என் மலர்
நீங்கள் தேடியது "Giorgia Meloni"
- இத்தாலியின் முதல் பெண் பிரதமராக ஜார்ஜியா மெலோனி கடந்த வாரம் பதவியேற்றார்.
- ரஷிய போரில் அமைதிக்கான ஒரே வழி உக்ரைனுக்கு உதவுவதுதான் என மெலோனி தெரிவித்தார்.
ரோம்:
இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி அந்நாட்டு பாராளுமன்றத்தில் உரையாற்றினார்.
ரஷியாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே அமைதி ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதற்கு, ராணுவ ரீதியாக தற்காத்துக் கொள்ள உக்ரைனுக்கு உதவ வேண்டும் என்று இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
மெலோனியின் கூட்டணி கட்சிகள் ரஷிய அதிபர் புதினுடனான நட்பு காரணமாக போர் விவகாரத்தில் தெளிவற்று இருந்த போதிலும், பிரதமர் மெலோனி பலமுறை உக்ரைனுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இத்தாலியின் முதல் பெண் பிரதமராக ஜார்ஜியா மெலோனி கடந்த வாரம் பதவியேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
- பிரதர்ஸ் ஆஃப் இத்தாலியின் சந்திப்பில் ரிஷி சுனக், எலான் மஸ்க் ஆகியோரும் பங்கேற்றனர்
- ஐரோப்பிய கலாச்சாரம் மதிக்கும் கோட்பாடுகளும், அளிக்கும் உரிமைகளும் உயர்வானவை என்றார் மெலோனி
மத்திய தரைக்கடல் பகுதி வழியாக ஐரோப்பாவிற்குள் தஞ்சம் புக அகதிகள் சிறு கப்பல்கள் மூலம் தினசரி வந்து கொண்டே இருக்கிறார்கள். சமீப சில காலங்களாக இவ்வாறு நுழையும் அகதிகளால் உள்நாட்டில் சட்ட சிக்கல்கள் ஏற்படுவதாக விமர்சனங்கள் எழுந்தன. பல ஐரோப்பிய நாடுகளின் தேர்தல்களில் வாக்குகளை ஈர்க்க இதை ஒரு விவாத பொருளாக சில தலைவர்கள் முன்னெடுத்தனர்.
சட்ட விரோதமாக ஐரோப்பிய நாடுகளில் நுழைவதை கட்டுப்படுத்த கடுமையான முடிவுகளை எடுக்க அந்நாடுகளின் தலைவர்கள் பல கட்டமாக சந்தித்து வருகின்றனர்.
அகதிகள் நுழைவதை கட்டுப்படுத்த இத்தாலி தலைநகரான ரோம் நகரில், Giorgio Meloni) தீவிர வலது சாரி அமைப்பான பிரதர்ஸ் ஆஃப் இத்தாலி (Brothers of Italy) அமைப்பு ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் ஜியோர்ஜியோ மெலோனி (உரையாற்றினார். இதில் இங்கிலாந்தின் பிரதமர் ரிஷி சுனக் மற்றும் அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க் ஆகியோரும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தனது உரையில் மெலோனி தெரிவித்ததாவது:
நமது கலாச்சாரத்துடன் இஸ்லாமிய கலாச்சாரம் இணைவது கடினம் என நான் நினைக்கிறேன். இத்தாலியில் உள்ள பல இஸ்லாமிய கலாச்சார மையங்கள் சவுதி அரேபியாவின் நிதியுதவியால் நடப்பவை என்பதை நான் கவனிக்காமல் இல்லை. சவுதி அரேபியா நாட்டில் மத கோட்பாடுகளை கை விடுவது, தன்பாலின சேர்க்கை போன்றவைகளுக்கு மரண தண்டனை, கல்லெறி தண்டனை போன்றவற்றை வலியுறுத்தும் ஷரியா (Sharia) சட்டம் கடைபிடிக்கப்படுகிறது. அந்த கலாச்சாரத்தை ஐரோப்பிய நாடுகளில் அவர்கள் புகுத்த நினைக்கிறார்கள். ஆனால், ஐரோப்பிய நாகரிகம் பல தசாப்தங்களாக வளர்த்து வந்த மதிப்புக்குரிய அம்சங்களிலிருந்தும் மக்களுக்கு அளிக்கும் உரிமைகளிலிருந்து இந்த கலாச்சாரம் மாறுபட்டு நிற்கிறது. நான் ஷரியா சட்டத்தை இத்தாலியில் புகுத்த அனுமதிக்க மாட்டேன்.
