என் மலர்
நீங்கள் தேடியது "FIFA World Cup"
- போட்டியை நடத்தும் நாடுகளை தவிர்த்து உலகக் கோப்பைக்கு தகுதி பெற்ற 2-வது அணி நியூசிலாந்து ஆகும்.
- கடந்த வாரத்தில் முதல் அணியாக ஜப்பான் தகுதி கண்டிருந்தது.
ஆக்லாந்து:
23-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி கனடா, மெக்சிகோ, அமெரிக்கா ஆகிய நாடுகளில் அடுத்த ஆண்டு (2026) ஜூன், ஜூலை மாதங்களில் நடக்கிறது. 48 அணிகள் பங்கேற்கும் இந்த போட்டிக்கு போட்டியை நடத்தும் நாடுகள் தவிர மற்ற அணிகள் தகுதி சுற்று மூலமே தேர்வாகும். இதற்கான தகுதி சுற்று கண்டங்கள் வாரியாக நடந்து வருகிறது.
ஓசியானா கூட்டமைப்பு அணிகளுக்கான தகுதி சுற்றில் 11 அணிகள் கலந்து கொண்டன. இதன் 3-வது ரவுண்டின் இறுதி ஆட்டம் ஆக்லாந்தில் நேற்று நடந்தது. இதில் நியூசிலாந்து-நியூ கலிடோனியா அணிகள் மோதின. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 3-0 என்ற கோல் கணக்கில் நியூ கலிடோனியாவை தோற்கடித்து முதலிடம் பிடித்து உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கு தகுதி பெற்றது.
போட்டியை நடத்தும் நாடுகளை தவிர்த்து உலகக் கோப்பைக்கு தகுதி பெற்ற 2-வது அணி நியூசிலாந்து ஆகும். கடந்த வாரத்தில் முதல் அணியாக ஜப்பான் தகுதி கண்டிருந்தது. நியூசிலாந்து அணி உலகக் கோப்பை போட்டிக்கு தகுதி காண்பது இது 3-வது முறையாகும்.
- ஆப்பிரிக்கா கண்டத்தின் சிறந்த வீரரில் ஒருவராக திகழ்கிறார்
- பேயர்ன் முனிச் கிளப்பிற்காக விளையாடி வரும் சானேவுக்கு காலில் காயம் ஏற்பட்டிருந்தது.
உலகக் கோப்பை கால்பந்து தொடர் கத்தாரில் வருகிற ஞாயிற்றுக்கிழமை (20-ந்தேதி) தொடங்குகிறது. இந்த தொடரில் செனேகல் அணியில் விளையாடுகிறது. அந்த அணியின் சிறந்த வீரர் சாடியோ மானே. 30 வயதான இவர் ஜெர்மனியின் முன்னணி களிப்பான பேயர்ன் முனிச் அணிக்காக விளையாடி வருகிறார்.
அந்த அணிக்காக விளையாடியபோது காலி காயம் ஏறுப்ட்டது. காயம் குணமடைந்து விடும் என நினைக்கையில், அறுவை சிகிச்சை மேற்கொள்ள இருப்பதால், அவர் உலகக் கோப்பையில் விளையாடமாட்டார் என செனேகல் அணியின் மருத்துவர் தெரிவித்துள்ளார்.
ஆப்பிரிக்காண கண்டத்தின் சிறந்த கால்பந்து வீரர் விருதை இரண்டு முறை வென்றுள்ள சானே இடம் பெறாதது அந்த அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக கருதப்படுகிறது.
செனேகல் குரூப் ஏ-வில் இடம் பிடித்துள்ளது. இந்த அணியுடன் கத்தார், ஈக்வடார், நெதர்லாந்து அணிகளும் இடம் பிடித்துள்ளன. செனேகல் வருகிற 21-ந்தேதி தனது முதல் ஆட்டத்தில் நெதர்லாந்து அணியை எதிர்கொள்கிறது.
- உலக கோப்பை கால்பந்து போட்டி இன்று கோலாகலமாகத் தொடங்கியது.
- முதல் போட்டியில் கத்தார்- ஈகுவடார் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
தோகா:
22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் இன்று தொடங்கி அடுத்த மாதம் 18-ந்தேதி வரை நடக்கிறது. அரபு நாட்டில் நடக்கும் முதல் உலக கோப்பை போட்டியான இதில் 32 நாடுகள் பங்கேற்கின்றன. அவை 8 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன.
