search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ferrari"

    • அஜித்குமார் நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் ரேஸ் டிராக்கில் களம் இறங்கப் போகிறார்.
    • கடந்த ஜூலை மாதம் துபாயில் விலை உயர்ந்த பெராரி காரை அஜித்குமார் வாங்கினார்.

    நடிகர் அஜித்குமார் நடிப்பு மட்டும் அல்லாமல் கார் மற்றும் பைக் ரேசிங்கில் மிகப்பெரியளவில் ஆர்வம் காட்டுபவர்.

    கடந்த ஜூலை மாதம் துபாயில் விலை உயர்ந்த பெராரி காரை அஜித்குமார் வாங்கினார். இந்நிலையில் அஜித்குமாரை கவுரவிக்கும் விதமாக அவருக்கு பெராரி கையுறைகள் பரிசாக வழங்கப்பட்டது.

    அஜித்குமார் தற்பொழுது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி படத்தின் நடித்து வருகிறார். விடாமுயற்சி திரைப்படத்தை மகிழ் திருமேனி இயக்கியுள்ளார். இப்படத்தில் திரிஷா, அர்ஜூன், ரெஜினா மற்றும் ஆரவ் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தாண்டு இறுதியில் திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ஃபெராரி நிறுவனம் அதன் இரண்டாவது எலெக்ட்ரிக் வாகனத்தை தயாரிக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளது.
    • புதிய ஆலையில் எலெக்ட்ரிக் வாகனங்கள் மற்றும் இதர மாடல்களை ஃபெராரி உற்பத்தி செய்யும் என்று கூறப்படுகிறது.

    உலகின் முன்னணி சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான ஃபெராரி தனது முதல் எலெக்ட்ரிக் வாகனத்தை அடுத்த ஆண்டு வெளியிடும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

    அதன்படி, ஃபெராரி அறிமுகம் செய்யும் எலெக்ட்ரிக் காரின் விலை மற்றும் விவரங்கள் வெளியாகி உள்ளது. இந்தியாவில் இந்த எலெக்ட்ரிக் காரின் விலை தோராயமாக ரூ.4.17 கோடியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் சொகுசு வாகனங்களுக்கு அதிக வரி விதிக்கப்படுவதால் ஃபெராரியின் Purosangue கார் மாடலின் விலை அமெரிக்காவில் $3,98,350 (ரூ.3.32 கோடி) மற்றும் இந்தியாவில் ரூ.10.5 கோடியில் தொடங்குகிறது.


                                                                            கோப்புப்படம்


    ஃபெராரி அறிமுகம் செய்யும் எலெக்ட்ரிக் கார் இரண்டு இருக்கைகள் கொண்டதாக இருக்கும். ஒவ்வொரு சக்கரத்திலும் ஒரு மின்சார மோட்டார் கொண்டிருக்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

    மேலும் ஃபெராரி நிறுவனம் அதன் இரண்டாவது எலெக்ட்ரிக் வாகனத்தை தயாரிக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளது. வடக்கு இத்தாலியில் புதிய தொழிற்சாலையை தொடங்கும் ஃபெராரி தனது வாகனங்களின் ஆண்டு உற்பத்தியை 20,000 யூனிட்டுகளாக உயர்த்த உள்ளது. இந்த ஆலையில் எலெக்ட்ரிக் வாகனங்கள் மற்றும் இதர மாடல்களை ஃபெராரி உற்பத்தி செய்யும் என்று கூறப்படுகிறது.

    • ஃபெர்ராரி 488 ஜிடிபி (Ferrari 488 GTB ) எனும் விலையுயர்ந்த சொகுசு கார் பரிசு
    • இத்தனை குழந்தைகளை பெற்று கொடுத்ததற்கு நன்றி

    மலேசியாவில் தனது அன்பு மனைவிக்கு ஒரு தொழிலதிபர் பொது இடத்தில் வழங்கியிருக்கும் பரிசு குறித்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியிருக்கிறது.

