என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ganesha Chaturthi festival"

    • பெரும்பாறை பகுதியில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது.
    • இதில் வானவேடிக்கை, மேளதாளங்களுடன் சாமி ஊர்வலம் நடைபெற்றது

    பெரும்பாறை:

    திண்டுக்கல் மாவட்டம் பெரும்பாறை பகுதியில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. விழாவை யொட்டி பெரும்பாறை, மஞ்சள்பரப்பு, கொங்கபட்டி, புதூர், எம்.ஜி.ஆர். நகர், புல்லாவெளி கிராமத்தில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது.

    பின்னர் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு கணபதி ஹோமம், மகா அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பின்னர் இளைஞர்கள், சிறுவர்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

    பெண்கள் முளைப்பாரி ஊர்வலத்துடன் விநாயகர் சிலை கோவிலில் இருந்து புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக கொண்டு செல்லப்பட்டு தடியன்குடிசை ஆற்றில் கரைக்கப்பட்டன.

    இந்த ஊர்வலத்தின் வழி நெடுகிலும் வாணவேடிக்கை, மேளதாளம் மற்றும் ஆண்கள், பெண்கள் ஆட்டம் பாட்டத்துடன் சென்றனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • ஒபோலீசாருக்கு எஸ்.பி. உத்தரவு
    • 100-க்கும் மேற்பட்ட போலீசார் கலந்து கொண்டனர்

    வாணியம்பாடி:

    வாணியம்பாடி அம்பூர்பேட்டை அடுத்த பாவடிதோப்பு பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், விநாயகர் சதுர்த்தி விழாவிற்கான பாதுகாப்பு பணிகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் திருப்பத்தூர் எஸ்.பி. பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.

    இந்த ஆலோசனை கூட்டத்தில் வாணியம்பாடி போலீஸ் சரக்கத்திற்குட்பட்ட வாணியம்பாடி, ஆலங்காயம், நாட்டறம்பள்ளி, திம்மம்பேட்டை மற்றும் அம்பலூர் போலீஸ் நிலையங்களில் பணிபுரியும் 100-க்கும் மேற்பட்ட போலீசார் கலந்து கொண்டனர்.

    கூட்டத்திற்கு வாணியம்பாடி டி.எஸ்.பி. சுரேஷ் பாண்டியன் முன்னிலை வகித்தார்.

    இன்ஸ்பெக்டர்கள் பழனி, நாகராஜ், அருண்குமார், செல்லபாண்டியன், ஜெயலட்சுமி, தமிழரசி, மற்றும் சாந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் கலந்துகொண்ட எஸ்.பி. விநாயகர் சதுர்த்தி விழாவினை எந்த ஒரு அசம்பாவித சம்பவங்களும் சட்ட ஒழுங்கு பிரச்சினைகளும் ஏற்படாமல் சிறப்பான பாதுகாப்பு பணியை மேற்கொள்ளும் படி போலீசாருக்கு அறிவுரை வழங்கினார்.

    ×