என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "grant amount"
- எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி மற்றும் அதற்கு கீழான தகுதி வரை பதிவு செய்தவர்களுக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.600ம், மேல்நிலைக் கல்வித் தகுதியை பதிவு செய்தவர்களுக்கு ரூ.750-ம், பட்டதாரிகள் எனில் ரூ.1000-ம், 10 வருடங்களுக்கு வழங்கப்படுகிறது.
- மனுதாரர்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
தேனி:
தேனி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, 30.06.2023 அன்றைய தேதிப்படி குறைந்தபட்சம் 5 ஆண்டுகளுக்கும் மேலாக காத்திருப்போருக்கு அரசால் உதவித் தொகை வழங்கப்படுகிறது. தற்போது இத்திட்டத்தின்படி காலாண்டு ஒன்றுக்கு எஸ்.எஸ்.எல்.சி. தோல்வி கல்வித் தகுதியை பதிவு செய்தவர்களுக்கு ரூ.600ம், எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி பதிவு செய்தவர்களுக்கு ரூ.900ம், மேல்நிலை வகுப்பு தேர்ச்சி பதிவு செய்தவர்களுக்கு ரூ.1200ம், பட்டம் மற்றும் முதுகலைப் பட்டம் படித்து பதிவு செய்தவர்களுக்கு ரூ.1800ம், 3 வருடங்களுக்கு தமிழக அரசால் வழங்கப்படுகிறது.
மாற்றுத்திறனாளி மனுதாரர் எனில் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து, குறைந்தபட்சம் ஒரு வருடம் நிறைவு செய்திருத்திலே போதுமானது. இவ்வாறான மனுதாரர்களின் எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி மற்றும் அதற்கு கீழான தகுதி வரை பதிவு செய்தவர்களுக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.600ம், மேல்நிலைக் கல்வித் தகுதியை பதிவு செய்தவர்களுக்கு ரூ.750-ம், பட்டதாரிகள் எனில் ரூ.1000-ம், 10 வருடங்களுக்கு வழங்கப்படுகிறது.
30.06.2023-ம் தேதி அன்று நிலவரப்படி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் 45 வயதிற்கு மிகாமலும், ஏனையோரைப் பொறுத்த மட்டில் 40 வயதிற்கு மிகாமலும் இருத்தல் வேண்டும்.
மனுதாரர்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000க்கு மிகாமல் இருத்தல் வேண்டும். மாற்றுத்திறனாளி மனுதாரர் எனில் குடும்ப ஆண்டு வருமானத்திற்கு உச்ச வரம்பு கிடையாது.
பொறியியல், மருத்துவம், விவசாயம், கால்நடை மருத்துவம், சட்டம் போன்ற தொழிற்கல்வி பட்டதாரிகள் இந்த உதவித் தொகை பெற தகுதியில்லாதவர்கள்.
இந்த உதவித்தொகை பெறுவதற்கு தகுதி உள்ளவர்கள் தேனி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி மையத்தில் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம் அல்லது தேனி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலரை தொடர்புகொண்டு விண்ணப்பத்தினை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம் என தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.
- வேலையற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் மாவட்ட தொழில் மையத்தின் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
- 25 சதவீத மானியம் அதிகபட்சமாக ரூ.3.75 லட்ச மாக உயர்த்தப்பட்டுள்ளது
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது;-
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், கிராமங்கள் மற்றும் நகரப் பகுதிகளில் உள்ள வேலையற்ற இளை ஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் மாவட்ட தொழில் மையத்தின் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்பொழுது, தமிழக அரசினால் கடன், மானியம் மற்றும் வயது வரம்பு உயர்த்தப் பட்டுள்ளது. இத்திட்டத்தின்கீழ் வியாபார சார்ந்த தொழில்களுக்கு திட்ட மதிப்பீடு அதிகபட்சம் ரூ.15 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு, மாநில அரசால் 25 சதவீத மானியம் அதிகபட்ச மாக ரூ.3.75 லட்ச மாக உயர்த்தப்பட்டுள்ளது. இவ்வாறு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
- அரசு ஊழியர்கள் உள்ள குடும்பத்துக்கு 1000 ரூபாய் பணம் வழங்கப்படாது.
- கணவரின் ஆண்டு வருமானம் கணக்கிடவும் வாய்ப்பு உள்ளது.
சென்னை:
தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கும் திட்டம் 2021 சட்டசபை தேர்தலின் போது தி.மு.க. அளித்த வாக்குறுதிகளில் ஒன்று.
மக்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்த அறிவிப்புகளில் இந்த அறிவிப்பு மிக முக்கியமாகும். ஆனால் தி.மு.க. அரசு சொன்னபடி இந்த வாக்குறுதியை இன்னும் நிறைவேற்றவில்லை என்ற குற்றச்சாட்டு எதிர்க் கட்சிகள் தரப்பில் முன் வைக்கப்பட்டு வந்தது.