    அந்த வீடியோவில் காணப்படுவது:-

    அந்த தொழிலதிபர் மலேசியா நாட்டின் பெடாலிங் ஜெயா பகுதியில் 128 ஸன்வே சாலையில், ஸன்வே பல்கலைகழகம் அருகில் காஃபி ஷாப் நடத்தி வருகிறார். அவர் தனது மனைவியை ஒரு சிகப்பு நிற துணியால் மூடப்பட்ட ஒரு காரை நோக்கி அழைத்து செல்கிறார்.

    அந்த கார் முழுவதும் சிகப்பு மற்றும் வெள்ளை நிற பலூன்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கிறது. அந்த காரின் பிராண்ட் அந்த துணியில் தெரிகிறது. இருவரும் அந்த காரை நெருங்கும்போது அந்த தொழிலதிபர், காரிலிருந்து அந்த துணியை மெதுவாக விலக்குகிறார்.

    அதில் ஃபெர்ராரி 488 ஜிடிபி (Ferrari 488 GTB ) எனும் விலையுயர்ந்த சொகுசு கார் தெரிகிறது. அதன்விலை சுமார் ரூ. 3.68 கோடிகளாகும் (Singapore Dollar 351,800).

    இக்காட்சிகளை பலர் தங்கள் ஸ்மார்ட்போன்களில் படம் பிடித்தனர். இந்த காட்சிகளுக்கு ஆதரவாகவும், விமர்சித்தும் பல கருத்துக்கள் வலைதளங்களில் பதிவிடப்படுகிறது.

    "எனக்காக இத்தனை குழந்தைகளை பெற்று கொடுத்ததற்கு நன்றி. உனக்கு மிகவும் கடினமாக இருந்திருக்கும்" என அவர் மென்மையாக மனைவியிடம் தெரிவித்ததாக ஒரு சமூக வலைதள பயனாளி தெரிவித்தார்.

    சாதாரண நிலையிலிருந்து மிகப்பெரும் தொழிலதிபரான அவர்கள் இருவரின் ஒற்றுமையை நெட்டிசன்கள் வியந்து பாராட்டி கருத்து தெரிவிக்கின்ற அதே வேளையில், அவரது பகட்டான செயலை விமர்சித்தும் பலர் கருத்து தெரிவிக்கின்றனர்.

    இந்த சம்பவத்தால் அந்த கடை இருக்கும் முழு தெருவும் போக்குவரத்து தடையால் ஸ்தம்பித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஃபெராரி ஸ்பைடர் மாடலில் ஹார்டு டாப் வழங்கப்பட்டு இருக்கிறது.
    • இதில் உள்ள மூன்று எலெக்ட்ரிக் மோட்டார்கள் இணைந்து 233 ஹெச்பி பவர் வெளிப்படுத்துகின்றன.

    ஃபெராரி நிறுவனம் SF90 ஹைப்ரிட், SF90 XX ஸ்டிராடேல் மற்றும் ஸ்பைடர் மாடல்களின் ப்ரோடக்ஷன் மாடலை அறிமுகம் செய்தது. இந்த கார்கள் முறையே 799 மற்றும் 599 யூனிட்கள் தான் உற்பத்தி செய்யப்பட உள்ளன. 2005-ம் ஆண்டு அறிமுகம் செய்ப்பட்ட XX மாடல்களில் புதிய வேரியண்ட் இது ஆகும்.

    முந்தைய மாடல்களை போன்று இல்லாமல், புதிய மாடல்கள் சாலையில் பயன்படுத்துவதற்கான உரிமம் பெற்று இருக்கின்றன. இதுதவிர முற்றிலும் புதிய XX சீரிஸ் மாடல்களில் ஏரோடைனமிக் அப்கிரேடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் இவற்றின் திறன் அதிகப்படுத்தப்பட்டு இருக்கிறது.

