search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "footpath"

    • நகராட்சிக்கு சொந்தமான கடைக்காரர்கள் தங்களது எல்லையை தாண்டி நடைபாதையை ஆக்கிரமித்து கடைகளை அமைத்துள்ளனர்.
    • கடை முன்பு நிற்கும் பயணிகளை ஆக்கிரமிப்பு கடைக்காரர்கள் திட்டுவதையும் வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் பஸ் நிலையத்தில் இருந்து சென்னை, திருப்பதி, திருத்தணி, ஆவடி, ஊத்துக்கோட்டை, செங்குன்றம், பெரியபாளையம், கும்மிடிப்பூண்டி, ஸ்ரீபெரும்புதூர் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், பெங்களூர் உள்பட பல்வேறு பகுதிகளுக்கு விழுப்புரம் கோட்ட அரசு பஸ்கள், மாநகர பஸ்கள் மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்படுகிறது. இதில் பயணிப்பதற்காக பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், அரசு மற்றும் தனியார் நிறுவன அலுவலர்கள், பணியாளர்கள், பொது மக்கள் என ஆயிரக்கணக்கானோர் தினமும் திருவள்ளூர் பஸ் நிலையம் வந்து செல்கின்றனர்.

    திருவள்ளூர் பஸ் நிலையத்தில் நகராட்சிக்கு சொந்தமான கடைகள் ஏலம் விடப்பட்டு அவற்றின் மூலம் மாதம் தோறும் குறிப்பிட்ட தொகை வாடகையாக வசூல் செய்யப்படுகிறது. ஆனால் நகராட்சிக்கு சொந்தமான கடைக்காரர்கள் தங்களது எல்லையை தாண்டி நடைபாதையை ஆக்கிரமித்து கடைகளை அமைத்துள்ளனர். இதனால் வெளியூர், உள்ளூர் பயணிகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். பஸ் நிலையத்துக்கு கைக்குழந்தையுடன் வரும் பெண்கள், கர்ப்பிணிகள், வயதானவர்கள் என பலரும் மழையிலும், வெயிலிலும் நிற்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. மேலும் கடை முன்பு நிற்கும் பயணிகளை ஆக்கிரமிப்பு கடைக்காரர்கள் திட்டுவதையும் வாடிக்கையாக கொண்டுள்ளனர். கடையை மறைத்து நின்றால் வியாபாரம் பாதிக்கிறது என்று கூறுகிறார்கள். இதனால் பயணிகள் கடும் அவதிக்கு ஆளாகிறார்கள். எனவே, திருவள்ளூர் பஸ் நிலையத்தில் பயணிகளுக்கு தொல்லை கொடுக்கும் ஆக்கிரமிப்பு கடைகளை நிரந்தமாக அகற்ற நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கடைகளுக்கு செல்லும் வகையில் பாதை அமைக்கப்பட்டு உள்ளது.
    • சந்தை வளாகத்தில் சுகாதார வளாகமும் ஏற்படுத்தவில்லை.

    உடுமலை:

    உடுமலை கபூர்கான் வீதியில் வேளாண்மைத்துறை சார்பில் செயல்பட்டு வருகின்ற உழவர் சந்தை உள்ளது.இந்த சந்தைக்கு நாள்தோறும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் காய்கறிகள், கீரைகள், பழங்கள், இளநீர் உள்ளிட்டவற்றை நாள்தோறும் விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். இது தவிர மலைப்பகுதியில் விளையக் கூடிய கேரட் ,பீன்ஸ், பட்டாணி, மேராக்காய், உருளை மற்றும் சேனைக்கிழங்கு , நெல்லிக்காய் உள்ளிட்டவையும் விற்பனை செய்யப்படுகிறது.விவசாயிகளின் நேரடி விற்பனை என்பதால் குறைவான விலையில் நிறைவான தரத்தில் புத்தம் புதிதாக காய்கறிகள் கிடைக்கிறது.

    இதனால் பொதுமக்கள் ஆர்வத்தோடு வந்து காய்கறிகளை வாங்கிச் செல்கின்றனர்.

    அதற்கு தகுந்தவாறு உழவர் சந்தை வளாகத்தில் கடைகளுக்கு செல்லும் வகையில் பாதை அமைக்கப்பட்டு உள்ளது. ஆனால் அதில் பராமரிப்பு பணி மேற்கொள்ளாத தால் நடைபாதை முற்றிலும் சேதமாகி உள்ளது. அவற்றை சீரமைப்பதற்கும் அதிகாரிகள் முன் வரவில்லை. இதனால் சந்தைக்கு வருகின்ற பொதுமக்கள்- விவசாயிகள் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள். அத்துடன் சந்தை வளாகத்தில் சுகாதார வளாகமும் ஏற்படுத்தவில்லை.

    இதனால் காய்கறிகளை விற்பனைக்காக கொண்டு வருகின்ற விவசாயிகள் இயற்கை உபாதைகளை கழிக்க முடியாமல் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள். அத்துடன் உழவர் சந்தையை விரிவாக்கம் செய்து மேம்படுத்த வேண்டியது அவசியமான ஒன்றாகும். அதற்கு உண்டான கோரிக்கையை விடுத்தும் இன்று வரையிலும் நிலுவையில் உள்ளது.

    எனவே முதல் கட்டமாக உழவர் சந்தை வளாகத்தில் சேதம் அடைந்த பாதையை சீரமைப்பதற்கு அதிகாரிகள் முன் வர வேண்டும் என்று பொதுமக்கள் தெரிவித்தனர்.    

