என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "free cycles"
- மாப்பிள்ளையூரணி ஊராட்சி வி.வி.டி. நினைவு மேல்நிலைப்பள்ளியில் இலவச சைக்கிள்கள் வழங்கும் விழா நடைபெற்றது.
- இதில் சண்முகையா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு 73 மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கி பேசினார்.
தூத்துக்குடி:
ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சி வி.வி.டி. நினைவு மேல்நிலைப்பள்ளியில் இலவச சைக்கிள்கள் வழங்கும் விழா நடைபெற்றது. மாப்பிள்ளையூரணி ஊராட்சி தலைவரும், கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளரும், கூட்டுறவு கடன்சங்க தலைவருமான சரவணக்குமார் தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் கனகரத்திமணி வரவேற்று பேசினார்.
இதில் சண்முகையா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு 73 மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கி பேசினார். விழாவில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரெஜினி, மாவட்ட கல்வி அலுவலர் குருநாதன், தெற்கு மாவட்ட தி.மு.க. சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் ரவி என்ற பொன்பாண்டி, மகளிர் தொண்டரணி அமைப்பாளர் ஆரோக்கிய மேரி, மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் ஸ்டாலின், மாணவரணி துணை அமைப்பாளர் தங்கமாரிமுத்து, ஒன்றிய கவுன்சிலர்கள் அந்தோணி தனுஷ்பாலன், முத்துமாலை, மாவட்ட பிரதிநிதி தர்மலிங்கம், ஊராட்சி உறுப்பினர் பாரதிராஜா, ஒன்றிய துணைச்செயலாளர் கணேசன், இளைஞர் அணி ராஜேந்திரன், பாரி, கிளைச்செயலாளர் சந்திரசேகர், முன்னாள் ஊராட்சி உறுப்பினர் ஆனந்தகுமார் உள்பட ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். உதவி தலைமை ஆசிரியர் மேரிகீதா நன்றி கூறினார்.
- அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நாளை காலை 11 மணிக்கு திருச்செந்தூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இலவச சைக்கிள்களை வழங்குகிறார்.
- நிகழ்ச்சியில் அந்தந்த பகுதியில் உள்ள உள்ளாட்சி பிரதிநிதிகள், தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சியினர் கலந்து கொள்கின்றனர்.
உடன்குடி:
தமிழக மீன்வளம் மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நாளை (திங்கட்கிழமை) காலை 9 மணிக்கு ஒட்டப்பிடாரம் ஒன்றியம் தருவை குளத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி யிலும், காலை 11 மணிக்கு திருச்செந்தூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், பகல் 11.30 மணிக்கு திருச்செந்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், மாலை 3 மணிக்கு உடன்குடி கிறிஸ்தியா நகரம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், மாலை 4 மணிக்கு வெள்ளாளன்விளை பிஷப் அசரியா மேல்நிலைப் பள்ளியிலும், மாணவர்களுக்கு தமிழக அரசு வழங்கும் இலவச சைக்கிள்களை வழங்குகிறார்.
இந்த நிகழ்ச்சியில் அந்தந்த பகுதியில் உள்ள உள்ளாட்சி பிரதிநிதிகள், தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சியினர் கலந்து கொள்கின்றனர்.
இத்தகவல் தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. அலுவலகம் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
- விளாத்திகுளம் அரசுப்பள்ளியில் இலவச சைக்கிள்கள் வழங்கும் விழா நடைபெற்றது.
- இதனைத்தொடர்ந்து பள்ளி விளையாட்டு மைதானத்தில் மாணவர்கள் பயன்பெறும் வகையில் கயிறு ஏறும் உபகரணத்தை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.
விளாத்திகுளம்:
விளாத்திகுளம் அரசுப்பள்ளியில் இலவச சைக்கிள்கள் வழங்கும் விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு 238 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா இலவச சைக்கிள்களை வழங்கினார். இதனைத் தொடர்ந்து பள்ளி விளையாட்டு மைதானத்தில் மாணவர்கள் பயன்பெறும் வகையில் கயிறு ஏறும் உபகரணத்தை திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் தவசிமுத்து, உடற்கல்வி இயக்குனர் பால்ச்சாமி, விளாத்திகுளம் மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு, விளாத்திகுளம் மேற்கு செயலாளர் அன்புராஜன், பேரூராட்சி மன்ற தலைவர் சூர்யா அய்யன்ராஜ், நகர செயலாளர் வேலுச்சாமி, ஒன்றிய குழு உறுப்பினர் சுமதி இம்மானுவேல், விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர், சமூக வலைதள ஒருங்கிணைப்பாளர் கரண்குமார் உட்பட ஆசிரிய- ஆசிரியைகள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
- பாவூர்சத்திரம் ஒளவையார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
- பள்ளி மாணவிகள் 369 பேருக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினர்.
