என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "flights"
- இ-மெயில் மற்றும் சமூக வலைதளங்கள் மூலமாக இதுபோன்ற மிரட்டல்கள் விடுக்கப்படுவது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
- துபாயில் இருந்து ஜெய்ப்பூருக்கு நேற்று நள்ளிரவு 189 பயணிகளுடன் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் புறப்பட்டு வந்தது.
புதுடெல்லி:
நாடு முழுவதும் சமீப காலமாக விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 40 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அந்த விமானங்களில் சோதனை நடத்தப்பட்டபோது அவை புரளி என்பது தெரியவந்தது.
இ-மெயில் மற்றும் சமூக வலைதளங்கள் மூலமாக இதுபோன்ற மிரட்டல்கள் விடுக்கப்படுவது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதுபோன்ற மிரட்டல்களை தடுப்பதற்காக கடும் சட்டம் இயற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது. குறிப்பாக இதுபோன்று வெடிகுண்டு மிரட்டல் விடுத்து கைதாகும் குற்றவாளிகளை விமானத்தில் பறக்க தடை விதிப்பது உள்ளிட்ட கடும் நடவடிக்கைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்த நிலையில் மேலும் 2 விமானங்களுக்கு வெடி குண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. டெல்லியில் இருந்து லண்டனுக்கு நேற்றிரவு விஸ்தாரா விமானம் புறப்பட்டு சென்றது.
விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக விமான போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு மிரட்டல் வந்தது.
இதனால் சுதாரித்துக்கொண்ட அதிகாரிகள் விமானிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து அந்த விமானத்தை நள்ளிரவு 12.40 மணி அளவில் ஜெர்மனியில் உள்ள பிராங்பர்ட் விமான நிலையத்தில் தரை இறக்க முடிவு செய்தனர்.
அதன்படி பிராங்பர்ட் விமான நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அந்த விமானம் அங்கு தரையிறக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. இதில், விமானத்தில் வெடிகுண்டு எதுவும் இல்லை என்பதும், மிரட்டல் வெறும் புரளி என்பதும் தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து விமானம் 2½ மணி நேரம் தாமதமாக லண்டனுக்கு புறப்பட்டு சென்றது.
துபாயில் இருந்து ஜெய்ப்பூருக்கு நேற்று நள்ளிரவு 189 பயணிகளுடன் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் புறப்பட்டு வந்தது. விமானம் நடுவானில் பறந்து வந்த போது இ-மெயிலில் வெடிகுண்டு மிரட்டல் வந்தது.
இதைத்தொடர்ந்து விமானம் உடனடியாக தரையிறக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. பயணிகள் அனைவரும் பத்திரமாக இறங்கினர். தொடர்ந்து பயணிகளின் உடமைகள் மற்றும் விமானத்தில் சந்தேகத்திற்கிடமாக ஏதேனும் பொருட்கள் இருக்கிறதா? என சோதனை நடத்தப்பட்டது.
இதில் வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்பது தெரியவந்தது. அதன் பிறகே பயணிகள் அனைவரும் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
இந்த மிரட்டல் சம்பவத்தால் ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் பரபரப்பு நிலவியது.
- உள்நாட்டு விமானங்களின் டிக்கெட் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.
- சென்னை - கோவை இடையே விமான டிக்கெட் கட்டணம் ரூ.3,290-ல் இருந்து ரூ.10,996-ஆக அதிகரித்துள்ளது.
சென்னை:
ஆயுத பூஜை மற்றும் தொடர் விடுமுறையை ஒட்டி சொந்த ஊர்களுக்கு மக்கள் படையெடுத்து வரும் நிலையில், சென்னையில் உள்நாட்டு விமானங்களின் டிக்கெட் கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது.
சென்னையில் இருந்து மதுரை, திருச்சி, கோவை, சேலம், தூத்துக்குடி செல்லும் விமானங்களின் டிக்கெட் கட்டணம் பல மடங்கு அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் தற்போது நவரத்திரி, ஆயுத பூஜை, விஜயதசமி போன்ற தொடர் விடுமுறைகள் காரணமாக சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளது. இதனால் உள்நாட்டு விமானங்களின் டிக்கெட் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.
