என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Fund"

    • முதல்வர் மம்தா பானர்ஜி, ரூ.93 கோடி மதிப்பிலான 70 திட்டங்களை அறிவித்தார்.
    • பழங்குடியின மக்களுக்கான சமூக நலத் திட்டங்களை வழங்குவதற்கு வசதியாக சிறப்பு முகாம்கள் அமைக்கப்படும்.

    மேற்கு வங்காளத்திற்கு மத்திய அரசு ரூ.1.15 லட்சம் கோடி பாக்கி வைத்துள்ளதாகக் கூறிய அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு நிதியை விடுவிக்க வேண்டும் அல்லது பிரதமர் பதவியை காலி செய்ய வேண்டும் என்று காட்டமாக கூறியுள்ளார்.

    மாநிலத்தின் நிலுவைத் தொகையை விடுவிக்கக் கோரி, பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க நேரம் கோரியுள்ளதாக மம்தா கூறினார்.

    அப்போது, மேற்கு வங்காளத்திற்கு வரவேண்டிய 1.15 லட்சம் கோடி ரூபாய் நிதி கோரப்படும்... ஏழை மக்களின் பணத்தைக் கொடுங்கள் அல்லது பதவியை விடுங்கள் என்று முழக்கத்தை எழுப்புவோம் என்று அவர் கூறினார்.

    மேற்கு வங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றி பேசிய அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, ரூ.93 கோடி மதிப்பிலான 70 திட்டங்களை அறிவித்தார்.

    அவர் மேலும் கூறுகையில், "நான் எம்.பி.க்களுடன் டெல்லிக்கு செல்ல உள்ளேன். டிசம்பர் 18 முதல் டிசம்பர் 20 வரை நிலுவைத் தொகையை விடுவிக்கக் கோரிக்கை வைக்க பிரதமரிடம் நேரம் கேட்டுள்ளேன்.

    மாநிலத்தின் நிலுவைத் தொகையை மத்திய அரசு வழங்கியிருந்தால், தனது அரசு தனது சமூக நலத் திட்டங்களின் கீழ் மேலும் பலரை இணைத்திருக்க முடியும்.

    மூடப்பட்ட தேயிலைத் தோட்டங்களை மீண்டும் திறப்பதாக உறுதியளித்த பாஜக போலல்லாமல், எனது வாக்குறுதியை நான் எப்போதும் கடைப்பிடிப்பேன். எங்களின் நிலுவைத் தொகையைப் பெற்றிருந்தால், பலருக்கு சமூக நலத்திட்டங்களை வழங்கியிருக்க முடியும்.

    மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தின் கீழ் 100 நாட்கள் வேலை, வீட்டுவசதி, ஜிஎஸ்டி வசூலில் மாநிலத்தின் பங்கு உட்பட பல்வேறு கணக்குகளில் மேற்கு வங்கத்தின் நிலுவைத் தொகை இருக்கிறது.

    ஆனால், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தின் கீழ் வங்காளத்திற்கு முன்பு வழங்கப்பட்ட பண உதவியின் கணக்குகளை சமர்ப்பிக்கத் தவறியதால், வங்காளத்திற்கு நிதி விடுவிப்பது இடைநிறுத்தப்பட்டதாக மாநிலத்தின் பாஜக தலைமை அடிக்கடி கூறி வருகிறது.

    அனைத்து தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கும் தனது அரசாங்கம் நில 'பட்டாக்களை' (பத்திரங்கள்) வழங்கும் என்றும் அவர்கள் ஒவ்வொருவருக்கும் வீடு கட்டுவதற்கு ரூ.1.2 லட்சம் வழங்கும்.

    மேலும், பழங்குடியினருக்கு எஸ்டி சான்றிதழ், சுத்தமான குடிநீர் மற்றும் சமூகத் திட்டங்களுக்கான அணுகல் தொடர்பான அவர்களின் கவலைகளை நிவர்த்தி செய்யப்படும்.

