என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Finance company"
- கிராம மக்கள் தினம்தோறும் துக்கம் விசாரிப்பது போல அந்த வீட்டிற்கு வந்து விசாரணை செய்து சென்றுள்ளனர்.
- பாலகிருஷ்ணன் தற்போது தனது வீட்டிற்கு வராமல் வெளியிலேயே சுற்றி திரிகிறார்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் ஆதனக்கோட்டை பகுதியை சேர்ந்த சகோதரர்கள் பால கிருஷ்ணன், சக்திவேல். இவர்கள் இருவரும் விவசாயம் செய்து வருவதோடு, ஆடு வளர்த்து விற்கும் தொழிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் பால கிருஷ்ணன் தனது மகளின் திருமணத்திற்காக ஒரு நிதி நிறுவனத்தில் ரூ.10 லட்சம் கடன் பெற்றுள்ளார். 19 மாதம் தவணையாக அந்த கடன் தொகையை திருப்பி செலுத்த வேண்டும். 15 மாத தவணை தொகை அவர் சரியாக செலுத்தி உள்ளார். ஆனால் கடந்து 3 மாதங்களாக தவணை செலுத்தவில்லை.
இதே போல சக்திவேல் மற்றொரு நிதி நிறுவனத்தில் கடன் பெற்றுள்ளார். அவரும் சரியாக தவணை செலுத்தி வந்த நிலையில் கடந்த 3 மாதங்களாக தவணை தொகை செலுத்தவில்லை.
இதன் காரணமாக கடன் தொகையை வசூலிக்க வந்த நிதி நிறுவன ஊழியர்கள் பாலகிருஷ்ணன், சக்தி வேலுக்கு சொந்தமான வீட்டில் பெரிய அளவில் இந்த வீடு அடமானத்தில் உள்ளது. 3 மாத நிலுவை ரூ.45,204 செலுத்தப்படவில்லை என்று கொட்டை எழுத்தில் எழுதிவிட்டு சென்றுள்ளனர். இதனை கண்ட அந்த கிராம மக்கள் தினம்தோறும் துக்கம் விசாரிப்பது போல அந்த வீட்டிற்கு வந்து விசாரணை செய்து சென்றுள்ளனர்.
அவமானத்தால் மனமுடைந்த சக்திவேல் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அக்கம்பக்கத்தினர் அவரை தடுத்து நிறுத்தி புத்தி சொல்லி வீட்டிற்கு கொண்டு வந்து சேர்த்து உள்ளனர். பால கிருஷ்ணனின் மனைவி அவமானம் தாங்க முடியாமல் தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். பாலகிருஷ்ணன் தற்போது தனது வீட்டிற்கு வராமல் வெளியிலேயே சுற்றி திரிகிறார்.
இது குறித்து சக்திவேல் கூறும்போது, தவணை தொகையை சரியான காலத்தில் செலுத்தி வந்தோம். கடந்த 3 மாதங்களுக்கு முன்பாக எங்களது தாயாரின் உடல் நிலை கடுமையான பாதிப்பிற்கு உள்ளானது. இதன் காரணமாக அவரை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்ததால், வைத்திருந்த பணம் மருத்துவத்திற்காக செலவிடப்பட்டு விட்டது. 3 மாத தவணையை எப்படியும் செலுத்தி விடுவோம் என்று நாங்கள் பணம் வசூலிக்கும் நிதி நிறுவன ஊழியரிடம் கெஞ்சினோம். ஆனால் அவர்கள் இவ்வாறு எங்களை அவமானப்படுத்தி விட்டு சென்று விட்டனர்.
இவ்வாறு அவர் கண்ணீருடன் தெரிவித்தார்.
இந்த சம்பவம் குறித்து வழக்கறிஞர் ஒருவர் கூறும்போது, தவணை தொகை செலுத்தவில்லை என்றால் நிதி நிறுவனங்கள் சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர, இது போன்ற அநாகரீகமான செயல்களில் அவர்கள் ஈடுபடக்கூடாது. இது மிகவும் தவறு. சட்டப்படி அவர்கள் மீது வழக்கு தொடரலாம் என்று அவர் கூறினார்.
