search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Goondas law"

    குண்டர் சட்டத்தில் 15 முறை சிறை சென்ற பிரபல ரவுடி உள்பட 5 பேரை போலீசார் துப்பாக்கி முனையில் கைது செய்தனர்.

    பெரம்பூர்:

    புளியந்தோப்பை சேர்ந்த பிரபல ரவுடி சுரேஷ் என்கிற ஆற்காடு சுரேஷ் (45). இவன் மீது வக்கீல் பகவத்சிங் கொலை வழக்கு, ரவுடிகள் ராதாகிருஷ்ணன், சின்னா ஆகியோர் கொல்லப்பட்ட வழக்கு உள்பட 7 கொலை வழக்குகள் உள்ளன. இவை தவிர புளியந்தோப்பு போலீஸ் நிலையங்களில் ஆள் கடத்தல் உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளன. கூலிப்படை தலைவராகவும் செயல்பட்டு வந்தார்.

    குண்டர் சட்டத்தின் கீழ் 15 நாள் சிறை சென்று வந்துள்ள சுரேஷ் புளியந்தோப்பு போலீசார் தொடர்ந்த பல வழக்குகளில் ஆஜர்ஆகவில்லை. எனவே, அவனை புளியந்தோப்பு போலீசார் தேடி வந்தனர்.

    இந்த நிலையில், ரவுடி சுரேஷ் புளியந்தோப்பில் உள்ள ஒரு பெண்ணின் வீட்டுக்கு நேற்று இரவு வந்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, புளியந்தோப்பு, போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி துப்பாக்கி ஏந்திய போலீசாருடன் அந்த வீட்டை சுற்றி வளைத்தனர்.

    அப்போது தப்பி ஓட முயன்ற ரவுடி சுரேசை போலீசார் துப்பாக்கி முனையில் கைது செய்தனர். அவனுக்கு பாதுகாப்பாக வந்த லொடுக்கு மாரி (32), சந்திரகாந்த் (28), அருண் (22), ராஜா (21), பிரபாகரன் (21) ஆகியோரையும் போலீசார் துப்பாக்கி முனையில் மடக்கிப் பிடித்தனர்.

    விசாரணையில் சுரேசுக்கு பாதுகாப்பாக வந்தவர்கள் மீதும் பல்வேறு வழக்குகள் இருப்பது தெரிய வந்தது.

    5 பேரையும் துப்பாக்கி முனையில் கைது செய்த புளியந்தோப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவியை உயர் அதிகாரிகள் பாராட்டினார்கள். இந்த சம்பவம் புளியந்தோப்பு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ரவுடி சுரேஷ் உள்பட 5 பேரும் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

    நாகை அருகே குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.

    நாகப்பட்டினம்:

    நாகை வெளிப்பாளையம் வண்டிப்பேட்டை தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார் மகன் சுந்தர் (வயது 23). இவர் மீது நாகை மற்றும் கீழ்வேளூர் போலீஸ் நிலையத்தில் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குகள் உள்ளன. தற்போது கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ள சுந்தர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் கலெக்டர் சுரேஷ்குமாருக்கு பரிந்துரை செய்தார்.

    அதன் பேரில் சுந்தர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கலெக்டர் பரிந்துரைத்தார். இதையடுத்து அவரை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பதற்கான உத்தரவை திருச்சி மத்திய சிறையில் கொடுத்தனர்.

    நெற்குன்றம் பகுதியில் வாகனங்களை திருடி விற்ற 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

    போரூர்:

    கோயம்பேடு, நெற்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில் டிராவல்ஸ் அலுவலகம் முன்பு நிறுத்தி வைக்கப்பட்ட சொகுசு வேன் டெம்போக்கள் அடிக்கடி திருடு போகும் சம்பவம் நடந்து வந்தது.

    இது தொடர்பாக நெல்லை மாவட்டம் ராதாபுரம் துலூக்கார்பட்டி பகுதியைச் சேர்ந்த அப்துல் ஹமீது, வளசரவாக்கம் கடும்பாடியம்மன் கோவில் முதல் தெருவைச் சேர்ந்த யோகநாதன்.

    அவர்கள் இருவரையும் கடந்த மாதம் கோயம்பேடு குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்,. அவர்கள் வாகனங்களை திருடி வெளியூர்களில் குறைந்த விலைக்கு விற்றது தெரிந்தது. அவர்களிடமிருந்து 2 சொகுசு டெம்போ டிராவலர் மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டன.

