என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "governor ravi"
- "தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நல் திருநாடும்" என்ற வரிகள் புறக்கணிக்கப்பட்டது மாபெரும் தவறாகும்.
- திராவிடம் என்ற சொல் உலகின் தொன்மையான நாகரீகத்தின் குறியீடு!
சென்னை டிடி தமிழ் தொலைக்காட்சி அலுவலகத்தில் நேற்று நடந்த இந்தி மாத விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்றிருந்தனர். விழாவின் தொடக்கத்தில் பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலில் 'தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்' என்ற வரி இடம்பெறாமல் விடுபட்டது சர்ச்சையை ஏற்படுதியது. இதுதொடர்பாக தனது முதல்வர் ஸ்டாலின் உட்பட அனைத்து அரசியல் தலைவர்களும் தங்களின் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில் எதிர்கட்சித் தலைவர் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆளுநருக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறியதாவது,
இன்று சென்னை தொலைக்காட்சி நிலையத்தில் மேதகு ஆளுநர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் பெருமைக்குரிய தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் பொழுது அஃதில் வரக்கூடிய "தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நல் திருநாடும்" என்ற வரிகள் புறக்கணிக்கப்பட்டது மாபெரும் தவறாகும். இச்செயல் மிகவும் கண்டனத்திற்குரியது.
திராவிடம் என்ற சொல் அடித்தட்டு மக்கள் வாழ்வின் பேரொளி! திராவிடம் என்ற சொல் அடக்குமுறைக்கு எதிரான பெரும் புரட்சி! திராவிடம் என்ற சொல் உலகின் தொன்மையான நாகரீகத்தின் குறியீடு! தமிழக மக்களின் உணர்வை புண்படுத்தும், திராவிட பண்பாட்டை சிறுமைப்படுத்தும் வேலைகளை எவர் செய்து இருந்தாலும் கைவிட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
- "தெக்கணமும் அதன் சிறந்த திராவிடநல் திருநாடும் " என்னும் வரி திட்டமிட்டே தவிர்க்கப்பட்டுள்ளது.
- ஆளுநரின் 'வெறுப்பு உளநிலையை' உறுதிபடுத்துகிறது.
சென்னை டிடி தமிழ் தொலைக்காட்சி அலுவலகத்தில் நேற்று நடந்த இந்தி மாத விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்றிருந்தனர். விழாவின் தொடக்கத்தில் பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலில் 'தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்' என்ற வரி இடம்பெறாமல் விடுபட்டது சர்ச்சையை ஏற்படுதியது. இதுதொடர்பாக தனது முதல்வர் ஸ்டாலின் உட்பட அனைத்து அரசியல் தலைவர்களும் தங்களின் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.
அந்த வகையில் விசிக தலைவர் தொல். திருமாவளவன் வெளியிட்டுள்ள கண்டனப் பதிவில்,
டி.டி.தமிழ் தொலைக்காட்சி அலுவலகத்தில் நடைபெற்ற 'இந்தி மாத' கொண்டாட்ட நிறைவு விழாவில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி அவர்கள் பங்கேற்றுள்ளார்.
அந்நிகழ்வில், தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடப்பட்ட போது, "தெக்கணமும் அதன் சிறந்த திராவிடநல் திருநாடும் " என்னும் வரி திட்டமிட்டே தவிர்க்கப்பட்டுள்ளது.
இது தமிழ்நாட்டு மக்களுக்கு எதிரான ஆளுநரின் 'வெறுப்பு உளநிலையை' உறுதிபடுத்துகிறது. ஆளுநரின் இத்தகைய போக்கு கண்டனத்துக்குரியது.
ஏற்கனவே, பொதிகை என்னும் பெயரை நீக்கியது, தொலைக்காட்சியின் இலச்சினையை காவி நிறத்துக்கு மாற்றியது என தொடர்ந்து தமிழர்களுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துவரும் பாஜக அரசையும்; ஆளுநர் ஆர்.என். ரவி அவர்களையும் விசிக சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.