    இந்த காரின் பின்புறம் மெல்லிய லைட்பார், பம்ப்பரில் டிஃப்யுசர் மற்றும் பல்வேறு வென்ட்கள் வழங்கப்படுகிறது. இவை கார் என்ஜினில் ஏற்படும் வெப்பத்தை குறைக்கும். ஸ்பைடர் மாடலில் ஹார்டு டாப் வழங்கப்பட்டு இருக்கிறது. இதனை கார் 45 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் போது 14 நொடிகளில் திறந்து, மூட முடியும்.

    இதன் ஹைப்ரிட் என்ஜின் 1016 ஹெச்பி பவர் வெளிப்படுத்துகிறது. வி8 என்ஜின் 786 ஹெச்பி பவர் வெளிப்படுத்துகிறது. இத்துடன் மூன்று எலெக்ட்ரிக் மோட்டார்கள் இணைந்து 233 ஹெச்பி பவர் வெளிப்படுத்துகின்றன. இந்த யூனிட் உடன் 8 ஸ்பீடு டூயல் கிளட்ச் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. 

    • பெராரி நிறுவனம் இந்திய சந்தையில் புதிய 296 GTB சூப்பர்காரை அறிமுகம் செய்து இருக்கிறது.
    • இந்த சூப்பர்கார் பெராரி F8 ட்ரிபுடோ மாடலின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும்.

    2022 பெராரி 296 GTB இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய பெராரி காரின் விலை ரூ. 5 கோடியே 40 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த மாடல் முன்னதாக கடந்த ஆண்டு ஜூன் மாத வாக்கில் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்பட்டது. இது பெராரி F8 ட்ரிபுடோ காரின் மேம்பட்ட மாடல் ஆகும்.


    புதிய பெராரி 296 GTB மாடலில் 3.0 லிட்டர், வி6 பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 645 ஹெச்பி பவர் வெளிப்படுத்தும் திறன் கொண்டது ஆகும். இத்துடன் எலெக்ட்ரிக் மோட்டார் ஒன்றும் உள்ளது. இது 164 ஹெச்பி பவர் வெளிப்படுத்துகிறது. பெட்ரோல் என்ஜின் மற்றும் எலெக்ட்ரிக் மோட்டார் ஒருங்கிணைந்து 809 ஹெச்பி பவர், 741 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

    டிரான்ஸ்மிஷனுக்கு 8 ஸ்பீடு DCT யூனிட் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த கார் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 2.9 நொடிகளில் எட்டிவிடும். இதில் உள்ள 7.45 கிலோவாட் ஹவர் பேட்டரி, பியுர் எலெக்ட்ரிக் மோடில் காரை 25 கிலோமீட்டர் வரை பயணிக்க செய்யும், இந்த காரில் டியர்டிராப் வடிவ ஹெட்லைட்கள், அகலமான ஏர் டேம், டோர் மவுண்ட் செய்யப்பட்ட ORVMகள், மெல்லிய எல்இடி டெயில் லைட்கள் வழங்கப்பட்டுள்ளன.

    ஃபெராரி நிறுவனத்தின் புதிய சூப்பர்கார் டீசர் அந்நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.



    ஃபெராரி நிறுவனம் தனது புதிய சூப்பர்காரின் டீசரை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த தசாப்தங்களில் ஃபெராரி சூப்பர்கார் மாடல்கள் செயல்திறன் அடிப்படையில் அதிகளவு மாற்றங்களை பெற்றிருக்கிறது. 

    அந்த வரிசையில் ஃபெராரி 488 GTB டர்போசார்ஜ் செய்யப்பட்ட முதல் மாடலாக இருந்தது. காரின் வெளிப்புறம் பார்க்க ஃபெராரி 488 பிஸ்தா மற்றும் எஃப்8 ட்ரிபுடோ மாடல்களை தழுவி உருவாகி இருப்பதை உணர்த்துகிறது. டீசர் வீடியோவின் படி புதிய சூப்பர்காரில் ரேசர்-ஷார்ப் ப்ரோஃபைல் காரின் தோற்றத்தை மேம்படுத்துகிறது.