இந்நிலையில், இந்திய நேரப்படி இரவு 9.30 மணிக்கு நடந்த தொடக்க ஆட்டத்தில் கத்தார், ஈகுவடார் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
ஆட்டம் தொடங்கிய 16-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பில் ஈகுவடார் அணியின் வேலன்சியா கோல் அடித்தார். தொடர்ந்து, 31-வது நிமிடத்தில் 2வது கோலையும் அடித்து அசத்தினார். இதனால் முதல் பாதியில் ஈகுவடார் அணி 2-0 என முன்னிலை பெற்றது. இரண்டாவது பாதியில் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை.
இறுதியில், ஈகுவடார் அணி 2-0 என்ற கோல் கணக்கில் கத்தார் அணியை தோற்கடித்து முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
- ஈரான் நாட்டில் ஹிஜாப் அணிவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
- பல நகரங்களில் நடந்த போராட்டங்களில் ஏற்பட்ட மோதலில் இதுவரை 300-க்கும் அதிகமானோர் பலியாகினர்.
தோகா:
ஈரானில் ஹிஜாப் உடைக்கு எதிராக நாடு முழுவதும் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த செப்டம்பர் 17-ம் தேதி மாஷா அமினி (22), என்ற இளம்பெண் இறந்த பிறகு போராட்டம் வலுவடைந்துள்ளது.
பல்வேறு நகரங்களில் நடந்து வரும் போராட்டங்களால் அந்நாடு திக்குமுக்காடி வருகிறது. போலீசார், போராட்டக்காரர்கள் இடையே நடந்த மோதலில் இதுவரை 300-க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர்.
போராட்டம் நாட்டின் பல நகரங்களுக்கு பரவி வருகிறது. ஹிஜாப் எதிர்ப்பு போராட்டக்காரர்களை ஒடுக்க ஈரான் அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியும், தடியடி, கண்ணீர் புகைகுண்டு வீசியும், கைது நடவடிக்கையிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், 2022 உலக கோப்பை கால்பந்து தொடர் கத்தார் நாட்டில் நடைபெற்று வருகிறது. கால்பந்து தொடரில் நேற்று நடந்த ஆட்டத்தில் ஈரான், இங்கிலாந்து அணிகள் மோதின. போட்டி தொடங்கும் முன் இரு நாடுகளின் தேசிய கீதங்களும் இசைக்கப்பட்டது. அதில், ஈரான் நாட்டின் தேசிய கீதம் இசைக்கப்பட்ட போது அந்நாட்டின் வீரர்கள் யாரும் தேசிய கீதத்தை பாடவில்லை. ஈரான் வீரர்கள் அனைவரும் தங்கள் வாயை அசைக்காமல் அப்படியே நின்றனர். இது தற்போது பேசுபொருளாகி உள்ளது
ஹிஜாப் அணிவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் அரசுக்கு எதிராகவும் ஈரானில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் உலக கோப்பை போட்டியின்போது ஈரான் கால்பந்து வீரர்கள் தேசிய கீதத்தை பாடாமல் நின்றனர்.
- கத்தாரில் உலக கோப்பை கால்பந்து போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது.
- நாமக்கல்லில் இருந்து கத்தாருக்கு ஏற்றுமதி செய்யப்படும் முட்டையின் எண்ணிக்கை 3 மடங்கு உயர்ந்துள்ளது.
நாமக்கல் :
நாமக்கல் மண்டலத்தில் தினமும் 4.50 கோடி முட்டை உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இங்கிருந்து தமிழகம் மட்டுமல்லாது வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கத்தார் நாட்டில் உலக கோப்பை கால்பந்து போட்டி தொடங்கியுள்ள நிலையில், நாமக்கல்லில் இருந்து கத்தாருக்கு முட்டை ஏற்றுமதி 3 மடங்கு அதிகரித்துள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் இருந்து அதிகளவில் முட்டை ஏற்றுமதியாகும் நாடுகளில் கத்தாரும் ஒன்று. கத்தாருக்கு மட்டும் 50 லட்சம் முட்டைகள் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்த நிலையில், கால்பந்து போட்டி காரணமாக 1.50 கோடி முட்டைகள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன என ஏற்றுமதியாளர்கள் தெரிவித்தனர்.
- இன்று நடந்த 3வது லீக் ஆட்டத்தில் மெக்சிகோ, போலந்து அணிகள் மோதின.
- ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் கோல் அடிக்காததால் டிராவில் முடிந்தது
தோகா:
22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் இன்று நடைபெற்ற குரூப் சி பிரிவு லீக் ஆட்டத்தில் மெக்சிகோ, போலந்து அணிகள் மோதின.
ஆரம்பம் முதல் இரு அணிகளும் கோல் அடிக்க கடுமையாக போராடின. ஆனால் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. இதனால் முதல் பாதி ஆட்டம் 0-0 என டிராவில் முடிந்தது. இதையடுத்து நடந்த 2-வது பாதியிலும் இரு அணிகளும் எந்த கோலும் அடிக்கவில்லை.
