search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "grievance redressal day meeting"

    • தொழில் முனைவோர் கருத்தரங்கு நடைபெறவுள்ளது.
    • குறைகளை விண்ணப்பம் வாயிலாக முன்னதாகவே சமர்ப்பித்து பயனடையுமாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    திருப்பூர் :

    முன்னாள் படைவீரர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மற்றும் தொழில் முனைவோர் கருத்தரங்கு 22-6-2023 (வியாழக்கிழமை) நடைபெறவுள்ளது. இது குறித்து கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- திருப்பூர் மாவட்டத்தை சார்ந்த முன்னாள் படைவீரர் மற்றும் அவரை சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மற்றும் தொழில் முனைவோர் கருத்தரங்கு 22-6-2023 (வியாழக்கிழமை) அன்று பிற்பகல் 3 மணிக்கு திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அறை எண். 20-ல் உள்ள மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட அரங்கில் கலெக்டர் தலைமையில் நடைபெறவுள்ளது.

    திருப்பூர் மாவட்டத்தைச் சார்ந்த முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவரைச் சார்ந்தோர்கள் 2.30 மணியளவில் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது குறைகளை விண்ணப்பம் வாயிலாக (இரட்டைப் பிரதிகளில்) முன்னதாகவே சமர்ப்பித்து பயனடையுமாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.மேலும் தொழில் முனைவோர் கருத்தரங்கில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர், பொது மேலாளர் மாவட்ட தொழில் மையம், முதல்வர் அரசினர் தொழிற்பயிற்சி மையம், திருப்பூர் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர், டெக்ஸ்கோ உதவி மேலாளர் ஆகியோர் கலந்துகொண்டு தங்கள் துறைகளில் முன்னாள் படைவீரர்களுக்கான சிறப்பு நலத்திட்டங்கள், வேலைவாய்ப்பு, பயிற்சிகள் மற்றும் உதவிகள் போன்றவை பற்றி சிறப்புரை ஆற்ற உள்ளனர். எனவே இக்கூட்டத்தில் திருப்பூர் மாவட்டத்தைச் சார்ந்த முன்னாள் படைவீரர்கள் அதிக அளவில் கலந்து கொண்டு பயனடையுமாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.   

    • விருதுநகர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்டங்கள் முழுமையாக சென்றடைய வேண்டும் என அரசு செயலாளர் கூறினார்.
    • இருப்பிடத்திற்கு அருகிலேயே வேலை வாய்ப்பினை வழங்க தேவையான வழிவகைகள் செய்ய வேண்டும்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இந்த மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக செயல்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் நடைபெற்று வரும் பணிகள் குறித்து, கலெக்டர் மேகநாதரெட்டி தலைமையில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளர் லால்வேனா, துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆய்வு செய்தார். இந்த கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

    விருதுநகர் மாவட்டத்திலுள்ள அனைத்து மாற்றுத்தி றனாளிகளுக்கும் அரசின் நலத்திட்ட உதவிகள் சென்றடையும் வகையில், மாற்றுத்திறனாளிகளின் எண்ணிக்கை, அடையாள அட்டை வழங்கப்பட்ட விவரம் குறித்து முழுமையான கணக்கெடுப்பு பணி கள் மேற்கொள்ள வேண்டும்மாற்று த்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பெற்றுள்ள அனைவருக்கும் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை (UDID – Unique Disability Identity Card) வழங்கப்பட்டுள்ளதை உறுதி செய்ய வேண்டும்.

    மாற்றுத்திறனாளிகளின் வாழ்வா தாரத்தை மேம்படுத்த வங்கிகளில் தொழில்கடன் பெறவும், அவர்களுக்கு இருப்பிடத்திற்கு அரு கிலேயே வேலை வாய்ப்பினை வழங்க தேவையான வழிவகைகள் செய்ய வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டும். மாதம் ஒருமுறை சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்பட வேண்டும். அனைத்து மாற்றுத்திறனாளிகளையும் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத்தி ட்டத்தில் சேர்க்கப்பட வேண்டும் என்றார்.

    முன்னதாக, சிவகாசி, சாட்சியாபுரம் சி.எஸ்.ஐ மனவளர்ச்சி குறையுடையோர் பள்ளிக்கு சென்று, வகுப்பறைகளை ஆய்வு செய்தார். அங்கு அளிக்கப்படும் பயிற்சிகள் குறித்து கேட்டறிந்தார்.

