search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "grama sabha meeting"

    • கூட்டத்தில் நவம்பர் 1-ஐ உள்ளாட்சி தினமாக அறிவித்த முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
    • ஊராட்சி செயலர் சுபாஷ் நிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானங்களை வாசித்தார்.

    நெல்லை:

    நவம்பர் 1-ந்தேதி உள்ளா ட்சி தினத்தை முன்னிட்டு பாளை யூனியன் கீழநத்தம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் வடக்கூரில் ஊராட்சி மன்ற தலைவர் அனுராதா ரவி முருகன் தலைமையில் இன்று நடைபெற்றது.

    கூட்டத்தில் நவம்பர் 1-ஐ உள்ளாட்சி தினமாக அறிவித்த முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

    மேலும் வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது, இணையவழி வரி செலுத்து தல், கிராம தன்னிறைவு திட்டம் 2023-24 மற்றும் 2024-25-க்கு எடுக்கப்பட வேண்டிய பணிகள், பொது இடங்களில் வைக்கப் பட்டுள்ள ஜாதிய சின்னங்களை அகற்றுதல், ஊராட்சி அனுமதி இன்றி வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைகளை அகற்றுதல் மற்றும் ஊராட்சியின் நீடித்த வளர்ச்சி பற்றி விவாதிக் கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இதில் ஊராட்சி செயலர் சுபாஷ் நிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானங்களை வாசித்தார். கூட்டத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் லட்சுமி, மக்கள் நலப் பணியாளர் மாரி யம்மாள், பணித்தள பொறுப்பாளர் சோபனா, சுகாதார ஆய்வாளர் புகாரி, காச நோய் ஆய்வாளர் காஞ்சனா, கிராம சுகாதார செவிலியர் பூமணி, கிராம நிர்வாக அலுவலர் மைதீன், தலையாரி வேல்பாண்டி, வார்டு உறுப்பினர்கள் பல வேசம் இசக்கி பாண்டி, ஸ்ரீலதா, பாளை மத்திய ஒன்றிய தி.மு.க. ஆதி திரா விடர் நல அணி அமை ப்பாளர் செல்லப்பா, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்கள் ராமச்சந்திரன், தண்டபாணி, குமரன், வடக்கூர் ஆதி திராவிடர் பள்ளி நிர்வாகி சுந்தரராஜ், பிருந்தாவன் நகர் கார்த்திக், தோட்டக் கலைத்துறை கமலேசன், துணை கமிஷனர் (ஜி.எஸ்.டி.) கதிர்வேல், விஜிலென்ஸ் ஸ்டீபன் கனகராஜ் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    முடிவில் சிறப்பாக செயல்பட்ட தூய்மை காவ லர்கள், மகளிர் சுய உதவிக் குழுக்கள் கவுரவிக்கப் பட்டனர்.

    • தமிழ்நாடு முழுவதும் நவம்பர் 1-ம் தேதி கிராமசபை கூட்டம் நடத்த வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
    • உள்ளாட்சி தினத்தன்று அனைத்து கிராம சபைகளிலும் கிராமசபை கூட்டம் நடத்த வேண்டும் என தெரிவித்துள்ளது.

    சென்னை:

    கிராமசபை கூட்டம், இந்தியக் குடியரசு நாள் (ஜனவரி 26), தொழிலாளர் நாள் (மே 1), இந்திய விடுதலை நாள், (ஆகஸ்டு 15) காந்தி ஜெயந்தி (அக்டோபர் 2), உலக நீர் நாள் (மார்ச் 22) மற்றும் உள்ளாட்சி நாள் (நவம்பர் 1) ஆகிய 6 சிறப்பு நாட்களின் போது தமிழ்நாட்டின் அனைத்து கிராம ஊராட்சி மன்றத் தலைவர்களால் கூட்டப்படுகிறது.