- 'பெருமையோடு துல்லியமாகப் பாடுவேன்' என விளக்கம் கொடுக்கும் ஆளுநர் மேடையிலேயே அந்த தவறை சுட்டிக்காட்டி இருக்கலாமே
- சமஸ்கிருதத்திற்குச் செலவிடப்பட்டதில் வெறும் 7 விழுக்காடு மட்டுமே தமிழுக்கு ஒதுக்கப்பட்டது.
சென்னை டிடி தமிழ் தொலைக்காட்சி அலுவலகத்தில் நேற்று நடந்த இந்தி மாத விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்றிருந்தனர். விழாவின் தொடக்கத்தில் பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலில் 'தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்' என்ற வரி இடம்பெறாமல் விடுபட்டது சர்ச்சையை ஏற்படுதியது.
இதுதொடர்பாக தனது கண்டனத்தை பதிவு செய்த முதல்வர் ஸ்டாலின் ஆளுநரை மத்திய அரசு உடனே திரும்பபெற வேண்டும் என்று தெரிவித்தார். இதற்கிடையே ஆளுநருக்கும் , அந்த நிகழ்ச்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் ஆளுநர் சிறப்பு விருந்தினராக மட்டுமே அதில் கலந்துகொண்டார் என்றும் ராஜ் பவன் விளக்கம் அளித்தது. மேலும் ஸ்டாலின் அவசர கதியில் ஆளுநரை விமர்சித்துள்ளார் என்றும் இனவாதம் கொண்டு பேசுகிறார் குற்றம்சாட்டப்பட்டது. இந்நிலையில் இந்த குற்றச்சாட்டுக்கு முதல்வர் ஸ்டாலின் விரிவான விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.
ஆளுநர் ரவிக்கு முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது,
இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழாவில் பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்தில், 'தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்' என்ற வரியைப் பாடாமல் விட்டதற்கு, எனது கடும் கண்டனத்திற்குப் பதிலளித்துள்ள மாண்புமிகு ஆளுநருக்குச் சில கேள்விகள்:
'தமிழ்த்தாய் வாழ்த்தை முழுமையாக பக்திச்சிரத்தையோடு பாடுவேன்' எனச் சொல்லும் நீங்கள், முழுமையாகப் பாடப்படாத தமிழ்த்தாய் வாழ்த்தை உடனே மேடையிலேயே கண்டித்திருக்க வேண்டாமா? அதனை ஏன் செய்யவில்லை?
'பெருமையோடு துல்லியமாகப் பாடுவேன்' என விளக்கம் கொடுக்கும் ஆளுநர் - உரிமையோடு அந்த இடத்திலேயே தவற்றைச் சுட்டிக்காட்டியிருக்கலாமே! சரியாகப் பாடும்படி பணித்திருக்கலாமே? துல்லியமாக அந்தச் செயலை நீங்கள் செய்திருந்தால் எதிர்வினை ஏற்பட்டிருக்குமா?
'ஒரு ஆளுநருக்கு எதிராக முதலமைச்சர் இனவாதக் கருத்தைத் தவறான குற்றச்சாட்டுகளுடன் முன்வைப்பது துரதிருஷ்டவசமாக மலிவானது' எனச் சொல்லியிருக்கிறீர்கள்.
ஆளுநர் அவர்களே, தமிழ் எங்கள் இனம்! அது எங்கள் உயிர்மூச்சு! தமிழ்மொழியைக் காக்க உயிர்களை நெருப்புக்குக் கொடுத்தவர்கள் தமிழர்கள். முதல் அரசியலமைப்புச் சட்டத்திருத்தத்திற்கு அடிகோலியதோடு, இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தின் வரலாறுகளைத் தாங்கி நிற்கும் மண் இது. இந்த மண்ணின் தாய்மொழிப் பற்றினை இனவாதம் என்றால் அது எங்களுக்குப் பெருமைதான்!
'பாஜக அரசு பல்வேறு அமைப்புகளை நிறுவித் தமிழ்மொழி மற்றும் அதன் பாரம்பரியத்தைத் தமிழ்நாடு உள்பட இந்தியாவுக்கு உள்ளேயும் உலகின் பல நாடுகளிலும் பரப்புகிறது. ஐக்கிய நாடுகள் சபைக்கும் கூட தமிழைக் கொண்டு சென்றார் பிரதமர் மோடி' எனச் சொல்லியிருக்கிறார் ஆளுநர்.