இவ்வாறு மெலோனி கூறினார்.
கடந்த 2022 அக்டோபர் முதல் ஐரோப்பியாவின் முக்கிய நாடான இத்தாலியில், பிரதமராக பதவி வகிக்கும் ஜியோர்ஜியா மெலோனி (46), தீவிர வலதுசாரி ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
- "இத்தாலிய என்சைக்ளோபீடியா" 2023 வருடத்திற்கான சொல் என ஃபெமிசைட்-ஐ பட்டியலிட்டது
- கொலை வழக்குகளில் இத்தாலிய நீதிமன்றங்கள் ஆண்களுக்கு குறைவான தண்டனையையே வழங்குகின்றன
2023ல் இத்தாலி நாட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள், தங்கள் கணவர், ஆண் நண்பர், அல்லது தங்களை நன்கு அறிந்து பழகி வரும் அல்லது பழகி பிரிந்த ஆண் ஆகியோரால் கொல்லப்பட்டுள்ளனர்.
இத்தகைய கொலைகளுக்கு "ஃபெமிசைட்" (femicide) என பெயரிடப்பட்டுள்ளது.
"இத்தாலிய என்சைக்ளோபீடியா" (Italian encyclopedia) 2023 வருடத்திற்கான சொல் என ஃபெமிசைட்-ஐ பட்டியலிட்டது குறிப்பிடத்தக்கது.
இத்தாலியின் பிரதமர் "ஜியோர்ஜியா மெலனி" (Giorgia Meloni) ஒரு பெண் எனும் நிலையில், ஃபெமிசைட் குற்றங்களை அவர் கண்டும் காணாமல் இருக்கிறாரா என பெண்ணுரிமைவாதிகள் கேள்வி எழுப்புகின்றனர்.

இத்தகைய பல கொலை வழக்குகளில் இத்தாலிய நீதிமன்றங்களும் ஆண்களுக்கு குறைவான தண்டனையையே வழங்குகிறது.
பாலின சமத்துவத்தில் ஐரோப்பிய நாடுகளில் இத்தாலி மிகவும் பின் தங்கியுள்ளது. குறிப்பாக, ஆணுக்கு சமமான ஊதியம் வழங்கப்படாததால், அந்நாட்டில் பெண்கள் ஆண்களை சார்ந்திருக்கும் நிலையில் உள்ளனர்.
ஐரோப்பாவில், 70களில் நடைபெற்ற பெண்ணுரிமை இயக்க போராட்டங்களில் முன்னிலை வகித்த நாடு இத்தாலி.
ஆனால், அதற்கு பிந்தைய தசாப்தங்களில் அங்கு எவ்வாறு பெண்களுக்கு சமூக பாதுகாப்பு இல்லாத நிலை உருவாகியது என சமூக அறிவியல் நிபுணர்கள் வியப்புடன் கேள்வி எழுப்புகின்றனர்.
தற்போதைய பிரதமரான ஜியோர்ஜியா மெலனி பெண்ணுரிமை அமைப்புகளின் சித்தாந்தங்களில் இருந்து விலகி இருப்பதை இதற்கு முக்கிய காரணமாக அவர்கள் கூறுகின்றனர்.
ரோமானிய நாகரீக காலகட்டத்தில் இருந்தே பல நூற்றாண்டுகளாக பெண்கள் மீது ஆண்கள் தாக்குதல் நடத்துவது இத்தாலி சமூகத்தில் நடைமுறை வாழ்க்கையில் குற்றமாக கருதப்படாத நிலை அங்கு நிலவுவது இதற்கு மற்றொரு காரணம்.
- இத்தாலியில் பணம் செலுத்தியும் அல்லது இல்லாமலும் வாடகைத்தாய் முறை சட்டவிரோதம் என அறிவிக்கப்பட்டிருந்தது.
- ல் வாடகைத்தாய் மூலமாக குழந்தை பெற்று கொள்பவர்களுக்கு தண்டனை விவரம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
ரோம்:
இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியோ மெலோனி, வாடகைத் தாய்மை முறை மனிதாபிமானமற்றது என தெரிவித்துள்ளார். தலைநகர் ரோமில் இளைஞர்களுக்கான மாநாடு நடந்தது.
இதில் அவர் கலந்து கொண்டு பேசியதாவது, "வாடகைத் தாய் ஒரு மனிதாபிமானமற்ற நடைமுறை என நான் நம்புகிறேன். இது சர்வதேச குற்றமாக ஏற்றுக்கொள்ளப்படும் வரை நான் இதற்கு எதிராக தொடர்ந்து போராடுவேன்" என்றார்.