    இந்நிலையில், தமிழ்நாடு முழுவதும் நவம்பர் 1-ம் தேதி கிராமசபை கூட்டம் நடத்த வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

    உள்ளாட்சி தினத்தன்று அனைத்து கிராம சபைகளிலும் கிராமசபை கூட்டம் நடத்த வேண்டும் என தெரிவித்துள்ளது.

    • மாவட்டத்தில் சிறந்த ஊராட்சியாக மாப்பிள்ளையூரணி ஊராட்சியை உருவாக்க அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று ஊராட்சி தலைவர் சரவணக்குமார் பேசினார்.
    • கூட்டத்தில் ஊராட்சி பகுதியில் சிறுநீரக பாதிப்பு ஏற்படுவது அதிகரித்து வருவதால் சிறப்பு மருத்துவ குழு அமைத்து ஆய்வு நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 75 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி யூனியன் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 1 லட்சத்து 20 ஆயிரம் மக்கள் தொகையுடன் தமிழகத்தின் மிகப்பெரிய பஞ்சாயத்தாக உள்ள மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் கணேசபுரம் அங்கன்வாடி மையம் அருகில் நடைபெற்றது.

    ஊராட்சி தலைவரும், தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான சரவணகுமார் தலைமை தாங்கினார். மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மகேஸ்வரி, துணைத் தலைவர் தமிழ்ச்செல்வி, தாளமுத்துநகர் சப்-இன்ஸ்பெக்டர் முனியசாமி, ஒன்றிய கவுன்சிலர் அந்தோணி தனுஸ்பாலன், ஊராட்சி உறுப்பினர்கள் பாரதிராஜா, சக்திவேல், மகேஸ்வரி காமராஜ், உமாமகேஸ்வரி தங்கபாண்டி, ஜீனத்பீவி, தங்கமாரிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலாளர் ஜெயக்குமார் வரவேற்று தீர்மானங்களை வாசித்தார்.

    கூட்டத்தில் ஊராட்சி தலைவர் சரவணக்குமார் பேசுகையில், ஊராட்சி பகுதிகளில் குடிநீர் பற்றாக்குறை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும், சாலை வசதி, மின்விளக்கு வசதி உட்பட அனைத்து தேவைகளும் நிறைவேற்றப்படும், மாவட்டத்தில் சிறந்த ஊராட்சியாக மாப்பிள்ளை யூரணி ஊராட்சியை உருவாக்க அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார். பின்னர் பசுமையை உருவாக்கும் வகையில் மரக்கன்றுகள் நட்டார்.

    கூட்டத்தில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பில் சிலுவைப்பட்டியில் கட்டப்பட்டு வரும் 526 புதிய வீடுகளை மாப்பிள்ளையூரணி ஊராட்சி மக்களுக்கு ஒதுக்க வேண்டும், ஊராட்சி பகுதியில் சிறுநீரக பாதிப்பு ஏற்படுவது அதிகரித்து வருவதால் சிறப்பு மருத்துவ குழு அமைத்து ஆய்வு நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 75 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இதில் சுகாதார ஆய்வாளர்கள் பிரதீப்குமார், முகமது ஆசிக் அரபி, கிராம நிர்வாக அலுவலர் அமலநாதன் மற்றும் திரளான பொதுமக்கள், மகளிர் சுயஉதவி குழுவினர் கலந்து கொண்டனர்.

    • கிராம சபை கூட்டத்திற்கு ஊராட்சி தலைவர் பால்தாய் தலைமை தாங்கினார்.
    • தீர்மானத்தினை ஊராட்சி செயலாளர் தங்கபாண்டியன் வாசித்தார்.

