search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "for Teachers"

    • நாமக்கல், சந்தைப்பேட்டை புதூரில் உள்ள மாவட்ட ஆசிரியா் பயிற்சி நிறுவனத்தில் இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தின்கீழ் ஆசிரியா்களுக்கு 2 நாள் பயிற்சி நடந்தது.
    • 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான 166 ஆசிரியா்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

    நாமக்கல்:

    நாமக்கல், சந்தைப்பேட்டை புதூரில் உள்ள மாவட்ட ஆசிரியா் பயிற்சி நிறுவனத்தில் இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தின்கீழ் ஆசிரியா்களுக்கு 2 நாள் பயிற்சியை முதன்மைக் கல்வி அலுவலா் மகேஸ்வரி தொடங்கி வைத்தாா்.

    இல்லம் தேடிக் கல்வித் திட்டமும், எண்ணும் எழுத்தும் திட்டமும் சோ்ந்து செயல்படுத்துவதே இப்பயிற்சியின் நோக்கமாகும். இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தின் கீழ் நாமக்கல் மாவட்டம் முழுவதும் 2,787 தொடக்க நிலை மையங்களும், 2005 உயா் தொடக்க நிலை மையங்களும் செயல்பட்டு வருகின்றன. இதில் 85,770 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனா்.

    ஆசிரியா் தாங்கள் கற்றறிந்ததை இல்லம் தேடிக் கல்வித் திட்ட பணியாளா்களுக்கு வழங்க வேண்டும் என்பதற்காக 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான 166 ஆசிரியா்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இதில், தலைமை ஆசிரியா்கள், இடைநிலை ஆசிரியா்கள் கலந்து கொண்டனா். பயிற்சி முகாமில் மாவட்ட உதவி கூடுதல் திட்ட ஒருங்கிணைப்பாளா் புகழேந்தி, மாவட்ட ஒருங்கிணைப்பாளா் கலைச்செல்வி, மாவட்ட ஆசிரியா் ஒருங்கிணைப்பாளா் காா்த்திகேயன், ஆசிரியா்கள் பங்கேற்றனா்.

    • முதுநிலை ஆசிரியா்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
    • 2022-23-ம் கல்வி ஆண்டுக்கான கலந்தாய்வு, பிப்ரவரி, மார்ச் மாதங்களில் தொடங்கி ஜூன் 13-ந் தேதி வரை நடைபெற்றது.

    நாமக்கல்:

    முதுநிலை ஆசிரியர் சங்க மாநிலத் தலைவர் ராமு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கடந்த ஆண்டு ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு நேர்மையான முறையில் நடைபெற்றது. 2022-23-ம் கல்வி ஆண்டுக்கான கலந்தாய்வு, பிப்ரவரி, மார்ச் மாதங்களில் தொடங்கி ஜூன் 13-ந் தேதி வரை நடைபெற்றது.

    இந்தக் கல்வி ஆண்டில் முதுநிலை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வை, தரம் உயா்த்தப்பட்ட மேல்நிலைப் பள்ளிகளின் பட்டியலை வெளியிட்டு அதற்கான பணியிடங்களை உருவாக்கிய பிறகு நடத்த வேண்டும். பொதுமாறுதல் கலந்தாய்வில் முதலில் முதுநிலை ஆசிரியர்களுக்கு, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு அளிக்கும் கலந்தாய்வை நடத்த வேண்டும்.

    அதன்பிறகு முதுநிலை ஆசிரியர்களுக்கு மாவட்டத்திற்குள் மாறுதலும், தொடர்ந்து மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வை நடத்த வேண்டும். மேலும், உள் மாவட்டத்திலிருந்து வெளி மாவட்டத்திற்கு ஆசிரியா்கள் கலந்தாய்வில் சென்றபிறகு ஏற்படும் காலிப் பணியிடங்களை உள் மாவட்டத்திற்குள் மாறுதல் கலந்தாய்வுக்கு உரிய விதிகளை பின்பற்றி தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். மேலும் கலந்தாய்வின்போது மலைகளில் உள்ள பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×