தமிழைத் தலையில் தூக்கிப் போற்றுவதாக நீங்கள் கூறும் மோடி அரசு தமிழ்மொழிக்கு என்ன செய்தது? 2013-2014 முதல் 2022 -2023-ஆம் ஆண்டு வரை சமஸ்கிருத மொழி வளர்ச்சிக்காக டெல்லியில் உள்ள மத்திய சமஸ்கிருதப் பல்கலைக்கழகத்துக்கு ரூ.2029 கோடி, திருப்பதியில் உள்ள தேசிய சமஸ்கிருதப் பல்கலைக்கழகத்துக்கு ரூ.406 கோடி என மொத்தம் ரூ.2435 கோடி செலவிடப்பட்டுள்ளது.
இது கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு செலவிடப்பட்டதைவிட இரண்டரை மடங்கு அதிகம். இதே காலகட்டத்தில் தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக வெறும் ரூ.167 கோடி மட்டுமே செலவிடப்பட்டது. அதாவது சமஸ்கிருதத்திற்குச் செலவிடப்பட்டதில் வெறும் 7 விழுக்காடு மட்டுமே தமிழுக்கு ஒதுக்கப்பட்டது.
அதுமட்டுமில்ல, கடந்த காலத்தில் நீங்கள் பேசியது நினைவிருக்கிறதா?
"தமிழ்நாடு என்ற பெயரைப் புறக்கணித்து, தமிழகம் என்று அழைக்க வேண்டும்" என்றும்; "திராவிடம் என்ற கோட்பாடே பிரிட்டிஷார் அறிமுகப்படுத்தியதுதான்" என்றும் கூறியதை மறக்க முடியுமா?
'திராவிட மாடல் காலாவதியான கொள்கை' என ஆங்கிலப் பத்திரிகை ஒன்றுக்குப் பேட்டி அளித்த வெறுப்புதானே, இன்றைக்குத் தமிழ்த்தாய் வாழ்த்து வரை வந்து நிற்கிறது?
தமிழை நேசிப்பதாக இப்போது சொல்லும் நீங்கள் முன்பு, திருவள்ளுவர் படத்தைக் காவி நிறத்தில் ஏன் வெளியிட்டீர்கள்? எனச் சொல்ல முடியுமா?
தமிழ்மீது ஒன்றிய பா.ஜ.க. அரசுக்குப் பற்றிருப்பது உண்மையானால், உலகப் பொதுமறையான திருக்குறளைத் தேசிய நூலாக அறிவிக்காமல் உங்களைத் தடுப்பது எது?
பிரதமர் மோடி அவர்கள் அறிமுகப்படுத்தும் திட்டங்கள், தொடர்வண்டிகள், முன்வைக்கும் முழக்கங்கள் என 'எங்கும் இந்தி – எதிலும் இந்தி' என்ற கொள்கையுடன் இந்தியைத் திணிப்பது நீங்கள்தான்.
ஆளுநராகப் பொறுப்பேற்றதிலிருந்து அரசியல்சட்ட நெறிமுறைகளை மறந்து நாள்தோறும் அரசியல் பேசுவதும், ஆளுநர் மாளிகையை அரசியல் அலுவலகமாக மாற்றியதும் - திராவிட இனத்தையே கொச்சைப்படுத்திப் பேசி வருவதும் எந்த வகை அரசியல் நாகரிகம்? எந்த வகை கண்ணியம்?
சட்டப்பேரவையில் நீங்கள் படிக்க வேண்டிய ஆளுநர் உரையில் கூட திராவிட மாடல், தந்தை பெரியார், புரட்சியாளர் அம்பேத்கர், பெருந்தலைவர் காமராசர், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் போன்ற பெயர்களைத் தவிர்த்தவர்தானே நீங்கள்?
