search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "flowering"

    • சமயபுரம் மாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா வருகிற 12-ந்தேதி தொடங்க இருக்கிறது
    • இந்த 28 நாட்களும் இக்கோ–விலின் அம்மனுக்கு தளிகை, நைவேத்தியம் கிடை–யாது.

    மண்ணச்சநல்லூர்:

    சக்தி ஸ்தலங்களில் மிக–வும் பிரசித்தி பெற்றது திருச்சியை அடுத்த சமய–புரம் மாரியம்மன் கோவில். இக்கோவிலுக்கு தமிழ–கம் மட்டுமின்றி பிறமாநி–லங்க–ளில் இருந்தும் ஏரா–ளமான பக்தர்கள் வந்து அம்மனை தரிசனம் செய்து– விட்டு செல்வார்கள்.சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் பூச்சொ–ரிதல் விழா மிகவும் பிர–சித்தி பெற்றதாகும்.

    வரு–டந்தோறும் மாசி மாத கடைசி ஞாயிறு முதல், பங்குனி மாதகடைசி ஞாயிறு வரை பக்தர்களுக்காக அம்மனே 28 நாட்கள் பச்சை பட்டினி விரதம் இருப்பது இந்த கோவிலின் தனிச் சிறப்புஆகும்.இந்த 28 நாட்களும் இக்கோ–விலின் அம்மனுக்கு தளிகை, நைவேத்தியம் கிடை–யாது. துள்ளுமாவும், நீர்மோர், கரும்பு, பான–கம் மற்றும் இளநீர் மட்டுமே நைவேத்தியமாக வழங்கப் படும்.

    இப்படி சிறப்புமிக்க இக்கோவிலின் பூச்சொ–ரிதல் விழா வருகிற மார்ச் 12-ந்தேதி (ஞாயிற்றுக் கிழமை) அன்று தொடங் குகிறது. அன்று, அதிகாலை விக்னேஷ்வர பூஜை, புண் யாகவாசனம், அனுக்ஞை, வாஸ்து சாந்தி, அங்கு–ரார்ப்பணம் முடிந்து காலை 6.30 மணிக்கு மேல் 8 மணிக்குள் மீனலக்கனத்தில் அம்மனுக்கு காப்பு கட்டுதலு டன் பூச்சொரிதல் விழா தொடங்குகிறது.விழாவிற்கான ஏற்பாடு–களை கோவில் இணை ஆணையர் கல்யாணி தலை–மையில் கோவில் பணியா–ளர்கள் மற்றும் ஊழி–யர்கள் செய்து வருகின்றனர்.


    • அரியலூரில் அம்மனுக்கு பூச்சொரிதல் விழா நடந்தது.
    • இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

    அரியலூர்:

    அரியலூரில் செட்டி ஏரிக்கரையில் உள்ள வினை தீர்த்த மதுர காளியம்மனுக்கு பூச்சொரிதல் விழா நடைபெற்றது. முன்னதாக மல்லிகை, ரோஜா உள்ளிட்ட பல்வேறு பூக்களை பக்தர்கள் எடுத்துக்கொண்டு ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர்.

    பின்னர் அம்மனுக்கு தாங்கள் வந்து கொண்டு வந்த பூக்களை செலுத்தினர். அம்மனுக்கு சிறப்பு ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.




    போச்சம்பள்ளி அருகே ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே பூக்கும் இந்த நாகலிங்க பூ தற்போது பூக்க தொடங்கி உள்ளது.
    போச்சம்பள்ளி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள எலுமிச்சம் பள்ளம் பகுதியை சேர்ந்தவர் வீரராகவன். இவர் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு நாகலிங்க செடியை நட்டு வைத்தார். ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே பூக்கும் இந்த நாகலிங்க பூ தற்போது பூக்க தொடங்கி உள்ளது.

    இது கடவுளுக்கானதல்ல இதுவே கடவுள். பூவுக்குள்ளே இறங்கி வந்து குடியிருக்கிறான் இறைவன். அத்தகைய ஒரு பெருமைக்குரிய மலராக நாகலிங்கப் பூவை கூறுவர். பூவில் நாகமுமிருக்கிறது. உள்ளே லிங்கமும் இருக்கிறது. சுற்றிலும் தேவர்களும் இருக்கிறார்கள். தேவ கணங்களும் இருக்கின்றன. உள்ளங்கையில் வைத்துக் கொண்டு உற்று கவனித்தால் ஒரு மினியேச்சர் கைலாயமே கைக்குள் இருப்பதுபோல் இருக்கும்.

    விசேஷத்திலும் விசேஷமாக மரத்தில் பூக்கும் பூவாக வேர்ப் பகுதிக்கு சற்று மேலே கொத்துக் கொத்தாக இலைகளைக் கொண்ட கிளைகளில் பூக்காமல் தனக்கென்று தான் பூப்பதற்கு என்று பிரத்யேகமாக ஒரு கிளையை உருவாக்கிக் கொண்டு பூக்கும் மலராக நாகலிங்கப்பூ உள்ளது. ஒரு நாகலிங்க மரத்தில் ஒரே நாளில் ஆயிரம் மலர்கள் வரை பூக்குமாம். அமேசான் காட்டுப் பகுதிகளில் இந்த மரம் துர்தேவதைகளில் இருந்து காக்கும் மரமாகவும் ஆசிய கண்டத்தில் செல்வத்தின் அடையாளமாகவும் கருதப்படுகிறது.

    மேலும் இந்த மரம் மாசுக் கட்டுப்பாட்டின் தன்மையைக் காட்டும் குறியீட்டுக் கருவியாகவும் கருதப்படுகிறது. காற்றில் அதிகமான சல்பர் இருந்தால் இதன் இலைகளை உதிர்த்து வெளிப்படுத்துமாம். இந்த மரத்தின் இலைகளை அரைத்து தோல் நோய்களுக்கு மருந்தாகவும் பயன்படுத்துகிறார்கள். இதன் இலைகளை மென்று திண்பதால் பல்வலிக்கு மருந்தாகவும், பட்டைகளையும் காய்களையும் பக்குவப்படுத்தி விஷ காய்ச்சலுக்கு மருந்தாகவும் பயன்படுத்தலாம் என்கிறது சித்த மருத்துவம்.
    ×