search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Fire breaks"

    • ரூ.2½ கோடி பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தது.
    • தண்ணீரை பீய்ச்சி அடித்து கட்டிடத்தில் பற்றி எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர்.

    கோவை

    கோவை, கிராஸ்கட் ரோடு ராஜாஜி வீதியை சேர்ந்தவர் நிகித் (வயது33).

    இவர் ராஜாஜி வீதியில் அழகு சாதன பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். நேற்று வழக்கம் போல் கடையை திறந்து வியாபாரத்தை முடித்து விட்டு, கடையை அடைத்து விட்டு வீட்டிற்கு சென்றார். இன்று காலை 4.30 மணிக்கு இவரது கடையில் இருந்து கரும்பு கை வெளி வந்தது. சிறிது நேரத்தில் பயங்கர மாக தீ பற்றி எரிய தொடங்கியது. இதனை அந்த வழியாக சென்ற வர்கள் பார்த்தனர். உடனே அவர்கள் சம்பவம் குறித்து கோவை மத்திய தீயணைப்பு துறையி னருக்கு தகவல் கொடு த்தனர்.

    ஆனால் அவர்கள் வருவதற்குள்ளாகவே தீ கடை முழுவதும் வேகமாக பரவி எரிந்து கொண்டி ருந்தது. தீயணைப்பு வீரர்கள் 6 வாகனங்களில் விரைந்து வந்து, தண்ணீரை பீய்ச்சி அடித்து கட்டிடத்தில் பற்றி எரிந்து கொண்டிருந்த தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்த காட்டூர் போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகே தீ அணைக்கப்ப ட்டது.

    இந்த தீ விபத்தில் அழகு சாதன கடையில் இருந்த ரூ. 2½ கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமாகி விட்டது.

    இந்த தீ விபத்து குறித்து காட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகி ன்றனர். மேலும் இந்த தீ விபத்து எப்படி ஏற்பட்டது. மின் கசிவு காரமாக தீ விபத்து ஏற்பட்டதா அல்லது வேறு ஏதாவது காரணமா என்பது குறித்தும் விசார ணை நடத்தி வருகின்றனர். அதிகாலையில் நடந்த இந்த சம்பவம் அந்த பகுதியில் மிகுந்த பரபர ப்பை ஏற்படுத்தியது.

    • வீரவநல்லூர் பங்களா கடை பஜார் தெருவை சேர்ந்தவர் பாபநாசம் (வயது 75). இவர் பந்தல் அமைக்கும் தொழில் செய்து வருகிறார்.
    • இவருக்கு சொந்தமான பந்தல் குடோன் நேற்று இரவு திடீரென தீப்பிடித்து எரிந்தது.

    நெல்லை:

    வீரவநல்லூர் பங்களா கடை பஜார் தெருவை சேர்ந்தவர் பாபநாசம் (வயது 75). இவர் பந்தல் அமைக்கும் தொழில் செய்து வருகிறார்.

    ரூ.1 லட்சம் பொருட்கள் சேதம்

    இவருக்கு சொந்தமான பந்தல் குடோன் நேற்று இரவு திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதுகுறித்து அறிந்த வீரவநல்லூர் போலீசார் சேரன்மகாதேவி தீயணைப்பு நிலைய வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர். உடனே தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். எனினும் அந்த குடோனில் இருந்த சவுக்கு கம்புகள், ஓைல கீற்றுகள் ஆகியவை முற்றிலும் எரிந்து நாசமாகின. இதனால் ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமாகியது.

    விசாரணை

    இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தீ விபத்து ஏற்பட்ட குடோனில் சுமார் 300 சவுக்கை கம்புகள் மற்றும் தென்னை ஓலை கீற்றுகள் இருந்துள்ளன. குடோனை சுற்றிலும் வீடுகள் உள்ளன.

    இதனால் அதில் ஏதேனும் ஒரு வீட்டில் இருந்து நெருப்பு பொறி பறந்து விபத்து ஏற்பட்டு இருக்கலாம் அல்லது குடோனில் தகர செட் போடப்பட்டுள்ளதால் வெயிலின் தாக்கத்தால் தீ உண்டாகியிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மும்பை கமலா மில்ஸ் அருகே கட்டுமானப் பணி நடைபெற்று வரும் அடுக்குமாடி கட்டிடத்தில் இன்று தீவிபத்து ஏற்பட்டது. #Mumbaifire
    மும்பை:

    மும்பை கமலா மில்ஸ் வளாகம் அருகே பல தளங்கள் கொண்ட பிரமாண்ட கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இந்த கட்டிடத்தின் ஒரு தளத்தில் இருந்து இன்று காலை புகை எழுந்தது. பின்னர் சிறிது நேரத்தில் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதுபற்றி தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    உடனே 5 வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த தீ விபத்தில் உயிர்ச்சேதம் ஏற்பட்டதாக இதுவரை தகவல் வெளியாகவில்லை.

    இதேபோல் நேற்று மும்பை திலக் நகரில் உள்ள 16 மாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். கடந்த வாரம் அந்தேரி புறநகர் பகுதியில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 பேர் பலியாகினர். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இதே கமலா மில்ஸ் வளாகத்தில் உள்ள இரண்டு விடுதிகளில் தீப்பிடித்ததில் 14 பேர் மரணம் அடைந்தது குறிப்பிடத்தக்கது. #MumbaiFire
    கொல்கத்தா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டதையடுத்து தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் விரைந்தனர். #FireAtHospital #KoltataMedicalCollege
    கொல்கத்தா:

    மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்ளது. இங்குள்ள மருந்து பிரிவில் இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென பரவி ஏராளமான பொருட்கள் கருகியதால், புகை மண்டலமாக காட்சியளித்தது.

    இதுபற்றி தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 10 வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். ஏராளமான போலீசாரும் மருத்துவமனைக்கு விரைந்தனர்.



    தீவிபத்து ஏற்பட்ட பகுதிக்கு அருகாமையில் சிகிச்சைப் பிரிவுகள் எதுவும் இல்லாததால், நோயாளிகள் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை என தகவல் வெளியாகி உள்ளது. எனினும் அருகில் உள்ள பகுதிக்கு தீ பரவாமல் தீயணைப்பு வீரர்கள் தடுத்தனர். #FireAtHospital #KoltataMedicalCollege
    ×