    பழங்குடியின மக்களுக்கான சமூக நலத் திட்டங்களை வழங்குவதற்கு வசதியாக சிறப்பு முகாம்கள் அமைக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நேரு விளையாட்டு அரங்கத்தை தரம் உயர்த்த ரூ.5.71 கோடி நிதி ஒதுக்கீடு.
    • வேளச்சேரி நீச்சல்குளம் வளாகத்தை ரூ.4.72 கோடியில் தரம் உயர்த்த திட்டம்.

    சென்னையில் விளையாட்டு உள்கட்டமைப்புகளை மேம்படுத்த ரூ.25 கோடி நிதி ஒதுக்கி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

    விளையாட்டு உள்கட்டமைப்புகளை சர்வதேச அளவிற்கு மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி விளையாட்டு அரங்கம் ரூ.11.34 கோடியில் தரம் உயர்த்தப்படும்.

    நேரு விளையாட்டு அரங்கத்தை தரம் உயர்த்த ரூ.5.71 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

    வேளச்சேரி நீச்சல்குளம் வளாகத்தை ரூ.4.72 கோடியில் தரம் உயர்த்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

    நுங்கம்பாக்கம் டென்னிஸ் விளையாட்டு அரங்கம் ரூ.88 லட்சத்தில் மேம்படுத்தப்பட உள்ளது.

    • பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
    • காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும்.

    மத்தியப் பிரதேசம் மாநிலம் ஹர்தாவில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். 100-க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்துள்ளனர்.

    சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள், விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பட்டாசுகள் தொடர்ந்து வெடித்துக் கொண்டே இருந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    இதற்கிடையே, பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். 

    இதுதொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-

    மத்தியப் பிரதேச மாநிலம் ஹர்தாவில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்து காரணமாக உயிர் இழப்பு ஏற்பட்டுள்ளதால் வேதனை அடைந்துள்ளனர்.

    தங்கள் அன்புக்குரியவர்களை இழந்து வாடும் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.

    காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும். பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உள்ளாட்சி நிர்வாகம் உதவி வருகிறது.

    இறந்த ஒவ்வொருவரின் உறவினர்களுக்கும் பிரதமர் மோடி பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.2 லட்சம் வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்கப்படும்.

    இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

    • திருச்சியில் பணியாற்றிய 9 கல்வி அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு.
    • சாந்தி மற்றும் ராஜேந்திரன் ஆகியோர் தற்போது பள்ளிக் கல்வித் துறையில் இணை இயக்குனர்களாக உள்ளனர்.

    கல்வி மேம்பாட்டிற்கான மத்திய அரசு நிதியில் முறைகேடு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    திருச்சியில் பணியாற்றிய 9 கல்வி அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதில், அதிமுக ஆட்சியில் முதன்மை கல்வி அலுவலராக இருந்த அறிவழகன், சில தலைமை ஆசிரியர்கள் மீது புகார் எழுந்துள்ளது.

    விதிகளுக்கு புறம்பாக பெரு நிறுவனங்களிடம் ஒட்டுமொத்தமாக தேவையற்ற பொருட்களை கொள்முதல் செய்து பள்ளிகளுக்கு விநியோகித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    மேலும், பள்ளி தலைமை ஆசிரியர்களாக இருந்த முத்துச்சாமி, சாந்தி, ராஜேந்திரன், சற்குணம், அகிலா, டெய்சி ராணி, ஜெய்சிங், கண்ணன் உள்பட 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    சாந்தி மற்றும் ராஜேந்திரன் ஆகியோர் தற்போது பள்ளிக் கல்வித் துறையில் இணை இயக்குனர்களாக உள்ளனர்.

    முக கவசம், கிருமி நாசினி உள்ளிட்ட கல்வி மேம்பாட்டுக்கு தொடர்பு இல்லாத பொருள்களை அதிகம் விலை கொடுத்து வாங்கியுள்ளனர்.

    • நிதி பற்றாக்குறையால் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் புதிய கட்டிடத்தை கட்டி முடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
    • முன்னணி தமிழ் நடிகர்கள் பலர் முன்வந்து அதிகளவில் நிதி வழங்கி வருகின்றனர்.