உங்கள் வரலாறு இப்படி இருக்கும்போது, #திராவிடநல்திருநாடு தவிர்க்கப்பட்டதைத் தற்செயலானது எனத் தமிழர்கள் எப்படி நம்புவார்கள்?
அரசியலமைப்புச் சட்டப் பதவியில் சட்டப்புத்தகத்தின்படி பொறுப்பேற்றவர், வகுப்புவாதக் கும்பலின் கைப்பாவையாக மாறி, பிளவுவாத அழிவு விஷக் கருத்துகளைத் தமிழ்மண்ணில் விதைக்க நினைத்தால் அதன் வேரில் வெந்நீர் ஊற்றுவார்கள் தமிழ்நாட்டு மக்கள்.
நீங்கள் ஆளுநர் பதவியில் தொடர நினைத்தால், பிளவுவாத சக்திகளிடமிருந்து விடுவித்துக்கொண்டு, அரசியல்சட்ட நெறிமுறைகளின்படி கடமையை ஆற்ற வேண்டும் என உங்களைக் கேட்டுக் கொள்கிறேன். என்று தெரிவித்துள்ளார்.
- 'தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்' என்ற வரி இடம்பெறாமல் விடுபட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
- இந்தியாவில் இருந்து தமிழ்நாட்டை பிரிக்க கடந்த 50 ஆண்டுகளில் பல முறை முயற்சி நடந்துள்ளது.
சென்னையில் உள்ள டிடி தமிழ் தொலைக்காட்சி அலுவலகத்தில் 'ஹிந்தி மாத' நிகழ்ச்சி இன்று பிற்பகலில் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டார். நிகழ்ச்சியின் தொடக்கத்தில் பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து பாடலில் 'தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்' என்ற வரி இடம்பெறாமல் விடுபட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
திராவிடம் குறித்து தொடர்ந்து கடும் விமர்சித்து வரும் சூழலில் தற்போது திராவிடம் என்று வார்த்தை இடம்பெற்ற வரி தற்செயலாக அல்லாமல் வேண்டுமென்றே தவிர்க்கப்பட்டதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
தொடர்ந்து நிகழ்ச்சியின்போது பேசிய ஆர்.என்.ரவி, இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளும் கொண்டாடப்பட வேண்டிய மொழிகள்தான். இந்தி திணிக்கப்படவில்லை. தமிழக மக்களிடையே, இந்தி மொழியை கற்க வேண்டும் என்ற எண்ணம் மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது.
கடந்த 3 ஆண்டுகளாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்றுள்ளேன். இந்தி மொழியை மக்கள் கற்கின்றனர். இந்தியாவில் இருந்து தமிழ்நாட்டை பிரிக்க கடந்த 50 ஆண்டுகளில் பல முறை முயற்சி நடந்துள்ளது. இந்தியாவை பிரிக்க நினைக்கும் முயற்சி ஒருபோதும் நிறைவேறாது. தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் சமஸ்கிருதம் நீக்கப்பட்டுள்ளது" என்று கூறியுள்ளார்.
- இந்தியா தனது தர்மத்தில் இருந்து எப்படி விலக முடியம். எனவே மதச்சார்பின்மை என்பது இந்தியாவுக்கு தேவையே இல்லை என்று தெரிவித்துள்ளார்.
