என் மலர்
நீங்கள் தேடியது "Field Trip"
- மாணவ, மாணவிகள் பெருந்துறை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திற்கு களப்பயணம் மேற்கொண்டனர்
- மாணவர்களுக்கு வாழ்வியல் ஒழுக்கம் முறைகள் குறித்தும், சட்ட விதிமுறைகள் குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்
பெருந்துறை,
இந்திய அரசியலமைப்பு நாள் மற்றும் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் மீதான சர்வதேச வன்முறை எதிர்ப்பு நாளை முன்னிட்டு பெருந்துறை வடக்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பயிலும் 6, 7, 8-ம் வகுப்பு மாணவ, மாணவிகள் பெருந்துறை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திற்கு களப்பயணம் மேற்கொண்டனர்.
அங்கு பெருந்துறை சார்பு நீதிமன்ற நீதிபதி கிருஷ்ண பிரியா, குற்றவியல் நீதித்துறை நடுவர் விபிசி, அரசு வக்கீல் திருமலை மற்றும் பெருந்துறை நீதிமன்ற சிராஸ்தார் கல்யாணசுந்தரம் ஆகியோர் மாணவ,மாணவிகளுடன் கலந்துரையாடி மாணவர்களுக்கு வாழ்வியல் ஒழுக்கம் முறைகள் குறித்தும், சட்ட விதிமுறைகள் குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
இதில் ஆசிரியர்கள் கோபிநாத், வெங்கடாஜலபதி, சுமதி, பகுதி நேர சிறப்பாசிரியர்கள் தீபக்ராஜ் மற்றும் தினேஷ் பாபு ஆகியோர் கலந்து கொண்டனர்.
- மாநில அளவிலான அறிவியல் கண்காட்சியை காண களப்பயணம் மேற்கொண்டனர்.
- இதில் 9-ம் வகுப்பு மாணவர்கள் மற்றும் 6,7,8ஆகிய வகுப்புகளில் இருந்து தலா 4பேர் வீதம் 12 பேர் சென்றனர்.
புதுச்சேரி:
பாகூர் கொம்யூன் கீழ்பரிக்கல் பட்டு அரசு உயர்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகள் புதுவை அரசு கல்வித்துறையின் மூலம் நடைபெற்ற மண்டல மற்றும் மாநில அளவிலான அறிவியல் கண்காட்சியை காண களப்பயணம் மேற்கொண்டனர்.
இதில் 9-ம் வகுப்பு மாணவர்கள் மற்றும் 6,7,8ஆகிய வகுப்புகளில் இருந்து தலா 4பேர் வீதம் 12 பேர் சென்றனர்.
மாணவர்களை பள்ளி தலைமை ஆசிரியர் ராமலிங்கம் வழியனுப்பி வைத்தார். அறிவியல் ஆசிரியை வரலட்சுமி, வில்லியம், பள்ளி பொறுப்பா சிரியர் துரைசாமி, உடற்கல்வி ஆசிரியை ஜெயபாரதி, சரண்யா ஆகியோர் மாணவர்களை அழைத்து சென்றனர்.
- மாணவர்கள் வாசிப்பின் அவசியம் குறித்தும் வாசிப்பால் மாணவர்களுக்கு ஏற்படும் தன்னம்பிக்கை குறித்து கேட்டு தெரிந்து கொண்டனர்.
- நூலகத்தில் உள்ள புத்தகங்களை ஒவ்வொன்றாக எடுத்து ஒவ்வொரு பகுதிக்கும் சென்று மாணவிகள் பார்வையிட்டு மகிழ்ந்தனர்.
உடுமலை :
உடுமலை உழவர் சந்தை எதிரே உள்ள முழு நேர கிளை நூலகத்தில் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு வாசிப்பின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது நூலகத்தில் தேசிய நூலக வார விழா கொண்டாடப்பட்டு வரும் வேளையில் உடுமலை பாரதியார் நூற்றாண்டு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் கிளை நூலகம் எண் 2 மகளிர் வாசகர் வட்ட தலைவர் விஜயலட்சுமி தலைமையில் பள்ளி தலைமை ஆசிரியர் விஜயா வழிகாட்டுதலுடன் நூலகத்திற்கு களப்பயணம் வந்தனர்.