சென்னை - மதுரை வழக்கமான விமான கட்டணம் ரூ.4,200 என இருந்த நிலையில் தற்போது ரூ.12,026-லிருந்து ரூ.18,626-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை - தூத்துக்குடி விமான டிக்கெட் கட்டணம் ரூ.5006-ல் இருந்து ரூ.11,736 முதல் ரூ.13,626 வரை அதிகரித்துள்ளது.
சென்னை - கோவை இடையே விமான டிக்கெட் கட்டணம் ரூ.3,290-ல் இருந்து ரூ.10,996-ஆக அதிகரித்துள்ளது.
சென்னை - சேலம் இடையே வழக்கமான டிக்கெட் கட்டணம் ரூ.3317-ல் இருந்து 10,792-ஆக அதிகரித்துள்ளது.
தொடர் விடுமுறை காரணமாக சொந்த ஊர்களுக்கு செல்பவர்களை குறிவைத்து கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக பயணிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
- தேங்காய் தென்னிந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.
- விமான நிலைய விதிமுறைகள் சமீபத்தில் புதுப்பிக்கப்பட்டுள்ளன.
விமானப் பயணத்தின்போது நம்முடன் எடுத்துச் செல்லும் பொருட்களுக்கு விமான நிறுவனங்கள் சில நிபந்தனைகளை விதிக்கின்றன. விமானத்தில் பயணம் செய்யும்போது நாம் சில விதிகளை பின்பற்ற வேண்டும். விமானத்தில் ஏறும்போது எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படாத பல விஷயங்கள் உள்ளன.
கூர்மையான ஆயுதங்கள், துப்பாக்கிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் உட்பட பல பொருட்களை விமானத்தில் எடுத்துச் செல்ல அனுமதி இல்லை. இது தவிர, தேங்காய் விமானத்தில் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.
தேங்காய் தென்னிந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் விமானத்தில் தேங்காய் கொண்டு செல்ல அனுமதி இல்லை.
இதற்கு ஒரு முக்கிய காரணம், தேங்காயில் அதிக அளவு எண்ணெய் உள்ளது. இந்த எண்ணெய் எரியக்கூடிய பொருளாக வகைப்படுத்தப்பட்டு இருக்கிறது. எனவே, பாதுகாப்பு காரணங்களுக்காக விமானத்தில் தேங்காய் கொண்டு செல்ல அனுமதி இல்லை.
விமான நிலைய விதிமுறைகள் சமீபத்தில் புதுப்பிக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு நடவடிக்கைகள் கண்டிப்பாக கடைபிடிக்கப்படுவதை உறுதி செய்வதற்காக இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
இதுவரை பயணிகள் தங்கள் கைப்பையில் மருந்துகள் போன்ற அத்தியாவசிய பொருட்களை எடுத்துச் செல்வதை வழக்கமாக கொண்டிருந்தனர். இருப்பினும், புதிய விதிமுறைகள் இப்போது சில மருந்துகளை துபாய்க்கு விமானங்களில் எடுத்துச் செல்வதைத் தடை செய்துள்ளன.
இந்த மருந்துகள் குறித்த மாற்றங்கள் பயணிகள் கட்டாயம் அறிந்திருக்க வேண்டும். புதுப்பிக்கப்பட்ட வழிகாட்டுதல்களின்படி அனுமதிக்கப்பட்ட பொருட்களை மட்டுமே பேக் செய்வதை உறுதிசெய்ய வேண்டும்.
- கொல்கத்தா விமான நிலையத்தில் விமான சேவை தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
- இன்று மதியம் முதல் நாளை காலை 9 மணி வரை விமான சேவை நிறுத்தம்.
வங்கக்கடலில் உருவான ரீமால் புயல், அதி தீவிர புயலாக வலுவடைந்த நிலையில் இன்று இரவு மேற்குவங்கம் சாகர் தீவுகளுக்கும், வங்கதேசத்தின் கெபுபாராவுக்கு இடையே கரையை கடக்க உள்ளது.