    நிதி பற்றாக்குறையால் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் புதிய கட்டிடத்தை கட்டி முடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கட்டிடத்தை முழுமையாக கட்டி முடிக்க மேலும் ரூ.40 கோடி தேவைப்படும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இதனால் சங்கத்தின் சார்பில் அதற்கான நிதி திரட்டப்பட்டு வருகிறது.

    முன்னணி தமிழ் நடிகர்கள் பலர் தாமாக முன்வந்து அதிகளவில் நிதி வழங்கி வருகின்றனர். அந்த வகையில், கடந்த வாரம் நடிகர் சிவகார்த்திகேயன் ரூ.50 லட்சம் நிதி வழங்கிய நிலையில், அதைத்தொடர்ந்து தற்போது, நடிகர் தனுஷ், சங்க கட்டிட பணிகளுக்காக ரூ.1 கோடி நிதி வழங்கியுள்ளார். அவருக்கு நடிகர் சங்க தலைவர் நாசர், பொருளாளர் கார்த்தி, துணைத்தலைவர் பூச்சி எஸ்.முருகன் ஆகியோர் நன்றி தெரிவித்தனர்.

    முன்னதாக தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நடிகர் கமல் ஹாசன், விஜய், நெப்போலியன் ஆகியோர் கட்டிட பணிகளுக்கு தலா ரூ.1 கோடி நிதி வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த ஆண்டுக்குள் கட்டிட பணிகள் முழுமையாக நிறைவடையும் என்று நடிகர் சங்கத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • வயநாடு மாவட்டத்தில் முண்டகையில் பயங்கர நிலச்சரிவும், காட்டாற்று வெள்ளமும் ஏற்பட்டது.
    • நிலச்சரிவில் சிக்கி இதுவரை 360-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

    கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து பெய்த கனமழையால், நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், வயநாடு மாவட்டத்தில் முண்டகையில் பயங்கர நிலச்சரிவும், காட்டாற்று வெள்ளமும் ஏற்பட்டது.

    இதனால், வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இதுவரை 360-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இன்னும் பலர் சிக்கி உள்ளதால் மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த இயற்கை பேரிடர் இந்தியா முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இதனிடையே நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து மக்களும் உதவ வேண்டும் என கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் மற்றும் அம்மாநில கவர்னர் ஆரிப் முகமது கான் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.

    தமிழக அரசு சார்பில் ரூ.5 கோடி, அதிமுக சார்பில் ரூ.1 கோடி, காங்கிரஸ் சார்பில் ரூ.1 கோடி என நிதி உதவி வழங்கினர்.

    அதை தொடர்ந்து, நடிகர் மோகன் லால் ரூ.3 கோடியும், நடிகர்கள் விக்ரம், சூர்யா, கார்த்தி, பகத் பாசில், நடிகர் அல்லு அர்ஜூன், ஜி.வி.பிரகாஷ், நடிகைகள் ஜோதிகா, நஸ்ரியா ஆகியோரும் நிதி உதவி வழங்கி உள்ளனர்.

    அந்த வரிசையில், நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் கேரள முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நடிகர் சிரஞ்சீவி மற்றும் அவரது மகனும், நடிகருமான ராம்சரண் இணைந்து ஒரு கோடி ரூபாய் நிதி உதவி வழங்கியுள்ளனர்.

    மீன்பிடி தடைகாலத்தில் மீனவ குடும்பங்களுக்கு ரூ.5 ஆயிரம் வழங்கும் திட்டத்தை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.
    உடன்குடி:

    கடலில் மீன்வளத்தை பேணிக்காத்திட தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் கிழக்கு கடற்கரை பகுதியில் ஏப்ரல் 15-ந் தேதி தொடங்கி ஜூன் 14-ந்தேதி வரையிலும், மேற்கு கடற்கரை பகுதியில் ஜூன் 1-ந்தேதி தொடங்கி ஜூலை 31 வரையிலும் மொத்தம் 61 நாட்களுக்கு மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டு வருகிறது.