- தேவாலயத்துக்கும் அரசனுக்கும் இடையில் சண்டை ஏற்பட்டபோது உருவாக்கப்பட்ட தத்துவமே மதச்சார்பின்மை ஆகும்
தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி கூறி வரும் கருத்துக்கள் தொடர்ந்து சர்ச்சையாகிவரும் நிலையில் தற்போது இந்திய அரசியலமைப்பில் பிரதானமான மதச்சார்பின்மையே தேவையற்றது என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
நேற்றைய தினம் கன்னியகுமாரி மாவட்டம் திருவட்டாரில் நடைபெற்ற வித்யாபூஷன் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்ட ஆளுநர் ஆர்.என்.ரவி, நாட்டு மக்களுக்கு எதிராக பல்வேறு ஏமாற்று வேலைகள் நடக்கிறது. அதில் ஒன்று மதச்சார்பின்மை [secularism] குறித்த தவறான புரிதல்.மதச்சார்பின்மைக்கு என்ன அர்த்தம் உள்ளது, அது ஒரு ஐரோப்பிய தத்துவம், அங்கு தேவாலயத்துக்கும் அரசனுக்கும் இடையில் சண்டை ஏற்பட்டபோது உருவாக்கப்பட்ட தத்துவமே மதச்சார்பின்மை, இந்தியா தனது தர்மத்தில் இருந்து எப்படி விலக முடியம். எனவே மதச்சார்பின்மை என்பது இந்தியாவுக்கு தேவையே இல்லை. அது அரசியலமைப்பில் இடைச் செறுகளாகி வந்த ஒன்று, நமக்கு யாரும் அதை சொல்லித் தர வேண்டியதில்லை என்று தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்பில் மதச்சார்பின்மை என்ற பதம் இருக்கும்போதே நாட்டில் சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வரும் நிலையில் அதை ஆளுநர் கூறுவதுபோல் கைவிட்டால் நாட்டில் அமைதியின்மை ஏற்படும் என்று ஆளுநரின் கருத்துக்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது. இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தனது கண்டத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
அறிக்கைதமிழக ஆளுநராக ஆர்.என். ரவி பொறுப்பேற்றது முதற்கொண்டு, அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமாகவும், தமிழக நலன்களுக்கு எதிராகவும் தொடர்ந்து பேசியும், செயல்பட்டும் வருகிறார். கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டாரில் நடைபெற்ற வித்யாபூஷன் பட்டமளிப்பு விழாவில் ஆர்.என். ரவி அரசமைப்புச்… pic.twitter.com/00qhldvkIG
— Selvaperunthagai K (@SPK_TNCC) September 23, 2024
- பதவி பிரமாணத்தை மீறி விட்ட கவர்னர் ரவியை உடனடியாக திரும்ப பெற வேண்டும்.
- மத்திய அரசுக்கு அ.தி.ம.மு.க. கோரிக்கை வைத்துள்ளனர்.
மதுரை
அண்ணா திராவிட மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் வெளி யிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் பேச்சு திராவிட மக்களின் உணர்வுகளையும், தமிழர்களின் அமைதி யையும் சீர்குலை க்கிறது. மக்களால் நூறாண்டுகளாக புறக்கணிக்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ். சனாதன கொள்கையை கவர்னர் மாளிகையில் உட்கார்ந்து கொண்டு கவர்னர் தூக்கி பிடிக்க நினைப்பது வன்மை யாக கண்டிக்கத்தக்கதாகும்.
திராவிட மாடலின் உன்னதமான புதுமைப் பெண் திட்டத்தின் காரண மாக உயர்கல்வி பெறும் பெண்களின் எண்ணிக்கை 26 சதவீதம் உயர்ந்துள்ளது. இதைக்கண்டு ஆர்.எஸ்.எஸ். கொள்கை பற்றாளர் கவர்னர் பொறாமை படுகிறார்.
எனென்றால் பெண் கல்வி அவரது சனாதனத்திற்கு எதிரானது என்பதால் தமிழ்நாட்டின் கல்வியை குறை கூறி வருகிறார். தமிழ்நாடு இந்திய ஒன்றியத்திலேயே அமைதி பூங்காவாக திகழ்கிறது.
ஆனால் மாநில அரசின் அங்கமாக இருக்கும் கவர்னர் மாநில அரசையே தவறாக குற்றம் சொல்வது எப்படி சரியானதாக இருக்க முடியும் என்ப தையும் கவர்னர் பதவிக் கான இலக்கணத்தையும் அவர் தெளிவு படுத்த வேண்டும்.
மதச்சார்பற்ற நாட்டில் பொறுப்புள்ள பதவியில் உள்ளதை மறந்துவிட்டு தான் மேற்கொண்ட பதவிபிரமாணத்தை மீறி கவர்னர் ரவி பொது வெளியில் அரசின் நிர்வாக விவரங்களை தொடர்ந்து சொல்லி வருவது அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு எதிரான செயலாகும்.