இந்நிலையில், ரீமால் புயல் எதிரொலியாக கொல்கத்தா விமான நிலையத்தில் விமான சேவை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
இதனால், கொல்கத்தா விமான நிலையத்தில் இருந்து உள்நாட்டு மற்றும் சர்வதேச என 394 விமானங்கள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இன்று மதியம் முதல் நாளை காலை 9 மணி வரை விமான சேவை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொல்கத்தா விமான நிலையத்தில் தங்களின் செயல்பாடுகளை நிறுத்துவதாக விமான நிறுவனங்கள் அறிவித்துள்ளது.
- பெங்களூருவில் நேற்று மாலையில் திடீரென்று மழை பெய்தது.
- பெங்களூரு விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டிய 14 விமானங்கள் நேற்றிரவு சென்னைக்கு திருப்பி விடப்பட்டன.
பெங்களூரு:
பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. இந்தநிலையில் 11 மாவட்டங்களில் 100 டிகிரிக்கும் மேல் வெயில் கொளுத்தி வருகிறது. பெங்களூருவை பொறுத்தவரையில் 93 சதவீதத்திற்கு மேல் பதிவாகி வருகிறது. இதனால் காலை முதல் மதியம் வரை வெயில் வறுத்தெடுக்கிறது. ஆனால் மாலை மற்றும் இரவு நேரங்களில் அவ்வப்போது லேசான மழை பெய்து மக்களை குளிர்வித்து வருகிறது.
அதன்படி நேற்று பெங்களூரு நகரில் 93.56 சதவீதம் வெயில் பதிவாகி இருந்தது. இதனால் காலை முதல் மதியம் வரை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்த வெயிலால் மக்கள் வெளியே நடமாட முடியாத நிலை ஏற்பட்டது.
பெங்களூருவில் நேற்று மாலையில் திடீரென்று மழை பெய்தது. சூறைக்காற்றுடன் பெய்த இந்த மழையால் மரங்கள், மின் கம்பங்கள் முறிந்து விழுந்தன.
கன மழையால் இரவு நேரங்களில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றி விட்டு ஊழியர்கள், அதிகாரிகள் தங்களது வாகனங்களில் வீட்டுக்கு செல்ல முடியாமல் தவித்தனர். பெங்களூருவில் இன்றும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இந்தநிலையில் பெங்களூருவில் பெய்த பலத்த கனமழை, மோசமான வானிலை காரணமாக பெங்களூருவில் விமானங்கள் தரையிறங்குவதில் சிக்கல் ஏற்பட்டது.
பெங்களூரு விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டிய 14 விமானங்கள் நேற்றிரவு சென்னைக்கு திருப்பி விடப்பட்டன. வெளிநாட்டு, உள்நாட்டு விமானங்கள் நேற்றிரவு சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கின.
5 வெளிநாட்டு விமானங்கள், 8 உள்நாட்டு விமானங்கள் மற்றும் ஒரு கார்கோ விமானம் சென்னையில் தரையிறங்கின. பின்னர் பெங்களூருவில் வானிலை சீரடைந்ததும் இன்று அதிகாலை 3 மணிக்கு அந்த விமானங்கள் புறப்பட்டுச் சென்றன.
கடன் சுமை, நிதி நெருக்கடி காரணமாக இந்தியா முழுவதும் ஜெட் ஏர்வேஸ் நிறுவன விமான சேவை பெரும் அளவில் பாதிக்கப்பட்டு உள்ளது. சென்னையில் இருந்து நள்ளிரவு 1.15 மணிக்கு பாரீஸ், காலை 11.25 மணி, மாலை 4.50 மணிக்கு மும்பைக்கும் என 3 விமானங்களை அந்த நிறுவனம் இயக்கி வந்தது.
இந்தநிலையில் அந்த நிறுவன விமானங்களுக்கு எரிபொருள் வழங்குவதை எண்ணெய் நிறுவனங்கள் நிறுத்திவிட்டன. இதையடுத்து சென்னையில் இருந்து இயக்கப்பட்ட 3 விமானங்களையும் மறுஅறிவிப்பு வரும்வரை ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.இதுபற்றி முன்கூட்டியே பயணிகளுக்கு தகவல் தரப்பட்டு, மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். #JetAirways
மலிவு கட்டணத்தில் விமானப் பயணம் என்ற கவர்ச்சிகரமான விளம்பரங்களுடன் விமான போக்குவரத்து துறையில் தடம்பதித்த சில தனியார் நிறுவனங்கள் பெரும் பொருளாதார இழப்பை சந்தித்து வருகின்றன.