    அப்போது மீன்பிடி விசைப்படகுகள், இழுவைப்படகுகளில் மீன்பிடிப்பு செய்யும் பணியாளர்கள் மற்றும் முழுநேர மீன்பிடிப்பினை சார்ந்த மீனவ குடும்பங்கள் முற்றிலுமாக தொழிலின்றி வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதால் மீனவர்கள் தங்களது குடும்பத்தினை சிரமமின்றி நடத்திச் செல்ல குடும்பம் ஒன்றுக்கு தலா ரூ.5000 மீன்பிடி தடைக்கால நிவாரணமாக வழங்கப்படுகிறது.

    இந்த ஆண்டிற்கான மீன்பிடி தடைக்காலத்தில் தமிழகத்தில் உள்ள 14 கடலோர மாவட்டங்களில் உள்ள 1.90 லட்சம் கடல் மீனவ குடும்பங்களுக்கு மீன்பிடிதடைக்கால நிவாரணத் தொகை ரூ.5000- வீதம் ரூபாய் 95.00 கோடி வழங்கப்படும்.

    இத்திட்டத்தினை மீன்வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் திருவள்ளுர், சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களை சேர்ந்த மீனவ குடும்பங்களுக்கு மீன்பிடி தடைக்கால நிவாரண தொகை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக அனுப்பிடும் வகையிலான ஆணைகளை வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில் மீன்வளம் ஆணையர் டாக்டர் பழனிசாமி மற்றும்மீனவர் நலத்துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
    தென்காசி மாவட்டத்தில் கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கான பராமரிப்பு உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    தென்காசி:

     கொரோனா காரணமாக பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு பிரதமரின் பராமரிப்பு திட்டத்தின் கீழ் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியை பிரதமர் மோடி காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.

    தென்காசி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற   நிகழ்ச்சியில் கொரோனாவால் பெற்றோர்களை இழந்த 6 குழந்தைகளுக்கு பிரதரின் பாதுகாப்பு திட்டம் குறித்த விளக்க கையேடு, 5 வருடத்திற்கான மருத்துவ காப்பீட்டு அட்டை, கல்வி உதவித்தொகை,

    பாதுகாப்பு திட்ட சான்றிதழ், ரூ. 10 லட்சத்திற்கான வைப்புநிதி செலுத்தப்பட்ட அஞ்சல் வங்கிக் கணக்கு புத்தகம் ஆகியவை அடங்கிய தொகுப்பை கலெக்டர் கோபால சுந்தரராஜ் வழங்கினார்.

       நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சிக் குழுத்தலைவர் தமிழ்செல்வி போஸ், பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் குணசேகர், முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் சீனிவாசன், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்ட அலுவலர் முத்து மாரியப்பன், மா வட்ட குழந்தை பாது காப்பு அலுவலர் சுப்புலெட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
    • தமிழகத்தில் மிகவும் அதிநவீன கருவிகளுடன் இந்த புற்றுநோய் மருத்துவமனை அமைய உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
    • புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நோயறியதல், சிகிச்சைக்கு பயனுள்ளதாக இந்த மருத்துவமனை இருக்கும்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் அரசின் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் பொதுமக்கள் பங்களிப்புடன் ரூ.60 கோடி மதிப்பில் புற்றுநோய் சிகிச்சை மருத்துவமனை அமைப்பது தொடர்பாக ரோட்டரி சங்கம், அரிமா சங்கம், தன்னார்வலர்கள், தொழில் அமைப்பினருடன் ஆலோசனைக்கூட்டம் திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.

    கூட்டத்துக்கு செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி ஆகியோர் தலைமை தாங்கினார்கள். கலெக்டர் வினீத், மேயர் தினேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். புற்றுநோய் மருத்துவமனையில் பெட் ஸ்கேன் கருவி ரூ.5 கோடி மதிப்பிலும், 38 படுக்கை வசதியுடன் கூடிய இரு அறைகள், 2 அறுவை சிகிச்சை அரங்கம், புற்றுநோயியல் அரங்கம், கேத் ஆய்வகம், ஆய்வக கருவிகள், 9 மினி ஆய்வக அறைகள், 16 மருத்துவ அறைகள், ஒரு லினியர் ஆக்ஸிலரேட்டர் ஆகியவை அமைக்கப்பட உள்ளது. தமிழகத்தில் மிகவும் அதிநவீன கருவிகளுடன் இந்த புற்றுநோய் மருத்துவமனை அமைய உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

