தடிமனாக இருக்கும்.
    • பாதங்களை எப்போதும் சுத்தமாக வைத்துக்கொள்வது நல்லது.

    தோல் வறட்சியும், அதிக உடல் எடையும்தான் பாத வெடிப்புக்கான முக்கியமான காரணிகள். நம் உடலில் நீர்ச்சத்து குறையும்போது தோல் வறண்டு, பாதத்தில் வெடிப்பு உண்டாகும். குளிர்காலத்தில், இயல்பாகவே தோலில் வறட்சி ஏற்படும். அதனால் பாதத்தில் வெடிப்பு ஏற்படக்கூடும்.

    பொதுவாகவே காலில் உள்ள தோல் தடிமனாக இருக்கும். அதற்குள் ஒரு கொழுப்பு அடுக்கு இருக்கும். உடல் எடை அதிகமாக இருந்தால், அந்த அடுக்கு இடம்மாறி தோலில் வெடிப்பு உண்டாகும்.

    வெதுவெதுப்பான தண்ணீரில், தினமும் பாதத்தைக் கழுவி வந்தாலே வெடிப்பு ஏற்படாமல் தவிர்க்கலாம். அதோடு காலையிலும் இரவிலும் பாதத்தைத் தண்ணீரில் நன்றாக கழுவினால் வெடிப்பு வரும் வாய்ப்பு குறைவு.

    கற்றாழை, தேங்காய் எண்ணெய் தடவலாம். ஆனால் ஒரு சிலருக்கு தொற்று ஏற்பட்டு, புண்கள் அதிகமாகி, கடுமையான வலியுடன் வெடிப்புகள் இருக்கும். அவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக சர்க்கரை நோயாளிகள் லேசான வெடிப்புகள் ஏற்பட்டாலே, உடனடியாக மருத்துவரிடம் பரிசோதித்து தொற்று ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். பாதவெடிப்புகளுக்குச் சிகிச்சை எடுத்துக்கொள்ளாவிட்டால், கால் முழுவதும் தொற்று பரவுவதற்கு வாய்ப்பிருக்கிறது. தோல் முற்றிலுமாக கெட்டுவிடும்.

    வெடிப்புகள் அதிகமாக உள்ளவர்கள், திறந்தநிலையில் இல்லாமல் மூடிய செருப்புகளையே அணிய வேண்டும். உடலில் நீர்ச்சத்துக் குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகள், பழங்களை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். தவிர, உடல் பருமனாக இருப்பவர்கள், எடை குறைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். மற்றவர்களைக் காட்டிலும், சர்க்கரை நோயாளிகள் கொஞ்சம் கூடுதல் கவனத்தோடு இருக்க வேண்டும்.

    பாத வெடிப்பு உள்ளவர்கள் மட்டுமல்ல, அனைவருமே பாதங்களை எப்போதும் சுத்தமாக வைத்துக்கொள்வது நல்லது. கால்களில் நகங்களை வெட்டும்போது முழுமையாக வெட்டிவிடாமல் லேசாக நகம் இருக்குமாறு வெட்ட வேண்டும். முழுமையாக வெட்டினால், சதைப் பகுதிக்குள் நகம் வளர்ந்து வலி உண்டாகும். அதேபோல், நகங்களுக்கு இடையே காணப்படும் இடைவெளி எப்போதும் உலர்ந்த தன்மையோடு இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். ஈரத்தன்மையோடு இருந்தால் தொற்றுகள் உண்டாக வாய்ப்பு இருக்கிறது.

    • பாதம் வெடிப்பினை ஆரம்பித்திலேயே கவனிக்காவிட்டால், பிளவு ஆழமாக சென்று பின் மறைவது கடினமாகிவிடும்.
    • இந்த ஸ்கரப்பினால் பாதங்களையும், குதிகால்களையும் நன்றாக தேயுங்கள்.

    ஏனோ பெண்கள் முகம், கைகளை பராமரிப்பது போல, பாதங்களை கண்டு கொள்வது கூட இல்லை. தோற்றத்தை எத்தனைஅழகு படுத்திக் கொண்டாலும், பாதம் வெடித்து, பொலிவின்றி இருந்தால், மொத்த மெனக்கெடலும் வீண். பாதம் வெடிப்பினை ஆரம்பித்திலேயே கவனிக்காவிட்டால், பிளவு ஆழமாக சென்று பின் மறைவது கடினமாகிவிடும். ஆகவே தினமும் குளிக்கும் நேரத்தில் பாதங்களுக்கென ஒரு சில நிமிடங்கள் செலவிட்டால் போதும். வெடிப்பின்றி தடுக்கலாம். ஃப்யூமின் கல்லைனைக் கொண்டு தினமும் தேய்த்தால், பாதத்தில் இருக்கும் இறந்த செல்கள் அகன்று விடும்.

