search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "food products"

    • ஓட்டல்கள், சில்லி சிக்கன் தயாரிக்கும் கடைகளில் தரமற்ற உணவுப் பொருட் கள் விற்பனை செய்வதாக மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிக்கு தகவல் கிடைத்தது.
    • சிக்கன் சில்லி கடைகள் மற்றும் ஓட்டல்களில் உணவு பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் அருண் தலை மையில் உணவு பாதுகாப்பு அலுவலர் செல்வகுமார் கொண்ட குழுவினர் திடீர் ஆய்வு நடத்தினர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் சுல்தான் பேட்டை மற்றும் பழைய பைபாஸ் சாலையில் உள்ள ஓட்டல்கள், சில்லி சிக்கன் தயாரிக்கும் கடைகளில் தரமற்ற உணவுப் பொருட்கள் விற்பனை செய்வதாக மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிக்கு தகவல் கிடைத்தது.

    ஆய்வு

    அதன்பேரில் பரமத்திவேலூர் பழைய பைபாஸ் சாலை மற்றும் சுல்தான் பேட்டைபகுதிகளில் உள்ள சிக்கன் சில்லி கடைகள் மற்றும் ஓட்டல்களில் உணவு பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் அருண் தலை மையில் உணவு பாதுகாப்பு அலுவலர் செல்வகுமார் கொண்ட குழுவினர் திடீர் ஆய்வு நடத்தினர்.

    அப்போது தயாரிப்பு தேதி இல்லாமல் வைத்தி ருந்த சில்லி பவுடர்கள் மூலம் உணவுப் பொருட்கள் தயாரித்து விற்பனை செய்வது தெரிய வந்தது. மேலும் பழைய சப்பாத்தி மாவு மற்றும் கெட்டுப்போன இறைச்சி களை பறிமுதல் செய்து பினாயில் ஊற்றி அளித்தனர்.

    அபராதம்

    இது தொடர்பாக ஓட்டல் கடைக்கு நோட்டீஸ் வழங்கி சுகாதாரமற்ற 6 கிலோ சில்லி பவுடர்களை பறி முதல் செய்தனர்.

    தொடர்ந்து ஆய்வு செய்து தரமற்ற உணவுப் பொருட்களை தயாரித்த அனைத்து கடைகளுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.

    மேலும் இதுபோன்ற தரமற்ற உணவு பொருட் களை தயாரித்தாலோ, காலாவதியான சில்லி பவுடர் பயன்படுத்தினாலோ கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கத்தார் நாட்டுடனான வர்த்தகத்திற்கு இந்திய தூதரகம் மூலம் ஏற்பாடு
    • ஏற்றுமதியாளர்கள், இறக்குமதியாளர்கள் காணொலி வாயிலாக பங்கேற்பு

     தோஹா:

    இந்திய வேளாண் பொருட்களின் ஏற்றுமதியை ஊக்குவிக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக கத்தார் நாட்டுடனான வர்த்தகம் குறித்து தோஹாவில் உள்ள இந்திய தூதரகமும் மற்றும் இந்திய வர்த்தக தொழில்துறை குழுமம் இணைந்து இந்திய ஏற்றுமதியாளர்கள் சந்திப்பை நடத்தியது.

    புவிசார் குறியீடு பெற்றுள்ள வேளாண் மற்றும் உணவுப் பொருட்கள் ஏற்றுமதி குறித்து காணொலி காட்சி மூலம் நடைபெற்ற இந்த சந்திப்பில் இந்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை குழுமத்தைச் சேர்ந்த ஏற்றுமதியாளர்கள், இறக்குமதியாளர்கள் உள்பட 80-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்திய தூதரக மற்றும் வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு, ஏற்றுமதி வளர்ச்சி ஆணையத்தின் அதிகாரிகள் இதில் பங்கேற்றனர்.

    இந்த சந்திப்பின்போது பாசுமதி அரிசி, மாம்பழம், மாதுளம்பழம், வழகிழக்கு பிராந்தியப் பொருட்கள் மற்றும் பல்வேறு பதப்படுத்தப்பட்ட பொருட்களின் ஏற்றுமதி வாய்ப்புக் குறித்து ஏற்றுமதியாளர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. நிகழ்ச்சியில் பேசிய கத்தார் நாட்டிற்கான இந்திய தூதர் டாக்டர் தீபக் மிட்டல், இந்தியா- கத்தார் இருதரப்பு வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்து விவரித்தார்.

    தொடர்ந்து பேசிய மத்திய வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு ஏற்றுமதி வளர்ச்சி ஆணைய தலைவர் அங்கமுத்து, புவிசார் குறியீடு உடைய பொருட்கள் மற்றும் இயற்கை தயாரிப்புகளை ஊக்கப்படுத்துவதில் மத்திய அரசு கவனம் செலுத்தி வருவதாக குறிப்பிட்டார்.