- வீட்டின் கதவை திறந்து வைத்துக்கொண்டு வெளியே சென்று இருந்தார்.
- 8 பவுன் நகை திருடப்பட்டிருப்பது தெரிய வந்தது.
திருப்பூர் :
திருப்பூர் 15 வேலம்பாளையம் சொர்ணபுரி அவென்யூவில் வசித்து வருபவர் மோகன் ( வயது 53). நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். இன்று காலை இவர் வீட்டின் கதவை திறந்து வைத்து க்கொண்டு வெளியே சென்று இருந்தார்.
இதனை நோட்டமிட்ட மர்ம ஆசாமிகள் வீட்டிற்குள் புகுந்ததுடன், பீரோவை திறந்து நகையை எடுத்து க்கொண்டிருந்தனர். அப்போது சத்தம் கேட்டு மோகனின் மனைவி எழுந்தார். உடனே மர்ம ஆசாமிகள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். பின்னர் பீரோவில் பார்த்த போது அதில் இருந்த ரூ.3.50 லட்சம் மதிப்புள்ள 8 பவுன் நகை திருட ப்பட்டிருப்பது தெரிய வந்தது. இது குறித்து 15 வேலம்பாளையம் போலீசில் புகார் செய்ய ப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகி ன்றனர்.
- வேனை நிறுத்திவிட்டு கீழே இறங்கி சென்றார்.
- ஓட்டுனர்கள் காயமின்றி தப்பினர்.
அவினாசி :
கோவையிலிருந்து அவினாசி நோக்கி ஒரு வேன் வந்து கொண்டிருந்தது. அந்த வேனை டிரைவர் குமரேசன் (வயது 35) ஓட்டி வந்தார். அவினாசியை அடுத்து ஆட்டையாம்பாளையம் அருகே வேனை நிறுத்திவிட்டு கீழே இறங்கி சென்றார். குமரேசன் வேன் தொடர்பாக பைனான்ஸ் தவணை செலுத்த வேண்டி இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நிதிநிறுவனத்தை சேர்ந்த முருகேசன் (32) என்பவர் அந்த வேனை எடுத்துக்கொண்டு சென்றார். அப்போது எதிரே அன்னூரிலிருந்து சேலம் நோக்கி வந்த மற்றொரு வேன் மீது மோதியது.
இதில் இரண்டு வேன்களும் பலத்த சேதம் அடைந்தன. ஓட்டுனர்கள் காயமின்றி தப்பினர். இதனால் ஆட்டையாம்பாளையம் பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. விபத்து குறித்து அவினாசி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- 29ந் தேதி வசூல் ஆன ரூ.2 லட்சம் ரொக்கம் மற்றும் பைக் ஆர்சி புக் ஆகியவற்றை டேபிளில் வைத்து பூட்டிவிட்டார்.
- பைனான்சின் கண்ணாடி கதவை மட்டும் பூட்டிவிட்டு சட்டரை பூட்டாமல் வெளியே சென்று விட்டார்.
வெள்ளகோவில் :
வெள்ளகோவில் அருகே உள்ள தாசவநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்த கந்தசாமி மகன் சுபாஷ். இவர் வெள்ளகோவிலில், பழைய பஸ் நிலையம் அருகே ஆட்டோ பைனான்ஸ் நடத்தி வருகின்றார்.