தென்காசி:
பாவூர்சத்திரம் ஒளவையார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சியில் தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் சிவபத்மநாதன், எம்.எல்.ஏ. பழனி நாடார், தட்சணமாற நாடார் சங்க தலைவர் ஆர்.கே. காளிதாசன் ஆகியோர் கலந்துகொண்டு பள்ளி மாணவிகள் 369 பேருக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினர்.
நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியை ஜான்சிராணி, கீழப்பாவூர் யூனியன் சேர்மன் காவேரி, ஒன்றிய செயலாளர் சீனித்துரை உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே தழுதாளி கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த 1-ந்தேதி மாணவ- மாணவிகளுக்கு அரசு சார்பில் இலவச சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில் அமைச்சர் சி.வி.சண்முகம் கலந்துகொண்டு மாணவ- மாணவிகளுக்கு சைக்கிள் வழங்கினார்.
மாணவர்களுக்கு வழங்குவதற்காக பள்ளி வளாகத்தில் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சில சைக்கிளின் முன்புற கூடையில் வட்ட வடிவில் இருந்த முத்திரையில் மாணவி ஒருவர் படிப்பதுபோன்ற படம் இருந்தது. கன்னட மொழியில் ‘சார்வசனிகா சிக்சனா இலாகே, கர்நாடக சர்காரா’ என்ற வாசகங்கள் பொறிக்கப்பட்டிருந்தது. தமிழக அரசின் முத்திரையில்லாமல் கர்நாடக மாநிலத்தின் முத்திரையுடைய சைக்கிள்கள் வழங்கப்பட்டதால் மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
கர்நாடக அரசு, அந்த சைக்கிள்களை தரமற்றவை என்று கூறி நிராகரித்துவிட்ட நிலையில் தமிழகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் புகார் கூறினர்.
இதுதொடர்பாக விசாரணை நடத்த அதிகாரிகளுக்கு கலெக்டர் சுப்பிரமணியன் உத்தரவிட்டார். கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். பின்னர் இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:-
விழுப்புரம் மாவட்டத்தில் நடப்பு கல்வியாண்டில் 204 அரசு பள்ளிகளை சேர்ந்த மாணவ- மாணவிகளுக்கு 59,856 விலையில்லா சைக்கிள்கள் வழங்க ஒப்புதல் பெறப்பட்டது. அவற்றில் இதுவரை 39,542 சைக்கிள்கள் வழங்கப்பட்டுள்ளது. தழுதாளி அரசு மேல்நிலைப்பள்ளியில் 600 மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டது.
இவற்றில் 10 சைக்கிள்களில் மட்டும் கர்நாடக மாநில முத்திரை கொண்ட ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட கூடை தவறுதலாக பொருத்தப்பட்டது கண்டறியப்பட்டு அவை அகற்றப்பட்டது. தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் வழங்கப்படும் சைக்கிள்கள் ஒரே நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது. 12 கூடைகள் அடங்கிய 1 பெட்டி வீதம் 15 பெட்டிகளில் 180 கூடைகள் விழுப்புரம் மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவைகளில் தழுதாளி அரசு பள்ளியில் 10 சைக்கிள்களிலும், தைலாபுரம் அரசு பள்ளியில் 5 சைக்கிள்களிலும், கொந்தமூரில் 66 சைக்கிள்களிலும், கிளியனூரில் 18 சைக்கிள்களிலும், கரசானூரில் 81 சைக்கிள்களிலும் கர்நாடக அரசின் முத்திரை பொருத்தப்பட்டது கண்டறியப்பட்டு அவை உடனே அகற்றப்பட்டது. மற்றபடி கூடையை தவிர சைக்கிளின் மற்ற உதிரிபாகங்கள் அனைத்தும் தரமாக தமிழகத்திற்காக தயாரிக்கப்பட்டு அனுப்பப்பட்டதாகும். தற்போது அந்த சைக்கிள்களில் தமிழக அரசின் சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர். #FreeCycles
தமிழகத்தில் பெண் கல்வியை ஊக்குவிக்கும் விதமாக 2001-02-ம் ஆண்டு அப்போதைய முதல்-அமைச்சர் ஜெயலலிதா, பிளஸ்-1 படிக்கும் மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் திட்டத்தை கொண்டு வந்தார். இதன் பின்னர் 2005-06-ம் ஆண்டு முதல் மாணவர்களுக்கும் சேர்த்து வழங்கப்பட்டது.