    கூட்டத்தில் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசியதாவது:-

    புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நோயறியதல், சிகிச்சைக்கு பயனுள்ளதாக இந்த மருத்துவமனை இருக்கும். நமக்கு நாமே திட்டத்தின் கீழ் திருப்பூர் மாநகராட்சி இணைந்து 67 சதவீத பங்களிப்பு நிதியாகவும், தன்னார்வலர்கள், அமைப்பினர், பொதுமக்கள் பங்களிப்புடன் 33 சதவீதமும் திரட்டி ரூ.60 கோடியில் செயல்படுத்தப்பட உள்ளது.

    முதல்கட்டமாக மருத்துவ உபகரணங்களை வாங்கக்கூடிய சூழ்நிலையை உருவாக்க வேண்டும். நமது தொகையை செலுத்தி அரசின் பங்குத்தொகையையும் செலுத்தி, உட்கட்டமைப்பு மற்றும் மருத்துவ பரிசோதனை கருவிகளுக்கு இந்த மாத இறுதிக்குள் மொத்த தொகையையும் செலுத்தி மருத்துவ உபகரணங்களை வாங்க வேண்டும். பொதுமக்களின் பங்களிப்பாக இதுவரை ரூ.4½ கோடி நிதி வந்துள்ளது. மீதமுள்ள நிதியை திரட்ட அனைத்து தன்னார்வ அமைப்புகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். பொதுமக்கள் தங்களால் முடிந்த அளவு நிதியை வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மேயர் தினேஷ்குமார் பேசும்போது, புற்றுநோய் மருத்துவமனை கட்டிடம் அமைப்பதற்கான திட்ட மதிப்பீடுகளை பொதுப்பணித்துறை அதிகாரிகள் வழங்க வேண்டும். அவற்றை பெற்று முதல்கட்டமாக கட்டிட பணிகளை தொடங்கி விட்டால் தன்னார்வலர்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டு தொடர்ந்து நிதி அளிப்பார்கள். அதனால் கட்டிட பணியை தொடங்குவதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும்' என்றார்.கூட்டத்தில் துணை மேயர் பாலசுப்பிரமணியம் ரூ.10 லட்சம், மேற்கு ரோட்டரி சங்கம் சார்பில் ரூ.5 லட்சம் காசோலைகளை வழங்கினார்கள். அனைத்து ரோட்டரி சங்கத்தின் சார்பில் ரூ.10 கோடி வழங்குவதற்கு ஒப்புதல் தெரிவித்தனர்.

    இதைத்தொடர்ந்து மாற்றுத்திறனாளிகளுக்கான குறைகேட்பு முகாமில் கோரிக்கை மனுக்களை பெற்று அதில் மாற்றுத்திறனாளிளுக்கான அடையாள அட்டைகளை அமைச்சர்கள் வழங்கினார்கள்.

    கூட்டத்தில் மாநகராட்சி ஆணையாளர் கிராந்திகுமார் பாடி, திருப்பூர் சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன், திருப்பூர் மாநகராட்சி 4-வது மண்டல தலைவர் இல.பத்மநாபன், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க பொதுச்செயலாளர் இளங்குமரன், திருப்பூர் பிரிண்டிங் அசோசியேசன் தலைவர் ஸ்ரீகாந்த், சைமா சங்க பொதுச்செயலாளர் கீதாஞ்சலி கோவிந்தப்பன், டைஸ் அண்ட் கெமிக்கல்ஸ் சங்க தலைவர் நாகேஷ், பில்டர்ஸ் அசோசியேசன் தலைவர் ஸ்டாலின் பாரதி, நிட்மா சங்க இணை செயலாளர் ராமகிருஷ்ணன், விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்கள், அரிமா சங்கத்தினர், ரோட்டரி சங்கத்தினர் பங்கேற்றனர்.