ஏற்கனவே இத்தாலியில் பணம் செலுத்தியும் அல்லது இல்லாமலும் வாடகைத்தாய் முறை சட்டவிரோதம் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் வாடகைத்தாய் மூலமாக குழந்தை பெற்று கொள்பவர்களுக்கு தண்டனை விவரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், ரூ.8 லட்சத்து 36 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படுவதற்கான புதிய சட்டமசோதா அமலுக்கு வந்துள்ளது.
- இத்தாலியில் வரும் 13-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை ஜி-7 உச்சிமாநாடு நடைபெற உள்ளது.
- பிரதமர் மோடி ஜி-7 உச்சி மாநாட்டில் பங்கேற்க இந்த வாரம் இத்தாலி செல்ல இருப்பதாக தகவல் வெளியானது.
புதுடெல்லி:
பாராளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றதை தொடர்ந்து இந்தியாவின் பிரதமராக 3-வது முறை நரேந்திர மோடி பதவியேற்றார். அவரது பதவியேற்பு விழா கடந்த 9-ம் தேதி நடைபெற்றது.
இதற்கிடையே, இத்தாலியில் உள்ள அபுலியா பகுதியில் வரும் 13-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை ஜி-7 உச்சிமாநாடு நடைபெற உள்ளது. இதில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மேக்ரான், ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்கின்றனர். உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி காணொலி வாயிலாக உச்சி மாநாட்டில் பங்கேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பிரதமர் மோடி ஜி-7 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்த வாரம் இத்தாலி செல்ல இருப்பதாக தகவல் வெளியானது. அவர் வரும் 13-ம் தேதி இத்தாலிக்கு புறப்படுவார். 14-ம் தேதி இந்தியாவிற்கு திரும்புவார் என பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆனாலும், பிரதமரின் பயண திட்டம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை.
- ஜி7 கூட்டமைப்பின் 50-வது உச்சி மாநாடு இத்தாலியில் உள்ள அபுலியாவில் நடக்கிறது.
- அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரான்ஸ் பிரதமர் இமானுவல் மேக்ரான் உள்பட பலர் பங்கேற்கின்றனர்.
ரோம்:
அமெரிக்கா, ஜப்பான், கனடா, ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, இங்கிலாந்து ஆகிய நாடுகளை கொண்ட கூட்டமைப்பு ஜி7 ஆகும்.
ஜி7 கூட்டமைப்பின் 50-வது உச்சி மாநாடு இன்று முதல் 15-ம் தேதி வரை இத்தாலியில் உள்ள அபுலியாவில் நடக்கிறது. இந்த மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு பிரதமர் மோடிக்கு இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி அழைப்பு விடுத்தார். அவரது அழைப்பை ஏற்று ஜி7 மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இத்தாலி புறப்பட்டுச் செல்கிறார்.
அமெரிக்க அதிபர் ஜோபைடன், பிரான்ஸ் பிரதமர் இமானுவல் மேக்ரான், ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உள்ளிட்டோர் ஜி7 மாநாட்டில் பங்கேற்கின்றனர். ஜி7 மாநாட்டில் உரையாற்றுவதுடன் ஜி7 உறுப்பு நாடுகளின் தலைவர்களுடனும் தனிப்பட்ட முறையில் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறார்.
இந்நிலையில், ஜி7 மாநாட்டில் பங்கேற்பதற்காக இத்தாலி வந்தடைந்த அமெரிக்க அதிபர் ஜோ பைடனை அந்நாட்டு பிரதமர் ஜார்ஜியா மெலோனி வரவேற்றார்.
இதேபோல், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், பிரான்ஸ் பிரதமர் இம்மானுவல் மேக்ரான், ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, ஜெர்மனி அதிபர் ஆகியோரையும் இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி வரவேற்றார்.
#WATCH | Borgo Egnazia: Italian PM Giorgia Meloni receives US President Joe Biden, as he arrives for the 50th G7 Summit.
— ANI (@ANI) June 13, 2024
(Video Source: Reuters) pic.twitter.com/3wv9SesJps
- ஜி7 மாநாட்டின் முதல் பகுதியான உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி கலந்துகொள்கிறார்.
- பிரதமர் மோடி 3-வது முறை ஆட்சி பொறுப்பேற்ற பிறகு மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டு பயணம் இதுவாகும்.
