என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "grocery stores"

    • மளிகை கடையில் புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக தகவல் கிடைத்தது.
    • 2 கடைகளில் ஹான்ஸ் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

    ஈரோடு:

    ஈரோடு தாலுகா சப்-இன்ஸ்பெக்டர் மோகனசுந்தரி தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

    அப்போது ஈரோடு பூந்துறை ரோடு அருகே உள்ள ஒரு மளிகை கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் போலீசார் அந்த மளிகை கடையில் சோதனையில் ஈடுபட்ட போது 6 ஹான்ஸ் பாக்கெட்டுகள் விற்பனைக்கு வைத்திருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.

    இதனைத்தொடர்ந்து அந்த கடையின் உரிமையாளர் ஈரோடு செட்டிபாளையம் பகுதியை சேர்ந்த சசிமலர் (40) என்பவரை கைது செய்தனர்.

    இதேப்போல் 19 ரோடு வெள்ளாளபாளையம் பகுதியில் போலீசார் ஒரு மளிகை கடையில் சோதனை செய்தபோது அந்த கடையிலும் 6 ஹான்ஸ் பாக்கெட்டுகள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருப்பதை கண்டு பிடித்தனர்.

    இதனையடுத்து கடையின் உரிமையாளரான திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தை சேர்ந்த சிலம்பரசன் (30) என்பவரை கைது செய்தனர். 2 கடைகளில் இருந்தும் ஹான்ஸ் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

    • சென்னிமலை வட்டார பகுதியில் மாம்பழ குடோன்கள், கடைகளில் உணவு பாதுகாப்பு அலுவலர் ஆய்வு செய்தார்.
    • வியாபாரிகள் உணவு பாதுகாப்பு உரிமம் பெற்று வணிகம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

    சென்னிமலை:

    தமிழ்நாடு உணவு பாதுகாப்பு ஆணையர் மற்றும் ஈரோடு மாவட்ட கலெக்டர் உத்தரவின்படியும், ஈரோடு மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலரின் அறிவுறுத்துதலின் படியும் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மாம்பழ குடோன்கள், மொத்த மாம்பழ விற்பனை கடைகள், சிறிய மாம்பழ கடைகள் மற்றும் பழ குடோன்களில் செயற்கை முறையில் ரசாயனம் மற்றும் கார்பைட் கற்கள் பயன்படுத்தி பழங்கள் பழுக்க வைக்கப்படுகிறதா? என்று ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

    அதன் அடிப்படையில் சென்னிமலை வட்டார பகுதியில் செயல்பட்டு வரும் மாம்பழ குடோன்கள், மொத்த விற்பனை கடைகளில் உணவு பாதுகாப்பு அலுவலர் நீலமேகம் ஆய்வு செய்தார்.

    அப்போது ரசாயனம் மற்றும் கார்பைட் கற்கள் மூலம் பழுக்க வைக்கப்பட்ட சுமார் 30 கிலோ அளவுள்ள மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது.

    மேலும் பழ வியாபாரிகளிடம் செயற்கை முறையில் ரசாயனம் பயன்படுத்தி பழுக்க வைக்கப்படுவதால் அந்த பழங்களை சாப்பிடும் பொதுமக்களுக்கு உடல் உபாதைகள் ஏற்படும் என்றும், வியாபாரிகள் உணவு பாதுகாப்பு உரிமம் பெற்று வணிகம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

    தவறும் பட்சத்தில் உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டம் 2006-ன் படி சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டது.

    • பெருமபாலானோரிடம் துப்பாக்கி இருப்பதால் தோட்டாக்கள் வாங்குவதில் மக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகியுள்ளனராம்.
    • துப்பாக்கி வைத்திருப்பவர்கள் தங்களின் அடையாள அட்டையைக் காண்பித்து , தோட்டாக்களுக்கான உரிய பணத்தை செலுத்தி அவற்றை பெற்றுக்கொள்ளலாம்.

    அமெரிக்காவில் துப்பாக்கிக் கலாச்சாரம் வேகமெடுத்து வரும் நிலையில் அவ்வப்போது பொது இடங்களில் துப்பாக்கிச் சூட்டில் மக்கள் உயிரிழப்பது அதிகரித்து வருகிறது. அமெரிக்காவில் சட்டப்படி துப்பாக்கி வைத்திருப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்ததே இந்த அசம்பாவிதங்களுக்கு காரணம் என்று ஒரு சாரார் தெரிவித்து வருகின்றனர்.