    • ப்ரண்ட்லைன் மில்லேனியம் பள்ளியில்தான் உத்சவ் (ஜாய் ஆப் கிவ்விங்) வார விழா கொண்டாடப்பட்டது.
    • உரிய நேரத்தில் உதவிதேவைப்படுகி றவர்களுக்கு உதவி செய்வோம் என உறுதி எடுத்துக்கொண்டனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் ப்ரண்ட்லைன் மில்லேனியம் பள்ளியில்தான் உத்சவ் (ஜாய் ஆப் கிவ்விங்) வார விழா கொண்டாடப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர். பாலசுப்பிரமணியன் மற்றும் பரசுராமன் ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவில் பள்ளி மாணவ- மாணவிகள் முதியோர் இல்லங்களுக்கு உதவிடும் வகையில், ரூ.2.15 லட்சம் நிதி திரட்டி தானம் வழங்கினர்.

    தங்களது இந்த செயலால் முதியோர்கள் எவ்வாறு பயனடைவார்கள் என்பதை அறிந்துகொண்டனர். மேலும், உரிய நேரத்தில் உதவிதேவைப்படுகி றவர்களுக்கு உதவி செய்வோம் என உறுதி எடுத்துக்கொண்டனர். மாணவர்கள் திரட்டிய நிதி 600 முதியோர் இல்லங்களை பராமரித்து வரும் ஹெல்ப் ஏஜ் இந்தியா முதியோர் இல்லங்களின் பிரதி நிதி ரேச்சல் சாம்சனிடம் வழங்கப்பட்டது. நிதி வழங்கும் நிகழ்ச்சி பள்ளியில் 2007ம் ஆண்டு முதல் தொடங்கி

    நடந்து வருகிறது. பள்ளியின் தாளாளர் சிவசாமி, செயலாளர் சிவகாமி, இயக்குனர் சக்தி நந்தன், துணைச்செயலாளர் வைஷ்ணவி நந்தன் மற்றும் முதல்வர் லாவண்யா ஆகியோர் நிதி வழங்கிய மாணவ, மாணவிகளை பாராட்டினர்.

    • தமிழகத்தில் 100 நாள் வேலைத் திட்டத்தில் மிக அதிக வேலை வாய்ப்பை தருவது திருப்பூா் மாவட்டம் தான். .
    • மத்திய அரசு இந்தத் திட்டத்துக்கு வழங்க வேண்டிய ரூ.11 ஆயிரம் கோடியை நிறுத்தி வைத்துள்ளதால் 8 மாநிலங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

    திருப்பூர் :

    கோவை மக்களவை உறுப்பினா் பி.ஆர்.நடராஜன் இடுவாய் ஊராட்சிக்குட்பட்ட சீராணம்பாளையம் கிராமத்தில் 100 நாள் வேலை திட்டப்பணிகளை பாா்வையிட்டு,பெண் தொழிலாளா்களிடம் பணிகள், ஊதியம் மற்றும் அவா்களது குறைகள் குறித்து கேட்டறிந்தாா்.

    அப்போது அவா் பேசியதாவது:-

    மத்திய, மாநில அரசுகளிடம் மக்கள் என்ன கோரிக்கை வைக்கிறாா்கள் என்பதை அறிந்து அரசின் கவனத்துக்கு கொண்டு செல்வதற்காகவே மக்கள் சந்திப்பு இயக்கத்தைத் தொடக்கியுள்ளேன்.

    இடுவாய் ஊராட்சியில் 100 நாள் வேலைத் திட்டப் பணிகள் மறுக்கப்படாமல் வழங்குவதுடன், நிா்ணயிக்கப்பட்ட ஊதியமும் வழங்கப்படுகிறது. தமிழகத்தில் 100 நாள் வேலைத் திட்டத்தில் மிக அதிக வேலை வாய்ப்பை தருவது திருப்பூா் மாவட்டம் தான்.