    ஆலங்குளம்:

    ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியம் மாயமான்குறிச்சி ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியம் மாயமான் குறிச்சி ஊராட்சியில் குருவன் கோட்டையில் உள்ள பஞ்சாயத்து அலுவலகத்தில் சிறப்பு கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் பால் தாய் தலைமையில் நடைபெற்றது. ஊராட்சி ஒன்றிய பொறியாளர் பூச்செண்டு மற்றும் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சியில் பசுமை வளங்கள் அதிகரிக்க ஏரி மற்றும் குளங்களில் மரம் நடும் தீர்மானம் ஊராட்சி மன்ற செயலாளர் தங்கபாண்டியன் வாசித்தார். தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் வார்டு உறுப்பினர்கள் மற்றும் மக்கள் நல பணியாளர் நாராயணன், கனி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • கொம்புக்காரன் பொட்டல் சமுதாய நலக்கூடத்தில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது.
    • கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    சாயர்புரம்:

    நட்டாத்தி ஊராட்சியின் மே தின கிராமசபைக் கூட்டம் கொம்புக்காரன் பொட்டல் சமுதாய நலக்கூடத்தில் நடைபெற்றது. ஊராட்சி தலைவர் சுதாகலா தலைமை தாங்கினார். துணைத்தலைவர் பண்டாரம் முன்னிலை வகித்தார். பற்றாளராக துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜோசப், வார்டு உறுப்பினர்கள் ஜான்சிராணி, சரோஜா, பண்டாரம், மணி மந்திரம் அங்கன்வாடி பணியாளர்கள் ஜோதிகனி, உச்சிமாகாளி, தேவிகலா டிவிஎஸ் தொண்டு நிறுவனம் சார்பாக செல்வி, திட்ட ஒருங்கிணைப்பாளர் வெள்ளச்சாமி பணித்தள பொறுப்பாளர்கள் எஸ்தர், மருதவள்ளி, மேரி ஆனந்தி மற்றும் ஊராட்சி பொதுமக்கள், சுயஉதவிக்குழுவினர் 100 நாள் பணியாளர்கள் திரளாக கலந்து கொண்டனர். கூட்டத்தில் 2022-23-ம் நிதி ஆண்டிற்கான வரவு-செலவுகள், 2021-22 ஊராட்சி தணிக்கை அறிக்கை, திட மற்றும் திரவக்கழிவு மேலாண்மை, அனைவருக்கும் வீடு திட்டம் கணக்கெடுப்பு ஒப்புதல், நெகிழி ஒழிப்பு, அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்ட பணிகள், 15-வது நிதிக்குழு மானிய பணிகள் ஒப்புதல், ஜல் ஜீவன் மிஷன் திட்டம், தூய்மை பாரத இயக்கம், பள்ளி மேலாண்மை குழு செயல்பாடுகள் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை ஊராட்சி செயலர் முத்துராஜ் செய்திருந்தார்.

    • உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து பஞ்சாயத்துகளிலும் சிறப்பு கிராமசபை கூட்டங்கள் நடைபெற்றது.
    • ஸ்டாலின்நகர் பகுதியில் கிராம சபை கூட்டத்தை புறக்கணித்து 100-க்கும் மேற்பட்டோர் கருப்பு கொடி கட்டி, அங்கேயே சமையல் செய்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

     கடையம்:

    உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து பஞ்சாயத்துகளிலும் சிறப்பு கிராமசபை கூட்டங்கள் நடைபெற்றது.

    செங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட தேன் பொத்தை ஊராட்சியில் கலெக்டர் துரை ரவிச்சந்திரன் தலைமையில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பத்மாவதி, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை துணை கலெக்டர் சங்கர நாராயணன், பயிற்சி சப்- கலெக்டர் கவிதா, தாசில்தார் கந்தசாமி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் குழந்தை மணி, மாணிக்கவாசகம், பஞ்சாயத்து தலைவர் ஜாபர் அலி மற்றும் வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர் .

    கடையம் பெரும்பத்து பஞ்சாயத்தின் கீழ் வெய்க்காலிபட்டி, மேட்டூர், ஆசீர்வாதபுரம், கானாவூர் உள்படசிறிய கிராமங்கள் உள்ளது. இதில் மேட்டூரின் ஒரு பகுதியை சபரிநகர் என்றும், வெய்க்காலிப் பட்டி என்றும் பெயர் மாற்றம் செய்ய ஊராட்சி தலைவர் பொன்ஷீலா ஏற்பாடு செய்வதாக கூறப்படுகிறது. இதனை கண்டித்து மேட்டூர் பொதுமக்கள் நேற்று நடைபெற்ற கிராம சபை கூட்டத்தை புறக்கணித்து மேட்டூர் பரி. திரித்துவ ஆலயம் முன்பு திரண்டு கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம் நடத்தினர்.