    இந்த நிலையில் கைதான அப்துல் ஹமீது, யோகநாதன் ஆகிய 2 பேர் மீதும் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோயம்பேடு போலீசார் பரிந்துரை செய்தனர்.

    இதனை ஏற்று கமி‌ஷனர் ஏ.கே. விஸ்வநாதன் இருவரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தர விட்டார்.

    காங்கேயம் பகுதியில் தொடர்வழி பறியில் ஈடுபட்ட 2 வாலிபர்களை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் காங்கயம் படியூர் பகுதியை சேர்ந்தவர் பூங்கொடி. இவர் 2 மாதங்களுக்கு முன்பு மோட்டார் சைக்கிளில் சென்றபோது மர்ம நபர்கள் 2 பேர் அவர் அணிந்திருந்த நகையை பறித்து சென்றனர்.

    அதேபோல் விஜயகுமார் என்பவரிடம் வழிப்பறி செய்து தப்பினர். இதுதொடர்பாக காங்கயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்த நிலையில் இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையிலான போலீசார் சந்தேகப்படும்படியாக இருந்த 2 பேரை கைது செய்தார். அவர்களிடம் விசாரித்தபோது அவர்கள் கார்த்திக் மற்றும் மன்னன் கார்த்திக் என்பது தெரியவந்தது. மேலும் நகை பறிப்பு மற்றும் பணம் பறித்ததை ஒப்புக்கொண்டனர் .இதையடுத்து 2 பேரையும் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

    இவர்கள் மீது ஏற்கனவே சேலம், தர்மபுரி மாவட்டங்களில் பல வழிப்பறி, கொள்ளை வழக்குகள் உள்ளதால் இவர்களை குண்டர் சட்டத்தில் அடைக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கயல்விழி பரிந்துரை செய்தார். அவரது பரிந்துரையின் பேரில் மாவட்ட கலெக்டர் பழனிசாமி இரண்டு 2 வாலிபர்களையும் குண்டர் சட்டத்தில் அடைக்க உத்தரவிட்டார்.

    அமைந்தகரையில் கொள்ளையில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போரூர்:

    பெங்களூரைச் சேர்ந்த தம்பதி சசிகாந்த் சைலஜா.இவர்கள் குழந்தையின்மை சிகிச்சைக்காக அமைந்தகரை வெற்றி விநாயகர் கோயில் தெருவில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி சிகிச்சை பெற்று வந்தனர்.

    இந்த நிலையில் கடந்த 8-ந் தேதி சிகிச்சைக்காக வீட்டை பூட்டிவிட்டு மருத்துவ மனைக்கு சென்றிருந்தனர். திரும்பி வந்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு 10சவரன் நகை, லேப்-டாப், ரூ. 4 ஆயிரம் கொள்ளை போய் இருந்தது.

    இதுகுறித்து அமைந்தகரை போலீஸ் இன்ஸ்பெக்டர் வனிதா அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்த போது கொள்ளையில் ஈடுபட்டது டி.பி. சத்திரம் நாலு அடுக்கு குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த பிரபல கொள்ளையன் சுரேஷ் என்கிற ஓலை சுரேஷ் என்பது தெரியவந்தது.

    அவனை போலீசார் கைது செய்தனர். அவனிடம் இருந்து 10 பவுன் நகை பறிமுதல் செய்யப்பட்டது. கைதான சுரேஷ் என்கிற ஓலை சுரேஷ் தனியாக சென்று வீடுகளின் பூட்டை உடைத்து கொள்ளை அடிப்பதில் கைதேர்ந்தவன்.

    அவந் மீது டி.பி. சத்திரம், கீழ்பாக்கம், அண்ணா நகர் அரும்பாக்கம், அமைந்தகரை உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளது.

    ஏற்கனவே 9 முறை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறை சென்றவன் என்பது குறிப்பிடத்தக்கது.

    குத்தாலம் அருகே பிரபல ரவுடி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    குத்தாலம்:

    நாகை மாவட்டம் குத்தாலம் அடுத்த பண்டார வாடை கிராமம் கலைஞர் நகரைச் சேர்ந்தவர் சேகர். இவரது மகன் கலைவாணன் (வயது 35). இவர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் பெரம்பூர் காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ளன. மேலும் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வரும் கலைவாணனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் பரிந்துரை செய்தார். இதனை ஏற்று மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார் கலைவாணனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.

