என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "free education"
- இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால், 24 மணி நேரம் மின்சாரம், இலவச கல்வி , மருத்துவம் வழங்கப்படும்.
- நகரங்களில் கூட தற்போது மின்வெட்டு உள்ளது.அதை நாங்கள் விரைவில் சரி செய்வோம்.
ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த சில மாதங்களுக்கு முன் மதுபான ஊழல் தொடர்பான பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் டெல்லியில் மே 25- ந் தேதி நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலை யொட்டி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு தற்போது சுப்ரீம் கோர்ட்டு ஜூன் 1 வரை இடைக்கால ஜாமீன் வழங்கி உள்ளது. ஜூன் 2-ந் தேதி அவர் மீண்டும் சிறைக்குத் திரும்ப வேண்டும்.டெல்லியில் மே 25- ந் தேதி நடைபெற உள்ள தேர்தலை யொட்டி தேர்தல் பிரச்சார பணிகளில் கெஜ்ரிவால் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 11 மணிக்கு அவரது எம்எல்ஏக்களை சந்தித்து பேசினார். மேலும் தேர்தல் வியூகம் குறித்து ஆலோசித்தார். அப்போது கெஜ்ரிவால் 10 தேர்தல் வாக்குறுதிகளை அளித்தார். அதில் அவர் கூறியதாவது :-
* இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால், அனைவருக்கும் 24 மணி நேரமும் மின்சாரம் மற்றும் இலவச கல்வி மற்றும் மருத்துவம் வழங்கப்படும்.
* டெல்லி மற்றும் பஞ்சாபில், நாங்கள் மாற்றத்தை கொண்டு வர முடியும் என்பதை நிரூபித்துள்ளோம். மேலும் நாடு முழுவதும் அவ்வாறு செய்ய நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்.
* 2022 -க்குள் விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்க பிரதமர் மோடி தவறி விட்டார். 2022 -க்குள் ஒவ்வொரு வீட்டிற்கும் 24×7 மின்சாரம் வழங்கப்படும் என மோடி உத்தரவாதம் அளித்தார். நாட்டின் அனைத்துப் பகுதிகளையும் விடுங்கள். நகரங்களில் கூட தற்போது மின்வெட்டு உள்ளது.அதை நாங்கள் விரைவில் சரி செய்வோம்.
* 2022 க்குள். சபர்மதிக்கும் மும்பைக்கும் இடையே புல்லட் ரெயில் இயக்கப்படும் என்று மோடி உத்தரவாதம் அளித்தது எதுவும் இதுவரை நடக்க வில்லை.விரைவில் நாங்கள் ஏற்பாடு செய்வோம்.
* சீனா நமது நாட்டு நிலத்தை ஆக்கிரமித்துள்ளது. ஆனால் மத்திய அரசு எங்கள் நிலத்திற்குள் யாரும் வரவில்லை, எதுவும் நடக்கவில்லை என்று அது கூறுகிறது. அதை விரைவில் மீட்போம்.
* நாட்டின் சுகாதாரத் துறையில் மிகுந்த கவனம் செலுத்துவோம். நாட்டு மக்கள் ஆரோக்கியமாக இருந்தால் நாடு முன்னேறும். 140 கோடி மக்கள் முன்னேற்றத்திற்கு உதவுவோம்.
* நாடு முழுவதும் உள்ள 10 லட்சம் பள்ளிகளில் 18 கோடி குழந்தைகள் படிக்கிறார்கள்.அவர்களுக்கு எதிர்காலம் இல்லை. டெல்லியிலும், பஞ்சாபிலும், மாற்றத்தை கொண்டு வர முடியும் என்பதை நிரூபித்துள்ளோம், அதை நாடு முழுவதும் செயல்படுத்துவோம் என்றார்.
- தனியார் சுயநிதிப்பள்ளிகளில் 25 சதவீதம் ஒதுக்கீட்டின் கீழ் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்.
- இணையவழியில் இன்று முதல் அடுத்த மாதம் 18-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
திருப்பூர் :
குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டம் 2009-ன் படி, சிறுபான்மையற்ற அனைத்து தனியார் சுயநிதிப்பள்ளிகளில் நுழைவு நிலை வகுப்பில் 25 சதவீதம் இடஒதுக்கீட்டில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் சேர்க்கை செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் சிறுபான்மையற்ற அனைத்து தனியார் சுயநிதிப்பள்ளிகளில் எல்.கே.ஜி., 1-ம் வகுப்பில் 25 சதவீதம் ஒதுக்கீட்டின் கீழ் மாணவர் சேர்க்கைக்கு இணையவழியில் இன்று முதல் அடுத்த மாதம் 18-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
இதற்காக rte.tnschools.gov.in என்ற இணையதளத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பெற்றோர் அவரவர் இருக்கும் இடத்தில் இருந்தே விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யலாம். விண்ணப்பம் பதிவேற்றம் செய்யப்பட்ட விவரம், பதிவு செய்யப்பட்ட பெற்றோரின் செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தியாக அளிக்கப்படும்.
