என் மலர்
நீங்கள் தேடியது "flour"
- பூச்சிக்கொல்லி மருந்துகள் தெளித்தாலும் இம்மாவு பூச்சியினை முழுமையாக கட்டுப்படுத்த முடியாது.
- இப்பூச்சியை உயிரியல் முறையில் நிரந்தரமாக கட்டுப்படுத்த “அசிரோபேகஸ் பப்பாயே” என்ற ஒட்டுண்ணி ராசிபுரம் வட்டாரத்தில் இப்போது தயாரிக்கப்படுகிறது.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கபிலர்மலை வட்டாரத்தில் மரவள்ளி, மல்பரி, பருத்தி, பப்பாளி, கொய்யா, கத்தரி, தேக்கு, கோகோ, பழப்ப யிர்கள், மலர் செடிகள் போன்ற பல்வேறு தோட்டக்கலை பயிர்களை பப்பாளி மாவு பூச்சி பெரு மளவு தாக்கி சேதப்படுத்துகிறது.
பல்வேறு பூச்சிக்கொல்லி மருந்துகள் தெளித்தாலும் இம்மாவு பூச்சியினை முழுமையாக கட்டுப்படுத்த முடியாது.
இப்பூச்சியை உயிரியல் முறையில் நிரந்தரமாக கட்டுப்படுத்த "அசிரோபேகஸ் பப்பாயே" என்ற ஒட்டுண்ணி ராசிபுரம் வட்டாரத்தில் இப்போது தயாரிக்கப்படுகிறது.
விவசாயிகள் அனை வரும் பூச்சிக்கொல்லி மருந்திற்கு பதிலாக இந்த உயிரியல் ஒட்டுண்ணியை பயன்படுத்தி பயனடை யலாம் என கபிலர்மலை வட்டார வேளாண்மை பொது அலுவலர் ராதா மணி தெரிவித்துள்ளார்.
- கால்நடைகளுக்கு இயற்கை ஊட்டச்சத்து மாவு இலவசமாக வழங்கப்பட்டது.
- யோகம் தொண்டு நிறுவனத்தின் டிரஸ்டி தமயந்தி தலைமை தாங்கினார்.
பசும்பொன்
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே புதுக்கோட்டை கிராமத்தில் தனியார் சோலார் மின் உற்பத்தி நிறுவனம் மற்றும் யோகம் தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் கால்நடைகளுக்கு இயற்கை ஊட்டச்சத்து மாவு இலவசமாக வழங்கப்பட்டது. இதில் செங்கப்படை, புதுக்கோட்டை, ஒ.கரிசல்குளம் கிராமத்தை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட கால்நடை வளர்ப்போர் கலந்து கொண்டு இயற்கை ஊட்டச்சத்து மாவை பெற்றுக்கொண்டனர். மேலும் இந்த மாவின் பயன்கள் மற்றும் பயன்படுத்தும் முறை குறித்து, விவசாயிகளிடம் எடுத்துரைக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கு யோகம் தொண்டு நிறுவனத்தின் டிரஸ்டி தமயந்தி தலைமை தாங்கினார். தனியார் சோலார் நிறுவன மக்கள் தொடர்பு அதிகாரி ஜெனார்தனன், தொண்டு நிறுவன நிர்வாக இயக்குனர் யோகேஷ் மணிராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மனிதவள மேம்பாடு சபரீஷ், வழக்கறிஞர் அப்துல்சமதுசேட் உள்பட பலர் கலந்து கொண்டனர்.