அவ்வகையில், நிதி நெருக்கடியால் தள்ளாட்டம் போட்டுவரும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் விமானிகள், பணிப்பெண்கள் மற்றும் பொறியாளர்களுக்கு சரியானபடி சம்பளம் வழங்காமல் இழுத்தடித்து வந்ததாக கூறப்படுகிறது.
பின்னர், செப்டம்பர் மாதத்துக்கான சம்பளத்தொகை அரைகுறையாக சிலருக்கு வழங்கப்பட்டுள்ளது. அக்டோபர், நவம்பர் மாதங்களுக்கான சம்பளம் முற்றிலுமாக நிறுத்தப்பட்டது.
இதனால், அதிருப்தியடைந்த விமானிகள் நிர்வாகத்துக்கு தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் அனைவரும் ஒருசேர நேற்று ‘சிக் லீவ்’ போட்டு மறைமுகமான போராட்டத்தில் குதித்தனர். இதனால் நாட்டின் பல பகுதிகளுக்கு செல்ல வேண்டிய 14 விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டன.
இதுதொடர்பான செய்திகள் வெளியானதும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் சார்பில் இன்று விளக்க அறிக்கை வெளியாகியுள்ளது.
நேற்று 14 விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டதற்கு விமானிகள் விடுமுறை எடுத்தது காரணமல்ல. விமான இயக்கம் தொடர்பான வேறுசில விவகாரங்கள்தான் காரணம் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. #JetAirways #JetAirwaysPilots #Flightscancel #Pilotssick
நேபாளத்தில் கடந்த சில நாட்களாக கடுமையான மழை பெய்து வருகிறது. இதனால் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் இருந்து கைலாஷ் மானசரோவர் யாத்திரை சென்ற 625 பக்தர்கள் நேபாளத்தில் சிக்கித் தவிக்கின்றனர். மழை காரணமாக பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து அங்கு சிக்கித்தவிக்கும் பயணிகளை மீட்க வெளியுறவுத்துறை நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில், வெளியுறவுத்துறை அதிகாரிகள் சிமிகோட் உள்ளிட்ட பகுதிகளில் முகாமிட்டு யாத்ரீகர்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட வசதிகளை செய்து கொடுத்து வருவதாக வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுராஜ் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இந்திய அரசின் கோரிக்கையை ஏற்று, நேபாளத்தில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க 7 சிறிய ரக விமானங்களை அந்நாட்டு அரசு அனுப்பிவைத்துள்ளது.
இதுவரை 2 விமானங்கள் மூலம் 104 யாத்ரீகர்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், சிக்கித்தவிக்கும் யாத்ரீகர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. #MansarovarYatra
கோவையில் போலீஸ் அருங்காட்சியகத்தை திறந்து வைத்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களிடம் கூறியதாவது-
வரலாற்று சிறப்பு மிக்க போலீஸ் அருங்காட்சியகம் இன்று திறந்து வைக்கப்பட்டு உள்ளது. இந்த அருங்காட்சியகத்தில் ஆதிகாலம் முதல் தற்போதைய நவீன காலம் வரை உள்ள பல்வேறு ஆயுதங்கள் வைக்கப்பட்டு உள்ளது.
140 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட கட்டிடம் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு உள்ளது. இங்கு காவல் துறை சார்பில் பல்வேறு ஆயுதங்கள் இடம் பெற்றுள்ளது.
இந்த அருங்காட்சியகத்தை பொதுமக்கள், மாணவர்கள் பார்த்து தங்கள் அறிவுத்திறனை மேம்படுத்தும் வகையில் அமைந்து உள்ளது.
கோவை விமான நிலையத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு பல்வேறு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இங்கு இரவு நேரத்தில் தங்கும் விமானங்களுக்கு எரி பொருள் நிரப்ப வரிச்சலுகை தமிழக அரசால் வழங்கப்பட உள்ளது. இதன் மூலம் கோவையில் இருந்து பல்வேறு நகரங்களுக்கு விமானங்கள் இயக்க வசதியாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார். #CoimbatoreAirport #TNCM #Edappadipalanisamy
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்