என் மலர்
நீங்கள் தேடியது "food poisoning"
- உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வு செய்து உடனடியாக அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
- உணவு மாதிரி சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டிருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பத்தனம்திட்டா:
கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டம், கீழ்வைப்பூர் அருகே உள்ள ஒரு தேவாலயத்தில் ஞானஸ்நான நிகழ்ச்சி நடந்துள்ளது. இதில், ஏராளமானோ கலந்து கொண்டுள்ளனர். இந்நிகழ்ச்சிக்கு கேட்டரிங் நிறுவனம் ஒன்று உணவு வினியோகம் செய்துள்ளது. அந்த உணவை சாப்பிட்டவர்களில் பலருக்கு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. உடல்நலம் பாதிக்கப்பட்ட சுமார் 100 நபர்கள் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர். கெட்டுப்போன உணவை சாப்பிட்டதால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என தெரிகிறது.
கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார். உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வு செய்து உடனடியாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
உணவு சப்ளை செய்த கேட்டரிங் நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், உணவு மாதிரி சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டிருப்பதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த குற்றச்சாட்டை கேட்டரிங் நிறுவனத்தினர் மறுத்துள்ளனர். பத்தனம்திட்டா மாவட்டத்தில் பருமலா பகுதியில் அதே நாளில் வேறு இரண்டு இடங்களில் உணவு வழங்கியதாகவும், இதுபோன்ற புகார்கள் எதுவும் வரவில்லை எனவும் கேட்டரிங் நிறுவனம் தெரிவித்து உள்ளது.
- இந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை இரவு உணவு உண்ட பின்பு ஏற்பட்டுள்ளது.
- மகரிஷி தேவ்ரஹா பாபா மருத்துவக் கல்லூரியில் ஆகாஷ் மற்றும் நித்தேஷ் ஆகிய இரு மாணவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
உத்தரபிரதேச மாநிலம் தியோரியாவில் உள்ள மெஹ்ரூனா கிராமத்தில் உள்ள பண்டிட் தீன்தயாள் உபாத்யாய் ஆசிரம முறை இடைநிலைக் கல்லூரியைச் சேர்ந்த சுமார் 80 மாணவர்களுக்கு வயிற்று வலி, வாந்தி, பேதி போன்ற பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு மாணவர்கள் உணவு உண்டபின்பு இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் சாப்பிட்ட உணவில் நச்சுத்தன்மை கலந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட நீதிபதி திவ்யா மிட்டல் செய்தியாளர்களிடம் கூறுகையில், மகரிஷி தேவ்ரஹா பாபா மருத்துவக் கல்லூரியில் ஆகாஷ் மற்றும் நித்தேஷ் ஆகிய இரு மாணவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். மீதமுள்ள மாணவர்கள் பள்ளியிலேயே தலைமை மருத்துவ அதிகாரி (CMO) தலைமையிலான மருத்துவர்கள் குழுவிடம் முதன்மை சிகிச்சை பெற்றனர்.
அனைத்து மாணவர்களும் பாதுகாப்பாக உள்ளதாகவும், முன்னெச்சரிக்கையாக மருத்துவக் குழு பள்ளியில் உள்ளதாகவும், இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
இதையடுத்து மாவட்ட மாஜிஸ்திரேட் மிட்டல் மற்றும் காவல் கண்காணிப்பாளர் சங்கல்ப் சர்மா ஆகியோர் மருத்துவக் கல்லூரிக்கு சென்று பாதிக்கப்பட்ட மாணவர்களை பார்வையிட்டனர்.
உணவு பாதுகாப்பு உதவி ஆணையர் வினய் குமார் சஹய் கூறுகையில், உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்தின் குழு கல்லூரிகளுக்கு இடையேயான சமையலறை, ஸ்டோரேஜ் ரூமில் ஆய்வு செய்தது. அங்கு தயார் செய்த ரொட்டி மற்றும் அங்கிருந்த பருப்பு, காய்கறிகள், மிளகாய்த்தூள், கடலைப்பருப்பு, கடுகு எண்ணெய், ஊறுகாய் உள்ளிட்டவைகளில் ஏழு மாதிரிகளை சேகரித்தனர்.
மாதிரிகள் சோதனைக்காக உணவு ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
- சுகாதாரமற்ற உணவை சாப்பிடுவதால் அதிக அளவில் ஃபுட் பாய்சன் ஏற்படுகிறது.
- ஃபுட் பாய்சனின் முதல் நிலை வயிற்றுவலி, வயிறு மந்தம் ஆகியவை.
உணவை உணவாக சாப்பிட்டாலும் சரி, மருந்தாக பயன்படுத்தினாலும் சரி, முதலில் நாம் கவனிக்க வேண்டிய்து அளவு. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது பழமொழி.
தினசரி நாம் சாப்பிடும் சாதாரண உணவுகளை நாம் அளவோடு தான் சாப்பிட வேண்டும். சரி... அளவு என்பதை யார் நிர்ணயிப்பது?
ஒவ்வொரு நாளும் ஒரு சராசரி உடலுக்கு என்னென்ன சத்துக்கள் தேவைப்படுகின்றன என்பதையும், அந்த சத்துக்கள் எந்த அளவு தேவை என்பதையும் சராசரி கணக்கு மூலம் அறிவிக்கிறது.

