search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Grounds"

    • பெரிய வாளவாடியில் நாராயணசாமி அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது.
    • நடப்பாண்டில் நடைபெற்ற 12 ம் வகுப்பு பொதுத் தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றது.

    உடுமலை :

    உடுமலைஅடுத்த பெரிய வாளவாடியில் நாராயணசாமி அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு சின்ன வாளவாடி, பெரியவாளவாடி, பழையூர் அம்மாபட்டி, வடபூதிநத்தம் ,மொடக்குப்பட்டி, தீபாலபட்டி உள்ளிட்ட பகுதியைச் சேர்ந்த மாண வர்கள் படித்து வருகிறார்கள்.

    நடப்பாண்டில் நடைபெற்ற 12 ம் வகுப்பு பொதுத் தேர்வில் இந்தப் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற்றது. ஆனால் விளையாட்டில் பின்தங்கி உள்ளது. மைதானம் போதிய பராமரிப்பு இல்லாமல் புதர் மண்டி உள்ளது இதற்கு காரணமாகும். இது குறித்து சமூக ஆர்வ லர்கள் கூறுகையில்:- இந்தப் பள்ளி மைதானம் உடுமலை அளவில் பிரசித்தி பெற்றதாகும். குறிப்பாக கோடை காலத்தில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டிகள் பரபரப்பாக நடைபெறும். ஆனால் சமீப காலமாக பள்ளி மைதானத்தை பராமரிப்பு செய்வதற்கு நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. இதன் காரணமாக மைதானத்தைச் சுற்றிலும் புதர் மண்டி உள்ளது. இதனால் படிப்பில் தேர்ச்சி பெறும் மாணவர்கள் விளையாட்டில் சாதிக்க முடியாத சூழல் உள்ளது. செல்போன் விளையாட்டில் குழந்தைகள் மூழ்கி வரும் சூழலில் தரமான மைதானம் இருந்தும் அதை முறையாக பராமரிக்காததால் குழந்தைகள்ஓடியாடி வியர்க்கவிறுவிறுக்க விளையாட முடியாத சூழல் உள்ளது. மைதானம் சிறப்பாக இருந்து முறையான பயிற்சி கிடைத்தால் கிராமத்து மாணவர்கள் விளையா ட்டில் மாவட்ட மாநில அளவில் சாதிக்கலாம்.

    ஆனால்மைதானத்தை சீரமைக்கநிர்வாகம் அக்கறைகாட்டாதது வேதனை அளிக்கிறது. எனவே நாராயணசாமி அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்தை சீரமை ப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும். இதனால் படிப்பில்சாதித்த மாநிலமாணவர்கள் விளையாட்டிலும் சாதிக்க ஏதுவாக இருக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர். 

    • ஒவ்வொரு விளையாட்டுக்கு என்று தனித்தனி மைதானம் அமைக்கப்பட்டுள்ளது.
    • கடந்த 3 நாட்களாக கடலூர் நகர் பகுதியில் கனமழை நீடித்து வருகிறது.

    கடலூர்:

    கடலூர் நகரின் மையப்ப குதியான மஞ்சக்குப்பத்தில் அண்ணாவிளையாட்டு மைதானம் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் சுதந்திரதின விழா நடை பெறும்போது பல்வேறு கலைநிகழ்ச்சிகள் மற்றும் தேசியகொடி ஏற்றும் விழா நடந்து வருகிறது. பல ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த பகுதியில் ஒவ்வொரு விளையாட்டுக்கு என்று தனித்தனி மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு கடலூர் நகர் பகுதி மட்டுமல்லாமல் பல்வேறு பகுதியில் இருந்து விளையாட்டு வீரர்கள் வந்து பயிற்சிபெற்று செல்கி றார்கள். இதுதவிர விளை யாட்டு மைதானத்தை சுற்றி நடைபயிற்சிக்கென்று தனியாக இடம் ஒதுக்க ப்பட்டுள்ளது. இங்கு அதிகாலை முதல் குறிப்பிட்ட நேரம்வரை கடலூரை சேர்ந்தவர்கள் நடைபயிற்சி மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் கராத்தே, நீச்சல்பயிற்சி உள்ளிட்ட பயிற்சிகளுக்கும் தனித்தனியாக இடம் உள்ளது. இவ்வாறு பல்வேறு வசதி கொண்ட இந்த மைதானம் மழைகாலம் வந்து விட்டால்போதும் குளம்போல் ஆகிவிடுகிறது. இதனால் விளையாட்டு வீரர்கள் பயிற்சிபெற முடியாமல் அவலநிலைக்கு தள்ளப்படும் சூழல் உருவாகி உள்ளது.

