search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Grievance redressal"

    • சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நாளை காலை 10 மணிக்கு விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடை பெறுகிறது.
    • வேளாண்மை சம்பந்தமான தங்களது குறை களை நேரிலும், விண்ணப்பம் மூலமாகவும் தெரிவிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் கார்மேகம் தெரிவித் துள்ளார்.

    சேலம்:

    சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடை பெறுகிறது. இக்கூட்டத்தில் விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு வேளாண்மை சம்பந்தமான தங்களது குறை களை நேரிலும், விண்ணப்பம் மூலமாகவும் தெரிவிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் கார்மேகம் தெரிவித்

    துள்ளார்.

    • நாளை மின் பயனீட்டாளர் மாதாந்திர குறைதீர்க்கும் கூட்டம் நடக்கிறது.
    • பயனீட்டாளர் குறை கோரிக்கைகள் தெரிவித்து தீர்வு பெறலாம்.

    ஈரோடு:

    ஈரோடு மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் முத்துவேல் தலைமையில் நாளை (புதன்கிழமை) காலை 11 மணிக்கு மின் பயனீட்டாளர் மாதாந்திர குறைதீர்க்கும் கூட்டம் ஈரோடு ஈ.வி.என் சாலையில் உள்ள மின் கோட்ட அலுவலகத்தில் நடக்கிறது.

    இதில் சோலார், கணபதி பாளையம், கொடுமுடி, சிவகிரி, கஸ்தூரிபாய் கிராமம், அரச்சலூர், எழுமாத்தூர், மொடக்குறிச்சி , அனுமன்பள்ளி, முள்ளம்பரப்பு பகுதி பயனீட்டாளர் குறை கோரிக்கைகள் தெரிவித்து தீர்வு பெறலாம். 

    • மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர்க்கும் கூட்டம் நடக்கிறது.
    • தங்களது கோரிக்கைகளை மனுக்களாக அளித்து பயன்பெறலாம்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் சென்றடைவதை உறுதி செய்யும் வகையில், அவர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் வருவாய் கோட்ட அளவில் நடைபெறவுள்ளது. வருகிற 6-ந் தேதி காலை 10 மணிக்கு கோட்டாட்சியர் தலைமையில் ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திலும், 19-ந் தேதி கமுதி வட்டாட்சியர் அலுவலகத்தில் காலை 10 மணியளவில் பரமக்குடி உதவி ஆட்சியர் தலைமையிலும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது.

    ஒற்றைச்சாளர முறையில் நடைபெறும் இந்த முகாமில் அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொள்ள விருப்பதால், இதுவரை மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பெற்றிராத நபர்கள் மருத்துவக்குழு மூலம் அடையாள அட்டை பெற்றுக்கொள்ளவும், தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டைக்கு (UDID அட்டை) விண்ணப்பிக்காதவர்கள் விண்ணப்பிக்கவும், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் பதிவு மேற்கொள்ளவும், ஆதார் அட்டைக்கு விண்ணப்பிக்கவும், மற்றும் இதர அனைத்து விதமான உதவிகளுக்கான தங்களது கோரிக்கைகளை மனுக்களாக அளித்து பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நாளை மாற்றுத்திறனாளிகள் குறைதீர் கூட்டம் நடைபெறும்.
    • வருவாய் கோட்ட அலுவலகத்தில் நடைபெற உள்ளது, ஆட்சித் திறனாளிகள் இந்த கூட்டத்தில் கலந்து பயன்பெறலாம்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சை கோட்டத்திற்கு உட்பட்ட கோட்ட அளவிலான மாற்றுத் திறனாளிகளுக்கான குறை தீர்க்கும் நாள் கூட்டம் நாளை (வியாழக்கிழமை ) காலை 11 மணிக்கு தஞ்சை வருவாய் கோட்ட அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

    எனவே தஞ்சை, திருவையாறு, ஒரத்தநாடு, பூதலூர் வட்டத்தில் வசிக்கும் ஆட்சித் திறனாளிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அரசு ஊழியர்கள்-ஓய்வூதியதாரர்களுக்கான குறைதீர்க்கும் கூட்டம் விருதுநகரில், நடக்கிறது.
    • மேற்கண்ட தகவலை விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி தெரிவித்துள்ளார்.

    விருதுநகர்

    புதிய மருத்துவக் காப்பீட்டுத்திட்டத்தின் கீழ் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கான மருத்துவ செலவினத் தொகையை திரும்பக்கோரும் இனங்களின் மீது தீர்வு காணும் வகையில், மனுக்கள் மற்றும் அசல் ஆவணங்கள் விடுபட்ட மனுக்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும், அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான புதிய மருத்துவக்காப்பீட்டுத் திட்டம் குறித்த குறைதீர்க்கும் கூட்டம் விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்ற அரங்கத்தில் வருகிற 29-ந் தேதி (வியாழக்கிழமை) மாலை 4.30 மணியளவில் நடைபெற உள்ளது.

    அரசு ஊழியர்கள் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து அதன் மீது மாவட்ட மருத்துவம் ஊரகநலப்பணிகள் மற்றும் குடும்ப நலம் இணை இயக்குநர் மற்றும் இன்சூரன்ஸ் நிறுவனத்தால் ஆவணங்கள் கோரப்பட்டிருக்கும் பட்சத்தில் இந்த கூட்டத்தில் தகுந்த ஆவணங்களுடன் கலந்து கொண்டு பயன்பெறலாம். மேற்கண்ட தகவலை விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி தெரிவித்துள்ளார்.

    • தூத்துக்குடி மாவட்டத்தில் மீனவர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் தலைமையில் அடுத்த மாதம் நவம்பர் 4-ந்தேதி நடைபெற உள்ளது
    • கூட்டத்தில் பதிவு செய்த சமூக ஆர்வலர்கள், ஊர்த்தலைவர்கள், பெரியவர்கள் பதிவு செய்து கொண்ட பொருள் குறித்து பேச வாய்ப்பு வழங்கப்படும்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டத்தில் மீனவர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் தலைமையில் அடுத்த மாதம் நவம்பர் 4-ந்தேதி (வெள்ளிக்கிழமை) மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது. கூட்டத்தில் பதிவு செய்த சமூக ஆர்வலர்கள், ஊர்த்தலைவர்கள், பெரியவர்கள் பதிவு செய்து கொண்ட பொருள் குறித்து பேச வாய்ப்பு வழங்கப்படும்.

    அப்பொருள் மீதான கருத்துக்கள் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் அங்கேயே பெறப்பட்டு தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்படும். இக்கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் கலந்து கொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

    ×