புதுடெல்லி:
அமெரிக்கா, ஜப்பான், கனடா, ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, இங்கி லாந்து ஆகிய நாடுகளை கொண்ட கூட்டமைப்பு ஜி7 ஆகும்.
ஜி7 கூட்டமைப்பின் 50-வது உச்சி மாநாடு இன்று முதல் 15-ந்தேதி வரை இத்தாலியில் உள்ள அபுலியாவில் நடக்கிறது. இந்த மாநாட்டில் பங்கேற்குமாறு பிரதமர் மோடிக்கு இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி அழைப்பு விடுத்தார்.
இந்நிலையில், இத்தாலி பிரதமரின் அழைப்பை ஏற்று ஜி7 மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று இத்தாலி புறப்பட்டுச் சென்றார்.
தொடர்ந்து 3-வது முறையாக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு மோடி மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டு பயணம் இதுவாகும்.
ஜி7 மாநாட்டின் முதல் பகுதியான உச்சி மாநாட்டில் மட்டும் பிரதமர் மோடி கலந்துகொள்கிறார். மாநாட்டின் மற்றொரு பகுதியாக சுவிட்சர்லாந்து அழைப்பு விடுத்துள்ள உக்ரைன் அமைதி மாநாட்டில் பிரதமர் பங்கேற்க மாட்டார் என தெரிகிறது. இது ரஷியாவிற்கு எதிரானது என கருதப்படுவதால் பிரதமர் இதில் பங்கேற்பதை தவிர்ப்பதாக கூறப்படுகிறது.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரான்ஸ் பிரதமர் இம்மானுவல் மேக்ரான், ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உள்ளிட்டோர் ஜி7 மாநாட்டில் பங்கேற்கின்றனர்.
ஜி7 மாநாட்டில் உரையாற்றுவதுடன் ஜி7 உறுப்பு நாடுகளின் தலைவர்களுடனும் தனிப்பட்ட முறையில் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்துகிறார். அதன்படி அவர் அமெரிக்க அதிபர் ஜோ பைடனைச் சந்தித்துப் பேசுகிறார். இதேபோல இத்தாலி, கனடா பிரதமருடனும் அவர் பேசுகிறார்.
பிரதமர் மோடி இத்தாலி பயணத்தை முடித்துக்கொண்டு நாளையே நாடு திரும்புகிறார்.
பிரதமரின் இத்தாலி பயணம் குறித்து மத்திய வெளியுறவுத்துறை செயலர் வினய் குவாத்ரா கூறுகையில், ஜி7 மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்பது கடந்த ஆண்டு இந்தியாவின் தலைமையில் நடைபெற்ற ஜி20 மாநாட்டின் முடிவுகளை பின் தொடர்வதற்கான வாய்ப்புகளை வழங்கும். ஜி7 மாநாட்டில் இந்தியா தொடர்ந்து பங்கேற்பது உலகளாவிய சவால்களை எதிர்கொள்ள இந்தியாவின் முயற்சிகளுக்கு அங்கீகாரம் கிடைப்பதை சுட்டிக்காட்டுகிறது.
உக்ரைன் மோதலை தீர்க்க பேச்சுவார்த்தைதான் சிறந்த வழி என்பதை நாங்கள் எப்போதும் வலியுறுத்தி வருகிறோம். சுவிட்சர்லாந்தில் நடை பெறும் உக்ரைன் அமைதி மாநாட்டில் இந்தியா பங்கேற்கும் என தெரிவித்தார்.
ஆனால் அமைதி மாநாட்டில் இந்தியா சார்பில் யார் கலந்து கொள்வார்கள் என்பதை அவர் குறிப்பிடவில்லை.
- பிரபலங்கள் மற்றும் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
- நட்புறவு, ஒத்துழைப்பை தொடர்ந்து வலுப்படுத்துவோம் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
குஜராத் மாநிலம் மெஹ்சானா மாவட்டத்தில் 1950-ம் ஆண்டு செப்டம்பர் 17 ஆம் தேதி பிறந்த நரேந்திர தாமோதர்தாஸ் மோடி இன்று தனது 74வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். பிறந்தநாளை ஒட்டி பிரதமர் மோடிக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் மற்றும் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், இத்தாலி நாட்டு பிரதமர் ஜார்ஜியா மெலோனி பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், "இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்."
"நமக்காக காத்திருக்கும் உலகளாவிய சவால்களை ஒன்றாக எதிர்கொள்ளவும், இத்தாலி மற்றும் இந்தியா இடையிலான நட்புறவு, ஒத்துழைப்பு ஆகியவற்றை தொடர்ந்து வலுப்படுத்துவோம் என்று நான் உறுதியாக நம்புகிறேன்," என குறிப்பிட்டுள்ளார்.
