என் மலர்
நீங்கள் தேடியது "Financier"
- வள்ளியூரை சேர்ந்தவர் கணேசன். இவர் பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார்.
- போலீசார் தேடி வந்த நிலையில் வள்ளியூர் எஸ்.கே.பி. நகரை சேர்ந்த தொழிலாளியான முருகன் என்பவருக்கு இதில் தொடர்பு இருப்பது தெரியவந்தது.
வள்ளியூர்:
வள்ளியூரை சேர்ந்தவர் கணேசன்(வயது 43). இவர் பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். கடந்த 13-ந்தேதி இரவு இவர் தனது வீட்டு முன்பு காரை விட்டுவிட்டு தூங்க சென்றார். மறுநாள் காலை எழுந்து பார்த்தபோது அவரது கார் தீவைத்து எரிக்கப்பட்ட நிலையில் எலும்புக்கூடாக காட்சி யளித்தது. இதுதொடர்பாக வள்ளியூர் போலீசார் நடத்திய விசாரணையில், 3 பேர் கும்பல் இந்த சம்பவத்தில் ஈடுபட்டு இருப்பது தெரியவந்தது.
அவர்களை போலீசார் தேடி வந்த நிலையில் வள்ளியூர் எஸ்.கே.பி. நகரை சேர்ந்த தொழிலாளியான முருகன்(50) என்பவருக்கு இதில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். இதில் தொடர்புடைய மற்ற 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர். அதன்பின்னரே காருக்கு தீ வைத்ததற்கான விபரம் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.
- நெல்லையை அடுத்த தாழையூத்து அருகே உள்ள நாரணம்மாள்புரத்தை சேர்ந்தவர் பூல்பாண்டி . இவர் பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார்
- கடந்த சில நாட்களாக இவர் வாட்ஸ்-அப்பில் குழு அமைத்து அதில் லாட்டரி சீட்டுகளை விற்று வந்துள்ளார்
நெல்லை:
நெல்லையை அடுத்த தாழையூத்து அருகே உள்ள நாரணம்மாள்புரத்தை சேர்ந்தவர் பூல்பாண்டி (வயது 35). இவர் பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார்.
கடந்த சில நாட்களாக இவர் வாட்ஸ்-அப்பில் குழு அமைத்து அதில் லாட்டரி சீட்டுகளை விற்று வந்துள்ளார். இதுதொடர்பாக தகவல் அறிந்த தச்சநல்லூர் போலீசார் அவரை கையும் களவுமாக பிடித்து செல்போனை சோதனை செய்தபோது அவர் குழு மூலமாக கேரளா லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து வந்ததை கண்டுபிடித்தனர்.
இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து கார், செல்போன், ரூ.8 ஆயிரம் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
- இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் கடையின் புகுந்து மனோகரை அரிவாளால் சரமாரியாக வெட்டி சாய்த்துள்ளனர்.
- முக்கிய குற்றவாளியான திமுக ஊராட்சி மன்ற தலைவர் அப்பானு மகேஸ்வரனை கைது செய்தனர்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்துள்ள தெற்கு பொய்கை நல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் மனோகர். அப்பகுதியில் பைனான்சியராகவும், வேளாங்கண்ணியில் தங்கும் விடுதி ஒன்றும் நடத்தி வந்தார்.
இவருக்கும், ஒரு சிலருக்கும் முன் விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த 17.8.22 அன்று மனோகர் வேளாங்கண்ணி முச்சந்தி அருகே உள்ள அவரது அலுவலகத்தில் அவரது நண்பர் மணிவேலுடன் பேசிக்கொண்டு இருந்துள்ளார்.
அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் கடையின் உள்ளே புகுந்து அங்கிருந்த மனோகரை அரிவாளால் சரமாரியாக வெட்டி சாய்த்துள்ளனர். இதனை தடுத்த மணிவேலு என்ப வருக்கும்கையில் அரிவாளால் வெட்டியுள்ளனர்.
மனோகர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததை தொடர்ந்து.
இது சம்பந்தமாக 19 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு 18 பேர் கைது செய்யப்பட்டு ஒருவரை போலீசார் தேடி வந்தனர்.
இந்த நிலையில் கொலையின் முக்கிய குற்றவாளியான தெற்குப்பொய்கைநல்லூர் திமுக ஊராட்சி மன்ற தலைவர் அப்பானு மகேஸ்வரனை கைது செய்து புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் பரிந்துரையின் பேரில் மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் உத்தரவில் அப்பானு மகேஸ்வரன் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.