    தேவையானவை :

    வெள்ளை சர்க்கரை - அரை கப்

    சமையல் சோடா - 1 டீஸ்பூன்

    ஆலிவ் எண்ணெய் - 1 டீஸ்பூன்

    தேன்- 1 டீஸ்பூன் பாதாம் அல்லது லாவெண்டர் எண்ணெய் - 2 துளி

    செய்முறை

    ஒரு பாத்திரத்தில் சர்க்கரையை போடுங்கள். அதன் பின் ஆலிவ் எண்ணெய் ஊற்றி நன்றாக கலக்குங்கள். பின்னர் சமையல் சோடாவை போடவும். இறுதியில் தேனை சேர்த்து, கட்டிகள் இல்லாதபடி நன்றாக கலக்குங்கள். பின்னர் பாதாம் லாவெண்டர் போன்ற ஏதாவது வாசனை எண்ணெயை இதில் சேர்த்து கலக்குங்கள். பிறகு இதனை பாட்டிலில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த ஸ்க்ரப் 15 நாட்களுக்கு வரும்.

    சர்க்கரை பாதத்தில் உள்ள கடினத்தன்மையை நீக்கி, மிருதுவாக்கும்.

    சமையல் சோடா தொற்றுக்களை அகற்றும். சருமத்தில் தங்கியிருக்கும் இறந்த செல்களை நீக்கிவிடும். சருமத்தின் அமில மற்றும் காரத் தன்மையை சமன் செய்யும்.

    தேன் ஈரப்பதம் அளித்து, பாதத்தில் உள்ள வறட்சியை போக்கிவிடும்.

    ஆலிவ் எண்ணெய் சருமத்திற்கு ஊட்டம் அளித்து, அழகாக்கிறது.

    தினமும் குளிப்பதற்கு முன் இந்த ஸ்கரப்பினால் பாதங்களையும், குதிகால்களையும் நன்றாக தேயுங்கள். 10 நிமிடம் அப்படியே விட்டு பிறகு குளிக்கச் செல்லலாம். இது பாதம் மற்றும் கைகளுக்கு மிருதுத்தன்மை தருகிறது. கருமை அகன்று, அழுக்குங்கள் நீங்கி, வெடிப்புகள் மறைந்துவிடும்.

    • பவானி சாகர் நீர் பிடிப்பு பகுதி களான தெங்குமரகடா, பில்லூர், குந்தா, அப்பர் பவானி பகுதிகளில் மழை பெய்ததால் மாயாற்றில் தண்ணீர் அதிகளவில் சென்றது. இதனால் பவானிசாகர் அணைக்கு 1600 கனஅடிக்கு மேல் தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.
    • பவானிசாகர் அணை யின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 82.66 அடியாக இருந்தது.

    சத்தியமங்கலம்:

    சத்தியமங்கலம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று காலை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது.

    இதையடுத்து மதியம் 3 மணிக்கு மேக மூட்டமாக காணப்பட்டது. தொடர்ந்து சத்தியமங்கலம், பண்ணாரி, அரியப்பம் பாளையம், ஓட்டை குட்டை, புளியம் கோம்பை, வட வள்ளி, பண்ணாரி, சிக்கரசம் பாளையம், ராஜன் நகர் உள்பட பல்வேறு இடங்களில் இடி- மின்னலுடன் பலத்த மழை பெய்தது. தொடர்ந்து இரவு வரை மழை தூறி கொண்டே இருந்தது.

    இதனால் ரோடுகளில் மழை தண்ணீர் பெருக் கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி நின்றன. பரவலாக மழை பெய்ததால் விவசாய நிலங்கள் பசுமையாக காட்சி அளித்தது.

    இதே போல் திம்பம், தாளவாடி, ஆசனூர், தொட்டகாஜனூர் உள்பட வனப்பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

    மேலும் பவானிசாகர், புளியம்பட்டி, புங்கர்பள்ளி, நல்லூர், காவிலிபாளையம் உள்ளிட்ட பகுதிகளிலும் இடி- மின்னலுடன் பரவ லாக மழை பெய்தது.