ஆனால் இந்த திட்டத்தை கண்டிப்பாக தி.மு.க. அரசு நிறைவேற்றும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அடிக்கடி கூறி வந்தார். இது தொடர்பாக உயர்மட்ட அதிகாரிகள் அளவில் ஆலோசனையும் நடத்தி இருந்தார்.
இதைத் தொடர்ந்து பொருளாதார ஆலோசனை குழுவுடன் ஆலோசித்த நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இந்த திட்டத்தில் யார்-யார் பயன் அடையலாம் என்ற விவரங்களை சேகரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பித்தார்.
இதைத் தொடர்ந்து தமிழக சட்டசபையில் வருகிற மார்ச் தாக்கலாகும் பட்ஜெட்டில் இது பற்றிய அறிவிப்பு இடம் பெறலாம் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்த சூழ்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தின் போது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
இதையடுத்து இந்த திட்டத்தில் யார்-யாருக்கு மாதம் ரூ.1000 கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே பயனாளிகளை தேர்வு செய்யும் நிதித்துறை மற்றும் வருவாய்த் துறையின் தகவல் சேகரிப்பு பணிகள் இறுதி கட்டத்தில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
அதன்படி வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள பெண்களுக்கு ரூ.1000 வழங்க அரசு திட்டமிட்டு உள்ளது. அதன்படி பி.எச்.எச். என்ற வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள ரேசன் அட்டைதாரர்களுக் கும், பி.எச்.எச்.ஏ.ஏ.ஒய். என்ற அந்த்யோ தயா அன்னயோஜனா ரேசன் அட்டை வைத்திருக்கும் (அதாவது 35 கிலோ அரிசி வாங்குபவர்கள்) நபர்களுக்கு ரூ.1000 கிடைக்கும்.
இதில் வயது வரம்பு கணவரின் ஆண்டு வருமானம் கணக்கிடவும் வாய்ப்பு உள்ளது.
அரசு ஊழியர்கள் உள்ள குடும்பத்துக்கு இந்த 1000 ரூபாய் பணம் வழங்கப்படாது. புதுமைப் பெண் திட்டத்தில் பயன் அடையும் கல்லூரி மாணவிகளில் வறுமைக் கோட்டு கீழ் உள்ள தாயார்கள் இதில் பயன் அடைய வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றது.
இதுபோல 60 வயதுக்கு மேற்பட்டோருக்கான முதி யோர் உதவித்தொகை வழங்குவதில் இந்த திட்டம் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது.
குடும்பத் தலைவிகளுக்கு தான் உரிமைத் தொகை என்பதால் ரேசன் அட்டையில் பெயர் மாற்றம் செய்ய வேண்டியது இல்லை. தகுதியான குடும்பத் தலைவிகளுக்கு அவரவர் வங்கிக் கணக்கில் பணம் சென்றடையும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும்.
அடுத்த மாதம் தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் இந்த திட்டத்தை கருணாநிதி பிறந்த நாளான ஜூன் 3-ந்தேதி தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
எனவே குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத் தொகை வழங்குவது தொடர்பாக அமைச்சரவை கூடி ஒப்புதல் வழங்கியதும், விரிவான அரசாணை வெளியிடப்படும்.
- உதவித்தொகை ரூ.2000 பெறும் அனைத்து பயனாளிகளும் ஆதார் எண் விவரத்தை சமர்பித்து இணைக்கப்படவேண்டும்.
- மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை பெறும் மாற்றுத்திறனாளிகள் அனைவரும் ஆதார் எண் இணைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தின் மூலம் மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை பெறும் மாற்றுத்திறனாளிகள் அனைவரும் ஆதார் எண் இணைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தின் மூலம் மாதந்தோறும் பராமரிப்பு உதவித்தொகை ரூ.2000 பெறும் அனைத்து பயனாளிகளும் ஆதார் எண் விவரத்தை சமர்பித்து இணைக்கப்படவேண்டும்.
திருப்பூர் மாவட்டத்தில் மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை ரூ.2000 பெற்று வரும் மனவளர்ச்சி குன்றியோர், கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள், தொழுநோயால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர், தசைசிதைவு நோயால் பாதிக்கப்பட்டோர், முதுகு தண்டு வடம், பார்க்கின்சன் மற்றும் நாள்பட்ட நரம்பியல் நோயால் பாதிக்கப்பட்டோர் ஆகிய திட்டத்தின் கீழ் பயன்பெறும் நபர்களின் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகம், குடும்ப அட்டை ஆகிய ஆவணங்களின் அசல் மற்றும் நகலினை அறை எண் 23, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம், திருப்பூர் என்ற முகவரியில் மாற்றுத்திறனாளிகளின் பெற்றோர் அல்லது பாதுகாவலர் மூலம் 27.12.2022 ந்தேதிக்குள் அரசு அலுவலக வேலை நாட்களில் சமர்பிக்க வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.