மாணவிகள் சைக்கிளில் ஊர்வலமாக நூலகத்திற்கு வந்தனர் .நூலகத்தில் மாணவர்களின் திறன்களை வளர்ப்பதில் நூலகம் எவ்வாறு பயன்படுகிறது என நூலகர் கலாவதி விளக்கினார் .வாசிப்பின் அவசியம் குறித்தும் நூலகம் செல்வதால் ஏற்படும் வளர்ச்சி பற்றியும் மாணவர்களுக்கு விளக்கினார். எந்த வகையான நூல்கள்நூலகத்தில் உள்ளது. மாணவர்கள் அவற்றை எவ்வாறு பயன்படுத்துவது என நூலகர் மகேந்திரன், பிரமோத் அஷ்ரப் சித்திகா ஆகியோர் விளக்கினர் .மாணவர்கள் வாசிப்பின் அவசியம் குறித்தும் வாசிப்பால் மாணவர்களுக்கு ஏற்படும் தன்னம்பிக்கை குறித்தும். பல்வேறுநூல்கள்குறித்தும் கேட்டு தெரிந்து கொண்டனர் .
இதை தொடர்ந்து நூலகத்தில் உறுப்பினராகாத மாணவிகள் நூலகத்தில் உறுப்பினராக சேர்ந்து கொண்டனர் .அவர்களுக்கான உறுப்பினர் காப்பு தொகையை நூலக மகளிர் வாசகர் வட்ட தலைவர் நல்லாசிரியர் விஜயலட்சுமி செலுத்திஅவரும் ரூ .1000 செலுத்தி நூலகப் புரவலராகசேர்ந்தார்.தொடர்ந்து நூலகத்தில் போட்டித் தேர்வுக்கு தயாராகும் தேர்வர்களுடன் மாணவிகள் கலந்துரையாடல் நிகழ்த்தினர். பணி நிறைவு நூலகர் கணேசன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். நூலகத்தில் உள்ள புத்தகங்களை ஒவ்வொன்றாக எடுத்து ஒவ்வொரு பகுதிக்கும் சென்று மாணவிகள் பார்வையிட்டு மகிழ்ந்தனர்.
- ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகள் மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சி நிறுவனங்கள் ஆகியவை பற்றி களஆய்வு மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.
- சான்றிதழ் படிப்பிற்கான பாடப்புத்தகம், உபகரணங்கள் மற்றும் மதிய உணவு இலவசமாக வழங்கப்படும்.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-
மாநில ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி நிறுவனம் இயக்குநர் கடிதத்தில் தெரிவித்துள்ள தகவலின் படி மாவட்ட அளவில் ஊராட்சிகளுக்கான மாவட்ட வள மையத்தின் மூலம் கிராமப்புற இளைஞர்களுக்கு கிராம தன்னார்வத் தொண்டு மற்றும் சமூக சேவை குறித்து மூன்று மாதச் சான்றிதழ் படிப்பு நடத்துவதாகத் திட்டமிடப்பட்டு உள்ளது.
மேற்படி சான்றிதழ் படிப்பானது, 6 நாட்கள் நேரடி வகுப்புகளாக தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அனைத்து வட்டாரங்களிலும் சிறந்த வல்லுநர்களால் நடத்தப்படும். மேலும், கிராம அளவில் செயல்படும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், ஊராட்சி மன்ற அலுவலகங்கள், வட்டார அலுவலகங்கள், அங்கன்வாடி மையங்கள், ஊராட்சி ஒன்றியத் துவக்கப்பள்ளிகள் மற்றும் திறன் மேம்பாட்டுப் பயிற்சி நிறுவனங்கள் ஆகியவை பற்றி கள ஆய்வு மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.
ஊராட்சிகளுக்கான மாவட்ட வள மையத்தின் மூலம் பயிற்சி வகுப்புகளுக்கிடையே உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) அலுவலகத்தால் அறிவிக்கப்பட்ட கிராம ஊராட்சிகளுக்கு களப்பயணம் அழைத்துச் செல்லப்படும். சான்றிதழ் படிப்பிற்கான பாடப்புத்தகம், உபகரணங்கள் மற்றும் மதிய உணவு இலவசமாக வழங்கப்படும். இம்மூன்று மாதச் சான்றிதழ் படிப்பின் இறுதியில் தேர்வு நடத்தப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப்படும்.
இம்மூன்று மாதச் சான்றிதழ் படிப்பில் மக்கள் பிரதிநிதிகள், ஊராட்சி செயலர்கள், களப்பணியாளர்கள், கிராம இளைஞர் தன்னார்வலர்கள் மற்றும் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொள்ள குறைந்தபட்சம் 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இப்பயிற்சியில் சேர பயிற்சிக் கட்டணமாக ரூ. 1000 இணைய வழி வாயிலாக ஊராட்சிகளுக்கான மாவட்ட வள மைய அலுவலரைத் தொடர்பு கொண்டு செலுத்தலாம். மேலும் விவரங்களுக்கு, தஞ்சாவூர் ஊராட்சிகளுக்கான மாவட்ட வள மைய அலுவலர் ராமு என்பவரை தொடர்பு கொள்ளளாம். தொலைபேசி எண் 9994287333 ஆகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.