    பவானி சாகர் நீர் பிடிப்பு பகுதி களான தெங்குமரகடா, பில்லூர், குந்தா, அப்பர் பவானி பகுதிகளில் மழை பெய்ததால் மாயாற்றில் தண்ணீர் அதிகளவில் சென்றது. இதனால் பவானிசாகர் அணைக்கு 1600 கனஅடிக்கு மேல் தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.

    தொடர்ந்து மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரித்துள்ளது.

    பவானிசாகர் அணை யின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 82.66 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 1667 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.

    அணையில் இருந்து அரக்கன்கோட்டை- தடப்பள்ளி வாய்க்காலுக்கு 950 கனஅடியும், ஆற்றுக்கு குடிநீருக்கு 100 கனஅடியும், எல்.பி.பி. வாய்க்காலுக்கு 5 கனஅடி என மொத்தம் 1055 கனஅடி தண்ணீர் வெளி யேற்றப்பட்டு வருகிறது. 

    • பெட்ரோல் பங்க் ஊழியருக்கு இரும்புக்கம்பியால் அடி விழுந்தது.
    • கே.புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    மதுரை 

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டி விக்கிர மங்கலத்தை சேர்ந்தவர் காசி. இவரது மகன் விக்ரம் (வயது24). இவர் மேலூர் மெயின் ரோடு உத்தங்கு டியில் பெட்ரோல் பங்கில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருடன் வேலை பார்ப்பவர் ஆசாத்அலி. இவர்கள் பணியில் இருந்த போது உத்தங்குடி பாண்டிகோவில் தெருவை சேர்ந்த வேலு மகன் மணிவண்ணன் (27) என்பவர் ஒரு வேனில் வந்தார். அவர் அங்கு பெட்ரோல் நிரப்பும்போது ஊழியர்களுடன் வாக்குவாதம் செய்தார். இதைத்தொடர்ந்து இரு தரப்பினரும் மோதி கொண்டனர். மணி வண்ணன், அஜித்குமார், கவுதம் ஆகிய 3 பேரும் அவதூறாக பேசிய, ஆசாத் அலியை இரும்பு கம்பியால் தாக்கியுள்ளனர். இதில் அவர் படுகாயம் அடைந்தார்.

    இந்த சம்பவம் குறித்து விக்ரம் கே.புதூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பெட்ரோல் பங்க் ஊழியரை தாக்கிய மணிவண்ணன், அஜித்குமார் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். தப்பி சென்ற கவுதமை போலீசார் தேடி வருகின்றனர்.

    • பாதம் மற்றும் குதிகால் ஆகியவற்றில் தனி கவனம் செலுத்தி சுத்தம் செய்ய வேண்டும்.
    • நகங்களைச் சுற்றியுள்ள இறந்த செல்கள், தோல்களையும் நீக்க வேண்டும்.

    தினமும் முக அழகை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தும் பல பெண்கள், வாரத்துக்கு ஒரு முறை கூட பாதங்களின் பராமரிப்புக்கு நேரம் ஒதுக்குவது இல்லை. இவ்வாறு பாதங்களை கவனிக்காமல் இருந்தால், நாளடைவில் பாக்டீரியா மற்றும் பூஞ்சைத் தொற்று, சரும வெடிப்பு போன்ற பிரச்சினைகள் ஏற்படும். கைகளைப் போலவே, கால்களிலும் நகங்களை நீளமாக வளர்த்தல் கூடாது.

    சாக்ஸ் மற்றும் ஷூக்களில் உள்ள அழுக்குகள், கால் நகங்களின் இடுக்குகளில் படிந்து அங்கு கிருமித்தொற்றை ஏற்படுத்தக்கூடும். எனவே தினமும் சோப்பு போட்டு கால்களைக் கழுவ வேண்டும். குளிக்கும்போது நகங்கள், பாதம் மற்றும் குதிகால் ஆகியவற்றில் தனி கவனம் செலுத்தி சுத்தம் செய்ய வேண்டும். நகங்களைச் சுற்றியுள்ள இறந்த செல்கள் மற்றும் தோல்களையும் நீக்க வேண்டும்.