    ஸ்டாலின்நகர் பகுதியில் கிராம சபை கூட்டத்தை புறக்கணித்து 100-க்கும் மேற்பட்டோர் கருப்பு கொடி கட்டி, அங்கேயே சமையல் செய்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தாசில்தார் ஆதிநாராயணன் மற்றும் வட்டார வளர்ச்சி அதிகாரி திருமலை முருகன் ஆகியோர் 2 நாட்களில் பிரச்சிணைக்கு தீர்வு காணப்படும் என உறுதியளித்த பின்னர் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

    பாவூர்சத்திரம்

    பாவூர்சத்திரம் கல்லூரணி கிராம சபை கூட்டத்தில் 100-க்கும் மேற்பட்டோர் இணைந்து கையெழுத்திட்ட மனு ஒன்றை ஊராட்சி தலைவரிடம் வழங்கினர். அதில் காமராஜர் நகர் பகுதியில் அதிகளவில் குடியிருப்பு பகுதிகள் இருக்கும் இடத்தில் தனியார் நிறுவனம் செல்போன் டவர் அமைக்க நடவடிக்கை எடுப்பதாகவும் அதனை கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் வைத்து தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் கூறியிருந்தனர்

    • பரந்தூரில் நடந்த கிராமசபை கூட்டத்தில் புதிய விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 5-வது முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    • புதிய விமான நிலைய அறிவிப்புக்கு பின்னர் நடந்த அனைத்து கிராமசபை கூட்டங்களிலும் விமான நிலையத்துக்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றபட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

    காஞ்சிபுரம்:

    சென்னையின் 2-வது விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைய உள்ளது. இதற்கு விளைநிலங்கள், குடியிருப்புகளை கையகப்படுத்துவதற்கு அதை சுற்றியுள்ள பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். அவர்கள் புதிய விமான நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து பல்வேறு போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகிறார்கள். இந்தநிலையில் இன்று உலக தண்ணீர் தினத்தையொட்டி சிறப்பு கிராமசபை கூட்டம் அனைத்து கிராமங்களிலும் நடைபெற்றது.

    பரந்தூரில் நடந்த கிராமசபை கூட்டத்தில் புதிய விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 5-வது முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஏற்கனவே புதிய விமான நிலைய அறிவிப்புக்கு பின்னர் நடந்த அனைத்து கிராமசபை கூட்டங்களிலும் விமான நிலையத்துக்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றபட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. ஏகனாபுரத்தில் நடந்த கிராமசபை கூட்டத்திலும் புதிய விமான நிலையத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    • குடியரசு தினவிழாவையொட்டி இன்று பல்வேறு கிராமங்களில் கிராமசபை கூட்டங்கள் நடத்தப்பட்டது. நெல்லை மாவட்டத்திலும் இன்று கிராமசபை கூட்டங்கள் நடத்தப்பட்டது.
    • கங்கைகொண்டான் அருகே உள்ள அலவந்தான்குளம் கிராமத்தில் பள்ளமடை, நெல்லை திருத்து, பல்லிக்கோட்டை, அலவந்தான்குளம் ஆகிய 4 கிராமங்களை சேர்ந்த மக்கள் பங்கு பெறும் கிராமசபை கூட்டம் இன்று நடைபெற்றது.

