என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ganja sale"
- சேசையாபுரம் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் அபினேஷ், போலீசார் ரோந்து சென்றனர்.
- கஞ்சாவை பதுக்கி விற்பனை செய்த இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
களக்காடு:
ஏர்வாடி சப்-இன்ஸ்பெக்டர் அபினேஷ் மற்றும் போலீசார் சேசையா புரம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு ஏர்வாடி உப்பு நடுத்தெருவை சேர்ந்த சதாம் உசேன் (வயது 22), 6-ம் தெருவை சேர்ந்த முகம்மது அலி உசேன் (21) ஆகியோர் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தனர்.
இதையடுத்து போலீசார் இருவரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 500 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
- கடந்த சில நாட்களாக ஆஸ்பத்திரி நுழைவு வாயில் பகுதியில் மின் விளக்கு இல்லாததால் இருள் அடைந்து காணப்படுகிறது.
- இருளை பயன்படுத்தி இரவு நேரத்தில் கஞ்சா மற்றும் மது விற்பனை கள்ள ச்சந்தையில் அமோகமாக நடைபெற்று வருகிறது.
சின்னமனூர்:
சின்னமனூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் பல்வேறு சிகிச்சைக்காக வருகின்றனர். இதனால் ஆஸ்பத்திரி வளாகம் எப்துபோதும் பரபரப்பாக காணப்படும். கடந்த சில நாட்களாக ஆஸ்பத்திரி நுழைவு வாயில் பகுதியில் மின் விளக்கு இல்லாததால் இருள் அடைந்து காணப்படுகிறது.
இதனால் ஆஸ்பத்திரிக்கு வரும் நோயாளிகள் மற்றும் அவர்களுக்கு துணையாக உள்ள உறவினர்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இருளை பயன்படுத்தி இரவு நேரத்தில் கஞ்சா மற்றும் மது விற்பனை கள்ள ச்சந்தையில் அமோகமாக நடைபெற்று வருகிறது. எனவே ஆஸ்பத்திரி நிர்வாகம் மற்றும் போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து கஞ்சா, மது விற்கும் கும்பலை கைது செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- பொதிகை நகர் பகுதியில் நின்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து போலீசார் விசாரித்தனர்.
- அருணாச்சலத்திடம் இருந்து கஞ்சா,மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர்
நெல்லை:
பாளை பெருமாள்புரத்தில் சப்-இன்ஸ்பெக்டர் அருணாச்சலம் தலைமை யிலான போலீசார் ரோந்து சென்றனர். பொதிகை நகர் பகுதியில் உள்ள தனியார் பள்ளி அருகே சென்றபோது அங்கு சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். அதில் அவர் பாளை மனக்காவலம் பிள்ளை நகரை சேர்ந்த அருணாச்சலம் (வயது 24) என்பதும், அவர் கஞ்சா விற்பனை செய்ததும் தெரிய வந்தது.
இதையடுத்து அவரை சோதனை செய்தபோது அவரிடம் கஞ்சா மற்றும் விற்ற பணம் ரூ. 1400 உள்ளிட்டவை இருந்தது. அவற்றையும், விற்பனைக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். அருணாச்சலத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
- உவரி இன்ஸ்பெக்டர் பிரேமா, சப்- இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
- முத்துகிருஷ்ணன் ,ராமன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
திசையன்விளை:
உவரி இன்ஸ்பெக்டர் பிரேமா, சப்- இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது உவரியில் உள்ள பள்ளிக்கூடம் அருகே கஞ்சா பொட்டலங்களை விற்பனை செய்து கொண்டிருந்த உடன்குடி தேரியூரை சேர்ந்த முத்துகிருஷ்ணன் (வயது 19), அதே ஊரை சேர்ந்த ராமன் (வயது 33) என்பவரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 1 கிலோ 500 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
இதுதொடர்பாக தேரியூரை சேர்ந்த குருசாமி (வயது 21), உவரி ராஜா தெருவை சேர்ந்த ஜெயந்தன் (வயது 40) ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர். விசாரணையில் இவர்கள் கஞ்சா மொத்த வியாபாரிகள் என தெரியவந்தது.
பாகூர்:
புதுவையில் நகர பகுதியில் மட்டுமே நடைபெற்று வந்த கஞ்சா வியாபாரம் தற்போது கிராமப்புற பகுதிகளிலும் பரவி உள்ளது. மாணவர்கள் மற்றும் இளைஞர்களை சீரழிக்கும் இந்த கஞ்சா விற்பனையை போலீசார் தடுக்க நடவடிக்கை எடுத்தாலும் அதனை முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லை.
இந்த நிலையில் பாகூர் அருகே சோரியாங்குப்பம் நவாதோப்பு பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக பாகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவுதம்சிவகணேசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது உத்தரவின் பேரில் கஞ்சா வியாபாரியை கைது செய்ய பாகூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயகுருநாதன் மற்றும் போலீசார் சாதாரண உடையில் நவாதோப்பு பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அதுபோல் நேற்று மாலை நவாதோப்பு பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டபோது அங்கு வந்த ஒரு வாலிபர் போலீஸ் கண்காணிப்பதை தெரிந்து கொண்டு அங்கிருந்து தப்பி ஓடினார். ஆனால் அந்த வாலிபரை போலீசார் விரட்டி சென்று மடக்கி பிடித்தனர். அப்போது அவரது சட்ட பையில் சோதனையிட்ட போது சிறு, சிறு பொட்டலங்களாக கஞ்சா இருந்தது. மொத்தம் 420 கிராம் கஞ்சா விற்பனைக்காக வைத்திருந்தார்.
இதையடுத்து கஞ்சாவை பறிமுதல் செய்து அந்த வாலிபரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் கடலூர் ஆல்பேட்டையை சேர்ந்த சின்னதம்பி என்ற லட்சுமணன் (வயது33) என்பதும் இவர் மீது புதுவை உருளையன்பேட்டை, முதலியார்பேட்டை மற்றும் கடலூர்- சிதம்பரம் பகுதியில் 15-க்கும் மேற்பட்ட கொள்ளை, திருட்டு வழக்குகள் உள்ளதும் தெரியவந்தது.
இதையடுத்து சின்னத்தம்பியை போலீசார் கைது செய்தனர். மேலும் இவருக்கு கஞ்சா சப்ளை செய்யும் கும்பல் யார் என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்