முதன்மை கல்வி அதிகாரி, மாவட்ட கல்வி அதிகாரி (தனியார் பள்ளிகள்), மாவட்ட கல்வி அதிகாரி, வட்டார கல்வி அதிகாரி, ஒருங்கிணைந்த பள்ளி கல்வி வட்டார வள மையம் ஆகிய அலுவலகங்களில் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை எந்தவித கட்டணமும் இல்லாமல் பதிவேற்றம் செய்ய வசதி செய்யப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் எல்.கே.ஜி. வகுப்புக்கு விண்ணப்பிக்கும் குழந்தைகள் 1-8-2019 முதல் 31-7-2020-க்குள்ளாகவும், 1-ம் வகுப்புக்கு விண்ணப்பிக்கும் குழந்தைகள் 1-8-2017 முதல் 31-7-2018-க்குள்ளாகவும் பிறந்திருக்க வேண்டும். மாணவர்களின் புகைப்படம், மாணவர், பெற்றோரின் ஆதார் அட்டை நகல், இருப்பிட சான்று, வருமான சான்று, சாதிச்சான்று, முன்னுரிமை ஏதேனும் இருந்தால் அதற்கான சான்று ஆகியவற்றை பதிவேற்றம் செய்ய வேண்டும். இந்த மாவட்டத்தில் உள்ள அரசு இ-சேவை மையங்களில் பதிவேற்றம் செய்யலாம்.
நிர்ணயிக்கப்பட்ட இடங்களை விட அதிகமாக விண்ணப்பங்கள் பெற்றால் குலுக்கல் முறையில் வருகிற மே மாதம் 23-ந் தேதி அந்தந்த பள்ளிகளில் நடைபெறும். வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினரின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ள ஆதரவற்ற எச்.ஐ.வி. பாதிக்கப்பட்டவர், மூன்றாம் பாலினத்தவர், துப்புரவு தொழிலாளியின் குழந்தை, மாற்றுத்திறனாளிகள் போன்றோரின் தகுதியான விண்ணப்பங்கள் முதலில் சேர்க்கை வழங்கப்படும். இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.
- ராம்கோ நூற்பாலை பணியாளர்களின் குழந்தைகளுக்கு ரூ.42 லட்சம் இலவச கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.
- தலைவர் மோகனரங்கன், துணைத்தலைவர் (மனிதவளம்) நாகராஜன், மூத்த பொது மேலாளர் (பணிகள்) பாலாஜி ஆகிேயார் கல்வி உதவித்தொகையை வழங்கினர்.
ராஜபாளையம்
ராம்கோ நூற்பாலைகளில் பணிபுரியும் பணியாளர்களின் குழந்தைகளுக்கு வருடா வருடம் இலவச கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த வருடமும் ராஜபாளையம் மில்ஸ் லிமிடெட்டில் இந்த நிகழ்ச்சி நடந்தது.
சுமார் 1,905 தொழிலாளர்கள் குழந்தைகளுடன் வந்து கல்வி உதவித்தொகையாக ரூ.42 லட்சம் பெற்றனர். விழாவில் தலைவர் மோகனரங்கன், துணைத்தலைவர் (மனிதவளம்) நாகராஜன், மூத்த பொது மேலாளர் (பணிகள்) பாலாஜி ஆகியோர் கல்வி உதவித்தொகையை வழங்கினர்.
தொழிற்சங்கத்தின் சார்பில் எச்.எம்.எஸ். பொது செயலாளர் என்.கண்ணன், ஐ.என்.டி.யு.சி. தலைவர் ஆர். கண்ணன், ஏ.ஐ.டி.யு.சி. பொது செயலாளர் விஜயன் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
கர்நாடகத்தில் ஏற்கனவே 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை பெண் குழந்தைகளுக்கு இலவச கல்வியை அரசு வழங்கி வருகிறது. இந்த நிலையில் கல்லூரி படிப்பு வரை பெண் குழந்தைகளுக்கு இலவச கல்வி வழங்கும் திட்டத்திற்கு மந்திரிசபை கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சட்டம் மற்றும் சட்டசபை விவகாரத் துறை மந்திரி கிருஷ்ண பைரேகவுடா நேற்று நிருபர்களிடம் தெரிவித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கர்நாடகத்தில் கல்லூரி படிப்பு வரை பெண் குழந்தைகளுக்கு இலவச கல்வி வழங்க மந்திரி சபை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது பி.யூ.கல்லூரி, முதல் நிலை கல்லூரி மற்றும் உயர்கல்வி படிப்புகளில் சேர்ந்துள்ள பெண் குழந்தை களின் கல்வி கட்டணத்தை அரசே ஏற்க முடிவு செய்யப்பட்டது. இந்த திட்டம் நடப்பு கல்வி ஆண்டு (2017-18) முதலே அமல்படுத்தப்படுகிறது. இதற்காக ஆண்டுக்கு ரூ.95 கோடி செலவாகும். இதன் மூலம் மாநிலத்தில் 3.70 லட்சம் பேர் பயன் பெறுவார்கள்.