    இதன் ஆங்குலர் ஹெட்லேம்ப்கள் மெல்லியதாகவும், பின்புறம் குவாட் டெயில்லைட் செட்டப் கொண்டிருக்கிறது. இத்துடன் டூயல் எக்சாஸ்ட் பைப்களும், ஸ்பாயிலரும் வழங்கப்பட்டுள்ளது.

    புதிய சூப்பர்கார் 3.9 லிட்டர் பை-டர்போ வி8 மோட்டார் கொண்டிருக்கும் என தெரிகிறது. இந்த மோட்டார் மூன்று எலெக்ட்ரிக் மோட்டார்களுடன் வரும் என கூறப்படுகிறது. இதில் இரு மோட்டார்கள் முனபு்ற ஆக்சிலிலும், ஒன்று கியர்பாக்ஸ் உடன் இணைக்கப்படும் என தெரிகிறது.

    ஆல்-வீல் டிரைவ் செட்டப் கொண்டிருக்கும் புதிய சூப்பர்கார் 972 பி.ஹெச்.பி. பவர் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மணிக்கு மூன்று இலக்க வேகத்தை வெறும் 2.0 நொடிகளில் எட்டும் திறன் என கூறப்படுகிறது.
    ஃபெராரி நிறுவனத்தின் போர்டோஃபினோ இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. முன்னதாக இந்த கார் இத்தாலியில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. #Ferrari



    ஃபெராரி ஃபோர்டோஃபினோ இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. முன்னதாக ஃபெராரியின் 70-வது ஆண்டு விழாவை முன்னிட்டு இத்தாலியில் இந்த கார் அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    இந்தியாவில் ஃபெராரி போர்டோஃபினோ விலை ரூ.3.5 கோடி (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இத்தாலியில் உள்ள மீன்பிடி கிரமாமமான போர்டோஃபினோ பெயர் தான் புதிய ஃபெராரி காருக்கு சூட்டப்பட்டுள்ளது. பூமராங் வடிவம் கொண்ட எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள் கொண்டுள்ள புதிய ஃபெராரி கார் கலிபோர்னியா டி மாடலை விட அதிக அழகாக காட்சியளிக்கிறது.

    போர்டோஃபினோவின் பக்கவாட்டுகள் கார்பன் ஃபைபர் மூலம் உருவாக்கப்பட்டுள்ள நிலையில், பின்புற வீல் ஆர்ச்கள் டெயில் லேம்ப்களுடன் இணைகிறது. பின்புறம் முற்றிலும் புதிய வடிவமைப்பு கொண்டுள்ள போர்டோஃபினோவின் டுவின் டெயில் லேம்ப்கள், குவாட் எக்சாஸ்ட் செட்டப் கொண்டுள்ளது.



    புதிய காரின் சேசிஸ் மீண்டும் வடிவமைக்கப்பட்டு இருப்பதால், காரின் எடை 80 கிலோ வரை குறைந்துள்ளது. மேலும் புதிய சேசிஸ் 35 சதவிகிதம் வரை உறுதியானது என ஃபெராரி தெரிவித்துள்ளது. ஃபெராரி ஜி.டி. மாடல்களில் எலெக்ட்ரோ-மெக்கானிக்கல் ஸ்டீரிங் கொண்ட கார்களில் ஒன்றாக இது இருக்கிறது.  

    ஃபெராரி போர்டோஃபினோ மாடலில் 3.9 லிட்டர் டுவின் டர்போ வி8 இன்ஜின் கொண்டுள்ளது. இதே இன்ஜின் கலிபோர்னியா டி மாடலிலும் வழங்கப்பட்டுள்ளது. எனினும் புதிய காரில் இன்ஜின் சிறிதளவு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 600 பி.ஹெச்.பி. @ 7,500 ஆர்.பி.எம். செயல்திறன் மற்றும் 760 என்.எம். டார்கியூ @ 5,250 ஆர்.பி.எம். செயல்திறன் கொண்டுள்ளது.
    ×