search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Flower Price"

    • சீசன் காரணமாக மல்லி வரத்து வெகுவாக குறைந்துவிட்டது.
    • 2 நாட்களில் மார்கழி மாதம் தொடங்க உள்ளதால் மல்லி, சாமந்தி ஆகிய பூக்களின் விலை அதிகரித்து உள்ளது.

    போரூர்:

    சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் முகூர்த்த நாளையொட்டி இன்று மல்லி, சாமந்தி ஆகிய பூக்களின் விலை அதிகரித்து உள்ளது. இன்று கார்த்திகை மாதத்தின் கடைசி முகூர்த்த நாள் என்பதால் திருமணம், புதுமனை புகுவிழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் அதிகளவில் நடக்கிறது. இதனால் நேற்று மாலை முதலே கோயம்பேடு பூ மார்கெட்டில் சில்லரை வியாபாரிகள் மற்றும் பொதுமக்களின் வருகை அதிகரித்து காணப்பட்டது.

    இன்று அதிகாலை முதல் தொடர்ந்து பூ விற்பனை விறுவிறுப்பாகவே நடந்து வருகிறது. 2 நாட்களுக்கு முன்பு ஒரு கிலோ மல்லி ரூ.1,000-க்கு விற்ற நிலையில் இன்று அதன் விலை ரூ.1,500ஆக அதிகரித்து உள்ளது. அதேபோல் ஒரு கிலோ ரூ.100வரை விற்பனை செய்யப்பட்டு வந்த சாமந்தி ரூ.160-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து பூ மொத்த வியாபாரி மூக்கையா கூறுகையில், 'கோயம்பேடு மார்க்கெட்டுக்கு இன்று 50 வாகனங்கள் மூலம் பூ விற்பனைக்கு வந்து குவிந்துள்ளது. சீசன் காரணமாக மல்லி வரத்து வெகுவாக குறைந்துவிட்டது. அதேபோல் 2 நாட்களில் மார்கழி மாதம் தொடங்க உள்ளதால் மல்லி, சாமந்தி ஆகிய பூக்களின் விலை அதிகரித்து உள்ளது' என்றார்.

    கோயம்பேடு பூ மார்க்கெட்டில் பூக்கள் விலை கிலோவில் வருமாறு :-

    மல்லி-ரூ.1,500, ஜாதி- ரூ.500, முல்லை- ரூ.900, கனகாம்பரம்- ரூ.1,000, சாமந்தி- ரூ.180, பன்னீர் ரோஜா- ரூ.120 சாக்லேட் ரோஜா- ரூ.160, அரளி- ரூ.200 முதல் ரூ.400வரை, சம்பங்கி- ரூ.200.

    • மல்லி ஒரு கிலோ ரூ.700 முதல் ரூ.800 வரை விற்கப்பட்டது.
    • சம்பங்கி ரூ.220, கனகாம்பரம் ரூ.180, சாமந்தி ரூ.150 முதல் ரூ.250 வரை விற்பனை செய்யப்படுகிறது.

    காஞ்சிபுரம்:

    ஆயுத பூஜையை முன்னிட்டு காஞ்சிபுரம் மார்க்கெட்டுகளில் இன்று பூக்கள் விலை அதிகரித்து காணப்பட்டது.

    மல்லி ஒரு கிலோ ரூ.700 முதல் ரூ.800 வரை விற்கப்பட்டது. ரோஜா ரூ.150-க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று ரூ.350-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. சம்பங்கி ரூ.220, கனகாம்பரம் ரூ.180, சாமந்தி ரூ.150 முதல் ரூ.250 வரை விற்பனை செய்யப்படுகிறது.

    பூக்களின் விலை கிலோவிற்கு ரூ.1,000 வரை உயர்ந்துவிட்டது.