    ஆனால் மற்றொரு சாரார் தங்களின் பாதுகாப்புக்கு துப்பாக்கி இன்றியமையாதது என்று கருதுகின்றனர். இந்த துப்பாக்கி விவாதம் அமெரிக்க அரசியலிலும் எதிரொலிக்காமலில்லை. இந்நிலையில் ஏற்பகுறைய அமேரிக்காவில் பெருமபாலானோரிடம் துப்பாக்கி இருப்பதால் தோட்டாக்கள் வாங்குவதில் மக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகியுள்ளனராம்.

     

    எனவே ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுப்பதை போல துப்பாக்கிக் குண்டுகளை உடனுக்குடன் வெண்டிங் இயந்திரங்கள் மூலம் பெற்றுக்கொள்ளும்  வசதி மாளிகைக் கடைகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. துப்பாக்கி வைத்திருப்பவர்கள் தங்களின் அடையாள அட்டையைக் காண்பித்து , தோட்டாக்களுக்கான உரிய பணத்தை செலுத்தி அவற்றை பெற்றுக்கொள்ளலாம். மேலும் ஏஐ தொழிநுட்பத்தால் மேம்படுத்தப்பட்ட இந்த இயந்திரத்தில் பாசில் ரெகக்னிஷன் மூலமும் வாடிக்கையாளர் தங்களின் அடையாளத்தை உறுதி செய்து பணம் செலுத்தி  தோட்டாக்களை பெற்றுக்கொள்ளலாம்.

     

     

    முதற்கட்டமாக டெக்சாஸ், அலபாமா மற்றும் ஒக்லாஹோமா ஆகிய மாகாணங்களில் உள்ள மளிகைக் கடைகளில் இந்த இயந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளன. இந்த வசதியை மேலும் பல்வேறு மாகாணங்களுக்கு விரிவு படுத்தவேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 

    • 11 ஆண்டுகளாக பாதாள சாக்கடை பணிகள் நடந்து வருகிறது.
    • புதிய தீர்மானத்துக்கு மாநகராட்சிக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

    சென்னை:

    சென்னை மாநகராட்சி மன்றக் கூட்டம் மேயர் பிரியா தலைமையில் இன்று நடந்தது. துணை மேயர் மகேஷ்குமார், கமிஷனர் குமரகுருபரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கேள்வி நேரத்தின் போது பா.ஜ.க. உறுப்பினர் உமா ஆனந்த் சென்னை மாநகராட்சி எவ்வளவு கடன் வாங்கி உள்ளது. அதற்கு எவ்வளவு வட்டி கட்டுகிறீர்கள். ஒ.எஸ்.ஆர். லேண்ட் முறைகேடாக பயன்படுத்துவதாக தகவல் வருகின்றன என கேள்வி எழுப்பினார்.

    இதற்கு பதில் அளித்த மேயர் சென்னை மாநகராட்சி 2024-ம் ஆண்டு ரூ.3 ஆயிரத்து 63 கோடி கடன் வாங்கியது. இதில் ரூ.1,573 கோடி திருப்பி கட்டப்பட்டு உள்ளது. இன்னும் ரூ.1,488 கோடி நிலுவையில் உள்ளது.

    இதற்காக ரூ.8.5 கோடி வட்டி கட்டுகிறோம் காலாண்டுக்கு ஒரு முறை வாங்கிய கடன் திருப்பி செலுத்தப்பட்டு வருகிறது என்றார்.

    மண்டலக் குழு தலைவர் நேதாஜி யூ கணேசன் பேசும்போது, சென்னை மாநகராட்சியில் மேயர் துணை மேயரை ஆணையாளரை சந்திக்க முடிகிறது.

    ஆனால் குறிப்பிட்ட ஒரு அதிகாரி அறையில் இருந்து கொண்டே மாமன்ற உறுப்பினரை சந்திக்க முடியாது என பணியாளரிடம் சொல்லி அனுப்புகிறார் சந்திக்க மாட்டேன் என போர்டு வைத்து விட்டால் நாங்கள் சந்திக்க செல்ல மாட்டோம்.