தமிழ்நாட்டின் அனைத்து ஜனநாயக சக்திகளும் கவர்னருக்கு எதிராக கண்டன குரல்கள் எழுப்பி வரும் நிலையில் திராவிடமே உயிர் மூச்சாக வாழ்ந்து வரும் தமிழ்நாட்டு மக்களி டையே பாசிச, வகுப்புவாத சனாதனத்தை திணிக்க நாள்தோறும் நாலாந்தர பேச்சாளராக கவர்னர் பதவியில் அமர்ந்து கொண்டு ரவி கூறி வருவதை தமிழ்நாட்டு மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். மக்களிடையே ஆபத்தான விஷக்க ருத்துக்களை தொடர்ந்து பரப்பி வரும் கவர்னரை ஒன்றிய அரசு உடனே திரும்பபெற வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது டுவிட்டர் பக்கத்தில் விமர்சித்து கருத்து பதிவிட்டுள்ளார்.
- கண்ணியத்துக்கு மாறாக முதல்வரே நடந்து கொண்டதால், ஆளுநர் அவையில் இருந்து வெளியேற நேரிட்டது.
தமிழக சட்டசபையில் இன்று ஆளுநர் ஆர்.என். ரவி உரையாற்றியபோது, திராவிட மாடல், அமைதிப்பூங்கா உள்ளிட்ட சில வார்த்தைகளை பேசாமல் தவிர்த்தார்.
பின்னர் சபாநாயகர் அப்பாவு வாசித்த தமிழாக்கத்தில் அந்த வார்த்தைகள் இடம்பெற்றன. தமிழக அரசு தயாரித்து கொடுத்த உரையை ஆளுநர் வாசிக்காதது கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது.
ஆளுநருக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆளுநருக்கு எதிராக கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். ஆளுநருக்கு எதிராக டுவிட்டரில் #GetOutRavi என்ற ஹேஷ்டேக் டிரெண்ட் ஆகி வருகிறது.
இந்நிலையில், ஆளுநர் அவையில் இருந்து வெளியேறியது தொடர்பாக, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது டுவிட்டர் பக்கத்தில் திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்து கருத்து பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்து அதில் கூறப்பட்டுள்ளதாவது:-
இன்று நடைபெற்ற சட்டசபை கூட்டத்தொடரின் முதல் நாளில், திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் விளிம்புநிலை கூறுகளாக செயல்பட்டன.
அற்ப அரசியல் லாபங்களுக்காக, ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களின் உரையை இடையூறு செய்ததன் மூலம் சபைக்கு அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது திமுக அரசு.
ஆளுநர் உரையைத் தொடங்குவதற்கு முன்பே, திமுக கூட்டணிக் கட்சிகள் போராடத் தயாராகிவிட்டனர்.
சூழல் உண்மைக்குப் புறம்பாக இருக்கும்போது, தயாரிக்கப்பட்ட உரையை வாசிக்கும்படி ஆளுநரை கட்டாயப்படுத்த முடியாது.
ஆளுநர் கருத்துக்களை, சட்டசபை குறிப்பில் இருந்து நீக்க சபாநாயகருக்கு அதிகாரம் உள்ளதா? ஆளுநர் உரையை சட்டசபை குறிப்பில், எப்படி இடம்பெற வேண்டும் என்று முதல்வர் வலியுறுத்தியது தவறானது.
கண்ணியத்துக்கு மாறாக முதல்வரே நடந்து கொண்டதால், ஆளுநர் அவையில் இருந்து வெளியேற நேரிட்டது. ஆளும் கட்சியால் எதிர்க்க முடியாததால் கூட்டணி கட்சியை தூண்டிவிட்டு வேடிக்கை பார்த்துள்ளது திமுக அரசு.
திமுகவின் பொதுக்கூட்ட உரைகளை சட்டமன்றத்தில் ஆளுநர் படிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது நியாயமா ?
மக்கள் பணத்தை கோடி கணக்கில் செலவு செய்து நடத்தப்படும் சட்டசபையில், நடப்பது எல்லாமே நாடகமே.
இவ்வாறு அதில் குறிப்பிட்டிருந்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்