    நெல்லை:

    குடியரசு தினவிழாவையொட்டி இன்று பல்வேறு கிராமங்களில் கிராமசபை கூட்டங்கள் நடத்தப்பட்டது. நெல்லை மாவட்டத்திலும் இன்று கிராமசபை கூட்டங்கள் நடத்தப்பட்டது. கங்கைகொண்டான் அருகே உள்ள அலவந்தான்குளம் கிராமத்தில் பள்ளமடை, நெல்லை திருத்து, பல்லிக்கோட்டை, அலவந்தான்குளம் ஆகிய 4 கிராமங்களை சேர்ந்த மக்கள் பங்கு பெறும் கிராமசபை கூட்டம் இன்று நடைபெற்றது.

    இந்நிலையில் அலவந்தான்குளம் கிராம மக்கள் இன்று கிராமசபை கூட்டத்தை புறக்கணித்தனர். அவர்கள் கிராமசபை கூட்டம் நடந்த பகுதி முன்பு கருப்புக்கொடி ஏந்தி போராட்டம் நடத்தினர். இது தொடர்பாக அவர்கள் கூறும்போது, எங்கள் பகுதியில் உள்ள மேய்ச்சல் நிலத்தை தனியார் நிறுவனங்களுக்காக சிப்காட் மூலம் அரசு கையகப்படுத்துவதாக தெரிகிறது. அதற்கு எதிர்ப்பு தெரிவிந்து நாங்கள் இந்த போராட்டத்தை நடத்தி வருகிறோம். எனவே அதனை கைவிட வேண்டும் என தெரிவித்தனர்

    • குடியரசு தினத்தை முன்னிட்டு அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளது.
    • கூட்டத்தில் பல்வேறு திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

    தென்காசி:

    தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

    குடியரசு தினத்தை முன்னிட்டு தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் வருகிற 26-ந் தேதி காலை 11 மணிக்கு கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளது.

    இதில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதித்தல், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட பணிகள், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) , பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம் (ஊரகம்), அனைவருக்கும் வீடு கணக்கெடுப்பு, ஜல்ஜீவன் இயக்கம், பிரதம மந்திரி கிராம சாலை திட்டம், மக்கள் திட்டமிடல் இயக்கம், மூவலூர் ராமா மிர்தம் அம்மையார் நினைவு உயர்கல்வி உறுதி திட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மக்கள் நிலை ஆய்வு, வறுமை குறைப்பு திட்டம் மற்றும் இதர பொருள்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

    இந்த கிராம சபை கூட்டங்களில் கிராம ஊராட்சிகளில் உள்ள அனைத்து பொதுமக்களும் கலந்துகொண்டு பயன்பெற வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கேரளாவில் இனி நடைபெறும் கிராம சபை கூட்டங்களை ஆன்லைன் மூலம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
    • புதிய செயலியை உருவாக்கும் முயற்சிகள் தொடங்கப்பட்டுள்ளன.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் நடைபெறும் கிராம சபை கூட்டங்களில் அதிக அளவில் மக்கள் பங்கேற்பதில்லை என்று புகார் எழுந்தது.

    கிராம சபை கூட்டங்களில் தீர்மானங்களை நிறைவேற்ற அதிக அளவு மக்கள் பங்கேற்க வேண்டும். அந்த அளவுக்கு மக்கள் பங்கேற்பு இல்லாவிட்டால் அந்த தீர்மானங்களை கிராம சபை கூட்டத்தில் நிறைவேற்ற முடியாது.

    இதனால் கிராம நிர்வாகத்தில் பல சிக்கல்கள் ஏற்பட்டது. மேலும் கிராமங்களுக்கு ஒதுக்கப்படும் வளர்ச்சி நிதியையும் முழுமையாக பயன்படுத்த முடியாத நிலையும் உருவானது.

    இதனை தவிர்க்க தற்போது கேரள அரசு புதிய முயற்சியை தொடங்கி உள்ளது. அதன்படி கேரளாவில் இனி நடைபெறும் கிராம சபை கூட்டங்களை ஆன்லைன் மூலம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    ஆன்லைன் மூலம் நடந்தால் அதிக அளவில் மக்கள் பங்கேற்பு இருக்கும் என்றும், இதன்மூலம் தீர்மானங்களையும் எளிதில் நிறைவேற்ற முடியும் எனவும் கேரள அரசு கருதுகிறது.