கூடுதலாக வழங்கப்பட்ட 10 நிமிடத்திலும் கோல் அடிக்கவில்லை. ஆட்டநேர முடிவில் 0-0 என சமநிலையில் முடிந்தது. இதனால் இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளிகள் வழங்கப்பட்டன.
- இந்தியாவால் தேடப்படும் நபரான ஜாகிர் நாயக் கத்தாருக்கு சிறப்பு விருந்தினராக சென்றுள்ளார்.
- இதுதொடர்பாக மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கை குறித்து மத்திய மந்திரி கருத்து தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:
மத வெறுப்புணர்வு பேச்சு, பணமோசடி வழக்கில் இந்தியாவால் தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டவர் ஜாகிர் நாயக். இஸ்லாமிய மத போதகரான ஜாகிர் நாயக் இந்தியாவில் இருந்து தப்பியோடி மலேசியாவில் தஞ்சம் அடைத்தார். ஜாகிர் நாயக்கிற்கு மலேசியா நிரந்தர குடியுரிமை வழங்கியுள்ளது.
இதற்கிடையே, ஜாகிர் நாயக் கத்தார் நாட்டிற்கு சென்றுள்ளார். உலக கோப்பை கால்பந்து போட்டிகள் கத்தாரில் நடைபெற்றுவரும் நிலையில் சாகிர் நாயக்கை கத்தார் சிறப்பு விருந்தினராக அழைத்துள்ளது.
இந்நிலையில், இந்தியாவால் தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டுள்ள ஜாகிர் நாயக் உலக கோப்பை கால்பந்து போட்டிகள் நடைபெறும் கத்தாருக்கு சிறப்பு விருந்தினராக சென்றிருப்பது தொடர்பாக மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கை குறித்து மத்திய மந்திரி கருத்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, மத்திய மந்திரி ஹர்தீப் சிங் பூரி கூறுகையில், இந்த விவகாரத்தை இந்தியா கவனிக்கும். மேலும், இந்த விவகாரத்தை கவனத்தில் கொள்ளும். ஆனால், ஜாகிர் நாயக் மலேசிய குடிமகன். ஜாகிர் நாயக் விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் இந்தியாவின் நிலைப்பாடு கடுமையாக எடுத்துரைக்கப்படும் என தெரிவித்தார்.
- 4வது லீக் ஆட்டத்தில் பிரான்ஸ், ஆஸ்திரேலியா அணிகள் மோதின.
- முதல் பாதியில் பிரான்ஸ் 2-1 என முன்னிலை பெற்றது.
தோகா:
22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் இன்று அதிகாலை 12.30 மணிக்கு நடந்த குரூப் டி பிரிவு லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பிரான்ஸ், ஆஸ்திரேலியா அணிகள் மோதின.
ஆட்டத்தின் தொடக்கத்தில் 9வது நிமிடத்தில் ஆஸ்திரேலிய வீரர் கிரெய்க் குட்வின் முதல் கோல் அடித்தார். இதற்கு பதிலடியாக பிரான்ஸ் வீரர் ஆட்ரியன் ரேபியாட் 27-வது நிமிடத்திலும், ஆலிவர் கிரௌட் 32-வது நிமிடத்திலும் தலா ஒரு கோல் அடித்தனர். இதனால் முதல் பாதியில் பிரான்ஸ் 2-1 என முன்னிலை பெற்றது.
இரண்டாவது பாதியின் 68-வது நிமிடத்தில் கைலியன் மாப்பே ஒரு கோல் அடித்தார். ஆட்டத்தின் 71வது நிமிடத்தில் ஆலிவர் கிளெய்ட் மீண்டும் ஒரு கோல் அடித்து அசத்தினார்.
இறுதியில், பிரான்ஸ் அனி 4-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.
- முதல் பாதி முடிவில் 1-0 என அர்ஜென்டினா முன்னிலை வகித்தது.
- ஆட்ட முடிவில் சவுதி அரேபியா 2-1 என வெற்றி பெற்றது.
தோகா:
22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த லீக் போட்டியில் மெஸ்சியின் அர்ஜென்டினா அணியை 1-2 என்ற கோல் கணக்கில் சவுதி அரேபியா வீழ்த்தி அசத்தியது.
முதல் பாதி முடிவில் 1-0 என அர்ஜென்டினா முன்னிலை வகித்தது. இரண்டாவது பாதியில் சவுதி அரேபியா வீரர்களின் அசத்தலான ஆட்டத்தால் அந்த அணி 2-1 என வெற்றி பெற்றது.