- எவ்வித வேலைவாய்ப்பும் கிடைக்காமல் 5 ஆண்டுகளுக்கு மேலாக காத்திருக்கும் இளைஞர்களின் துயரினை துடைக்கும் வகையில் உதவித் மாதம் தோறும் வழங்கப்படுகிறது.
- அனைத்து அசல் சான்றிதழ்கள் மற்றும் அடையாள அட்டை ஆகியவற்றுடன் நேரில் வர வேண்டும். www.tnvelaivaaippu.gov.in. என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது:-
படித்து முடித்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து எவ்வித வேலைவாய்ப்பும் கிடைக்காமல் 5 ஆண்டுகளுக்கு மேலாக காத்திருக்கும் இளைஞர்களின் துயரினை துடைக்கும் வகையில், மாதம் ஒன்றுக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கு ரூ.200, 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.300, மேல்நிலைக் கல்வியில் தேர்ச்சிப் பெற்றவர்களுக்கு ரூ.400, மற்றும் பட்டதாரிகளுக்கு ரூ.600, வீதம் 3 ஆண்டு காலத்திற்கும் மற்றும் அனைத்து மாற்றுத்திறனாளி களுக்கான உதவித் தொகை இனி வரும் காலங்களில் மாதம் ஒன்றுக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தேர்ச்சி பெறாதவர்களுக்கு ரூ.600, மேல்நிலைக் கல்வியில் தேர்ச்சிப் பெற்றவர்களுக்கு ரூ.750, மற்றும் பட்டதாரிகளுக்கு ரூ.1,000 வீதம் 10 ஆண்டு காலத்திற்கு வேலைவாய்ப்பற்றோர் உதவித் மாதம் தோறும் வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ் தற்பொழுது 01.10.2022 முதல் 31.12.2022 வரையிலான காலாண்டிற்கு மேற்கண்ட கல்வித் தகுதிகளை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து 5 ஆண்டு காலம் முடிவுற்ற பதிவுதாரர்களும், மேலும் இம்மையத்தில் பதிவு செய்து ஒரு வருடம் முடிவுற்ற அனைத்து மாற்றுத்திறனாளிகளும் தகுதியானவர்கள் ஆவார். மேற்கண்ட தகுதியுடையவர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு அனைத்து அசல் சான்றிதழ்கள் மற்றும் அடையாள அட்டை ஆகியவற்றுடன் நேரில் வர வேண்டும். www.tnvelaivaaippu.gov.in. என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இவ்விண்ணப்பத்தில் 7- பக்கத்தில் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய் அலுவலரிடம் கையொப்பம் பெற்று வருமாறு தெரிவிக்கப்ப டுகிறது. சுய உறுதிமொழி ஆவணம் கொடுத்தவர்களுக்கு மட்டும் தொடர்ச்சியாக உதவித் தொகை வழங்கப்படும். இதுவரை சுய உறுதிமொழி ஆவணம் கொடுக்காத நபர்கள், உடனடியாக மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் உரிய படிவத்தில் சுய உறுதிமொழி ஆவணத்தினை சமர்பிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.
- 11ம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ் மொழி இலக்கிய திறனறித் தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
- 2 வருடங்களுக்கு மாதந்தோறும் ரூ.1,500 உதவித் தொகை வழங்கப்படும்.
சேலம்:
தமிழகத்தில் பள்ளி மாணவர்களின் தமிழ் மொழி இலக்கிய திறனை மேம்படுத்தும் வகையில் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ் மொழி இலக்கிய திறனறித் தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இத்தேர்வின் மூலம் 1,500 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு 2 வருடங்களுக்கு மாதந்தோறும் ரூ.1,500 உதவித் தொகை வழங்கப்படும். அதன்படி முதன் முதலாக நடப்பாண்டு தேர்வு நேற்று மாநிலம் முழுவதும் நடந்தது.
சேலம் மாவட்டத்தை பொறுத்தவரை, சேலம் கல்வி மாவட்டத்தில் 2,668 பேரும், சேலம் ஊரகத்தில் 2,082 பேரும், சங்ககிரியில் 1,894 பேரும், ஆத்தூரில் 2,385 பேரும், எடப்பாடி கல்வி மாவட்டத்தில் இருந்து 2,522 மாணவர்களும் என மொத்தம் 11,551 மாணவர்கள் இத்தேர்வினை எழுத விண்ணப்பித்து இருந்தனர். இவர்களுக்காக 27 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு தேர்வு நடந்தது.
தேர்வில் 10ம் வகுப்பு தர நிலையிலுள்ள, தமிழ் பாடத்திட்டத்தின் அடிப்படையில், கொள்குறி வகையில் வினாக்கள் கேட்கப்பட்டன. இத்தேர்வை 11,108 பேர் கலந்து கொண்டு எழுதினர். விண்ணப்பித்திருந்த 443 பேர் தேர்வெழுத வரவில்லை. அறை கண்காணிப்பாளர், பறக்கும்படையினர் என 700க்கும் மேற்பட்டோர் தேர்வு பணியில் ஈடுபட்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்