இவர் ஜூலை மாதம் 29ந் தேதி வசூல் ஆன ரூ.2 லட்சம் ரொக்கம் மற்றும் பைக் ஆர்சி புக் ஆகியவற்றை டேபிளில் வைத்து பூட்டிவிட்டு, பைனான்சின் கண்ணாடி கதவை மட்டும் பூட்டிவிட்டு சட்டரை பூட்டாமல் வெளியே சென்று விட்டார். பிறகு வந்து பார்த்தபோது கண்ணாடி கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார், உடனே உள்ளே சென்று டேபிளை பார்க்கும்போது டேபிளினுடைய பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே இருந்த ரூ.2 லட்சம் மற்றும் ஆர் .சி. புக் காணாமல் போனது தெரிய வந்தது. உடனே அக்கம் பக்கம் விசாரித்து பார்த்தும் தகவல் எதுவும் கிடைக்கவில்லை,
இது குறித்து வெள்ளகோவில் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ரமாதேவி, சப் இன்ஸ்பெக்டர் ராஜமூர்த்தி ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் ஆகஸ்ட் மாதம் 11-ம் தேதி இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டிருந்த ஈரோடு, எல்லப்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஜெகநாதன் மகன் சந்தோஷ் (வயது 24)என்பவரை கைது செய்து அவரிடம் இருந்த ரூ.10 ஆயிரம் மற்றும் இந்த திருட்டுக்கு பயன்படுத்திய பைக்கை கைப்பற்றி சந்தோஷை காங்கேயம் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட தலைமறைவாக இருந்த 2 பேரை வெள்ளகோவில் போலீசார் தேடி வந்த நிலையில் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது பைக்கில் வந்த நபரை பிடித்து விசாரித்த போது வெள்ளகோவிலில் ஜூலை மாதம் நடந்த திருட்டு வழக்கில் சம்பந்தப்பட்ட ஈரோடு, கோணவாய்க்கால் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி மகன் மணிகண்டன் (38) என்பது தெரியவந்தது .உடனே மணிகண்டனை கைது செய்து காங்கயம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். இவர் மீது திருப்பூர் ஈரோடு, சேலம், மதுரை, விழுப்புரம், கரூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் 30க்கும் மேற்பட்ட வீடு புகுந்து திருடிய வழக்கு நிலுவையில் உள்ளது.
நீதிபதி திருட்டு வழக்கில் சம்பந்தப்பட்ட மணிகண்டனை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அதன் பேரில் தற்போது கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் .இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட மற்றும் ஒருவரை வெள்ளகோவில் போலீசார் தேடி வருகின்றனர்.
- நெல்லை தச்சநல்லூர் வடக்கு பைபாஸ் பகுதியை சேர்ந்தவர் ராஜகோபால் (வயது 49). இவர் அப்பகுதியில் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார்.
- புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஆபிரகாம் ஜோசப் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
நெல்லை:
நெல்லை தச்சநல்லூர் வடக்கு பைபாஸ் பகுதியை சேர்ந்தவர் ராஜகோபால் (வயது 49). இவர் அப்பகுதியில் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார்.
பத்தமடை பகுதியை சேர்ந்தவர் லட்சுமண பெருமாள். அம்பை கிளை சிறையில் வார்ட னாக பணிபுரிந்து வரும் இவர் கடந்த மாதம் ராஜகோபாலின் நிதி நிறு வனத்திற்கு சென்றுள்ளார்.
அப்போது அவர் அதிக அளவில் பணம் கடனாக கேட்டதால் இவ்வளவு பெரிய தொகை என்னிடம் இல்லை என்று ராஜகோபால் தெரிவித்துள்ளார். இதனால் அங்கிருந்து லட்சுமண பெருமாள் சென்று விட்டார்.
இந்நிலையில் கடந்த 6-ந் தேதி ராஜகோபால் தனது நண்பர்களுடன் காரில் அம்பை தாமிரபரணி ஆற்றுக்கு குளிக்க சென்றுள்ளார்.
அதன் பின்னர் கல்லி டைக்குறிச்சி ஆற்றுப்பாலம் பகுதியில் வந்த போது அங்கு வந்த லட்சுமண பெருமாள் அவரது காரை வழி மறித்துள்ளார். பின்னர் பணம் கேட்டால் கொடுத்தாக வேண்டும் என்று கூறி காரில் இருந்த ராஜகோபாலை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து ராஜகோபால் கல்லிடைக்குறிச்சி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் லெட்சுமண பெருமாள் மீது சப்-இன்ஸ்பெக்டர் ஆபிரகாம் ஜோசப் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- பைனான்சின் கண்ணாடி கதவை மட்டும் பூட்டிவிட்டு சட்டரை பூட்டாமல் வெளியே சென்று விட்டார்.