சவுதி அரேபிய அணியின் வெற்றியை ஒட்டுமொத்த அரேபிய நாடுகளும் கொண்டாடி வருகின்றன.
இந்நிலையில், சவுதி அரேபியா வெற்றியைக் கொண்டாடும் விதமாக நாடு முழுதும் இன்று ஒருநாள் தேசிய விடுமுறை அறிவித்து சவுதி மன்னர் உத்தரவிட்டுள்ளார்.
- இன்று நடந்த 3-வது லீக் ஆட்டத்தில் ஸ்பெயின், கோஸ்டா ரிகா அணிகள் மோதின.
- ஸ்பெயின் அதிரடி ஆட்டத்தால் 7-0 என அபார வெற்றி பெற்றது.
தோகா:
22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் இன்று நடைபெற்ற குரூப் இ பிரிவு லீக் ஆட்டத்தில் ஸ்பெயின், கோஸ்டா ரிகா அணிகள் மோதின.
ஆரம்பம் முதல் ஸ்பெயின் அணி ஆதிக்கம் செலுத்தி வந்தது. ஆட்டத்தின் 11வது நிமிடத்தில் டேனி ஆல்மோ ஒரு கோலும், 21வது நிமிடத்தில் மார்கோ அசன்சியோ ஒரு கோலும், 31வது நிமிடத்தில் பெரா டாரஸ் ஒரு கோலும் அடித்தனர். இதனால் முதல் பாதி ஆட்டம் 3-0 என ஸ்பெயின் முன்னிலை பெற்றது.
இரண்டாவது பாதியின் 54 வது நிமிடத்தில் ஸ்பெயினின் பெரா டாரஸ் மீண்டும் ஒரு கோல் அடித்தார். 74வது நிமிடத்தில் காவியும், 90வது நிமிடத்தில் கார்லோஸ் சோலர் ஒரு கோலும், 92வதுநிமிடத்தில் அல்வாரோ மொராட்டா ஒரு கோலும் அடித்தனர்.
கோஸ்டா ரிகா அணியினரால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. ஆட்டநேர முடிவில் ஸ்பெயின் 7-0 என அபார வெற்றி பெற்றது.
- இன்று அதிகாலை நடந்த லீக் ஆட்டத்தில் பெல்ஜியம், கனடா அணிகள் மோதின.
- இதில் பெல்ஜியம் கனடாவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றது.
தோகா:
22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் இன்று அதிகாலை நடைபெற்ற குரூப் எப் பிரிவு லீக் ஆட்டத்தில் பெல்ஜியம், கனடா அணிகள் மோதின.
ஆட்டத்தின் தொடக்கம் முதலே பெல்ஜியம் வீரர்கள் பொறுப்புடன் ஆடினர். ஆட்டத்தின் 44-வது நிமிடத்தில் பெல்ஜியத்தின் மிக்கி பட்ஷியாய் ஒரு கோல் அடித்து அசத்தினார். இதனால் முதல் பாதி ஆட்டத்தில் பெல்ஜியம் 1-0 என முன்னிலை பெற்றது.
இரண்டாவது பாதியில் இரு அணி வீரர்களும் கோல் அடிக்கவில்லை. ஆட்டத்தின் முடிவில், பெல்ஜியம் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
- முதல் பாதியில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை.
- ஆட்ட நேர இறுதியில் போர்ச்சுகல் 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
தோகா:
22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் இன்று நடைபெற்ற குரூப் எச் பிரிவு லீக் ஆட்டத்தில் போர்ச்சுகல், கானா அணிகள் மோதின.
முதல் பாதியில் இரு அணி வீரர்களும் கோல் எதுவும் அடிக்கவில்லை. இதனால் 0-0 என சமனில் இருந்தது.
ஆட்டத்தின் இரண்டாவது பாதியின் 65-வது நிமிடத்தில் போர்ச்சுகலின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனல்டோ கிடைத்த பெனால்டி வாய்ப்பை கோலாக மாற்றினார்.
அவருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் 73-வது நிமிடத்தில் கானா அணியின் ஆண்ட்ரூ ஆயு ஒரு கோல் அடித்தார்.
போர்ச்சுக்கல் அணியின் ஜோ பெலிக்ஸ் 78-வது நிமிடத்திலும், 80-வது நிமிடத்தில் ரபேல் லியோவும் தலா ஒரு கோல் அடித்தனர்.
கானா அணியின் ஓஸ்மான் புகாரி 89-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார்.
ஆட்டநேர முடிவில் போர்ச்சுகல் 3-2 என்ற கோல் கணக்கில் கானா அணியை வீழ்த்தி வெற்றியைப் பதிவுசெய்தது.