- இத்தாலியின் முதல் பெண் பிரதமராக ஜார்ஜியா மெலோனி இன்று பதவியேற்றார்.
- அப்போது பேசிய அவர், ஜனநாயகத்திற்கு விசுவாசமாக இருப்பேன் என்றார்.
ரோம்:
இத்தாலியில் கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு கடந்த 2021-ம் ஆண்டு மரியோ டிராகி பிரதமரானார். அந்நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் கூட்டணி கட்சிகள் தங்களின் ஆதரவை விலக்கிக் கொண்டதால் பிரதமர் மரியோ டிராகி கடந்த ஜூலை மாதம் தன் பதவியை ராஜினாமா செய்தார்.
இதையடுத்து, இத்தாலி பாராளுமன்றத்துக்கான தேர்தல் கடந்த மாதம் நடந்தது. இந்த தேர்தலில் தீவிர வலதுசாரி கட்சியான பிரதர்ஸ் ஆப் இத்தாலி கட்சியின் சார்பில் போட்டியிட்ட ஜார்ஜியா மெலோனி (45), வெற்றி பெற்றார்.
ஜார்ஜியா மெலோனி ஒரு தீவிர தேசியவாதியாகவும், ஐரோப்பிய எதிர்ப்பு ஒற்றுமை தலைவராகவும் கருதப்படுகிறார். மெலோனி இத்தாலியின் பிரதமரானால், அவர் ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறலாம் என்ற அச்சம் நிலவுகிறது.
உக்ரைன் போரில் உக்ரைனுக்கு இத்தாலி வலுவாக ஆதரவளித்து வருகிறது. அடுத்த அரசாங்கத்தின் கீழ் அது அப்படியே இருக்கும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. தேர்தல் பிரச்சாரத்தின் போது மெலோனி உக்ரைனுக்கு தனது ராணுவ உதவி கொள்கையை தொடர உறுதியளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இத்தாலியின் முதல் பெண் பிரதமராக ஜார்ஜியா மெலோனி இன்று பதவியேற்றார். இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் இத்தாலியில் அமையும் தீவிர வலதுசாரி அரசாங்கம் இதுவாகும்.
அப்போது பேசிய அவர், ஜனநாயகத்திற்கு விசுவாசமாக இருப்பேன் என்று சத்தியம் செய்கிறேன் என உறுதியளித்தார்.
- தேர்தல் முடிவுகள் இன்று (திங்கட்கிழமை) வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- ஜார்ஜியா மெலோனி வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளதாக கருத்து கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.
ரோம் :
இத்தாலியில் கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பிரதமராக நியமிக்கப்பட்ட மரியோ டிராகி, நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் விளைவாக கடந்த ஜூலை மாதம் தனது பதவியை ராஜினாமா செய்தார். அதை தொடர்ந்து அங்கு பொதுத்தேர்தல் நடத்த முடிவு எடுக்கப்பட்டது.
அதன்படி 600 உறுப்பினர்களை கொண்ட இத்தாலி நாடாளுமன்றத்துக்கு நேற்று தேர்தல் நடந்தது. உள்ளூர் நேரப்படி காலை 7 மணிக்கு வாக்கு பதிவு தொடங்கியது. நாடு முழுவதும் அமைக்கப்பட்டிருந்த சுமார் 60 ஆயிரம் வாக்கு சாவடிகளில் மக்கள் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து ஆர்வத்துடன் தங்களின் ஜனநாயக கடமையை ஆற்றினர். உள்ளூர் நேரப்படி இரவு 11 மணி வரை வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது.
அதை தொடர்ந்து உடனடியாக வாக்குகள் எண்ணும் பணிகள் தொடங்கின. தேர்தல் முடிவுகள் இன்று (திங்கட்கிழமை) வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த தேர்தலில் தீவிர வலதுசாரி கட்சியான 'பிரதர்ஸ் ஆப் இத்தாலி' கட்சியின் சார்பில் போட்டியிடும் பெண் அரசியல்வாதியான ஜார்ஜியா மெலோனி வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளதாக கருத்து கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. அப்படி அவர் வெற்றி பெறும் பட்சத்தில் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் பிரதமராக பதவியேற்பார். இதன் மூலம் இத்தாலியின் முதல் பெண் பிரதமர் என்கிற பெருமையை அவர் பெறுவார்.