    • பல்லடம் முதல் குண்டடம் வரை 4 வழிச்சாலையாக மாற்றும் பணி தொடங்கப்பட்டு நிறைவடைந்துவிட்டன.
    • ஒத்தக்கடை பகுதியில் மழைநீா் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.

    குண்டடம் :

    குண்டடம் அருகே 4 வழிச் சாலைப் பணிகள் முடிவடைந்து சில மாதங்களே ஆகும் நிலையில் சாலையோரத்தில் அமைக்கப்பட்டுள்ள நடைபாதையில் கற்கள் பெயா்ந்து வருவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனா்.

    கோவை-மதுரை நெடுஞ்சாலையில் பல்லடம் முதல் குண்டடம் வரை 4 வழிச்சாலையாக மாற்றும் பணி தொடங்கப்பட்டு வே.கள்ளிப்பாளையம் முதல் குண்டடம் வரை பணிகள் நிறைவடைந்துவிட்டன. இதில் மேட்டுக்கடையை அடுத்துள்ள ஒத்தக்கடை பகுதியில் மழைநீா் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கால்வாய்க்கும், தாா் சாலைக்கும் இடையில் உள்ள பகுதியில் நடைபாதையில் பாா்க்கிங் டைல்ஸ் எனப்படும் கற்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

    அண்மையில் பெய்த மழையில் இங்கு பதிக்கப்பட்டுள்ள கற்கள் அரிக்கப்பட்டு சேதமாகியுள்ளன. பதிக்கப்பட்ட சில நாள்களிலேயே இவ்வாறு ஆகியுள்ளதால் இதுகுறித்து நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு முறையாக டைல்ஸ் கற்கள் பதிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். 

    • வணிக வளாக கடைகள் கட்டப்பட்டு செயல்பாட்டில் இருந்து வருகிறது.
    • பொதுமக்கள் வந்து செல்லும் பகுதி என்பதால் எந்த நேரமும் பரபரப்பாக காணப்படும்.

    உடுமலை :

    உடுமலை நகராட்சியின் சார்பில் நகரின் முக்கிய பகுதிகள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் வணிக வளாக கடைகள் கட்டப்பட்டு செயல்பாட்டில் இருந்து வருகிறது. அதில் மத்திய பஸ் நிலையத்தில் கட்டப்பட்டு உள்ள கடைகளும் அடங்கும். பேருந்து நிலையம் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் வந்து செல்லும் பகுதி என்பதால் எந்த நேரமும் பரபரப்பாக காணப்படும். இதை சாதகமாகக் கொண்டு கடைகளை ஏலம் எடுத்த உரிமையாளர்கள் போட்டி போட்டுக் கொண்டு வியாபாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்த சூழலில் மூணாறுக்கு செல்லும் பேருந்து நிற்கும் பகுதியில் அமைக்கப்பட்டு ள்ள வணிக வளாக கடைகள் பொதுமக்கள் நடந்து செல்லும் பாதையை ஆக்கிரமிப்பு செய்து விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பொதுமக்கள் பஸ் நிலையத்தின் உள்பகுதியில் இருந்து வெளிப்பகுதிக்கு செல்ல முடியாமல் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள்.இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில்:- பேருந்து நிலையம் உள்ளிட்ட முக்கிய பகுதியில் நகராட்சி சார்பில் கட்டப்பட்டு உள்ள வணிக வளாகக் கடைகள் பொதுமக்களுக்கு பெரிது உதவிகரமாக உள்ளது.

    குறிப்பாக பஸ்சுக்காக காத்திருக்கும் கிராமப்புற மக்கள் அதிக அளவில் பயன் அடைந்து வருகின்ற னர்.பொதுமக்களை கவர்ந்து விற்பனையை அதிகப்படுத்தி லாபம் ஈட்டும் நோக்கில் ஒரு சிலகடை உரிமையாளர்கள் கடைக்கு முன்புற பகுதியை ஆக்கிரமிப்பு செய்து விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பொதுமக்கள் பஸ் நிலையத்தில் இருந்து வெளிப்புறப் பகுதிக்கு செல்ல முடியாமல் சுற்றிச் செல்ல வேண்டிய சூழல் உள்ளது. குறிப்பாக காலை மற்றும் மாலை வேலைகளில் பொதுமக்கள் பாதையை பயன்படுத்த முடியாமல் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள். இது குறித்து அதிகாரிகளும் கண்டு கொள்வதில்லை. எனவே உடுமலை பஸ் நிலைய பகுதியில் பொதுமக்கள் செல்லும் பாதையை ஆக்கிரமித்து விற்பனையில் ஈடுபட்டு வரும் நபர்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன் கடைகளில் விற்பனையை ஒழுங்குபடுத்துவதற்கு முன் வர வேண்டும் என்று தெரிவித்தனர்.

    • நடைபாதையை சீரமைத்து தர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • இந்த நடைபாதையை சரி செய்ய வேண்டும்

    கோத்தகிரி,

    கோத்தகிரி பேரூராட்சிக்கு உட்பட்ட கல்பனா காட்டேஜ் பகுதியில் உள்ள 5-வது வார்டில் சுமார் 300 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் வசிக்கும் மக்கள் தினசரி உபயோகித்து வரும் நடை பாதை கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் சேதமடைந்தது. இதனை பற்றி சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் அளித்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. பகல் மற்றும் இரவு நேரங்களில் இந்த நடைபாதையில் நடக்கும் பாதசாரிகள் சேதமடைந்த இந்த நடைபாதையின் குழியில் விழுந்து ஏதேனும் பெரும் விபத்து ஏற்படும் முன்னர் இந்த நடைபாதையை சரி செய்ய வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×