    திரையரங்குகளில் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதல் விலைக்கு உணவுப்பொருட்களை விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தொழிலாளர்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. #TheatresFoodRate
    சென்னை:

    திரையரங்குகளில் விற்கப்படும் உணவுப்பொருட்கள் அதன் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட பல மடங்கு அதிகமாக விற்பனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டு இருந்துவருகிறது.

    இந்நிலையில், இதுதொடர்பாக 335 திரையரங்குகளில் ஆய்வு மேற்கொண்டதாக தொழிலாளர் துறை தெரிவித்துள்ளது. இந்த ஆய்வில் உணவுப்பொருட்களை அதிக விலைக்கு விற்ற 72 கேண்டீன் உரிமையாளர்கள் மீதும், 38 தியேட்டர்கள் மற்றும் 4 உணவு உற்பத்தி நிறுவனங்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர் துறை தெரிவித்துள்ளது.

    மேலும், திரையரங்குகளில் விற்கப்படும் உணவுப்பொருட்களின் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தொழிலாளர் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இதேபோல், சாலையோர கடைகள், பேருந்து நிலையங்கள், ரெயில் நிலையங்கள் ஆகிய இடங்களிலும் கூடுதல் விலைக்கு விற்றால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், பெட்ரோல் பங்குகளில் பெட்ரோல் மற்றும் டீசலின் அளவு குறைத்து விற்று மோசடி செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தொழிலாளர் துறை தெரிவித்துள்ளது. #TheatresFoodRate
    கடலூர் மாவட்டத்தில் உரிமம் பெறாமல் உணவு பொருட்கள் விற்பனை செய்த 108 வியாபாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
     கடலூர்:

    கடலூர் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் டாக்டர் தட்சிணாமூர்த்தி கடலூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கடலூர் மாவட்டத்தில் உணவு பொருட்களை விற்பனை செய்யும் வியாபாரிகள் உரிய கட்டணம் செலுத்தி உணவு பாதுகாப்புத்துறையிடம் இருந்து உரிமம் பெற்றுக்கொள்ள வேண்டும். உரிமம் பெறாமல் உணவு பொருட்கள் விற்பனை செய்த 108 வியாபாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. எனவே இது வரை உரிமம் பெறாத வியாபாரிகள் உரிமம் பெற்றுக்கொள்ள வேண்டும், காய்கறிக்கடைக்காரர்களும் உரிமம் பெற வேண்டும்.

    உணவு பொருட்களில் கலப்படம் இருந்தாலோ, தரமற்ற உணவு பொருட்கள் விற்கப்பட்டாலோ அது தொடர்பான புகார்களை 94440 42322 என்ற வாட்ஸ்-அப் எண்ணுக்கு அனுப்பலாம்.

    இப்போது நகர்புறங்களில் இட்லி, தோசை மாவுகளை அரைத்து விற்பனை செய்வது அதிகரித்து வருகிறது. இட்லி, தோசை மாவை பிரிட்ஜில் வைத்து தான் விற்க வேண்டுமே தவிர வெளியில் வைத்து விற்பனை செய்யக்கூடாது.

    கரும்பு சாறு, சர்பத் போன்ற குளிர்பானங்களில் மீன்களை பதப்படுத்துவதற்கான ஐஸ் கட்டிகளை பயன்படுத்துவதாக புகார்கள் வந்துள்ளன. அவை சுத்தமற்ற தண்ணீரில் தயாரிக்கப்படுவதால் குளிர்பானங்களில் அதனை பயன்படுத்தக்கூடாது என்பதால் மீன்களை பதப்படுத்துவதற்கு உபயோகப்படுத்தப்படும் ஐஸ் கட்டிகளை தயாரிப்பவர்கள் அவற்றில் நீலநிறத்தை சேர்க்க வேண்டும் என்று ஐஸ் தயாரிப்பாளர்களுக்கு அறிவுறுத்தி உள்ளோம்.

    சமையல் எண்ணை, பால், தண்ணீர், டீ போன்றவற்றில் கலப்படத்தை தடுப்பதற்காக அவற்றில் இருந்து மாதந்தோறும் மாதிரிகளை எடுத்து ஆய்வகத்துக்கு பகுப்பாய்வுக்காக அனுப்புகிறோம். கடந்த 6 மாதங்களில் சமையல் எண்ணையில் மட்டும் 68 மாதிரிகளை எடுத்து பகுப்பாய்வுக்காக ஆய்வகத்துக்கு அனுப்பியுள்ளோம். இவற்றில் ஒரு எண்ணை மாதிரியில் கலப்படம் இருப்பதும், 17 மாதிரிகள் தரம் குறைந்ததாக இருப்பதும், 27 மாதிரிகளில் லேபல் மோசடி இருப்பதும் தெரியவந்து உள்ளது. அது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ஓட்டலுக்கு உணவு பொருட்களை வாங்க பாத்திரத்துடன் வந்தால் 5 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. #Hotels
    சென்னை:

    தமிழ்நாட்டில் பிளாஸ்டிக் பைகளுக்கு வருகிற ஜனவரி 1-ந்தேதி முதல் தடை விதித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

    இதையடுத்து பிளாஸ்டிக் பைகள், கப் போன்றவற்றின் பயன்பாட்டை பொதுமக்கள் தவிர்க்கவும், வியாபாரிகள் விற்கவும் வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

    இந்த நிலையில் ஓட்டலில் உணவு வாங்க பாத்திரத்துடன் வந்தால் 5 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக தமிழ்நாடு ஓட்டல் சங்கத்தினர் தீர்மானமும் நிறைவேற்றி உள்ளனர். இதுகுறித்து சென்னை ஓட்டல்கள் சங்க தலைவர் எம்.ரவி கூறியதாவது:-

    ஓட்டல்களில் உணவு பார்சலுக்காக 3 சதவீதம் முதல் 4 சதவீதம் வரை செலவு செய்கிறோம். வாடிக்கையாளர்கள் பார்சலுக்கு பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக பாத்திரங்களை கொண்டு வந்தால் பில் தொகையில் 5 சதவீதம் தள்ளுபடி வழங்க தயாராக இருக்கிறோம். இதுபற்றி அறிவிப்பு பலகைகளை வைக்குமாறு சென்னை ஓட்டல்களுக்கு அறிவுறுத்தி இருக்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.


    பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக உணவுகளை பார்சல் செய்ய மாற்று ஏற்பாடுகள் குறித்து ஆலோசித்து வருகிறார்கள். அலுமினிய படலம் கொண்ட காகிதங்களை பயன்படுத்த ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

    மேலும் வாழை இலை மற்றும் தையல் இலைகளை சில ஓட்டல்கள் பயன்படுத்த முடிவு செய்துள்ளன. பிளாஸ்டிக்குகளுக்கு பதிலாக காட்போர்டு அட்டைகளை பயன்படுத்தவும் யோசனை தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார். #Hotels #PlasticBan
    உணவு பொருட்களில் கலப்படத்தை தரம் அறிவது எப்படி? என்பது குறித்து கரூர் கலெக்டர் அலுவலகத்தில் அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.
    கரூர்:

    கரூர் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறையின் சார்பில் கோடைகால உணவு மற்றும் ஆரோக்கியம் தொடர்பான விழிப்புணர்வு முகாம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று நடந்தது. இதையொட்டி உணவு பொருட்களின் தரம் பற்றி எப்படி அறிவது? என்பதை விளக்கும் வகையிலான அரங்கு ஒன்று அங்கு வைக்கப்பட்டிருந்தது. இதில் மிளகு, மிளகாய்தூள், டீத்தூள், பேரீச்சம்பழம், உப்பு, வெல்லம், நல்லெண்ணெய் உள்பட அத்தியாவசிய பொருட்களில் கலப்படம் செய்யப்பட்டால் அதன் நிலை எப்படி இருக்கும் என்பது பற்றியும், தரமான பொருள் எப்படி இருக்கும் என்பது பற்றியும் இருவிதமாக பாட்டிலில் அடைத்து வைத்து பொதுமக்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் விளக்கு ஏற்றுவதற்கான நல்லெண்ணெய் என பாக்கெட்டில் குறிப்பிடப்பட்டிருந்தால் அதனை சமையலுக்கு பயன்படுத்த கூடாது. தரமான மிளகு தண்ணீரில் மூழ்கி விடும் என்பன உள்ளிட்ட ஆலோசனைகளும் வழங்கப்பட்டது.

    இந்த அரங்கினை மாவட்ட கலெக்டர் அன்பழகன் பார்வையிட்டார். அத்தியாவசிய பொருட்களின் தரத்தை கண்டறிவது பற்றி கேட்டறிந்தார். பின்னர் அவர் கூறுகையில், இந்த முகாம் மே மாத இறுதி வரை நடக்கும். முகாமில் பொதுமக்கள் பார்வையிட்டு கோடை காலத்தில் பாதுகாப்பான உணவு மற்றும் ஆரோக்கியத்தை கடைபிடிக்கும் வழிமுறைகளை அறிந்து கொள்ளலாம். மேலும், உணவுப்பொருள் குறித்த பொதுமக்களின் புகார்களை நியமன அலுவலரின் 94440 42322 என்கிற வாட்ஸ்-அப் எண் வழியாக தெரிவித்தால் 24 மணி நேரத்தில் புகார் குறித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கூறினார். இந்த நிகழ்ச்சியில் உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் (பொறுப்பு) புஷ்பராஜ் மற்றும் அனைத்து வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.  
    ×