    கடந்த 3 நாட்களாக கடலூர் நகர் பகுதியில் கனமழை நீடித்து வருகிறது. நேற்று முன்தினம் விடிய விடிய பெய்த மழையால் தாழ்வான பகுதியில் தண்ணீர் தேங்கி உள்ளது. இதனை அகற்ற மாவட்ட நிர்வாகம் அதிரடி நடவடி க்கை எடுத்துவருகிறது. ஒரே நாளில் கடலூர் மாவட்டத்தில் 8 செ.மீ. மழை கொட்டி தீர்த்ததால் கடலூர் அண்ணா விளையாட்டு மைதானம் தற்போது குளம்போல் காட்சியளிக்கிறது. இந்த மைதானத்துக்குள் யாரும் செல்லமுடியாத அளவு தண்ணீர் தேங்கி உள்ளது. இதுபோன்ற நிலை ஒவ்வொரு மழை க்கும் ஏற்படுகறிது. எனவே மாவட்ட நிர்வாகம் மற்றும் சம்மந்தப்பட்ட உயர் அதி காரிகள் இந்த விஷயத்தில் தனிக்கவனம் செலுத்தி தண்ணீர் தேங்க விடாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து நடைபயிற்சி யாளர்கள் கூறுகையில், கடலூர் நகரில் மழை பெய்யும் போதெல்லாம் இதுபோன்ற அவலநிலை நீடிக்கிறது. மைதானத்தை இன்னும் கொஞ்சம் உயர்த்த லாம். மைதானத்தில் தண்ணீர் தேங்காத வகை யில் வடிகால் வசதி அமை த்தால் இதுபோன்று தண்ணீர் தேங்காது. எனவே அரசு அதிகாரிகள் இந்த விஷயத்தில் தனிக்கவனம் செலுத்த வேண்டும் என்ற னர்.

    • பணியின் போது உயிரிழந்த காவல்துறையினர், ராணுவத்தினருக்கு வீரவணக்க நாளாக அனுசரிக்கப்படுகிறது.
    • ஆயுதப்படை மைதானத்தில் உள்ள நினைவு ஸ்தூபியில் பணியின் போது உயிரிழந்த காவலர்களுக்கு வீரவணக்கம்.

    தஞ்சாவூர்:

    இந்தியா முழுவதும் பணியின் போது உயிரிழந்த காவல்துறையினர், ராணுவத்தினர், துணை ராணுவத்தினருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வானது ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 21ம் தேதி காவலர் வீரவணக்க நாளாக அனுசரிக்கப்படுகிறது.

    அதன்படி இன்று தஞ்சை ஆயுதப்படை மைதானத்தில் உள்ள நினைவு ஸ்தூபியில் பணியின் போது உயிரிழந்த காவலர்கள், வீர மரணம் அடைந்த காவலர்களுக்கு வீரவணக்கம் நிகழ்வு நடைபெற்றது.

    தஞ்சை சரக்க டி.ஐ .ஜி கயல்விழி, போலீஸ் சூப்பிரண்டு ரவளிப்பிரியா, மாவட்ட கூடுதல் கலெக்டர் சுகபுத்ரா மற்றும் போலீசார் மலர் வளையம் வைத்து வீரவணக்கம் செலுத்தினர்.

    ×