- ரூ.2 லட்சம் மற்றும் ஆர்.சி. புக் காணாமல் போனது
வெள்ளகோவில் :
வெள்ளகோவில் அருகே உள்ள தாசவநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சுபாஷ்(வயது 30). இவர் வெள்ளகோவிலில், பழைய பஸ் நிலையம் அருகே ஆட்டோ பைனான்ஸ் நடத்தி வருகின்றார்.இவர் கடந்த மாதம் ஜூலை29ந் தேதி வெள்ளி கிழமை வழக்கம் போல் காலை 10 மணிக்கு பைனான்சைத்திறந்து, மாலை 4 மணி வரை இருந்துவிட்டு, வசூல் ஆன ரூ.2 லட்சம் ரொக்கம் மற்றும் பைக் ஆர்சி புக் ஆகியவற்றை டேபிளில் வைத்து பூட்டிவிட்டு, பைனான்சின் கண்ணாடி கதவை மட்டும் பூட்டிவிட்டு சட்டரை பூட்டாமல் வெளியே சென்று விட்டார். பிறகு 6 மணிக்கு மேல் வந்து பார்த்தபோது கண்ணாடி கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார், உடனே உள்ளே சென்று டேபிளை பார்க்கும்போது டேபிளினுடைய பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே இருந்த ரூ.2 லட்சம் மற்றும் ஆர் சி புக் காணாமல் போனது தெரிய வந்தது, உடனே அக்கம் பக்கம் விசாரித்து பார்த்து தகவல் எதுவும் கிடைக்கவில்லை,
இது குறித்து வெள்ளகோவில் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ரமாதேவி, சப் இன்ஸ்பெக்டர் ராஜமூர்த்தி ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டிருந்த ஈரோடு, எல்லப்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஜெகநாதன் மகன் சந்தோஷ் (24)என்பவரை கைது செய்து அவரிடம் இருந்த ரூ.10 ஆயிரம் மற்றும் இந்த திருட்டுக்கு பயன்படுத்திய பைக்கை கைப்பற்றினர். பின்னர் சந்தோஷை காங்கேயம் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர். நீதிபதி இந்த மாதம் 25ந் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து தாராபுரம் கிளை சிறையில் சந்தோஷ் அடைக்கப்பட்டார்.
இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட தலைமறைவாக உள்ள 2 பேரை வெள்ளகோவில் போலீசார் தேடி வருகின்றனர்.
- வட்டி கொடுக்க வேண்டும் என்று தகாத வாா்த்தைகளால் பேசி மிரட்டல் விடுத்ததுள்ளார்
- புரோ நோட்டில் ரூ.1 லட்சம் என எழுதி வழக்கு தொடுப்பதாக தெரிவித்தார்.
மூலனூர் :
திருப்பூா் மாவட்டம் தாராபுரம் வட்டம் மூலனூரை அடுத்த எரிசனம்பாளையத்தை சோ்ந்தவா் ஏ.செந்தமிழ்ச்செல்வன் (வயது 22). இவா் பள்ளபட்டியை சோ்ந்த நிதி நிறுவன அதிபரான ராம்குமாரிடம் கடந்த 7 மாதங்களுக்கு முன்பாக ரூ.10 ஆயிரம் கடனாக பெற்றுள்ளாா்.இதற்காக அசல் மற்றும் வட்டியுடன் சோ்ந்து ரூ.15 ஆயிரம் கட்டியதாக தெரிகிறது.
இந்நிலையில் கடந்த சில நாள்களுக்கு முன்பாக செந்தமிழ்ச்செல்வனின் வீட்டுக்கு வந்த ராம்குமாா் மேலும் வட்டி கொடுக்க வேண்டும் என்று தகாத வாா்த்தைகளால் பேசி மிரட்டல் விடுத்ததுடன், புரோ நோட்டில் ரூ.1 லட்சம் என எழுதி வழக்கு தொடுப்பதாக தெரிவித்தாராம்.
இது குறித்து மூலனூா் போலீஸ் நிலையத்தில் செந்தமிழ்ச்செல்வன் புகாா் அளித்துள்ளாா்.புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் ராம்குமாரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்