    18 வயதிற்கு மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் தொழில்சார்ந்த பயிற்சிகள் மற்றும் அவர்களால் செய்யப்பட்ட கைவினைப் பொருட்களையும் பார்வையிட்டார். தசைபயிற்சி மையத்தில் வழங்கப்பட்டு வரும் சிகிச்சை முறைகளை மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளர் லால்வேனா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வு கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மங்களராமசுப்பிரமணியன், சிவகாசி சார் ஆட்சியர் பிருத்திவிராஜ், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சந்திரசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • வருகிற 21-ந்தேதி நடக்கிறது
    • கோரிக்கைகளை தெரிவித்து பயன் அடையுமாறு கலெக்டர் அறிவுரை

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டம் ஏப்ரல் மாதத்திற்கான விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டம் வருகிற 21-ந்தேதி (வெள்ளிக்கிழமை) முற்பகல் 10.30 மணியளவில் கலெக்டர் தலைமையில் நேரடியாக நடைபெற உள்ளது.

    இக்கூட்டத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வேளாண்துறை மற்றும் விவசாயம் சார்ந்த துறைகளான தோட்டக்கலைத்துறை, வேளாண் வணிகம், வேளாண் பொறியியல் துறை, கால்நடை பராமரிப்புத்துறை, கூட்டுறவுத்துறை, வருவாய்த்துறை வங்கியாளர்கள் மற்றும் பிற சார்புத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டு விவசாயிகளின் குறைகள் மற்றும் கோரிக்கைகளுக்குப் பதில் அளிக்க உள்ளனர்.

    எனவே விவசாயிகள் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள் தங்கள் பொதுக் கோரிக்கைகளை கூட்டத்தில் தெரிவித்தும் தனிநபர் குறைகள் குறித்து மனுக்கள் அளித்தும் பயன் அடையுமாறு திருவண்ணாமலை கலெக்டர் முருகேஷ் கேட்டுக்கொண்டுள்ளார்.

    • அவினாசி மின் வாரிய அலுவலகத்தில் மின் நுகர்வோர்களின் குறைகளை நேரில் கேட்டறிகிறார்.
    • மின் தொடர்பான தங்கள் குறைகளை நேரில் தெரிவித்து நிவர்த்தி பெறலாம்.

    அவினாசி :

    திருப்பூர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் மின் நுகர்வோரின் குறைகளை நேரில் கேட்டறிந்து வருகிறார்.

    அந்த வகையில் நாளை (புதன்கிழமை) அவினாசி மின் வாரிய அலுவலகத்தில் காலை 11 மணிக்கு மின் நுகர்வோர்களின் குறைகளை நேரில் கேட்டறிகிறார். இதில் அந்த பகுதியை சேர்ந்த மின் நுகர்வோர் நேரில் கலந்துகொண்டு மின் தொடர்பான தங்கள் குறைகளை நேரில் தெரிவித்து நிவர்த்தி பெறலாம். இந்த தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் பரஞ்ஜோதி தெரிவித்துள்ளார்.

    • விருதுநகர் மாவட்டத்தில் ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடக்கிறது.
    • இந்த தகவலை கலெக்டர் ஜெயசீலன் தெரி வித்துள்ளார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட அளவிலான ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் விருதுநகர் கலெக்டர் தலைமையிலும், சென்னை ஓய்வூதிய இயக்குநர் முன்னிலையிலும் மார்ச் 3-ந்தேதி காலை 10.30 மணிக்கு விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

    இதில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிலையங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்கள் ஆகியோர் தங்களது ஓய்வூதியம் மற்றும் இதர ஓய்வூதிய பலன்கள் பெறுவதில் பிரச்சினைகள் ஏதும் இருப்பின் அது தொடர்பான கோரிக்கை மனுக்களை இன்று (15-ந்தேதி) முதல் வருகிற 21-ந்தேதி வரை விருதுநகர் மாவட்ட கலெக்டருக்கு இரட்டை பிரதிகளில் அனுப்பி வைக்கலாம்.

    விண்ணப்பங்களில் "ஓய்வூதியர் குறைதீர்க்கும் நாள் மனு" என குறிப்பிட்டு அனுப்பப்பட வேண்டும். விண்ணப்பத்தில் மனுதாரர் கோரிக்கை விவரத்துடன் ஓய்வூதியதாரர் பெயர், குடும்ப ஓய்வூதியம் என்றால் உறவுமுறை, பணியிலிருந்து ஓய்வு பெற்ற நாள், கடைசியாக பணிபுரிந்த அலுவலகம், ஓய்வூதிய கொடுவை எண் மற்றும் ஓய்வூதியம் பெறும் கருவூலம் ஆகிய விவரங்கள் குறிப்பிடப்பட வேண்டும்.

    தற்போது ஓய்வூதியம் பெறுவதில் உள்ள குறைபாடுகள் குறித்து ஏற்கனவே சென்னையில் உள்ள மாநில கணக்காயருக்கு அனுப்பப்பட்டு அது தொடர்பான பதில் ஏதும் பெற்றிருப்பின் அதன் விவரங்களும் இணைக்கப்பட வேண்டும்.

    ஓய்வூதியர்களுக்கு உள்ள குறைகள் குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுடன் விவாதித்து, ஓய்வூதியர்களின் குறைகளை தீர்க்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

    இந்த தகவலை கலெக்டர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.

    ×