    இதற்கு மென்மையான பிரஷ்களை பயன்படுத்தலாம். தினமும் ஷூ அணிபவர்களின் பாதங்களில் இருந்து வெளியேறும் வியர்வை, ஷூக்களில் படிந்து, அதன்மூலம் கிருமித் தொற்று ஏற்படலாம். இதைத் தவிர்க்க வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் ஷூக்களை வெயிலில் நன்றாக உலர வைத்து பயன்படுத்துவது நல்லது.

    பாதங்கள் ஈரப்பதமாக இருக்கும் போது எளிதில் பூஞ்சைத் தொற்று ஏற்படும். இதனால் அரிப்பு, எரிச்சல், தோல் உரிதல் மற்றும் சில சமயங்களில் வலி மிகுந்த கொப்புளங்களும் ஏற்படலாம். இவற்றைத் தவிர்ப்பதற்கு பாதங்களை உலர்வாக வைத்திருக்க வேண்டும். குறிப்பாக விரல்களுக்கு இடையே உள்ள பகுதிகளை உலர்வாக வைத்திருப்பது முக்கியம். நகங்களை சீராக வெட்டுவதற்கு ஏற்ற நகவெட்டி பயன்படுத்த வேண்டும்.

    ஒவ்வொரு முறை நகங்களை வெட்டிய பிறகும் அதனை சுத்தம் செய்வது அவசியம். உங்களுக்கென்று தனியாக ஒரு நகவெட்டி வைத்துக்கொள்வது சிறந்தது. பாதங்களுக்கு சரியான அளவில் காலணிகளைத் தேர்ந்தெடுங்கள். முடிந்தவரை ஹீல்ஸ் போன்ற காலணிகளை அன்றாடம் உபயோகிப்பதைத் தவிர்ப்பது நல்லது. முகம் மற்றும் கைகளுக்கு மாய்ஸ்சுரைசர் உபயோகிப்பதை போல பாதங்களுக்கும் பயன்படுத்த வேண்டும்.

    வறட்சியான பாதங்களில் வெடிப்பு, தோல் உரிதல் போன்ற பாதிப்புகள் உண்டாகும். எனவே பாதங்களை சுத்தப்படுத்தியதும் கோகோ வெண்ணெய் அல்லது பெட்ரோலியம் ஜெல்லி போன்ற மாய்ஸ்சுரைசர்களை பூசலாம். மாதத்திற்கு இரண்டு முறை கால்களை 15 முதல் 20 நிமிடங்கள் வரை வெதுவெதுப்பான நீரில் வைக்கவும். இது சருமத்தை மென்மையாக்கும்.

    பின்பு பாதங்களை ஸ்கிரப்பர் அல்லது பியூமிஸ் கல்லைக் கொண்டு லேசாக தேய்த்து இறந்த செல்களை நீக்கவும். பிறகு நன்றாக மசித்த ஒரு வாழைப்பழத்தில், ஒரு எலுமிச்சம் பழத்தின் சாறு கலந்து பாதம் முழுவதும் மாஸ்க் போல போடவும். 20 நிமிடங்கள் கழித்து மிதமான சூடுள்ள தண்ணீரில் கழுவவும். பின்பு மாய்ஸ்சுரைசர் தடவவும். இதனால் பாதங்கள் மென்மையாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • வாரம் ஒருமுறை வீட்டிலேயே பாதங்களை சுத்தம் செய்யலாம்.
    • வீட்டிலேயே பாதங்களுக்கு பெடிக்யூரை எப்படி செய்வதென்று பார்ப்போம்.

    வாரத்திற்கு ஒரு முறை பாதத்தை சுத்தம் செய்யும் செயலான பெடிக்யூரை செய்து வந்தால், பாதங்களில் உள்ள அழுக்குகள் சேர்வது மற்றும் தொற்றுகள் ஏற்படுவது போன்றவை தடுக்கப்படும்.

    நம் வீட்டிலேயே பாதங்களை சுத்தம் செய்யும் முறையைப் பின்பற்றுங்கள். அதுவே சிறந்த பெடிக்யூர் சிகிச்சையாக விளங்கும். சரி, இப்போது வீட்டிலேயே பாதங்களுக்கு பெடிக்யூரை எப்படி செய்வதென்று பார்ப்போம்.

