என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Furniture Shop"
- கடையில் இருந்து தீ பரவி வருவதாக அப்பகுதி மக்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர் .
- மின்கசிவு காரணமாக தீ விபத்து நடந்ததா அல்லது வேறு ஏதாவது காரணமா என வீரப்பன்சத்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு பெரியவலசு கொங்கு நகர் 3-வது வீதியை சேர்ந்தவர் பொன்னுசாமி. இவர் அதே பகுதியில் கடந்த பல வருடங்களாக வீடு மற்றும் கடைகளுக்கு தேவையான பர்னிச்சர் பொருள்களை தயார் செய்து விற்பனை செய்து வருகிறார்.
இவரது கடையில் சுமார் 5-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். கடையில் மர சாமான்கள் அதிக அளவில் இருந்தன.
இந்நிலையில் பொன்னுசாமி நேற்று இரவு வேலையை முடித்து விட்டு வழக்கம்போல் கடையை பூட்டி சென்று உள்ளார். இந்த நிலையில் நள்ளிரவு 2 மணி அளவில் இவரது கடையில் இருந்து தீ பரவி வருவதாக அப்பகுதி மக்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர் .
சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்க போராடினர். மர சாமான்கள் மற்றும் எந்திரங்கள் அதிக அளவில் இருந்ததால் தீ கொளுந்து விட்டு எரிந்தது.
தீயணைப்பு வீரர்கள் சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். எனினும் இந்த தீ விபத்தில் கடையில் இருந்த ரூ.10 லட்சம் மதிப்புள்ள மர பொருள்கள் மற்றும் மிஷின்கள் முற்றி லும் சேதம் அடைந்தன.
மின்கசிவு காரணமாக தீ விபத்து நடந்ததா அல்லது வேறு ஏதாவது காரணமா என வீரப்பன்சத்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நல்ல வேலையாக தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயல்பட்டதால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. தீ விபத்து நடந்த பர்னிச்சர் கடையை சுற்றி ஏராளமான குடியிருப்புகளும் இருந்தன.
- சதீஷ்குமார் எட்டயபுரம்- விளாத்திகுளம் செல்லும் சாலையில் பர்னிச்சர் கடை நடத்தி வருகிறார்.
- இந்நிலையில் மின் கசிவால் பர்னிச்சர் கடை தீப்பிடித்து எரிந்தது.
எட்டயபுரம்:
எட்டையாபுரம் நடுவிற் பட்டியைச் சேர்ந்த சரவணன் மகன் சதீஷ்குமார் (வயது 41) என்பவர் எட்டயபுரம்- விளாத்திகுளம் செல்லும் சாலையில் பர்னிச்சர் கடை நடத்தி வருகிறார். நேற்று வழக்கம்போல் கடையை மூடிவிட்டு வீட்டுக்கு சென்றுள்ளார். நேற்று இரவு 7 மணியில் இருந்து மழை தொடர்ந்து பெய்து வந்தது. இந்நிலையில் மின் தடை ஏற்பட்டு மீண்டும் வந்தது.
இந்நிலையில் மின் கசிவால் பர்னிச்சர் கடை தீப்பிடித்து எரிந்தது. இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் கடை உரிமையாளர் சதீஷ்குமாருக்கும் , தீயணைப்பு வீரர்களுக்கும் தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் தகவல் அறிந்தவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். இந்த விபத்தால் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது.
மேலும் இது குறித்து எட்டையபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மின் கசிவால் விபத்து ஏற்பட்டதா? அல்லது மர்ம நபர்கள் தீ வைத்தனரா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பீரோவில் வைத்திருந்த 14.3/4 பவுன் தங்க நகைகள் மற்றும் ரொக்கம் ரூ.2 லட்சத்து 22 ஆயிரம் திருட்டு போனது.
- வெள்ளகோவில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வெள்ளகோவில் :
முத்தூர் சின்னமுத்தூர் ரோட்டில் வசித்து வருபவர் பழனிச்சாமி (வயது69). பர்னிச்சர் கடை வைத்துள்ளார். இவரும் அவரது மனைவி விஜயலெட்சுமி நேற்று காலை வீட்டை பூட்டிவிட்டு வேலாயுதம்பாளையத்தில் உள்ள தோட்டத்திற்கு சென்று விட்டு பிறகு மாலை வீட்டிற்கு வந்துள்ளனர்.
அப்போது வீட்டின் முன் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த 14.3/4 பவுன் தங்க நகைகள் மற்றும் ரொக்கம் ரூ. 2 லட்சத்து 22 ஆயிரம் திருட்டு போனது தெரியவந்தது. இது குறித்து பழனிசாமி அளித்த புகாரின் பேரில் வெள்ளகோவில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்