கன்னட திரைப்படங்களில் கர்நாடகத்தில் உள்ள சுற்றுலா தலங்களை படம் பிடித்து காட்டினால், அதற்கு நிதி உதவி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக திரைப்பட சுற்றுலா கொள்கையை அமல்படுத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது. திரைப்படங்களில் சுற்றுலா தலங்களை காட்டினால் ரூ.1 கோடியும், பெரிய அளவில் சுற்றுலா தலங்களை காண்பித்தால் ரூ.2½ கோடியும் நிதி உதவி அளிக்கப்படும்.
விவசாய நிலத்தை விவசாயம் அல்லாத நோக்கங்களுக்கு பயன்படுத்த விரும்புபவர்கள் தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பித்தால் ஒரு மாதத்திற்குள் அதற்கு அனுமதி வழங்க இந்த கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டு உள்ளது. இதற்கு ஆன்-லைன் மூலம் விண்ணபிக்க வேண்டும்.
பீதர் கூட்டுறவு சர்க்கரை ஆலை செயல்படாமல் முடங்கிப்போய் உள்ளது. அவற்றை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டுவர ரூ.20 கோடி கடன் வழங்க முடிவு செய்யப்பட்டது. கடப்பிரபா இடதுபுற கால்வாயை நவீனப்படுத்த ரூ.573 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது.
மைசூரு மாவட்டம் கே.ஆர்.நகர் தாலுகாவில் உள்ள ஹாட்யா கிராமம் அருகே காவிரி ஆற்றில் இருந்து நீர் எடுத்து 12 ஏரிகளை நிரப்ப ரூ.15 கோடி ஒதுக்குவது என்று தீர்மானிக்கப்பட்டது. ரேஷன் கடைகளை நடத்தும் வணிகர்களுக்கு குவிண்டாலுக்கு லாபம் ரூ.80-ல் இருந்து ரூ.100 ஆக உயர்த்தி வழங்கப்படுகிறது.
மேலும் 6-வது ஊதியக்குழு பரிந்துரைப்படி அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் சில படிகளை உயர்த்த முடிவு செய்யப்பட்டது. இதனால் அரசுக்கு ரூ.400 கோடி கூடுதல் நிதிச்சுமை ஏற்படும். பாகல்கோட்டை மாவட்டம் முதோல் தாலுகாவில் முதல் நிலை கல்லூரி தொடங்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக ரூ.3.40 கோடி நிதி ஒதுக்கப்படும்.
ராமநகர் மாவட்டம் கனகபுரா தாலுகாவில் புதிய மருத்துவ கல்லூரி தொடங்க அனுமதி வழங்கப்பட்டது. இங்கு 300 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை அமைக்கப்படுகிறது. இதற்கு ரூ.450 கோடி செலவாகும். கட்டமைப்பு பணிகளுக்கு முதல் கட்டமாக ரூ.90 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது.
கர்நாடக இலவச மற்றும் கட்டாய கல்வி பெற குழந்தைகள் உரிமை விதிமுறைகளின்படி அரசு பள்ளிகள் இல்லாத பகுதிகளில் தனியார் பள்ளிகள் இருந்தால், அந்த பள்ளிகளில் படிக்கும் குழந்தை களின் கல்வி கட்டணத்தை அரசே ஏற்பது என்று தீர்மானிக்கப்பட்டது.
இவ்வாறு கிருஷ்ண பைரேகவுடா கூறினார்.
முன்னதாக கர்நாடக மந்திரிசபை கூட்டம் முதல்-மந்திரி குமாரசாமி தலைமையில் பெங்களூரு விதான சவுதாவில் நேற்று நடைபெற்றது. இதில் தலைமை செயலாளர் மற்றும் மந்திரிகள் கலந்து கொண்டனர். இதில் ஏற்கனவே காங்கிரஸ் கட்சி மீது அதிருப்தியில் உள்ள மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி கலந்து கொள்ளவில்லை. #Karnataka #FreeEducation #KumaraswamyCabinet
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்