    இதற்காக புதிய செயலியை உருவாக்கும் முயற்சிகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த செயலி மூலம் தீர்மானங்களை நிறைவேற்றவும், பங்கேற்பாளர்களை அடையாளம் காணவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

    மேலும் இது தொடர்பாக சட்ட நிபுணர்களின் கருத்துக்களை கேட்கவும் மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

    • ஊராட்சியில் நடைபெற்ற திட்டப் பணிகள் மற்றும், ஊரக வேலை வாய்ப்பு திட்ட பணிகள் ஆகியவை குறித்து சமூக தணிக்கை நடைபெற்றது.
    • சமூக ஆர்வலர் பாலசுப்பிரமணியம்,மற்றும் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பல்லடம் :

    பல்லடம் ஒன்றியம் வடுகபாளையம்புதூர் ஊராட்சியில் சமூக தணிக்கை கிராம சபை சிறப்பு கூட்டம் நடைபெற்றது.

    இதில், ஊராட்சியில் நடைபெற்ற திட்டப் பணிகள் மற்றும், ஊரக வேலை வாய்ப்பு திட்ட பணிகள் ஆகியவை குறித்து சமூக தணிக்கை நடைபெற்றது.இதில் ஊராட்சி தலைவர் புனிதா சரவணன், வட்டார வளர்ச்சி அலுவலக பயிற்றுநர் சுந்தரமகாலிங்கம்,துணை வட்டார வளர்ச்சி அலுவலர் புருஷோத்தமன், ஊராட்சி செயலாளர் கிருஷ்ணசாமி, சமூக ஆர்வலர் பாலசுப்பிரமணியம்,மற்றும் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பேட்டை ரூரல் ஊராட்சி கிராம சபை கூட்டம் தலைவர் சின்னதுரை தலைமையில் நடைபெற்றது.
    • 6 மாதமாக துணை தலைவர் கையெழுத்து இடாமல் காலம் தாழ்த்தி வருவதால் துணைத்தலைவர் அதிகாரத்தை ரத்து செய்ய கோரி மனு அளித்தனர்.

    நெல்லை:

    பேட்டை ரூரல் ஊராட்சி கிராம சபை கூட்டம் இடகரை பகுதியில் தலைவர் சின்னதுரை தலைமையில் நடைபெற்றது. இதில் அடிப்படை வசதிகளான தெருவிளக்கு, குடிதண்ணீர், உடைந்த பைப்புகள் சரிபார்த்தல், தேங்கி கிடக்கும் குப்பைகளை அகற்றுதல் உள்ளிட்ட பணிகளுக்கான செலவுக்கு தலைவர் மற்றும் துணை தலைவர் காசோலையில் கையெழுத்திட வேண்டும்.

    கடந்த 6 மாதமாக துணை தலைவர் கையெழுத்து இடாமல் காலம் தாழ்த்தி வருவதால் பொதுமக்கள் இன்று கிராம சபை கூட்டத்தில் துணைத்தலைவர் அதிகாரத்தை ரத்து செய்ய கோரி மனு அளித்தனர். மேலும் ஞானம்மாள் கட்டளையில் பகுதி நேர ரேசன்கடை வேண்டி வருகிற 11-ந்தேதி கிராம நிர்வாக அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடத்தவும் பொதுமக்கள் முடிவு செய்தனர்.

    இக்கூட்டத்தில் மானூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ஏஞ்சலின், கிராம நிர்வாக அலுவலர் ராஜா அங்கப்பன், ஒன்றிய கவுன்சிலர் முபீன் முகம்மது இஸ்மாயில், துணைத்தலைவர், ஊராட்சி உறுப்பினர்கள், அங்கன்வாடி பணியாளர்கள்,மகளிர் சுய உதவிக்குழுக்கள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்ட பணியாளர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×