search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "gold Import"

    • தங்கம் இறக்குமதி கடந்த 2023-ம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் 41 ஆயிரத்து 309 கோடி ரூபாயாக இருந்தது.
    • சுவிட்சர்லாந்தில் இருந்து அதிகபட்சமாக 40 சதவீத தங்கம் இறக்குமதியாகி உள்ளது.

    புதுடெல்லி:

    தங்கம் இறக்குமதி செய்வதற்கான சுங்க வரி கடந்த பட்ஜெட்டில் 15 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக குறைக்கப்பட்டது. இதையடுத்து உடனடியாக தங்கம் விலை சரிவடைந்தது. 2 மாதங்களுக்கும் மேலாக விலை குறைந்திருந்த தங்கம் விலை, தற்போது மீண்டும் பவுன் ரூ.55 ஆயிரத்தை எட்டி இருக்கிறது.

    இந்த நிலையில், தங்க இறக்குமதி கடந்த ஆகஸ்டு மாதத்தில் இருமடங்கிற்கும் அதிகமாக இருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

    தங்கம் இறக்குமதி கடந்த 2023-ம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் 41 ஆயிரத்து 309 கோடி ரூபாயாக இருந்தது. அது இந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் 84 ஆயிரத்து 296 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இது இரு மடங்கிற்கும் கூடுதலாகும்.

    சுவிட்சர்லாந்தில் இருந்து அதிகபட்சமாக 40 சதவீத தங்கம் இறக்குமதியாகி உள்ளது. அதை தொடர்ந்து அமீரகத்தில் இருந்து 16 சதவீதமும், தென்னாப்பிரிக்காவில் இருந்து 10 சதவீதமும் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டது.

    மத்திய வர்த்தகத் துறை வெளியிட்ட அறிக்கையில் இந்த தகவல்கள் இடம்பெற்று உள்ளன.

    • தங்கம் இறக்குமதி சுமார் 40 சதவீதம் குறைந்து ரூ.38 ஆயிரம் கோடியாக உள்ளது.
    • இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது.

    புதுடெல்லி :

    மத்திய அரசின் வெளிநாட்டு வர்த்தக இயக்குனரகம் (டி.ஜி.எப்.டி) நேற்று வெளியிட்ட அறிவிப்பில், "குறிப்பிட்ட தங்க நகைகள் மற்றும் பொருட்களுக்கு இறக்குமதிக்கு இலவசம் என்பதில் இருந்து தடை செய்யப்பட்டுள்ளது. இது உடனடியாக அமலுக்கு வருகிறது" என்று கூறியுள்ளது.

    இதன்படி ஒருவர் வெளிநாட்டில் இருந்து சில தங்கப் பொருட்களை கொண்டு வருவதற்கு (இறக்குமதி) அரசாங்கத்திடம் இருந்து அனுமதி பெற வேண்டும். இருப்பினும், இந்தியா-ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தின் கீழ் இறக்குமதிக்கு கட்டுப்பாடுகள் இருக்காது என்று கூறப்படுகிறது. இந்த நிதியாண்டில் ஏப்ரல்-மே மாதங்களில் தங்கம் இறக்குமதி சுமார் 40 சதவீதம் குறைந்து ரூ.38 ஆயிரம் கோடியாக உள்ளது.

    ×