    தேவையான பொருட்கள்: பால் 4 கப் பேக்கிங் சோடா 3 டேபிள் ஸ்பூன். முதலில் பாலை ஒரு பாத்திரத்தில் ஊற்றி வெதுவெதுப்பான நிலையில் சூடேற்றிக் கொள்ள வேண்டும்.

    பாதங்களையும் வைக்கக்கூடிய அளவில் ஒரு டப் எடுத்துக்கொள்ளவும். கணுக்கால் வரை மூழ்கும் அளவுக்கு அதில் வெதுவெதுப்பான தண்ணீர் நிரப்பவும். அதில் சிறிது குளியல் உப்பு சேர்க்கவும். நீங்கள் விரும்பும் எசன்ஷியல் ஆயில் சில துளிகள் சேர்க்கலாம். பாதங்களை இந்த தண்ணீரில் 15-20 நிமிடங்கள் வரை ஊறவைத்து நன்கு கழுவ வேண்டும்.

    பின்பு ஒரு அகன்ற பாத்திரம் அல்லது பாதங்களை ஊற வைக்கும் வகையிலான பாத்திரத்தை எடுத்துக் கொண்டு, அதில் வெதுவெதுப்பான பாலை ஊற்றிக் கொள்ள வேண்டும். பின் அந்த பாலுடன் பேக்கிங் சோடாவை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். அடுத்து அதில் பாதங்களை 10-15 நிமிடம் ஊற வைத்து, பின் ஸ்கரப்பர் கொண்டு பாதங்களை தேய்த்து, வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.

    இறுதியில் துணியால் பாதங்களை துடைத்துவிட்டு, பாதங்களுக்கு எண்ணெய் அல்லது மாய்ஸ்சுரைசர் எதையேனும் தடவ வேண்டும். இப்படி வாரத்திற்கு ஒரு முறை செய்து வந்தால், பாதங்களில் வெடிப்புக்கள், வறட்சி போன்றவை ஏற்படுவது தடுக்கப்பட்டு, பாதங்களின் அழகும், மென்மைத்தன்மையும் அதிகரிக்கும்.

    • குதிகால் வெடிப்பை நாம் சில இயற்கை முறைப்படி சரி செய்ய முடியும்.
    • பெண்களுக்கு இருக்கும் பெரிய பிரச்சினை குதிகால் வெடிப்பு தான்.

    நம் பாதங்களில் இருக்கும் பகுதிகளில் குதிகால் பகுதி தான் அதிக அழுத்தத்தை தாங்குகிறது. இதனால் தான் அதிகமாக நடப்பது, நின்று கொண்டே இருப்பது போன்ற விஷயங்களால் நிறைய பேர் பாத வெடிப்பை சந்திக்கின்றனர். இந்த குதிகால் வெடிப்பு எந்த காரணத்தினால் உண்டாகிறது. மேலும் அதற்கு எப்படியெல்லாம் சிகிச்சை செய்யலாம் என அறிந்து கொள்வோம்.

    இதனால் பாதங்களில் பிளவுகள் உண்டாகி வலி ஏற்படுகிறது. இந்த குதிகால் வெடிப்பை நாம் சில இயற்கை முறைப்படி சரி செய்ய முடியும். இயற்கையாகவே பாதங்களில் ஈரப்பதத்தை தக்க வைக்கும் போது குதிகால் வெடிப்பு மறைகிறது. பெண்களுக்கு இருக்கும் பெரிய பிரச்சினை குதிகால் வெடிப்பு தான். குதிகால் வெடிப்பு காலின் அழகைக் கெடுப்பதோடு பல சமயங்களில் நமக்கு வலியையும் ஏற்படுத்துகிறது. இது அப்படியே வளர்ச்சி அடைந்து செல்லுலாய்டிஸை உண்டாக்குகிறது. குதிகாலில் உள்ள சருமம் வறண்டு போகும் போது அதில் வெடிப்புகள் உருவாகின்றன.

    அதே மாதிரி நாம் நடக்கும் போது குதிகால் பகுதி அதிக அழுத்தத்தை சந்திக்கிறது. இதனால் அதிக அழுத்தம் உண்டாகி அந்த சருமம் தடினமாகி குதிகால் வெடிப்பை ஏற்படுத்துகிறது. இந்த பிளவுகள் ஆழமாக போகும் போது தான் நமக்கு வலியை ஏற்படுத்துகிறது குதிகால் வெடிப்பை கால்சஸ் என்ற பெயரில் அழைக்கின்றனர். குதிகால் பகுதியை சுற்றியுள்ள சருமம் கடினமாகி வறண்டு போய் வெடிப்பானது உண்டாகிறது.