    சில பணிகளை செய்யலாம் என நாங்கள் அவரை சந்திக்க நினைக்கிறோம். ஆனால் அவர் அனுமதி மறுக்கிறார். இதனால் அரசுக்கும் கட்சிக்கும் கெட்ட பெயர் ஏற்படுகிறது என்றார்.

    மண்டலக் குழு தலைவர் ஏ.வி.ஆறுமுகம் பேசுகையில் மாநகராட்சி மண்டலக் குழு கூட்டங்களில் வருவாய் துறை சார்பில் அதிகாரிகள் யாரும் பங்கு பெறுவதில்லை என்று புகார் கூறினார்.

    மேலும் தனது மண்டலத்தில் அதிகாரிகள் பற்றாக்குறை உள்ளன மூன்று வார்டுகளில் உதவி பொறியாளர்கள் இல்லை அதை சரி செய்து தாருங்கள். மணலி பகுதியில் மாலை 4 மணிக்கு அம்மோனியா வாயு திறந்து விடப்படுகிறது. 6 மணி வரை இது வருகிறது.

    இதனால் மூச்சு திணறல் ஏற்படுகிறது. மாசு கட்டுப்பாடு வாரியம் இதை கண்காணிக்க வேண்டும். எனது பகுதியில் 11 ஆண்டுகளாக பாதாள சாக்கடை பணிகள் நடந்து வருகிறது.

    10 சதவீத பணிகள் தான் இன்னும் பாக்கியுள்ளது. அதை விரைந்து முடிக்க வேண்டும். மணலி பகுதியில் ஆட்டு இறைச்சி கூடம் அமைத்து தர வேண்டும் என்றார்.

    ஆணையாளர் குமரகுருபரன் இதற்கு பதில் அளித்து பேசுகையில், நான் தலைமைச் செயலாளருடன் பேசி மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளை கண்காணிக்க கூறுகிறேன். உயர் அதிகாரிகளிடம் கூறி மண்டல கூட்டங்களுக்கு அனைத்து துறை அதிகாரிகள் வருவதற்கு ஏற்பாடு செய்து தரப்படும் என்றார்.

    சென்னையில் ஆயிரக்கணக்கான சிறிய மற்றும் பெரிய மளிகை கடைகள் செயல்பட்டு வருகின்றன.

    இந்த கடைகளுக்கு ஆயிரம் சதுரடி வரை ஆண்டுக்கு ரூ.3 ஆயிரத்து 500 தொழில் உரிமைத் தொகையாக கட்டணம் வசூலிக்கப்பட்டது. இதனால் 500 சதுர அடிக்குள் செயல்பட்டு வரும் சிறு மளிகைகாரர்கள் மிகவும் சிரமப்பட்டனர்.

    அவர்களின் சுமையை குறைக்க மாநகராட்சி 2 நிலைகளாக வரையறுத்து உள்ளது. அதன்படி, 500 சதுர அடிக்குள் செயல்படும் மளிகைக் கடைகள் தொழில் உரிமக் கட்டணம் ரூ.1,200-ம், 501 சதுர அடியில் இருந்து 1000 சதுர அடி வரையிலான மளிகைக் கடைகள் ரூ.3 ஆயிரத்து 500-ம் தொழில் உரிமத் தொகையாக செலுத்த வேண்டும்.

    இதன் மூலம் 500 சதுர அடிக்குள் இருக்கும் சிறு மளிகைக் கடைக்காரர்களுக்கு ஆண்டுக்கு ரூ.2 ஆயிரத்து 300 மிச்சப்படும். இந்த புதிய தீர்மானத்துக்கு மாநகராட்சிக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

    சென்னை கடற்கரைகளின் தூய்மை பணியை தனியாருக்கு ஒப்படைக்கவும் மாநகராட்சிக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அதன்படி 250 ஏக்கர் பரப்பளவு கொண்ட மெரினா கடற்கரை மற்றும் 95 ஏக்கர் பரப்பளவு கொண்ட பட்டினப்பாக்கம், பெசன்ட்நகர், திருவான்மியூர், புது கடற்கரை பகுதிகளை ஒரு வருடம் தூய்மையாக பராமரிக்க ரூ.4 கோடியே 54 லட்சம் தனியார் நிறுவனத்துக்கு வழங்கவும் தீர்மானிக்கப்பட்டது.

    ×