    கடலூர்:

    கடலூர் திருப்பாதிரிபுலியூர் பஸ் நிலையம் அருகில் பூவிற்கு என தனியாக பெரிய அளவிலான மார்க்கெட் உள்ளது. இங்கு மல்லிகை, அரும்பு, காக்கட்டான், கனகாம்பரம், ரோஜப்பூ, கோழிக்கொண்டை, சாமந்தி போன்ற பல்வேறு பூக்கள் சில்லரையிலும், கட்டியும் விற்கப்படுகிறது.வேலை நிமித்தமாக கடலூருக்கு வரும் அனைவருமே இங்கு வந்து பூக்களை வாங்கி செல்வர்.

    இதுதவிர, கடலூரைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதியைச் சேர்ந்த பூக்கடை வைத்திருப்பவர்களும் இங்கு வந்து பூவை வாங்கி சென்று கட்டி விற்பனை செய்வார்கள்.

    குறிப்பாக கனகாம்பரம், காக்கட்டான், ரோஜாப்பூ, அரும்பு, மல்லிகை வகைகள் என பல்வேறு வகையான பூக்கள் தேனி, கம்பம், மதுரை, கர்னாடகா போன்ற பிற மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்தே வருகிறது. கோழிக்கொண்டை, சாமந்தி போன்ற சிலவகை பூக்கள் மட்டுமே கடலூர் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து வாங்கப்படுகிறது.

    கடலூர் சுற்றுவட்டார பகுதியில் உள்ள விளை நிலங்களில் நெல், கரும்பு, மரவள்ளி போன்ற உணவிற்கான விவசாய பயிர்கள் மட்டுமே அதிகளவில் பயிரிடப்படுகிறது.

    விவசாயிகளில் மிக குறைந்த எண்ணிக்கையில் உள்ளவர்களே பூ போன்ற மாற்று விவசாயத்தில் ஈடுபடுகின்னர். இதனால் அனைத்து வகையான பூக்களுமே வெளி மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்தே வாங்கி விற்கப்படுகிறது.

    இன்று காலை பூக்களின் விலை கிலோவிற்கு ரூ.1,000 வரை உயர்ந்துவிட்டது. அதாவது நேற்று வரை 

    பூக்கள் விலை உயர்ந்தபோதிலும் வியாபாரிகளும், பொது மக்களும் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் பூக்களை வாங்குவதற்காக அதிக அளவில் வந்திருந்தனர்.
    ஆரல்வாய்மொழி:

    குமரிமாவட்டம் தோவாளையில் மலர் சந்தை உள்ளது. இந்த சந்தையில் இருந்துதான் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் பூக்கள் வாங்கி செல்கின்றனர்.

    தோவாளை, ஆரல்வாய்மொழி, குமாரபுரம், மாடநாடார் குடியிருப்பு, புதியம்புத்தூர் ஆகிய இடங்களில் இருந்து பூச்சி பூ, சேலத்தில் இருந்து அரளி, பெங்களூரு பகுதியிலிருந்து பட்டர் ரோஸ், மஞ்சள்கிரோந்தி, ராஜபாளையம், வத்தல்குண்டு, மானாமதுரை, கொடைரோடு, சங்கரன்கோவில் ஆகிய ஊர்களில் இருந்து மல்லிகை பூக்கள் இங்கு கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

    அதேபோல் ஆரல்வாய் மொழி, செண்பகராமன்புதூர், தோப்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து அரளி, சம்பங்கி, ரோஜா, பச்சை துளசி, கோழிப்பூ ஆகியவை இந்த சந்தைக்கு கொண்டுவரப்பட்டு உள்ளூர் மற்றும் வெளிமாவட்டங்களுக்கு விற்பனை ஆகி வருகிறது.