    நீங்கள் தொடர்ச்சியாக நடந்து குதிகாலுக்கு அழுத்தத்தை கொடுக்கும் போது நிலைமை இன்னும் மோசமாகலாம்.நீண்ட நேரம் நிற்பது. வெறுங்காலில் நீண்ட தூரம் நடப்பது. சூடான நீரில் குளிப்பது. காலநிலை மாற்றம். கடினமான சோப்புகளால் தோல் வறண்டு போதல். குளிர்ச்சியான காலநிலையால் வறண்ட சருமம் தோன்றுதல். இவற்றால் பாத வெடிப்புகள் உருவாக காரணமாக கூறப்படுகிறது.

    • வெதுவெதுப்பான தண்ணீரில், தினமும் பாதத்தைக் கழுவி வந்தாலே வெடிப்பு ஏற்படாமல் தவிர்க்கலாம்.
    • அனைவருமே பாதங்களை எப்போதும் சுத்தமாக வைத்துக்கொள்வது நல்லது.

    தோல் வறட்சியும், அதிக உடல் எடையும்தான் பாத வெடிப்புக்கான முக்கியமான காரணிகள். நம் உடலில் நீர்ச்சத்து குறையும்போது தோல் வறண்டு, பாதத்தில் வெடிப்பு உண்டாகும். குளிர்காலத்தில், இயல்பாகவே தோலில் வறட்சி ஏற்படும். அதனால் பாதத்தில் வெடிப்பு ஏற்படக்கூடும். பொதுவாகவே காலில் உள்ள தோல் தடிமனாக இருக்கும். அதற்குள் ஒரு கொழுப்பு அடுக்கு இருக்கும்.

    உடல் எடை அதிகமாக இருந்தால், அந்த அடுக்கு இடம்மாறி தோலில் வெடிப்பு உண்டாகும். வெதுவெதுப்பான தண்ணீரில், தினமும் பாதத்தைக் கழுவி வந்தாலே வெடிப்பு ஏற்படாமல் தவிர்க்கலாம். அதோடு காலையிலும் இரவிலும் பாதத்தைத் தண்ணீரில் நன்றாக கழுவினால் வெடிப்பு வரும் வாய்ப்பு குறைவு. கற்றாழை, தேங்காய் எண்ணெய் தடவலாம். ஆனால் ஒரு சிலருக்கு தொற்று ஏற்பட்டு, புண்கள் அதிகமாகி, கடுமையான வலியுடன் வெடிப்புகள் இருக்கும். அவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

    குறிப்பாக சர்க்கரை நோயாளிகள் லேசான வெடிப்புகள் ஏற்பட்டாலே, உடனடியாக மருத்துவரிடம் பரிசோதித்து தொற்று ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். பாதவெடிப்புகளுக்குச் சிகிச்சை எடுத்துக்கொள்ளாவிட்டால், கால் முழுவதும் தொற்று பரவுவதற்கு வாய்ப்பிருக்கிறது. தோல் முற்றிலுமாக கெட்டுவிடும். வெடிப்புகள் அதிகமாக உள்ளவர்கள், திறந்தநிலையில் இல்லாமல் மூடிய செருப்புகளையே அணிய வேண்டும். உடலில் நீர்ச்சத்துக் குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

    நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகள், பழங்களை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். தவிர, உடல் பருமனாக இருப்பவர்கள், எடை குறைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். மற்றவர்களைக் காட்டிலும், சர்க்கரை நோயாளிகள் கொஞ்சம் கூடுதல் கவனத்தோடு இருக்க வேண்டும். பாத வெடிப்பு உள்ளவர்கள் மட்டுமல்ல, அனைவருமே பாதங்களை எப்போதும் சுத்தமாக வைத்துக்கொள்வது நல்லது.

    கால்களில் நகங்களை வெட்டும்போது முழுமையாக வெட்டிவிடாமல் லேசாக நகம் இருக்குமாறு வெட்ட வேண்டும். முழுமையாக வெட்டினால், சதைப் பகுதிக்குள் நகம் வளர்ந்து வலி உண்டாகும். அதேபோல், நகங்களுக்கு இடையே காணப்படும் இடைவெளி எப்போதும் உலர்ந்த தன்மையோடு இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். ஈரத்தன்மையோடு இருந்தால் தொற்றுகள் உண்டாக வாய்ப்பு இருக்கிறது.

