search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "garbage bin"

    • பொங்காளி அம்மன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்வது வழக்கம்.
    • குப்பை தொட்டி வைத்தது, கோவிலின் புனித தன்மையை கெடுக்கும் வகையில் உள்ளது.

    குனியமுத்தூர்,

    கோவை-பொள்ளாச்சி ரோடு குறிச்சி குளக்கரையில் பொங்காளி அம்மன் கோவில் உள்ளது.

    இந்த கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்வது வழக்கம். வாராவாரம் வெள்ளிக்கிழமை அன்று, பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அம்மனை தரிசனம் செய்து விட்டு செல்வார்கள்.

    கோவையை காக்கும் கோனியம்மன் என்பது போன்று, குறிச்சி, சுந்தராபுரம் பகுதி மக்களை காக்கும் குறிச்சி பொங்காளியம்மன் என்று பக்தர்களால் இந்த கோவில் போற்றப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் இந்த கோவிலின் முன்பு, மாநகராட்சி சார்பில் குப்பைத்தொட்டி வைக்கப்பட்டுள்ளது. இது பக்தர்கள் மத்தியில் கடும் அதிருப்தியையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து கோவிலுக்கு வரும் பக்தர்கள் கூறியதாவது:-

    குறிச்சியில் அமைந்துள்ள பொங்காளியம்மன் மிகவும் சக்தி வாய்ந்த அம்மன். இந்த வழியே செல்லும் அனைவரும் இந்த கோவிலுக்கு வந்து அம்மனை தரிசனம் செய்து விட்டே செல்வார்கள்.

    இந்நிலையில் கோவிலுக்கு முன்பாக அம்மனின் கருவறைக்கு நேர் எதிரே குப்பை தொட்டி வைக்கப்பட்டுள்ளது. இது அதிர்ச்சியாக உள்ளது.

    கோவில் முன்பு குப்பை தொட்டி வை த்தது, கோவிலின் புனித தன்மையை கெடுக்கும் வகையில் உள்ளது. எனவே கோவில் கருவறைக்கு நேர் எதிரே வைக்கப்பட்டிருக்கும் அந்த குப்பைத் தொட்டியை அகற்றி, குளத்தை ஒட்டி வைத்தால், கோவிலின் புனித தன்மை பாதுகாக்கப்படும். கோவிலின் முன்பாக சிதறி கிடக்கும் குப்பைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு ஒரு வழியாகும். எனவே கோவை மாநகராட்சி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    • ஆற்றில் குளிப்பவர்களும் பாதிக்கின்றனர்.
    • கழிவுகளை கொட்ட விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

    மடத்துக்குளம் :

    மடத்துக்குளம் தாலுகா கொழுமம் கொமரலிங்கம் பகுதியில் அமராவதி ஆற்றங்கரையை ஒட்டி, அதிகளவு குடியிருப்புகள் உள்ளன.மேலும் கொழுமம் ஆற்றுப்பாலத்தை ஒட்டி ஆற்றில் சடங்குகள், செய்ய, நாள்தோறும் நூற்றுக்கணக்கானவர்கள் வந்து செல்கின்றனர்.இவ்வாறு வருபவர்கள் ஆற்று நீரில், பழைய துணி உள்ளிட்ட கழிவுகளை நேரடியாக வீசிவிடுகின்றனர். இதனால் தரை மட்ட பாலம் உள்ளிட்ட இடங்களில் இத்தகைய கழிவுகள் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. ஆற்று நீரும் மாசுபடுகிறது.ஆற்றில் குளிப்பவர்களும் பாதிக்கின்றனர். இப்பிரச்னைக்கு தீர்வாக சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் சார்பில், ஆற்றின் கரையில் ஆங்காங்கே சேகரிப்பு தொட்டிகள் வைத்து அதில் கழிவுகளை கொட்ட விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    சிவகாசியில் குப்பைகளை தொட்டியில் கொட்டுவதற்கு நகராட்சி நிர்வாகம் நூதன ஏற்பாடு செய்து உள்ளது.
    சிவகாசி:

    சிவகாசி நகராட்சி பகுதியில் 33 வார்டுகள் உள்ளன. இந்த பகுதியில் இருந்து மட்டும் தினமும் 44 டன் குப்பைகள் சேகரிக்கப்படுவதாக கூறப்படுகிறது. சிவகாசி நகராட்சிக்கு என 195 துப்புரவு பணியாளர்கள் ஒதுக்கப்பட்ட நிலையில் தற்போது 140-க்கும் குறைவான தொழிலாளர்கள் தான் இருக்கிறார்கள்.

    இந்த நிலையில் சிவகாசியில் உள்ள முக்கிய சந்திப்புகளில் வைக்கப்பட்ட குப்பைத் தொட்டிகளில் அப்பகுதியினர் குப்பைகளை கொட்டாமல் குப்பைத் தொட்டிகளின் வெளியே கொட்டும் நிலை தொடர்ந்து வந்தது. இதனால் அந்த குப்பைத் தொட்டியின் வெளியே ஆடு, மாடு, நாய், பன்றிகள் கூட்டமாக வந்து கழிவுப் பொருட்களை சாப்பிட்டு குப்பைகளை சாலையின் எல்லா பக்கங்களுக்கும் சிதறி விட்டுச் சென்று விடுகினற்ன. இதனால் அந்தப் பகுதியில் துர்நாற்றம் வீசியது. மேலும் நோய் பரவ வாய்ப்பு ஏற்பட்டது.

    இந்த நிலையில் குப்பைகளை பொதுமக்கள் தொட்டியின் உள்ளே கொட்டாமல் வெளியே கொட்டி வருவதை தடுக்க நகராட்சி அதிகாரிகளின் ஆலோசனையின் பேரில் தற்போது ஒவ்வொரு குப்பை தொட்டியின் அருகிலும் பெரிய அளவில் கோலம் வரையப்பட்டு உள்ளது. இதனால் அந்த பகுதியில் உள்ள மக்கள் குப்பைகளை அந்த கோலத்தின் மீது கொட்டாமல் குப்பை தொட்டிகளில் கொட்டி வருகிறார்கள்.

    கமிஷனர் அசோக் குமாரின் நடவடிக்கைக்கு சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. தொடக்கத்தில் இதை பின் பற்ற பொதுமக்கள் தயங்கினாலும் காலப்போக்கில் இதை பொதுமக்கள் பின்பற்றி குப்பைகளை தொட்டியில் போட முன் வருவார்கள் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். 
    ×