    இதனால் எப்போதும் பரபரப்பாக இருக்கும் இந்த மலர் சந்தைக்கு கடந்த சிலநாட்களாக பூக்கள் வருவது குறைந்துள்ளது. மழை காரணமாக செடிகளில் பூக்கள் உற்பத்தி குறைந்துள்ளதே இதற்கு காரணம். இதனால் பூக்களின் விலையும் கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

    தோவாளை மலர் சந்தையில் நேற்று ஒரு கிலோ கிரேந்தி ரூ.90, அரளி ரூ.330, ரோஜா ரூ.130, துளசி ரூ.30, வாடமல்லி ரூ.130 மற்றும் பிச்சி ரூ.550-க்கும் மல்லிகை ரூ.600-க்கும் விற்பனை ஆனது. விலை உயர்ந்தபோதிலும் வியாபாரிகளும், பொது மக்களும் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் பூக்களை வாங்குவதற்காக அதிக அளவில் வந்திருந்தனர்.
    கடந்த வாரம் மல்லிகை மற்றும் பிச்சி பூக்களின் விலை ரூ.500 முதல் ரூ.700 வரை விற்கப்பட்ட நிலையில் இன்று ஒரு கிலோ மல்லிகை பூவின் விலை ரூ.350 ஆக குறைந்துள்ளது.
    ஆலங்குளம்:

    பண்டிகைகள், சுபமுகூர்த்த தினங்களில் முக்கிய இடம் பிடிப்பது பூக்கள் தான். ஆனால் இதுபோன்ற முக்கிய தினங்களில் பூக்களின் விலை உச்சத்தை எட்டிவிடும்.

    நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பூக்கள் விற்பனை எப்போதுமே அதிகரித்து காணப்படும். குமரி மாவட்டம் தோவாளை பூ மார்க்கெட்டுக்கு அடுத்தபடியாக நெல்லை சந்திப்பு பகுதியில் உள்ள மார்க்கெட்டில் பூக்கள் வரத்து அதிகமாக இருக்கும். அதேபோல் சங்கரன்கோவில் மார்க்கெட்டிலும் டன் கணக்கில் பூக்கள் விற்பனையாகிறது.

    இந்த மார்க்கெட்டுக்கு நெல்லை மட்டுமல்லாது அண்டை மாவட்டங்களில் இருந்தும் விவசாயிகள் தங்களது வயல்களில் இருந்து பூக்களை பறித்து விற்பனைக்கு கொண்டு வருவார்கள். ஆயுதபூஜை, தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை காலங்களில் பூக்களின் விலை உச்சத்தை அடைந்துவிடும்.

    கடந்த 2 வாரங்களுக்கு முன்பு தீபாவளியின்போது மல்லிகை பூக்களின் விலை கிலோ ரூ.1000 முதல் ரூ.1,300 வரை விற்பனை ஆனது. பிச்சி பூக்களின் விலையும் ரூ.1,000 வரை விற்பனை செய்யப்பட்டது. ஆனால் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்த மழையால் பூக்கள் விளைச்சல் அதிகரித்தது.

    மேலும் மழையால் பெரும்பாலானோர் திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகளை நடத்தாததால் பூக்களுக்கான தேவை குறைந்தது. இதனால் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பூக்களின் விலை குறையத்தொடங்கியது.

    கடந்த வாரம் மல்லிகை மற்றும் பிச்சி பூக்களின் விலை ரூ.500 முதல் ரூ.700 வரை விற்கப்பட்ட நிலையில் இன்று ஒரு கிலோ மல்லிகை பூவின் விலை ரூ.350 ஆக குறைந்துள்ளது. பிச்சி பூ ஒரு கிலோ ரூ.250-க்கும், கேந்தி பூக்கள் ரூ.40 வரையிலும் விற்பனையானது. நாட்டு ரோஜா பூக்கள் கிலோ ரூ.50-க்கும் கீழாக குறைந்தது. ஊட்டி ரோஜா ரூ.100-க்கும், சம்பங்கி ரூ.50-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

    இதேபோல் முல்லை விலையும் வெகுவாக குறைந்ததால் விவசாயிகள் வருத்தம் அடைந்துள்ளனர். எனினும் அடுத்த மாதம் குளிர்காலம் என்பதால் வயல்களில் பூக்களின் விளைச்சல் வெகுவாக குறைந்துவிடும். அந்த காலகட்டத்தில் பூக்கள் விலை அதிகரிக்க தொடங்கிவிடும்.
    ×