    அதே வேளையில் மத்திய அரசு இந்தத் திட்டத்துக்கு வழங்க வேண்டிய ரூ.11 ஆயிரம் கோடியை நிறுத்தி வைத்துள்ளதால் 8 மாநிலங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.அதேபோல மக்களவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியையும் கடந்த 2 ஆண்டுகளாக மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது.ஆகவே வரும் மக்களவை கூட்டத்தொடரில் 100 நாள் வேலைத் திட்ட நிலுவைத் தொகை, மக்களவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதி ஆகியவற்றை ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தப்படும் என்றாா்.  

    பல்வேறு சம்பவங்களில் உயிரிழந்த 25 தீயணைப்பு வீரர்கள் குடும்பத்துக்கு நிதி உதவி வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். #TNCM #Edappadipalaniswami

    சென்னை:

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    ஈரோடு தீயணைப்பு நிலைய வீரராக பணியாற்றி வந்த பழனிசாமி, கோயம்புத்தூர் (தெற்கு) தீயணைப்பு நிலைய டிரைவர் தேவராஜ், அந்தியூர் தீயணைப்பு நிலைய அலுவலராக பணிபுரிந்து வந்த மதனகோபால், கோத்தகிரி தீயணைப்பு நிலையத்தில் முன்னணி வீரர் கணேசன், தென்காசி தீயணைப்பு நிலைய முன்னணி தீயணைப்பு வீரர் மாரிமுத்து, ஒரத்தநாடு தீயணைப்பு நிலைய வீரர் அர்ச்சுணன், தாராபுரம் தீயணைப்பு நிலைய வீரர் சேகர், வழுதூர் தீயணைப்பு நிலைய தீயணைப்பாளர் போஸ், தூத்துக்குடி சிப்காட் தீயணைப்பு நிலைய தீயணைப்பாளர் கந்தசாமி, கோபி செட்டிபாளையம் தீயணைப்பு நிலைய முன்னணி தீயணைப்பாளர் ஆபிரகாம்.

    கோயம்புத்தூர் (தெற்கு) தீயணைப்பு நிலையத்தின் தீயணைப்பாளர் சசிகுமார், அருப்புக்கோட்டை தீயணைப்பு நிலைய தீயணைப்பாளர் சற்குணநாதன் மற்றும் முன்னணி தீயணைப்பாளர் பன்னீர்செல்வம், திண்டுக்கல் தீயணைப்பு நிலைய முன்னணி தீயணைப்பாளர் சின்னராஜ், சிவகாசி தீயணைப்பு நிலைய முன்னணி தீயணைப்பாளர் துரைப்பாண்டி,

    விருதுநகர் தீயணைப்பு நிலைய தீயணைப்பு டிரைவர் செல்லத்துரை, பேராவூரணி தீயணைப்பு நிலைய தீயணைப்பாளர் சதீஷ்குமார், கள்ளிக்குடி தீயணைப்பு நிலைய முன்னணி தீயணைப்பாளர் மாயாண்டி, ஆற்காடு தீயணைப்பு நிலைய முன்னணி தீயணைப்பாளர் மனோகரன், பள்ளிப்பட்டு தீயணைப்பு நிலைய அலுவலர் குப்புசாமி, ஈரோடு தீயணைப்பு நிலைய முன்னணி தீயணைப்பாளர் அல்லிமுத்து,

    மங்களம்பேட்டை தீயணைப்பு நிலைய முன்னணி தீயணைப்பாளர் ராமசந்திரன், ராஜபாளையம் தீயணைப்பு நிலைய டிரைவர் ஸ்ரீதரன், காட்டுமன்னார் கோயில் தீயணைப்பு நிலைய தீயணைப்பாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் உடல் நலக்குறைவால் காலமானார்கள் என்ற செய்தியையும் அறிந்து நான் மிகவும் வேதனை அடைந்தேன்.

    தீயணைப்பு - மீட்புப் பணிகள் துறையில் பணி புரிந்து உயிரிழந்த நிலைய அலுவலர், தீயணைப்பாளர் மற்றும் டிரைவர் ஆகியோரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    மேற்கண்ட பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்த 25 தீயணைப்பாளர்களின் குடும்பத்தினருக்கு தலா மூன்று லட்சம் ரூபாய் முதல்- அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.  #TNCM #Edappadipalaniswami

    ×