உதாரணமாக இன்று காலை நாம் சாப்பிட்ட அளவும், மதியம் சாப்பிடுகிற அளவும் ஒன்றாக இருக்குமா, அதாவது இன்று காலை இரண்டு இட்லி சாப்பிட்டால், மறுநாள் காலையும் அதே அளவு தான் சாப்பிட வேண்டும்.
சரி சாப்பாடு போதும் என்பதை எப்படி தெரிந்துகொள்வது? புரிந்துகொள்ள பல வழிகள் இருக்கின்றன. ஒன்று பசி அடங்கிவிடுவது, இன்னொன்று சாப்பிடும் போது ருசியும் மறைந்து போகும். இந்த அடையாளங்கள் தோன்றினால் வயிறு நிறைந்துவிட்டது என்று அர்த்தம்.
நம் உடல் தன்னுடைய தேவையையும், செரிக்கும் தன்மையையும் பொறுத்துதான் நம்முடைய பசியையும், அதன் அளவையும் தீர்மானிக்கிறது. அந்த அளவைப் பின்பற்றினால் வயிறு கனமான உணர்வு ஏற்படாது. சாப்பிட்டபின் களைப்பு ஏற்படாது. முன்னிலும் சுறுசுறுப்பாக நம் வேலைகளைத் தொடர முடியும்.

ஃபுட் பாய்சன் ஏற்பட காரணம்:
நவீனயுகத்தில் எதையும் அவசரம் அவசரமாக விழுங்கிவிட்டு ஓடுவது, நேரமின்மையைக் காரணம் காட்டி, அன்று சமைத்ததை ஆறு நாட்களுக்குக்கூட பதப்படுத்தி வைத்து சாப்பிடுவது, இவை எல்லாமும் தான் ஃபுட் பாய்சன் ஏற்படக் காரணங்கள். ஃபுட் பாய்சனை நாம் சாதாரணமாக விட்டால் அது உயிருக்கே ஆபத்தாகிவிடும்.
சமைக்கும் காய்கறிகள் சரியாகக் கழுவப்படாமல் இருத்தல், சமைத்த உணவை முறையாகப் பதப்படுத்தாமல் இருத்தல், சாப்பிடும் தட்டை சரியாக கழுவாமல் இருத்தல் போன்ற காரணங்களால் ஃபுட் பாய்சன் ஏற்படும். குறிப்பாக, வெளியிடங்களில் சுகாதாரமற்ற உணவைச் சாப்பிடுவதால் அதிக அளவில் ஃபுட் பாய்சன் ஏற்படுகிறது.