    அதன்படி கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த கலைவாணனை பெரம்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜன் குண்டர் சட்டத்தில் கைது செய்யும் உத்தரவை கடலூர் சிறைச்சாலை அதிகாரிகளிடம் ஒப்படைத்தார்.

    போளூர் அருகே குழந்தை கடத்தல் பீதியில் மூதாட்டி ருக்மணி அம்மாள் அடித்துக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக 3 பேரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.
    திருவண்ணாமலை:

    மலேசியாவை சேர்ந்தவர்கள் மோகன்குமார், சந்திரசேகர். இவர்கள் கடந்த மாதம் சென்னைக்கு வந்தனர். மோகன்குமாரின் சித்தி ருக்மணி அம்மாள் (வயது 65), சென்னை பழைய பல்லாவரத்தில் வசித்து வந்தார்.

    சென்னைக்கு வந்த மோகன்குமார், சந்திரசேகர் ஆகியோர் திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே ஜமுனாமரத்தூர் செல்லும் வழியில் உள்ள குல தெய்வ கோவிலுக்கு செல்ல முடிவு செய்தனர். அதன்படி கடந்த மாதம் 9-ந் தேதி அவர்களுடன் ருக்மணி அம்மாள், அவரது மகளின் கணவரான சென்னை பழைய பல்லாவரத்தை சேர்ந்த கஜேந்திரன், வெங்கடேசன் ஆகியோர் போளூருக்கு காரில் வந்தனர்.

    போளூரை அடுத்த தம்புகொட்டான்பாறை பகுதியில் காரை நிறுத்திய அவர்கள் அங்குள்ள ஒரு வீட்டின் வெளியே கைக்குழந்தைகளுடன் நின்றிருந்த பெண்ணிடம் முகவரி கேட்டனர். அப்போது அவர்கள் அங்கு விளையாடிய குழந்தைகளுக்கு சாக்லெட் கொடுத்ததாக தெரிகிறது.

    இதனால் சாக்லெட்டை கொடுத்து குழந்தைகளை கடத்த வந்திருக்கும் கும்பலை சேர்ந்தவர்களாக இருக்கலாமோ என கருதி அங்கிருந்த பொதுமக்கள் அவர்களை தாக்கினர். அங்கிருந்து தப்பிய அவர்கள் களியம் பகுதியில் வந்தபோது அவர்களின் காரை மடக்கி 5 பேரையும் சரமாரியாக தாக்கினர். இந்த சம்பவத்தில் ருக்மணி அம்மாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 4 பேர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இதையடுத்து 5 பேரை தாக்கியவர்களை போலீசார் கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். 40-க்கும் மேற்பட்டவர்கள் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். போலீசாரின் தேடுதல் வேட்டை தொடர்ந்தது.

    இதனால் அச்சமடைந்த களியம், தம்புகொட்டான்பாறை, ஜம்பங்கிபுரம், காமாட்சிபுரம், கணேசபுரம், அத்திமூர் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் பலர் தங்களது கிராமத்தை விட்டு வெளியேறி தலைமறைவாகினர். சுமார் 1 மாதம் இந்த கிராமத்தில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

    தற்போது தான் வெளியூர்களுக்கு சென்ற கிராமத்தினர் பலர் தங்களது கிராமத்திற்கு மறுபடியும் வந்து விவசாய பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் போலீசாரால் கைது செய்யப்பட்டவர்களில் 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. 62 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதில் 44 பேர் கைது செய்யப்பட்டு வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

    அதில் தம்புகொட்டான்பாறையை சேர்ந்த முத்து மகன் சிவா (29), அத்திமூரை சேர்ந்த வெங்கடேசன் மகன் மணிகண்டன் (36), சாமிநாதன் மகன் பாபு (54) ஆகியோரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று கலெக்டருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பொன்னி பரிந்துரை செய்தார்.

    அதன் பேரில் 3 பேரையும் குண்டர்சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டார். இதனையடுத்து சிறையில் உள்ள 3 பேரிடமும் குண்டர்சட்டத்தில் கைது செய்ததற்கான நகலை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    ×