நடப்பு ஆண்டிலும் தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே தழுதாளி கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 9 பள்ளிகளை சேர்ந்த மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் அமைச்சர் சி.வி.சண்முகம் கலந்து கொண்டு ஆயிரத்து 524 பேருக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார்.
இதில் ஒருசில மாணவ- மாணவிகளுக்கு வழங்கப்பட்ட சைக்கிள்களில் முன் பகுதியில் கூடை அமைக்கப்பட்டிருந்தது. அதில் வட்டவடிவில் கன்னட மொழியில் உள்ள முத்திரை காணப்பட்டது. மாணவி படிப்பது போன்ற படமும் பொறிக்கப்பட்டு இருந்தது. ‘சார்வசனிகா சிக்சனா இலாகே, கர்நாடக சர்காரா’ என்று அதில் குறிப்பிட்டு இருந்தது. இதற்கு தமிழில் பொது கல்வித்துறை கர்நாடக அரசு என்று பொருளாகும்.
கர்நாடக முத்திரை இருப்பதை கண்டு மாணவ- மாணவிகள் அதிர்ச்சி அடைந்தனர். இது மாணவர்கள் மத்தியிலும், அவர்களது பெற்றோரிடமும் குழப்பத்தை ஏற்படுத்தியது.
இதையடுத்து கர்நாடக அரசு அந்த சைக்கிள்களை தரமற்றவை என்று கூறி நிராகரித்து விட்டதாக தெரிகிறது. இவ்வாறு நிராகரிக்கப்பட்ட சைக்கிள்கள் தான் தமிழகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அவை தற்போது தழுதாளி பள்ளியில் நடந்த விழாவில் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு இருக்கிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
பின்னர் அவர்களை அதிகாரிகள் சமரசம் செய்தனர். இதையடுத்து சைக்கிள்களை மாணவர்கள் வாங்கிச்சென்றனர்.
இதுபற்றி விழுப்புரம் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி முனுசாமியிடம் கேட்ட போது, இந்த சைக்கிள் எவ்வாறு இங்கு வந்தது? என்பது பற்றி தெரியவில்லை. மேலும் இதுபோன்ற முத்திரையுடன் எத்தனை சைக்கிள்கள் வந்தள்ளது? என்கிற விவரங்களை சேகரித்து தெரிவிக்குமாறு சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியரிடம் கேட்டுள்ளோம். தொடர்ந்து இதுபற்றி விசாரணை நடந்து வருகிறது என்றார்.
இது குறித்து மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியனிடம் கேட்டபோது, அரசால் கொள்முதல் செய்து தற்போது மாணவர்களுக்கு வழங்கப்பட்ட சைக்கிள்கள் அனைத்தையும் அரசு பரிசோதித்தது. இவை அனைத்தும் தரமானது என தெரிந்த பின்னர்தான் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.
சைக்கிள்கள் தரமற்றவை என்று கூறப்படுவது முற்றிலும் தவறு. சைக்கிள்கள் கொள்முதல் செய்யும்போது அதில் அந்த ஸ்டிக்கர் மட்டும் தவறுதலாக இடம் பெற்றுள்ளது. அவை நீக்கப்படும்.
இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படும் என்றார்.
கர்நாடக முத்திரையிடப்பட்ட சைக்கிள் தமிழகத்துக்கு வந்தது சர்சையை ஏற்படுத்தியுள்ளது. எனவே சைக்கிள் வழங்கிய நிறுவனத்தின் நிர்வாகியிடம் விசாரணை நடத்த தமிழ்நாடு பாடநூல் கழகம் முடிவு செய்துள்ளது.
இதற்கிடையே மாவட்ட வாரியாக அனுப்பப்பட்ட சைக்கிள்களில் கன்னட மொழி மற்றும் படம் உள்ள சைக்கிள்களை பிரித்தெடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. #FreeCycles
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்