என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Fishing Port"
- வியாபாரிகள், ஏலதாரர்கள் திடீர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- மீன் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
குளச்சல்:
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 300-க்கும் மேற்பட்ட விசைப் படகுகளும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்டுமரங்களும் கடலுக்குச் சென்று மீன் பிடித்து வருகின்றன.
இதில் செல்லும் மீனவர்கள் பிடித்து வரும் மீன்கள், குளச்சல் துறைமுகத்தில் ஏலம் விடப்படும். இதனை ஏலம் எடுக்க ஏலதாரர்களும் வியாபாரிகளும் துறை முகத்தில் குவிவதுண்டு.
நேற்றும் அவர்கள் அங்கு திரண்டனர். அப்போது 3 விசைப்படகுகள் மீன்களுடன் வந்தன. அவற்றில் தடை செய்யப்பட்ட சாவாளை மீன்கள் இருந்தன. இதனை பார்த்த ஏலதாரர்கள் அந்த மீன்களை எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் 3 விசைப் படகுகளில் இருந்த மீன்களும் இறக்கப்பட வில்லை,
இந்த நிலையில் இன்று குளச்சல் துறைமுக வியாபாரிகள், ஏலதாரர்கள் திடீர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தடை செய்யப்பட்ட சாவாளை மீன்களை இறக்க அனுமதி அளிக்க கூடாது, சாவாளைமீன்களை பிடித்து நேரடியாக கோழித்தீவன நிறுவனங்களுக்கு விற்பனை செய்யும் விசைப்படகு உரிமையாளர்கள் மீது மீன் வளத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். இந்தப் போராட்டம் காரணமாக குளச்சல் மீன்பிடி துறைமுக ஏலக்கூடம் இன்று வெறிச்சோடி காணப்பட்டது. இதற்கிடையில் வேறு சில விசைப்படகுகள், மீன்களுடன் இன்று குளச்சல் துறைமுகம் வந்தன. ஆனால் போராட்டம் காரணமாக அவற்றில் இருந்தும் மீன்கள் இறக்கப்படவில்லை.
இந்த வேலை நிறுத்த போராட்டம் காரணமாக குளச்சல் துறைமுகத்தில் டண் கணக்கில் மீன்கள் தேக்கமடைந்துள்ளன. இதனால் சுமார் ரூ.3 கோடி ரூபாய் வரை மீன் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
- 11 மீனவ கிராமத்தை சேர்ந்த பஞ்சாயத் தார்கள் ஆலோசனைக் கூட்டம், காரைக்காலில் உள்ள மீன்பிடித் துறை முகத்தில் நடைபெற்றது.
- புதுச்சேரி முதலமைச்சர், மீன்வளத்துறை அமைச்சர், மாவட்ட மீன் வளத்துறை அலுவகலத் திற்கு அனுப்பி வைத்தனர்.
புதுச்சேரி:
காரைக்கால் மாவட்டத் தில் உள்ள காரைக்கால் மேடு, கிளிஞ்சல்மேடு, கோட்டுச்சேரி மேடு, மண்ட பத்தூர், பட்டினச்சேரி உள்ளிட்ட 11 மீனவ கிராமத்தை சேர்ந்த பஞ்சாயத் தார்கள் ஆலோசனைக் கூட்டம், காரைக்காலில் உள்ள மீன்பிடித் துறை முகத்தில் நடைபெற்றது. கூட்டத்தின் முடிவில், மீன்பிடித் துறைமுகத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும், காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தை ஒட்டிய கடற்கரை முகத்து வாரத்தை தூர்வார வேண்டும், மீனவ கிராம சாலைகளை சரிசெய்ய வேண்டும், அடிப்படை வசதிகளை செய்துதர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, நாளை (22.9.23) முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தீர்மானம் நிறைவேற்ற ப்பட்டு, அதன் நகலை, புதுச்சேரி முதல மைச்சர், மீன்வளத்துறை அமைச்சர், மாவட்ட மீன் வளத்துறை அலுவகலத் திற்கு அனுப்பி வைத்தனர். மேலும், 22-ந் தேதி முதல், மீன்பிடி படகுகளை, மீன்பிடித் துறைமுகத்தி லிருந்து கொண்டு சென்று, கடற்கரை சாலையில் உள்ள மீன்வளத்துறை அலுவலகம் முன்பு உள்ள அரசலாற்றில் நிறுத்திவைக்கப்படும் என்றும் மீனவர்கள் தெரி வித்துள்ளனர்.
- தி.மு.க. அரசை கண்டித்து, மரக்காணத்தில் அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
- பல்வேறு பகுதிகளில் இருந்து அ.தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம், செங்கல்பட்டு மாவட்ட எல்லையில் அழகன்குப்பம் பக்கிங்காம் கால்வாயில் ஆலம்பராகோட்டை அருகில் மீன்பிடித் துறைமுகம் அமைக்க வலியுறுத்தியும், கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை ரத்து செய்த தி.மு.க. அரசை கண்டித்தும், மரக்காணத்தில் அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெறும் என முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்தார்.
அதன்படி மரக்காணம் பழைய பஸ் நிலையம் அருகில் முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த பல்வேறு பகுதிகளில் இருந்து அ.தி.மு.க.வினர் கலந்து கொண்டனர். கோரிக்கைகளை வலியுறுத்தியும், தி.மு.க. அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பபட்டது.
- சாமந்தான்பேட்டையில் தூண்டில் வளைவுடன் சிறு துறைமுகம் அமைக்கப்படும்.
- கீச்சாங்குப்பம் பகுதிகளில் 14 கோடி ரூபாய் செலவில் பாதுகாப்பு தடுப்புச் சுவர் அமைக்கப்படும்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் எம்.எல்.ஏ முகம்மது ஷா நவாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நாகப்பட்டினம் சாமந்தான்பேட்டையில் தூண்டில் வளைவுடன் சிறு துறைமுகம் அமைக்க வேண்டும் என்பதும், நாகூர் கீழப் பட்டினச்சேரியில் கடல் அரிப்பு தடுப்புச் சுவர் அமைக்க வேண்டும் என்பதும் நீண்டகால கோரிக்கைகள்.
சட்டமன்றத்தில் இது குறித்து நான் பலமுறை பேசியதோடு, அமைச்சரிடமும் வலியுறுத்தி வந்தேன். முதலமைச்சரிடமும் கோரிக்கை கடிதம் அளித்தேன்.
நமது தொடர் முயற்சியின் விளைவாக, சட்டமன்றப் பேரவையில் 05-04-2023 அன்று நடைபெற்ற மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மானியக் கோரிக்கையின் போது, அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், நாகப்பட்டினம் சாமந்தான்பேட்டையில் 40 கோடி ரூபாய் செலவில் சிறிய மீன்பிடித் துறைமுகம் மற்றும் நாகூர் பட்டினச்சேரி - கீச்சாங்குப்பம் பகுதிகளில் 14 கோடி ரூபாய் செலவில் பாதுகாப்பு தடுப்புச் சுவர் அமைக்கப்படும் என்று அறிவிப்பு செய்தார்.
இதற்காக நாகை தொகுதி மக்களின் சார்பில் முதலமைச்சருக்கும், அமைச்சருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இவ்வாறு ஷா நவாஸ் எம்.எல்.ஏ கூறியுள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்