search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Flower rate"

    • தொடர் மழை காரணமாக பூக்கள் விளைச்சல் குறைந்துள்ளது.
    • சங்கரன்கோவில் மலர் சந்தையில் பூக்களின் வரத்து குறைவாக உள்ளது.

    தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.

    அதனால், தொடர் மழை காரணமாக பூக்கள் விளைச்சல் குறைந்துள்ளது. இதன் விளைவாக சங்கரன்கோவில் மலர் சந்தையில் பூக்களின் வரத்து குறைவாக உள்ளது.

    இந்நிலையில், இன்று சங்கரன்கோவில் மலர் சந்தையில் ஒரு கிலோ மல்லிகைப்பூ 7 ஆயிரத்து 500 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    அதேசமயம் கன்னியாகுமரி தோவாளை மலர்சந்தையில் ரூ.4000-க்கு விற்பனையாகிறது.

    நாளை இந்தாண்டின் கடைசி முகூர்த்த நாள் என்பதும் மல்லிகைப்பூ விலை உயர்வுக்கு காரணம் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • கடந்த வாரம் பூக்கள் விலை குறைந்து காணப்பட்ட நிலையில் ஆவணி மாதம் முதல் முகூர்த்த நாளான நேற்று பூக்கள் விலை நேற்று அதிகரித்து மல்லிகை கிலோ ரூ.1,000-க்கு விற்கப்பட்டது.
    • ஒரு கட்டுகள் கொண்ட ரோஜா ரூ.200-க்கு விற்கப்பட்டது.

    நெல்லை:

    விநாயகர் சதுர்த்தி நாளை (புதன்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. இதைத்தொடர்ந்து நெல்லை பூ மார்க்கெட்டில் பூக்கள் விலை அதிகரித்து காணப்பட்டது.

    கடந்த வாரம் பூக்கள் விலை குறைந்து காணப்பட்ட நிலையில் ஆவணி மாதம் முதல் முகூர்த்த நாளான நேற்று பூக்கள் விலை நேற்று அதிகரித்து மல்லிகை கிலோ ரூ.1,000-க்கு விற்கப்பட்டது. இந்நிலையில் விநாயகர் சதுர்த்தியையொட்டி இன்று பூக்களின் விலை அதிகரித்தது.

    அதன்படி மல்லிகை பூ கிலோ ரூ.2 ஆயிரத்திற்கு விற்கப்பட்டது. பிச்சிப்பூ ரூ.1,500 முதல் 2 ஆயிரம் வரையும், முல்லை,கலர் பிச்சிப்பூ ரூ.1,000 , கனகாம்ப ரம் ரூ.800, வாடாமல்லி ரூ.60-க்கும், கேந்திபூ ரூ.40-க்கும் விற்கப்பட்டது.

    இதேபோல் ஒரு கட்டுகள் கொண்ட ரோஜா ரூ.200-க்கும், அரளிப்பூ ரூ.200-க்கும், துளசி ரூ.10-க்கும், அருகம்புல் ஒரு கட்டு ரூ.20-க்கும் விற்கப்பட்டது.

    பூக்கள் விலை அதிகரித்து காணப்பட்டாலும் பொது மக்கள் போட்டிப்போட்டு பூக்களை வாங்கி சென்றனர்.

    கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்கு பின்னர் இந்த ஆண்டு விமர்சையாக விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாப்பட உள்ளது.

    இதனால் நெல்லை டவுன், தச்சநல்லூர், சமாதானபுரம், வண்ணார்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் விநாயகர் சதுர்த்தி வழிபாட்டு பொருட்களின் விற்பனை அமோகமாக இருந்தது.

    வீடுகளில் வைத்து வழிபடுவதற்காக சிறிய விநாயகர் சிலைகள், பழங்கள், பொரி, சுண்டல் மற்றும் பூஜைப்பொருட் களை பொதுமக்கள் ஆர்வ முடன் வாங்கி சென்றனர்.

    இதையொட்டி பாளை, டவுன் மார்க்கெட்டுகளில் பூஜை பொருட்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் உள்ள சாலைகளில் சிறிய வகையிலான விநாயகர் சிலைகளும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    இந்த இடங்களில் வழக்கத்தை விட பொதுமக்களின் கூட்டம் இன்று அதிகரித்து காணப்பட்டது. இதனால் ஒரு சில இடங்களில் போக்கு வரத்து நெருக்கடிகளும் ஏற்பட்டது.

    ×