அறிகுறிகள்:
ஃபுட் பாய்சனின் முதல் நிலை வயிற்றுவலி, வயிறு மந்தம் ஆகியவை. அடுத்த நிலை, குமட்டல். அத்துடன், தலைவலி, ஜுரம் வருவது போல இருக்கும். கடைசி நிலை தீவிரமான வயிற்றுப்போக்கு, வாந்தி. வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டால், எக்காரணத்தைக் கொண்டும் உடனே நிறுத்தக்கூடாது.
படிப்படியாகத்தான் நிறுத்த வேண்டும். வாந்தி, வயிற்றுப்போக்கால், நமது உடலில் தேவையில்லாத உணவுப் பொருட்கள் வெளியேற்றப்படுகிறது; அது நல்ல விஷயம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். நமது உடலில் இன்ஃபெக்ஷன் ஏற்பட்டு அதனை வெளியேற்றத்தான் இப்படி நடக்கிறது.

ஃபுட்பாய்சனை தடுக்கும் வழிமுறைகள்:
* சமைப்பவர், சாப்பிடுபவர் கை சுத்தமாக இருக்க வேண்டும். சமையலறையை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
* சமைக்கப் பயன்படுத்தும், கத்தி, பலகை ஆகியவற்றை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பழங்கள், கீரைகள், காய்கறிகள் உபயோகிக்கும் முன் நன்கு கழுவிவிட்டுப் பயன்படுத்துங்கள்.
* ஃபிரிட்ஜில் வைத்த உணவை எடுத்துப் பயன்படுத்தும் போது, அதன் ஜில்லென்ற தன்மை முற்றிலும் தீரும்வரை வெளியில் வைக்க வேண்டும்.
* இரண்டு மூன்று நாட்களுக்குப் பயன்படுத்த விரும்புபவர்கள், தனித்தனி பாத்திரங்களில் உணவு பொருளை ஃபிரிட்ஜில் வைப்பது நல்லது.

* உணவில் துர்நாற்றம் அடித்தாலோ பூஞ்சை இருப்பது தெரிந்தாலோ அதை எந்தக் காரணம் கொண்டும் பயன்படுத்தக் கூடாது.
* செல்லப் பிராணிகளிடம் இருந்து உணவுப் பொருட்களை தள்ளியே வைத்திருங்கள்.
மகாராஷ்டிர மாநிலம் ராய்காட் மாவட்டம் காலாப்பூர் அருகே உள்ள மகத் கிராமத்தைச் சேர்ந்த சுபாஷ் மானே என்பவரின் வீட்டு கிரகப்பிரவேசம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி அப்பகுதியில் உள்ள கோவில் வளாகத்தில் நேற்று இரவு விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அவர்களின் உறவினர்கள், நண்பர்கள், தெரிந்தவர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர். விருந்தில் பங்கேற்றவர்களுக்கு பல்வேறு உணவு வகைகள் பரிமாறப்பட்டன.
முதல் சுற்று உணவு பரிமாறி முடிந்ததும், உணவு சாப்பிட்ட சில குழந்தைகளுக்கு தலைசுற்றல், வாந்தி, வயிற்று வலி ஏற்பட்டது. பெரியவர்களுக்கும் வயிற்று உபாதை ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட அனைவரையும் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். நேரம் செல்லச் செல்ல மருத்துவமனைக்கு வந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்நிலையில், 3 குழந்தைகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மேலும் 5 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும், 30-க்கும் மேற்பட்டோருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கெட்டுப்போன உணவை சாப்பிட்டதால் பாதிப்பு ஏற்பட்டதா? அல்லது வீட்டு உரிமையாளர் மீது பொறாமை கொண்ட நபர்கள், உணவில் விஷம் கலந்தார்களா? என்ற கோணத்தில் விசாரணை நடைபெறுகிறது. விருந்து நிகழ்ச்சியில் உணவு சாப்பிட்ட குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. #FoodPoisoningDeath