என் மலர்
நீங்கள் தேடியது "forest department warns"
- கிளி வளர்ப்பு மோகம் மக்களிடையே அதிகரித்து வருகிறது.
- 400-க்கும் மேற்பட்ட கிளிகள் பராமரிக்கப்படுகின்றன.
கோவை,
கோவை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், கிளி வளர்ப்பு மோகம் மக்களிடையே அதிகரித்து வருகிறது. ஆனால், பச்சை கிளிகள் வன உயிரின பாதுகாப்புச் சட்டம் 1948-ன் படி, அழிவின் விளிம்பில் உள்ள உயிரினங்கள் பட்டியலில், 4-வது இடத்தில் உள்ளது.
எனவே, பச்சை கிளிகளை வளர்ப்பதும் விற்பதும் குற்றம். ஆனால், சமீபகாலமாக ஆன்லைனிலும், நேரடியா கவும் கிளிகள் விற்பனை அதிகரித்துள்ளது. கிளிகளை குஞ்சு பருவத்தில் இருந்தே வீட்டில் வளர்த்தால், பேசும் திறன் பெற்று அன்பாக பழகும்.
இதன் காரணமாகவே கிளிகளை வளர்க்க விரும்புகின்றனர். இதற்காக கிளிகளை பிடித்து, இறகுகளை வெட்டி, துன்புறுத்தி வீட்டில் வைத்து வளர்க்கின்றனர். இனப்பெருக்கம் செய்து ஒரு ஜோடி கிளி, 2 ஆயிரம் முதல், 5 ஆயிரம் ரூபாய் வரை, விற்பனை செய்யப்படுகிறது.
இது குறித்து, கோவை வனச்சரகர் அருண்குமார் கூறும்போது,
கோவை மாவட்ட வன அலுவலகத்தில் பறவை மறு வாழ்வு மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு, மீட்கப்பட்ட சுமார் 400-க்கும் மேற்பட்ட கிளிகள் பராமரிக்கப்படுகின்றன.இதில், 300-க்கும் மேற்பட்டவை வீடுகளில் வளர்க்கப்பட்டவைதான். வளர்ப்பவர்களிடம் விசாரித்தால், இது குற்றம் என்பதே எங்களுக்கு தெரியாது என்கின்றனர்.
எனவே, இனிவரும் காலங்களில் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். ஆன்லைனிலும், நேரடியாகவும் கிளிகள் வாங்கி வளர்ப்பில் ஈடுபட்டால், 6 மாதம் வரை சிறை தண்டனை கிடைக்கவும் வாய்ப்புள்ளது என்றார்.
- வாகன ஓட்டிகள் யானைகளுக்கு தொந்தரவு செய்யக்கூடாது.
- முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருவதாக வனத்துறை அறிவிப்பு.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு செல்லும் முதலாவது மலைப்பாதையில் வழக்கம்போல் வாகனங்கள் சென்று கொண்டிருந்தன. அப்போது மலைப்பாதையில் 7-வது மைல் அருகே திடீரென வனப்பகுதியில் இருந்து யானை கூட்டம் சாலையையொட்டி வந்தது.
இதைப்பார்த்து வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். உடனே இதுகுறித்து தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள் மற்றும் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.
அதன்பேரில் விரைந்து வந்த விஜிலென்ஸ் மற்றும் வனத்துறை அதிகாரிகள் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினர். மேலும் வாகன ஓட்டிகள் யானைகளுக்கு தொந்தரவு செய்யக்கூடாது. செல்போன்களில் படம் பிடிப்பது, செல்பி எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது. மிகவும் எச்சரிக்கையாக செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
மேலும் யானைகள் நடைபாதை வழியாகவோ அல்லது வாகனங்கள் செல்லும் மலைப்பாதை வழியாகவோ வராத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருவதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.