    • பியூமிஸ் கல்லைப் பாதங்களின் மீது மென்மையாக வட்ட வடிவில் சுழற்றி தேய்க்கவும்.
    • ஒரே கல்லை, தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு மேல் பயன்படுத்த வேண்டாம்.

    அழகைப் பராமரிப்பது என்பது முகத்துக்கு மட்டும் முக்கியத்துவம் தராமல், உச்சி முதல் பாதம் வரை கவனம் செலுத்துவதாகும். முக அழகைப் பாதுகாப்பதற்காக முயற்சிகள் மேற்கொள்ளும் பலரும் பாதங்களைப் பற்றி யோசிப்பது கிடையாது. இதன் காரணமாக பாதங்களில் வெடிப்புகள் உண்டாகிறது.

    இது அழகைக் கெடுப்பதோடு மட்டுமில்லாமல், ஆரோக்கியத்தையும் பாதிக்கிறது. கால்களுக்குப் பொருந்தாத காலணிகள், அளவுக்கதிகமான உப்புத் தண்ணீரில் பாதங்கள் படுவது, சத்துக்குறைவு போன்ற காரணங்களால் பித்த வெடிப்பு ஏற்படுகிறது. இத்தகைய வெடிப்புகள், இறந்த செல்கள் படிதல் போன்ற பிரச்சினைகளை நீக்கி பாதங்களை மென்மையாகவும், ஆரோக்கியமாகவும் பராமரிப்பதற்கு 'பியூமிஸ் கல்' உதவுகிறது. இதை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை இங்கு பார்க்கலாம்.

    'பியூமிஸ் கல்' பாதங்களின் உலர்ந்த சருமத்தில் இருக்கும் இறந்த செல்களை நீக்க உதவுகிறது. இதை நேரடியாக சருமத்தின் மீது பயன்படுத்தக்கூடாது. உலர்ந்த கல்லை பாதங்களின் மீது தேய்ப்பதற்கு முன்பு, வெதுவெதுப்பான நீரில் ஊறவைக்க வேண்டும். இதன் மூலம் சருமத்தில் சிராய்ப்பு மற்றும் காயங்கள் ஏற்படுவதைத் தடுக்கலாம்.

    பியூமிஸ் கல்லைப் பாதங்களின் மீது மென்மையாக வட்ட வடிவில் சுழற்றி தேய்க்கவும். இதனால் சருமத்தில் படிந்திருக்கும் இறந்த செல்கள் நீங்கும். ஒவ்வொரு முறை பியூமிஸ் கல்லைப் பயன்படுத்திய பிறகும், அதில் ஒட்டியிருக்கும் அழுக்குகளைச் சுத்தம் செய்ய வேண்டும். ஒருவர் பயன்படுத்திய கல்லை மற்றவர்கள் பயன்படுத்தக்கூடாது. ஒரே கல்லை, தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு மேல் பயன்படுத்த வேண்டாம்.

    பியூமிஸ் கல்லைப் பயன்படுத்திய பிறகு மாய்ஸ்சுரைசர் பயன்படுத்தி பாதங்களை மசாஜ் செய்துகொள்ளலாம். மாய்ஸ்சுரைசருக்குப் பதிலாக தேங் காய் எண்ணெய் தடவி மசாஜ் செய்து வெது வெதுப்பான நீரில் கழுவலாம். இரவில் தூங்கச் செல்வதற்கு முன்பு பாதங்களில் நல்லெண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய் தடவி வட்ட வடிவில் மென்மையாக மசாஜ் செய்து விடவும்.

    பிறகு, சுத்தமான துண்டைப் பயன்படுத்தித் துடைத்து, உலரவிட்டு காலுக்கு சாக்ஸ் அணிந்து கொள்ளலாம். இவ்வாறு வாரத்தில் ஒருமுறை செய்து வந்தால், கால்கள் கருமையாவதையும், குதிகால் வெடிப்பு ஏற்படுவதையும் தடுக்கலாம். பாதங்களில் காயங்கள், புண் ஏதேனும் இருந்தால் பியூமிஸ் கல்லை பயன்படுத்தக்கூடாது.

    ×